March 29, 2018

லலிதா சஹஸ்ரநாமம் ( 275 - 280 ) (with English meanings)




பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

பானு மண்டல மத்யஸ்தா
பைரவி;
பகமாலினீ;
பத்மாசனா;
பகவதீ;
பத்மநாப சஹோதரீ;

() பானு = சூரியன்
மண்டல = கோளப் பாதை

#275 பானுமண்டல மத்யஸ்தா = சூரியகிரக சுற்றுப்பாதையின் மையத்தில் மலர்ந்திருப்பவள் * 
புவி மண்டலத்தின் ஆதாரமாக செயல்படுபவள் என்றும் உணர்ந்து கொள்ளலாம்

#276 பைரவி = சிவனின் வடிவான பைரவரின் துணைவி

() பக = சுபீட்சம், மேன்மை, அழகு, அன்பு, புகழ், உயர்வு போன்ற தன்மைகள்
பக = அறுபெரும் பண்புகள்
மாலா = மாலை
மாலினீ = மாலை அணிந்திருப்பவர்
மாலினீ = தேவ மங்கை = அன்னை துர்காதேவி

#277 பக-மாலினீ = பெருஞ்சிறப்புகள் உடையவள்
#277 பகமாலினீ = தாங்கியுள்ள சிறப்புக்களையே மாலையாக்கி அணிந்திருப்பவள்

() பத்ம = தாமரை
ஆசனா = இருத்தல் - இருக்கை
பத்மாசனா = தியானத்தின் பொழுது அமர்ந்திருக்கும் பாங்கு

#278 பத்மாசனா = தாமரை மலரில் வீற்றிருப்பவள்
#278 பத்மாசனா = பத்மாசனம் எனும் யோக நிலையில் அமர்ந்திருப்பவள்

#279 பகவதீ = இறைவி - துர்கா தேவி
#279 பகவதீ = அனைத்து உயர்வுகளையும் தாங்கியிருப்பவள்

() நாபி = தொப்புள்
பத்மநாப = விஷ்ணு (விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து மலர்ந்த தாமரையில் தோன்றியவர் பிரம்மா என்று குறிப்பு)

#280 பத்மநாப சஹோதரீ = பத்மநாபனான விஷ்ணுவின் தங்கையாகப்பட்டவள்

(தொடரும்)

Lalitha Sahasranama (275 - 280)

Pancha Brahma Swaroopam 

Bhanu-mandala Madhyastha;
Bhairavi;
Bhaga malini;
Padmasana;
Bhagavathi;
Padmanabha Sahodhari;

() Bhanu = sun
Mandala = orbit

#275 Bhanu-mandala Madhyastha = She who is at the centre of the Sun's orbitation (universe) *
Can be understood as "central focus", vital for the functioning of the universe"

#276 Bhairavi = Who is the wife of Bhairava (form of Shiva)

() Bhaga = qualities like Majesty, prosperity, excellence, beauty, fame etc
Bhaga = six brilliant qualities
maala = Garland
maalini = who wears the garland
maalini = A celestial maiden - Mother Durga

#277 Bhaga-malini = She Who possess opulent qualities
#277 Bhagamalini = She who wears garland made of fine virtues

() Padma = Lotus
Aasana = Seat - to stay
Padmasana = a sitting position in meditation

#278 Padmaasana = She who is seated in Lotus flower *
#278 Padmaasana = She who is seated in a yoga posture called padmasana

#279 Bhagavathi = Who is endowed with all wealth and prosperity
#279 Bhagavathi = Goddess Durga

() Nabhi = navel
Padmanabha = Lord Vishnu (from whose navel bloomed a lotus in which Brahma was born)

#280 Padmanabha Sahodhari = Who is the sister of Lord Vishnu (Padmanabha)

(to continue)

March 28, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (264-274) (with English meanings)



ஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்

சிருஷ்டி கர்த்ரீ;
பிரம்ம ரூபா;
கோப்த்ரீ;
கோவிந்த ரூபிணீ;
சம்ஹாரிணீ;
ருத்ர ரூபா;
திரோதானகரீ;
ஈஸ்வரீ;
சதாஷிவா;
அனுக்ரஹதா;
பஞ்ச க்ருத்ய பராயணா;


() கர்தா = செயல் புரிபவர் - செய்பவர்

#264 சிருஷ்டி கர்த்ரீ = பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்

#265 பிரம்ம ரூபா = சிருஷ்டி கர்தாவான பிரம்மாவின் உருவானவள்

#266 கோப்த்ரீ = சகலத்தையும் ரக்ஷிப்பவள்

#267 கோவிந்த ரூபிணீ = பரிபாலிக்கும் திருமாலின் வடிவானவள்

() சம்ஹரண் = அழித்தல் - சிதைத்தல்

#268 சம்ஹரிணீ = சம்ஹாரம் புரிபவள்

#269 ருத்ர ரூபா = சம்ஹாரம் செய்ய ருத்ரனின் ரூபமாக எழுபவள்

() திரோதான = மறைதல் - மறைத்தல்

#270 திரோதானகரீ - அகில புவனங்களையெல்லாம் ஒடுக்கி மறையச் செய்பவள் (மஹாபிரளய காலத்தில்)

#271 ஈஸ்வரீ = பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவள் (ராணி)

() சிவா = அன்பு நிறைந்த - கருணை மிக்க

#272 சதாசிவா = சர்வகாலமும் கருணா-சாகரத்தை பொழிபவள்

#273 அனுக்ரஹதா = சிருஷ்டிக்கெல்லாம் அருள் சொரிபவள்

() க்ருத்ய = செயல்
பராயண (பெயர்ச் சொல்) = முதலான பொருள் - முழுமை 
பராயண (வினைச் சொல்) = ஈடுபாடுடன் கூடிய


#274 பஞ்ச க்ருத்ய பராயணா = ஐந்தொழில்களின் மூலப்பொருளானவள் - ஐந்தொழில்களை இயக்கும் பூரணி

#274 பஞ்ச க்ருத்ய பராயணா = ஐமூலத் தொழில்களில் தன்னை ஈடுபடுத்தியிருப்பவள்

* பராயண என்ற சொல்லை பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் வேறுபடுத்தி புரிந்து கொள்ளலாம்)

* பஞ்ச க்ருத்யா எனும் ஐம்பணிகள் பிரபஞ்ச தோற்ற இயக்கங்களின் மூலமாகிறது என்று முன் நாமாக்கள் விவரிக்கிறது.

அவளே பஞ்ச பிரம்மாக்களாக ஐம்பணிகளை இயக்குகிறாள். அவளே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் என்று வடிவெடுத்து, முறையே படைத்து, காத்து, அழித்து, மறைத்து அனுக்ரஹம் புரிகிறாள்.


(தொடரும்) 

Lalitha Sahasranama (264 - 274)

Pancha Brahma Swaroopam

Srishti karthri;
Brahma Roopa;
Gopthri;
Govinda Roopini;
Samhaarini;
Rudhra Roopa;
ThirOdhana kari;
Eeshwari;
Sadhashivaa;
Anugrahadha;
Pancha Krithya parayana;


() Kartha = Doer - performer

# Srishti Karthri = She who is the creator *

# Brahma Roopa = Who is in the form of Creator - The Brahma *

# Gopthri = She who is the protector *

# Govindha Roopini = Who is in the form of "sustainer" - The Vishnu *

() Samharan = Destroy - seize

# Samhaarini = She Who dissolves the universe *

# Rudhra Roopa = Who is in the form of "Destroyer" - The Rudhra *

() Thirodhana = dissappearance *

# Thirodhanakari = Who conceals the entire universe (during Maha-Pralaya)

# Eeshwari = Who is the Queen(ruler) of the universe

() Shiva = benignant - gracious *

# Sadhashiva = She Who is ever auspicous *

# Anugrahatha = Who bestows grace upon the creation

() Kruthya = deed
Paraayana(noun = Principal object - Totality 
Paraayana(verb) = involved


# Pancha Kruthya Parayana = She who is the totality behind five functions 
(creation, sustenance, destruction, concealing, grace)


# Pancha Kruthya Parayana = She who is obsorbed in five functions 
(creation, sustenance, destruction, concealing, grace)


* Parayana can be interpreted in both noun and verb contexts.

* Pancha krthyas are the decisive reason behind functioning of the Universe. She is the form of those five principal functions. She is the personification of pancha brahmas namely Brahma, Vishnu, Rudhra, Maheshwara and Sadhashiva responsible for creation, sustenance, destruction, concealing and grace respectively.


(to continue)

March 25, 2018

லலிதா சஹஸ்ர நாமம் (256 - 263) ( with English meanings)




பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்

விஷ்வரூபா;
ஜாகரிணீ';
ஸ்வபந்தீ;
தைஜசாத்மிகா;
சுப்தா;
ப்ராக்ஞாத்மிகா;
துர்யா;
சர்வாவஸ்த விவர்ஜிதா;


() விஷ்வ = அண்டம்

#256 விஷ்வரூபா = பேரண்ட ரூபமானவள்

() ஜாகரித் - விழிப்புடன்

#257 ஜாகரிணீ = விழிப்பு நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவள் - விழித்திருப்பவள்

நான்கு உணர்வு நிலைகளான விழிப்பு, கனவு, உறக்க நிலைகள் அதனை தாண்டிய துர்யம் என்று அறியப்படுகிறது. இந்த நாமாவில் அவள் விழிப்பு நிலையில் விரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


() ஸ்வபந் = சொப்பனம் - கனவு

#258 ஸ்வபந்தீ - கனவு நிலையிலும் வியாபித்திருப்பவள்

() தைஜஸ = ஒளிமயமான - பிரகாசமான- தேஜசுடன்

#259 தைஜசாத்மிகா = கனவு நிலையில் இயங்கும் சூக்ஷும சரீரத்தின் தைஜசமாக தன்னை வெளிப்படுத்துபவள்

கனவு நிலையில் ஸ்தூல உடலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, சூக்ஷ்ம வடிவில் மனதின் துணை கொண்டு ஆத்மா ஈடுபட்டிருக்கிறது. தேஜோ மயமாக இருப்பதும், மனவோட்டத்துக்கு கட்டுப்பட்டு உள்முகமாக செயல்படுவது சூக்ஷும உடலின் தன்மை. அன்னை, தைஜச ஆத்மாவாக கனவு நிலையிலும் ஈடுபட்டிருக்கிறாள்.


() சுப்த = உறக்கம் - ஆழ் உறக்கம்

#260 சுப்தா = ஆழ்ந்த உறக்க நிலையில் தன்னை இருத்திக்கொள்பவள்

() ப்ராக்ஞா = ஞானம் = அறிவு

#261 ப்ராக்ஞாத்மிகா = ஆழ் உறக்க நிலையில் இயங்கும் காரண-சரீரத்தின் ஞானமாக மிளிர்பவள் 

ஆழ் உறக்க நிலையில் காரண சரீரம் இயக்கத்தில் இருக்கிறது. காரண சரீரத்தின் இயல்பு ஞானமயமானது. அறிவுமயமானது. அந்த நிலையில் அம்பிகை ப்ரக்ஞா என்று அறியப்படுகிறாள். அவளே ப்ரக்ஞாத்மாவாக அறியப்படுகிறாள்.

() துர்ய = துரியம் - நான்காவது - ஓப்பற்று விளங்குதல்

#262 துர்யா = நிகரற்ற துரிய நிலையில் ஊடுருவியிருப்பவள்

() சர்வ = எல்லாவற்றிலும்
அவஸ்தா = ப்ரக்ஞை / உணர்வு நிலைகள் 
விவர்ஜிதா = அதற்கு அப்பால் - அதனால் பாதிக்கப்படாத


#263 சர்வாவஸ்த விவர்ஜிதா = அனைத்து உணர்வு நிலைகளுக்கு அப்பாலும் விளங்குபவள்

பிரக்ஞை அல்லது உணர்வு நிலைகளைப் பற்றிய சிறு விளக்கம்:

மாண்டூக்ய உபநிஷத் நான்கு நிலைகளை குறிப்பிடுகிறது. ஜாக்ரத் எனும் விழிப்பு நிலை, ஸ்வப்னம் என்கின்ற கனவு நிலை, சுஷுப்தியில் ஆழ் உறக்க நிலை, நான்காவதாக துர்யம் எனும் மூன்றுக்கும் அப்பாற்பட்ட உயர்நிலை.


விழிப்பு நிலையில், நம்மையும் நம்மை சுற்றி இயங்கும் உலகை நமது ஸ்தூல உடலைக் கொண்டு வெளிமுகமாக  அறிகிறோம்.

சொப்பன நிலையில், சூக்ஷ்ம சரீரம், தைஜச வடிவில் மனம் மற்றும் எண்ணவோட்டங்களால் இயங்குகிறது. இது உள்முகமான உணர்தல்.


மூன்றாம் நிலையான ஆழ் உறக்க நிலையில் காரண சரீரம் இயங்குகிறது. சூக்ஷ்ம சரீரம் மற்றும் ஸ்தூல வடிவங்கள் ஆழ் நித்திரையின் போது இயங்குவதில்லை. காரண சரீரம் ஞானம் / அறிவைக் கொண்டு இயங்குகிறது. இவ்வியக்கம் நமது அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சாதாரண மனிதனால் பிரக்ஞையை உணரமுடிவதில்லை.


நான்காம் நிலையான துர்யம், பரிபூர்ணத்துவம் வாய்ந்தது. சுத்த சைதன்யமானது. மூன்று நிலைகளை தாண்டி அதற்கும் மேலான ஒப்பற்ற நிலையில் வியாபித்திருப்பது. பரமானந்த நிலையில் துவைதம் என்ற இருமைகள் நீங்கி ஒருமையெனப்படும் அத்வைத நிலை என்று அறிப்பட வேண்டும்.


(தொடரும்)

Lalitha Sahasranama (256 - 263)

Pancha Brahma Swaroopam

Vishvaroopa;
JaagariNi;
Svapanthi;
thaijasaathmika;
Suptha;
praagnyaathmika;
thurya;
Sarva-avasthaa vivarjitha;


() vishva = universe

#256 Vishvaroopa = She who has universal form

() Jaagarith = Watchful - Vigilant - awake

#257 Jaagarini = Who represents the "Waking" state - Who is 'ever-aware' or awake. *

Four stages of consciousness are Waking, Dreaming and Deep-sleep and Thurya states. In this context, she is mentioned to be ever-present during the 'Waking state'.


() Svapan = Dreaming - Drowsy

#258 Svapanthi = She who is ever present in Dream state

() Thaijasa = Glowing - shining

#259 Thaijasaathmika = Who is associated with the soul experiencing the dreamstate **

While enjoying or experiencing the dream it is the shiny bright subtle-self that is aware of the experience thro the perception of 'mind and thoughts'. Gross body being inert, it is the shiny thaijasic subtle body which experiences the dream state. It is mentioned she is also present as thaijasa-athma


() suptha = sleep

#260 suptha = She who is present in Deep-Sleep state ** ( It is the state when awareness is at rest. ) 

() pragnya = learned - intelligence

#261 Pragnyathmika = She Who identifies herself with the insight of the soul during deep-sleep **

Soul during Deepsleep state is associated with Causal-body. Causal-self in its nature is filled with pragnya i.e wisdom . She is present as pragnya-athma .


() Thurya = Beyond - fourth - superior power

#262 Thurya = She who is present in fourth Thurya state ( State of Self-realisation ) **

() sarva = every
avastha = states of consciousness
vivarjitha = free from - beyond


#263 Sarva-avastha Vivarjitha = She who transcends all states of existence.

( to continue)

Understanding States of Consciousness:

** State of consciousness is explained in Mandukya upanishad as Jagrath (waking), Svapna (Dream state), Sushupti (deep-sleep) and Turya (fourth state of self realisation)


In the Waking state, we are aware of ourselves and our association with world outside as perceived by the "Gross body"


Dream state is perceived by the subtle body which is known as thaijasa (bright and burning). Our focus is on the mind which has 'inward' experiences during dream.


Third state is the deep sleep state, where subtle and gross body are at rest. Causal body which is wisdom or gyaan based, is awake and its related consciousnessis veiled due to our ignorance.


Fourth state is 'pure consciousness'. IT transcends all three states of consciousness. It is infinite bliss and free from duality.  It is the state of singularity, of advaitic realisation. 

March 22, 2018

லலிதா சஹஸ்ர நாமம் (249 -255) (with English Meanings)



பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்

பஞ்ச ப்ரேதாசனா சீனா;
பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ;
சின்மயீ;
பரமானந்தா;
விஞ்ஞான கன ரூபிணீ;
த்யான த்யாத்ரு த்யேய ரூபா;
தர்ம-அதர்ம விவர்ஜிதா;

() பஞ்ச = ஐந்து
ப்ரேத = சவம்
ஆசீனா = அமர்ந்திருத்தல்

#249 பஞ்ச ப்ரேதாசனா சீனா = ஐந்து சவங்களின் மேல் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவள் **

** பஞ்ச ப்ரமமாக்களைப் பற்றி முன்பே வெறொரு நாமத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பரப்பிரம்மத்தின் ஐந்து தத்துவத்தின் வெளிப்பாடாக சத்யோஜத, தத்புருஷ, அகோர, வாமதேவ மற்றும் ஈசானம் என்பவை அறியப்படுகிறது. சத்யோஜதத்திலிருந்து படைக்கும் கடவுள் பிரம்மா, வாமதேவத்திலிருந்து விஷ்ணு, அகோரத்திலிருந்து ருத்ரன், தத்புருஷத்திலிருந்து மஹேஸ்வரன், ஈசானத்திலிருந்து சதாசிவன் தோன்றியுள்ளனர். 

அவர்கள் முறையே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (ஞானம் மறைக்கப்படுதல்), அருளல் என்ற பிரபஞ்ச இயங்க்கங்களின் காரணம் ஆகிறார்கள்.

புருஷ-பிரக்ருதி, ஷக்தி-சிவன், நிலையாற்றல் இயக்க ஆற்றல் எனப்பல்வேறு விதமாக இருபெரும் தத்துவங்கள் அறியப்படுகிறது. இவ்விரண்டுமே ப்ரபஞ்ச பெருமண்டல இயக்கத்தின் ஆதாரம் ஆகும். அம்பிகை ஷக்தி ஸ்வரூபமாக அறியப்படுபவள். 

இயக்கங்கள் அற்ற நிலையில் (பஞ்ச ப்ரம்மாக்கள் செயலற்ற நிலை) சக்தி ஸ்வரூபமான மாயாரூபிணி, அவற்றின் மேலமர்ந்தபடி தன் இருப்பை வெளிப்படுத்துறாள். இயக்கத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் சக்தியானவளும் சிவமான ஆத்ம ஸ்வரூபமும், இயக்கம் அற்ற நிலையிலும் அப்பாற்பட்டு விளங்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. சிவமாகிய ஈஸ்வரன் ஒரு காரணமாகவும், அம்பிகையே பிரபஞ்ச தொற்றத்தின் துணைக் காரணமாகிறாள் என்பதும் விளங்கும். அவளின் ஈடுபாடு அல்லது துணையின்றி எங்கும்
ஸ்தம்பித்த நிலையான ஜட-நிலை என்பது இந்த நாமாவின் விளக்கமாகக் கொள்ளல் சிறப்பு.

() ஸ்வரூப = தோற்றம் - ரூபம்

#250 பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ = பஞ்ச-பிரம்மத்தின் தோற்றவடிவாக திகழ்பவள் *

இந்த நாமம், அம்பிகையின் உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவளே பிரபஞ்ச தோற்றத்தின் மூலக்காரணங்களில் ஒன்று. அவளே பஞ்ச ப்ரம்மமாகவும் விரிந்திருக்கிறாள்.

#251 சின்மயீ = சுத்த-சைதன்ய இருப்பாக i.e பிரக்ஞையாக விளங்குபவள்

#252 பரமானந்தா = சச்சிதானந்தம் என்னும் சுத்த ஆனந்த மயமானவள்

() விஞ்ஞானகன = தூய அறிவு

#253 விஞ்ஞானகன ரூபிணீ = தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்

() த்யான = தியானம்
த்யாத்ரு = சிந்தனையாளர் (இவ்விடத்தில் தியானிப்பவர் )
த்யேய = தியானிக்கப்படும் பொருள்

#254 த்யான த்யாத்ரு த்யேய ரூபா = தியானமாக-தியானிப்பவராகவும்-தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்

() விவர்ஜிதா = தவிர்த்து - விட்டு விடுதல் - அப்பாற்பட்டு

#255 தர்ம-அதர்ம விவர்ஜிதா = தர்ம அதர்ம வியவகாரங்களுக்கு அப்பாற்பட்டவள் ...i.e. அதனால் பாதிக்கப்படாதவள்

(தொடரும்)

Lalitha Sahasranama ( 249 -255) 

Pancha-Brahma Swaroopam


Pancha Prethaasana seena;
Pancha Brahma Swaroopini;
Chinmayi;
Paramananda;
Vignaana Gana Roopini;
Dhyaana Dhyathru Dhyeya Roopa;
Dharma-adharma vivarjitha;

() pancha = Five
pretha = corpse
aseena = seated

#249 Pancha Prethaasanaseena = She who is seated on five dead bodies *

* Pancha-Brahmas have already been mentioned earlier. They are five aspects of Parabrahma manifested as Sadhyojatha, Tathpurusha, Aghora, Vaamadeva and Ishaana. From Sadhyotha manifested creator Brahma, Vishnu from Vamadeva, Rudhra from Aghora, Maheshwara from Tatpurusha and Sadhashiva from Ishaana.

Their cosmic activities include creation, protection destruction, concealing(the true nature of brahman) and grace.

Purush and Prakriti, Shakthi and Shiva, Kinetic and Static energy, call what u may, is responsible for the entire happenings in the universe. Lalithambika is seen as the personification of prakruthi. The concept here is to understand when these activities are nil i.e potentially at rest or stands at zero momentum, she is seated on them to indicate, without her action or involvement there is no activity or creation. She, we can understand is the joint cause of the universe. Other cause ofcourse is Parabrahma.

() Swaroopa = appearance - looks

#250 Pancha Brahma Swaroopini = Who is the form of Pancha-Brahma *

This name indicates that it is she, who is also the supreme cause, has manifested as pancha brahma

#251 Chinmayi = Who is Pure-consciousness

#252 Paramaanandha = Who is Pure-bliss

() VignaanaGana = pure knowledge - intelligence

#253 Vignaanaghana Roopini = She who is the embodiment of Pure knowledge

() Dhyana = meditation
Dhyathru = (thinker - contemplator) here Meditator
Dhyeya = to be meditated upon (the object)

#254 Dhyana-dhyathru-Dhyeya Roopa = Who permeates as the Meditation, Meditator and Object to be meditated upon

() Dharma-Adharma = Righteous and unrighteous acts
Vivarjitha = excluded - beyond - free from

#255 Dharma-adharma Vivarjitha = Who is beyond Moralities of Sins and Virtues *

( to continue)

லலிதா சஹஸ்ரநாமம் (241-248) ( with English meanings)



சகுண உபாசனை
சாரு ரூபா;
சாரு ஹாசா;
சாருச் சந்திர கலாதரா;
சராசர ஜகன்னாதா;
சக்ர ராஜ நிகேதனா;
பார்வதீ;
பத்ம நயனா;
பத்ம ராக சமப்ரபா ;

() சாரு = அழகிய - மனதிற்குகந்த

#241 சாரு ரூபா = வசீகரமானவள்

() ஹாச = சிரிப்பு புன்னகை

#242 சாரு ஹாசா = மயக்கும் எழில்நகை புரிபவள்

() சந்திரகலா = பிறைச் சந்திரன்
தர = அணிதல்

#243 சாருச்சந்திர கலாதரா = அழகிய சந்திரப்பிறையை தரித்தவள்

() சர-அசர (சராசர) = அசையும் அசையாத (பொருட்கள் / சிருஷ்டி)

#244 சராசர ஜகன்னாதா = சிருஷ்டியின் பேராற்றல் அனைத்தையும் அடக்கி ஆளுபவள் ( நிலைச் சக்தி - இயக்க சக்தியாக விளங்குபவள் ) (static - kinetic energy)

() சக்ர-ராஜ = சக்கரங்களில் மகுடமான ஸ்ரீசக்கரம்
நிகேதன் = வசிப்பவள்

#245 சக்ர ராஜ நிகேதனா = ஸ்ரீசக்கரத்தில் நிலைகொள்பவள்

#246 பார்வதீ = மலைமகள் - பர்வதராஜனின் புத்திரி

#247 பத்ம நயனா = தாமரை இதழைப் போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவள்

() பத்மராக = பத்மராகம் எனும் ரத்தினம் - தாமரை வண்ணம் 
சம = சமமான
ப்ரபா = ஒளி - மிளிர்வு

#248 பத்மராக சமப்ரபா = சிவந்த பத்மராகத்தை போல் பிரகசிப்பவள் (அல்லது) 

#248 பத்மராக சமப்ரபா = சிவந்த தாமரை போன்று ஜொலிப்பவள்

(சகுண உபாசனை முடிவுற்றது)

(அடுத்து பஞ்ச-ப்ரம்ம ஸ்வரூபம் தொடங்கும்)

(தொடர்வோம்)


Lalitha Sahasranama (241-248)

Saguna Upasana


Chaaru Roopa;
Chaaru Haasa;
Chaaru Chandra Kaladhara;
Charachara Jagannatha;
Chakra Raja Nikethana;
Paarvathi;
Padma Nayana;
PadmaRaaga Sama Prabha;


() Chaaru = Pleasing- pretty

#241 Chaaru Roopa = Who is very beautiful

() Haasa = smile

#242 Chaaru Haasa = Who has splendid smile

() Chandrakala = crescent-moon
Dhara = holding

#243 Chaaru Chandra-kalaadhara = Who wears the alluring crescent-moon

() Chara-achara = movable and immovable

#244 Chara-achara Jagannatha = Lord of the entire creation (static and kinetic force causing the creaiton)

() Chakra-Raja = King of chakras (i.e Srichakra) 
Niketan = to reside

#245 Chakra-Raja Nikethana = She who inhabits Sri-Chakra

#246 Paarvathi = Who is the daughter of king parvat (King himavan)

#247 Padma Nayana = Who has long ravishing eyes like lotus petals

() Padmaraaga = A red jewel (stone) - lotus hue
Sama = equals
Prabha = brilliance-radiance

#248 Padmaraaga Sama Prabha = Whose brilliance equals Padmaraaga (or)

#248 Padmaraaga Sama Prabha = Whose brilliance matches the red-lotus

( End of Saguna Upasana )

( We would start with "Pancha-Brahma Swaroopa")

( to continue)

March 19, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம்- பகுதி 8) ( நிறைவுப் பகுதி)




காட்சி 10

(இடம்: சுசீலா வீடு.)

நவீன்: இவ்ளோ சீக்கிரம் சம்மதிப்பீங்கன்னு நினைக்கலை ஆண்ட்டி.

சபேசன்: உங்களை மாதிரி ஒரு நல்ல பையன வேணாம்னு சொல்ல எங்களுக்கு பைத்தியமா?  மங்களம் கொஞ்சம் அப்படி இப்படி தான்... ஆனாலும் இன்னும் முழுப் பைத்தியம் ஆகல.


மங்களம்(முறைப்புடன்): அந்தக் குறையைப் போக்கத்தான் நீங்க இருக்கீங்களே.

சுசீலா: நிஜம்மாம்மா. நீ தான் குப்புக்கு ஒகே சொல்லலைன்னு எங்க கல்யாணத்துக்கு வில்லியா இருப்பியோன்னு நினைச்சேன்.

மங்களம்: சீச்சி! அதெல்லாம் சினிமால தான். எதோவொரு குப்புவோ சொப்புவோ கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா இருந்தீன்னா சரி. வேற என்ன வேணும்?

நவீன்: சொப்பு இல்லை ஆண்டி. நவீன். நவீனைக் கல்யாணம் செஞ்சிட்டு உங்க பொண்ணு குவீன் மாதிரி இருப்பா

சுசீலா: கடவுளே இப்படி அறுவையை காலம் பூரா கேக்கணமா?

மங்களம்: வருத்தபடாத சுசீ...இப்போ நான் இல்ல?

வினோத்: ஆனா ஒண்ணு சுசீ... நீ பரோடா போன பிறகு,........ (கண்துடைத்துக் கொள்கிறான்)... அதை எப்படி சுசீ சொல்றது?

சுசீலா(ஞானிபோல் முகம் வைத்து): லை·ப் கோஸ் ஆன்....

வினோத்: அத யாரு சொன்னாங்க? தட் வில் கோ ஆன்... நான் சொன்னது உன்ன சாக்கா வெச்சு, லேடீஸ் காலேஜ் வாசல்ல ட்ராப் பண்ண வருவேன்.  ஹ்ம்ம்.... இப்ப எங்க போவேன்?


சுசீலா: அதானே பார்த்தேன்

சபேசன்: உங்க வீட்ல என்ன சொல்றாங்க ? உங்க விருப்பத்தை சொன்னீங்களா?

நவீன்: அப்பா உங்க கிட்ட பேசுவார் அங்கிள். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். சரி நான் கிளம்பறேன். இப்போவே லேட். (சுசீலாவிடம் திரும்பி) அப்புறம் கால் பண்றேன் சரியா. ஒழுங்கா படி.


வினோத்(இடிஇடியென சிரிக்கிறான்): நவீன் இவ்ளோ அப்பாவியா இருக்கியே. சுசீலா என்னிக்கு படிச்சிருக்கா?

சுசீலா(பல்லை கடித்துக்கொண்டு): இரு இரு உன் ட்யூஷன் பசங்க கிட்ட உன்னை பத்தி வத்திவெச்சிட்டுப் போறேன்.

வினோத்: அப்புறம் நவீன்... நல்லா சாப்பிட்டு; உடம்பப் பார்த்துக்க.

நவீன்: அதுக்கென்ன நல்லாத்தானே இருக்கேன்.

வினோத்: அதுக்கப்புறம் உனக்கு சுசீலா சமைச்சு சாப்பிடணம்ன்னு விதி. எல்லாம் அவங்க அவங்க வாங்கின வரம்.

(நவீன் சிரித்துக் கொண்டே கிளம்புகிறான்)

மங்களம்: என்னை இந்த நாட்டு பிரதம மந்திரி ஆக்கினாங்கன்னா எல்லா ப்ரச்சனையும் தீர்த்து வெச்சுடுவேன்.

சபேசன்: ஏம்மா உனக்கு இந்த விபரீத ஆசை. ஏதோ நம்ம நாடு சுமாரா இருக்கறது குத்துதா?

மங்களம்: அதுக்கில்லீங்க. வீட்டுக்குள்ளையே இந்தியா பாக்கிஸ்தனை வளர்க்கறேனே... அதை சமாளிக்கறேனே.. அதுக்கு சொன்னேன்.

சபேசன்: என்னது வீட்டுக்குள்ள இந்தியா பாக்கிஸ்தானா? உன் பேரு என்ன ஏசியாவா?
மங்களம்: நம்ம பசங்களைச் சொன்னேங்க.

சபேசன்: அப்போ அவங்க பேரு ஏசியாவா?

மங்களம்: நக்கலுக்கு ஒண்ணும் கொறைவே இல்லை. உங்கள மாதிரியே தான் பசங்களும்.

வினோத்: ஸ்டாப்.. ஸ்டாப்.. இவ்ளோ நல்ல விஷயங்கள் நடந்திட்டு வரச்சே, யாராவது இதுக்கு காரண கர்த்தாவுக்கு நன்றி சொன்னமா?

சபேசன்: யாருடா அது?

வினோத்: ரத்னா கலகம் நன்மையில் முடியும். அவளால தானே இந்த நவீன்... எல்லாமே..

சுசீலா: டேய். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறியே. உனக்கு அவ பேரை இழுக்கணம் அதுக்கு இது ஒரு சாக்கு.

வினோத்: சீச்சி. ஐ மீன் இட். பத்திரிகை ரெடியானவுடன், முதல் பத்திரிகை அவளுக்குத் தான். அதுவும் நானே கொண்டு கொடுக்கப் போறேன்.

சுசீலா:  உன் அட்டகாசத்துக்கு அளவே இல்ல!

வினோத்: ஹ்ம்ம்.... முயன்று பார்க்கலாம்.... கிடைச்சா சரி.. இல்லைன்னா, குப்புவுக்கு பண்ண த்ரோகத்துக்கு நானே குப்பு தங்கச்சிய கட்டிக்கறேன்.

மங்களம்(வாயெல்லாம் பல்லாக): ஓ ராசாத்தியா?

வினோத்: உங்க அண்ணன் குடும்பத்துல யாருக்குமே இருவத்தியோராம் நூற்றாண்டு பேரே இல்ல

சுசீலா(சிரித்துக் கொண்டே):  A Rose is a Rose is a Rose 

வினோத்: ம்ஹ்ம்.. அந்தப் பாட்டு இந்த சிச்சுவேஷனுக்கு சரியில்லை. ராசாத்தி ஒன்ன... காணாத நெஞ்சு... . இது தான் சரி.

சுசீலா: அண்ணா.. நீ ரத்னாவை ட்ரை பண்ணு. சைட்ல தாமரைக்கு நோட்ஸ் எழுதி கொடு, ராசாத்திய பத்தி யோசி... ரத்னாவோ, ராசாத்தியோ, ரமாவோ, ரோஹிணியோ......



சபேசன்: இது வேறயா?

மங்களம்: இதெல்லாம் யாரு புதுசா?

சுசீலா: யாரை வேணாலும் இம்ப்ரேஸ் பண்ணு. ஆனா அவங்க உன்ன விட்டு தப்பிச்சு ஓடிடாம இருக்க ஒரே வழிதான் ..

வினோத்: என்ன செய்யணம்?

சுசீலா(கண்ணைக் கையால் மூடியபடி): நீ பாடறத நிறுத்தணம்

(கடைசி சீனில் வழக்கம் போல் எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

(முற்றுபேற்றது)

(சுபம்)