June 08, 2018

லலிதா சஹஸ்ர நாமம் (314 - 321) (with English Meanings)


பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்
ராகேந்து வதனா;
ரதி ரூபா;
ரதிப்ரியா;
ரக்ஷாகரீ;
ராக்ஷஸக்னீ;
ராமா;
ரமண லம்படா;
காம்யா;

() ராகா = முழு நிலவு
  இந்து = நிலவு

#314 ராகேந்து வதனா = முழுமதியைப் போன்ற முகமுடையாள்

#315 ரதிரூபா = ரதியைப் பொன்ற எழில் கொண்டவள் (மன்மதனின் துணைவி) *

#316 ரதிப்ரியா = ரதியிடம் பிரியமுடையவள் *

* ரதியும் மன்மதனும் ஆசை, அழகு, காதல், காமம் முதலியவற்றின் உருவகங்கள்.  இவர்களின் இயக்கம் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு வகை செய்கிறது. அம்பிகை ரதியின் பால் கருணை கொண்டு, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தீக்கிரையான ரதியின் துணைவனான மன்மதனை உயிர்ப்பிக்கச் செய்தாள். தாக்ஷாயணியாக அவதரித்த பொழுது ரதியின் சகோதரியாகியவள், எனவே ரதியின்பால் பிரியம் கொண்டவள் என்று அனுமானிக்கலாம்.
மற்றொரு கோணம்:
ஆசை, மாயைக்கு கட்டுப்படுதல் முதலியவை பிரபஞ்ச துவக்கத்திற்கும் சுழற்சிக்கும் அடிப்படை. அம்பிகையே மாயாஸ்வரூபிணியானவள், எனவே பிரபஞ்ச சுழற்சிக்கு முதல் காரணமாக அறியப்படுகிறாள். அதற்கு துணை நிற்கும் ரதியின் ரூபமாகவும், அதனை போஷிக்கும் அவளிடம் பிரியமானவளாகவும் விளக்கப்படுகிறாள்.

() ரக்ஷா = பாதுகாப்பு 

#317 ரக்ஷாகரீ = ரக்ஷிப்பவள் - போஷிப்பவள்

() ராக்ஷஸ = அரக்கன் - அசுரகுணம் - அசுபம் - கேடு
   அக்னி = நெருப்பு

#318 ராக்ஷசாக்னீ = அரக்கர்களை / அரக்க குணங்களை அழிப்பவள் (தீயிட்டு பொசுக்குபவள்)

#319 ராமா = வசீகரிக்கும் நளினம் கொண்டவள்

() ரமண = மனதிற்கினிய = காதலி
   லம்பட = கவர்ச்சி - வசீகரிக்கும் தோற்றம்

#320 ரமண லம்படா = இன்பமூட்டும் அன்பிற்கினியவள் ( ஈஸ்வரனின் அன்பிற்குறியவள் ) *

#321 காம்யா = விரும்பத்தக்கவள் *

* சில நாமங்கள் இச்சை, காதல், காமம் முதலியவற்றை குறிப்பிடுகின்றன. இதன்மூலம் பிரபஞ்ச இயக்கத்தின் மூலக்காரணமான 'இச்சா-சக்தி' யாக அவள் செயல்படுவது சுட்டிக்காட்டப் படுகிறது. 

முடிவில் அவளே 'ஞானசக்தி'யாகி ஆட்கொள்ளும் போது மனதிற்கும் அறிவுக்கும் இனியவளாகி அருள்கிறாள்.

Lalitha Sahasranama (314 - 321)


Pancha Brahma Swaroopam

Rakenthu vadhanaa;
Rathi Roopa;
Rathipriyaa;
Rakshaakari;
Rakshasakni;
Raama;
RamaNa lampada;
kaamya;

() Raakaa = full moon
    Indhu = moon

#314 Raakendhu vadhana = Whose face beams like the full-moon

#315 Rathi Roopa = Whose beauty is like that of Rathi(wife of Manmatha) *

#316 Rathi Priya = Who is fond of Rathi(wife of Manmatha) *


Rathi and Manmatha are personifications of desire, beauty, love and resultant creation of the universe. Mother took compassion on Rathi and made Lord Shiva to bring back Manmatha to life, when he was burnt to ashes by shiva's third eye. Also during her birth as Dhakshayini she is Rathi's sister, therefore fond of Rathi.

Another perspective:

Desire and 'veil of Maya' are vital for creation and sustenance of the universe. Mother takes the form of desire and becomes Maya-Swaroopini. Her aspects results in bringing forth the creation and she is passionate about it.

() Raksha = protection

#317 Rakshaakari = She who is the protector

() Rakshasa = demon - demonic - evil
   agni = fire

#318 RaakShasagni = Who is the destroyer of evil (to consume by fire)

#319 Raamaa = Who is charmingly graceful and feminine

() RamaNa = pleasing - lover
    Lampata = voluptuous

#320 RamaNa Lampataa = Who is a delightful lover ( of her lord)*

#321 Kaamya = She Who is desirable*

  • Some set of names are talking about desire, love and thereby conception of cosmos and resultant formation of the universe.
  • During journey towards liberation, she becomes the 'enlightenment' towards which jiva's aspiration is redefined.

லலிதா சஹஸ்ரநாமம் (307 - 313)



பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

ரம்யா;
ராஜீவ லோசனா;
ரஞ்சனீ;

ரமணீ;

ரஸ்யா;

ரணத் கிண்கிணி மேகலா;

ரமா;


#307 ரம்யா = அழகு நிறைந்தவள் - வனப்பு மிகுந்தவள்

() ராஜீவ = நீலத் தாமரை மலர் - தாமரை மலர் - மான்வகைகளில் ஒன்று - மீன் வகைகளில் ஒன்று


#308 ராஜீவ லோசனா = தாமரை விழியினள் ( மான்விழி - மீன்விழி) *

அன்னையின் பேரெழிலை குறிக்கும் சொற்களாக நாமங்கள் வருகின்றன. ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் கற்பிக்கப் படுகின்றன. அவள் எழில் விழியை மான்விழிக்கும் மீன்விழிக்கும் கூட உவமை கொள்ளலாம்.

#309 ரஞ்சனீ = (ஜீவனை) சந்தோஷத்திற்கு உட்படுத்துபவள் - ஆனந்தப்படுத்துபவள்

#310 ரமணீ = மகிழ்ச்சியானவள்-இன்பமானவள் ( மகிழ்விப்பவள் - இன்பம் தருபவள் )

() ரஸ = சாறு - சாரம்

#311 ரஸ்யா = சாரமானவள் (உயிர்ப்பின் சாரம், ப்ரபஞ்த்தின் சாரம்)

() ரணத் = சப்தமிடும் - ஒலிக்கும்
கிண்கிணி = சிறு மணி
மேகலா = ஒட்டியாணம் - இடையாபரணம்

#312 ரணத் கிண்கிணி மேகலா = கிண்கிணிக்கும் சிறுமணிகள் கோர்த்த ஒட்டியாணம் அணிபவள்

#313 ரமா = ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீலக்ஷ்மியுமானவள்

(தொடரும்)



Lalitha Sahasranama (306 - 313)

Pancha Brahma Swaroopam 

Ramya;
Rajeeva Lochana;
Ranjani;
RamaNi;
Rasya;
RaNath kinkini mEkhala;
ramaa;


#307 Ramya = She who is lovely - Who is charming

() Rajeeva = blue lotus flower - lotus flower - deer - fish
   Lochan = eyes

#308 Rajeeva Lochana = Who is lotus eyed ( doe eyed or fish eyed ) *

We can interpret that, Mother's eyes are so beautiful, that it can be compared to everything that can describe beauty. Quite a number of Sanskrit words have multiple meanings, which are left to the devotee's imagination and perception.

#309 Ranjani = Who pleases and delights (the jiva)

#310 RamaNi = Who is Joy (who spreads joy)

() rasa = essence - nector

#311 Rasya = She who is flavours the essence (of existence)

() Ranath = sounding - ringing
kinkini = small bell
mEkala = belt- girdle

#312 Ranath kinkini mekhala = Who wears a girdle decorated with strings of small tinkling bells

#313 Ramaa = She who is the goddess of forture .i.e. Sri.Lakshmi

(to continue)