December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கிரஹங்களின் பாதிப்பு)

உலகம் தட்டை என்று வாதிட்டு பின் உருண்டை என்று ஏனையோர் கண்டனர். ஆனால் நம் புராணங்களிலும் வேதங்களும் பூமியை "அண்டம்" என்றும், ப்ரம்மாண்டம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அண்டம் என்றால் உருண்டை. எனவே நம் புராணங்களும் வேதமும் சாஸ்திரமும் ஒட்டு மொத்தமாய் புளுகு மூட்டைகள் என்று ஓரம்கட்டிவிட முடியாது. சூரியன் பூமியைச் சுற்றுவதாய் ஏனையோர் ஊகித்து பின் விஞ்ஞான வளர்ச்சி மூலம் உண்மை கண்டு தெளிந்தனர். இந்த உண்மையை பாஸ்கராச்சார்யரும், ஆர்யபட்டரும் முன்னமே உரைத்திருக்க, இன்னமும் ரிக்-வேதத்திலும் கூட பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்னும் குறிப்பு இருக்கிறது.

இதெல்லாம் சரி, க்ரக நிலைகள் எப்படி மனிதனை பாதிக்கும். சுத்த பேத்தல் என்று பலரும் நினைப்பதுண்டு. ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு என்றால், Saturn என்பது ஒரு planet, அதன் சுழற்சியும் செயல்பாடும் ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும்? காதில் பூ சுற்றுவதற்கு அளவே இல்லையா? என்று நினைப்போருக்கு, சூரியனின் கிரணங்கள் பூமிக்கு விழுகிறதல்லவா? சூரியனின் தீட்சணயமும், தூரமும், நம் பூலோகத்தில் காலங்களாக அதன் வித்தியாசத்தை காட்டுகிறது. அதனால் பெய்யும் மழை, வெள்ளம், பாலைவனம் வறட்சி, இளவேனிற்காலம் பூ முகிழும் வசந்தம் என மனிதனை மகிழ்த்தவும் செய்கிறது, பாடும் படுத்துகிறது. சூரியனும் ஒரு கோள் தானே? பின் எப்படி அது மனிதனை ஆட்டிவைக்கிறது? என்ற கேள்விக்கு விடை எதுவோ அதே விடை தான் ஏழரை-சனி, மிச்ச கிரக உபாதைகளுக்கும். நளனைப் போன்றோரைக் கூட ஆட்டி வைத்து தெருவில் அல்லாடவிடக்கூடிய சக்தி சனியின் பாதிப்பிற்கு உண்டு. சனி உபாதை தீர திருநள்ளாறு சென்று வருவது பொதுவாகக் கூறப்படும் உபாயம்.

அந்த சிவனையே இரண்டரை நாழிகை பிடித்தாரம் சனிஸ்வரர் (பிடித்ததாம் சனியின் பாதிப்பு). 'நீர் என்ன நேரில் பார்த்தீரோ' என்று நம்மைப் போல் சிலர் கேட்கக்கூடும். அதற்கு அழகான பதில் தர்க்கம் வைத்திருக்கிறார் சோ. பானிபட் யுத்தம் நடந்தது என்று வரலாறு கூறித்தானே உங்களுக்குத் தெரியும். நீர் நேரில் யுத்தம் நடந்ததைப் பார்த்தீரா?

(நம் அறிவு மனதின் அலறல்: அது சரி... வரலாறும் புராணமும் ஒன்றா? வரலாறுக்கு சாட்சி உண்டு. புராணமோ பல வரலாறுகள் கடந்து பின் சென்றால் நிகழ்ந்ததாக கூறப்படும் ஒன்று, வலுவான சாட்சி ஏதும் இல்லை. வரலாறு என்றாலும், புராணம் என்றாலும், நம்மில் சிலர் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்று மட்டுமே பொது. )

No comments:

Post a Comment