வலை தளம் ஒன்றில் 'எங்கே பிராமணன்' என்ற தொடரைப் பற்றி, சோ அவர்கள் தொகுத்து வழங்கிய ஆன்மீக/மதம் சம்பந்தபட்ட சிந்தனைகளை மட்டும் தொகுத்து தினமும் எழுதி வந்திருக்கிறேன். டிசம்பர் 14 முதல் எங்கே பிராமணனின் இரண்டாம் பகுதி தொடரவிருக்கிறது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதால், மறுபடி என்னுடைய கண்ணோட்டதை இம்முறை வலைத்தளத்தில் மட்டுமின்றி என் வலைப்பதிவிலும் இடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
அதற்கு முன், எங்கே பிராமணனின் முதல் பாகத்தில் கூறிய சில நல்ல தகவல்களையும் ஆன்மீகச் சிந்தனைகளையும் மட்டும் இங்கே பதிவுகளாய் சேமித்து வைக்க எண்ணி இந்த தொடர்பதிவுகள்.
_________________
பிராமணன் சமஸ்க்ருதம் படித்தல் தவறா? சமஸ்க்ருதம் படிப்பதால் அவன் தமிழன் அல்ல என்பது எப்படி நியாயமான வாதம்? என்பது போன்ற தர்க்க விவாதங்களுக்கு சோவின் பார்வை சுவாரஸ்யமாய் இருந்தது. விவாததிற்கும் எதிர்விவாததிற்கும் வலைவிரிக்கும்படி இருந்தது. சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.
சோவின் கருத்துப் பரிமாற்றத்தில் 'இன்னொரு மொழியின் துவேஷம் தேவையில்லை என்ற கருத்தையொட்டி, சமஸ்க்ருத பாஷையில் புனையப்பட்ட உயர்ந்த காவியங்கள் மட்டுமின்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள், தகவல்கள்' என பல பொக்கிஷங்கள், சமஸ்க்ருத மொழியில் புனையப்பட்டிருபப்தை சுட்டிக்காட்டினார்.
யான் எனது எம் மொழி என்ற பிரிவு மனப்பான்மையை விடுத்து எதிலும் நல்லனவற்றை எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மையே அல்லவா விளைகிறது என்ற தொனியில் அவர் கருத்துக்களை முன் வைத்தார்.

டீவி பார்க்க வாய்ப்பே இல்லாதவன் நான். உங்கள் பகிர்வு தேவைதான்.
ReplyDeleteநன்றி அஷோக். (இது முதலாம் பாகத்தின் பதிவுகள்)
ReplyDeleteவரும் பதினான்காம் தேதி முதல் இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பவிருக்கிறார்கள். அத்தொடரில் பேசப்படும் ஆன்மீக அல்லது ஹிந்து மதம் தழுவிய சில விஷயங்களை "மட்டும்" விவரித்து பதிவிட எண்ணியுள்ளேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteபடிக்கக் காத்திருக்கிறோம்.
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி. அனைத்தும் விரைவில் படித்து விடுகிறேன்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் அவர்களே :)
ReplyDelete