May 30, 2019

குலச்சிறை நாயனார்

Image result for குலச்சிறை நாயனார்

பாண்டிய நாடு பெற்ற முத்துக்களில் ஒருவர் குலச்சிறை நாயனார். குலமென்றும் குணமென்றும் பாராமல் சிவனடியார்கள் என்று கூறி வருவோர்க்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் பெரியோர்க்கும் அமுதளித்தும் பெருமைப் படுத்தியும் சிவ வழிபாட்டின் வழி நின்றவராயிருந்தார்.
.*
சிவபெருமானின் உயர்வை தாங்கிப் பிடிக்கும் சைவம் எனும் வழியை தனதாக்கிக் கொண்டதோடன்றி அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபாட்டார். பாண்டி நாட்டு மன்னன் நேடுமாற பாண்டியனுக்கு பிரதம அமைச்சராக பணியாற்றி வந்தார். பாண்டிய மன்னன் அந்நாட்களில் சமணக் கொள்கைகளை பெரிதும் மதித்து, சமண மதத்தை தழுவியிருந்தார். 
.
அவரின் துணைவியார் மங்கையர்கரசியார் சைவத்தின் பால் வழுவாமல் நின்றிருந்ததால், குலச்சிறையார், மங்கையர்கரசியாரின் துணை கொண்டு பாண்டி நாட்டில் சமணர்களின் வீழ்ச்சிக்கு பெரிதும் காரணமானார். 
.
திருஞானசம்பந்தர் பெருமானை மதுரைக்கு வரவேற்று, சைவக் கொள்கைகளை பரப்புதற்கு காரணமானர். சம்பந்தரின் கொள்கையாலும் தனக்கு வந்த பேரிடரிலிருந்து தமைக் காத்த சம்பந்தரின் அருட்கொடையாலும் சைவத்தின் பெருமையை
நன்கு உணர்ந்த பாண்டிய மன்னன், பின்னாட்களில் குலச்சிறையாருக்கு பெரிதும் துணை நின்றார். குலச்சிறையார், மன்னரின் ஆதரவையும், மங்கையர்கரசியாரின் உதவியுடனும், பெருகி வந்த சமண கொள்கைகளையும் பொய்வாதம் செய்யும் சமணவாதிகளையும் இல்லாதொழித்து, திரு நீற்றின் மகிமை பாண்டி நாடெங்கும் செழிக்கச் செய்தார். 
.
சுந்தரமூர்த்தி நாயனாரும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என குலச்சிறையாரைக் குறிப்பிட்டு, அவர் சைவத்திற்கு ஆற்றியபெரும் பங்களிப்பை பாராட்டிப் பாடியுள்ளார்கள். 
.
இறையனாரின் நாமத்தில் சித்தம் பரிகொடுத்து, பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், புவியுலகை நீத்த பிறகு, எம்பெருமானார் பாதமலரடியை அடைந்து பேரின்பம் பெற்றார்.
ஓம் நமச்சிவாய

Lalitha Sahasranama (621 - 630) (தமிழிலும்)Vibhoothi Visthaaram

Divya Vigraha;
Klimkaaree;
Kevalaa;
Guhya;
Kaivalyapadha dhaayini;
Tripura;
Trijagad Vandhya;
Trimurthi:;
Tridasheshwari;
Tryakshari;

()
Divya = Beautiful  - Celestial
Vigraha = shape   - body

#621 Divya Vigraha = She who has divinely splendorous form 

()
Klim = Bija akshara *

*Bija akshara is a seed letter that forms the mantra for one particular deity. Bijakshara for each divine form may vary.  It is very potent and generally chanted after proper initiation from a right guru. 

#622 Klim-kaaree = Who is in the form of (crux) Bija Mantra Klim 

()
Kevala = only - that alone 

#623 Kevalaa = She who is nothing but that.- Who stands unique and alone ie established
in herself and  comprising of "everything" - Who is absolute.  

()
Guha = mysterious - private

#624 Guhya = Who is secretive ie Who cannot be comprehended by all. (whose worship cannot be upheld by everybody) 

()
Kaivalya = emancipation
Pada = post - rank - State (here in this context) 
Kaivalya-Padha = State of Moksha (liberation) 
Dhaayini = to give 

#625 Kaivalya-Padha Dhayini = Who bestows ultimate liberation ie final emancipation

()
pura = in the beginning 

#626 Tripura = Who is the ancient than the trinity (older ie the source) *

*Some devotees read this name to refer that  she is in the form of all 'three folds' like triguna, tridevas, trishakthis, three worlds, three types of activities etc..


()
Vandhya = to be adored - praised
Jagat   = world

#627 Trijagat Vandhya = Who is considered venerable and worshiped in all three three worlds(lokas)  (bhu, bhuvar, suvar)


#628 Trimoorthi = Who is the unified form of trinity (Brahma, Vishnu, Maheshwara) 

()
Tridasa = divine - heavenly beings - divinity  - Gods

#629 TridasEshvari = Who is the God of Gods - Mighty Ruler. 

()
Aksha = Letters- syllables

#630 Tryakshari = She Whose form is the three sacred syllables ( A U M ) 

(to Continue) 


லலிதா சஹஸ்ர நாமம் (621 - 630) 

விபூதி விஸ்தாரம்

திவ்ய விக்ரஹா;
க்லீம்காரீ;
கேவலா;
குஹ்யா;
கைவல்யபத தாயினீ;
த்ரிபுரா;
த்ரிஜகத்-வந்த்யா;
த்ரிமூர்த்தி;
த்ரிதசேஷ்வரீ;
த்ரயக்ஷரீ;

()
திவ்ய =  தெய்வீகமான -  அழகு
விக்ரஹ = அமைப்பு  - உடல்

#621 திவ்ய விக்ரஹா = தேய்வீக எழிலமைப்பை உடையவள்  

()
க்லீம் = பீஜ அக்ஷரம் *

* பீஜ அக்ஷரம் என்பது சக்தி வாய்ந்த ஓரெழுத்து மந்திராக்ஷரங்கள். பீஜம் என்றால் விதை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் பீஜாக்ஷரம் வேறுபடும். மந்திர சக்தியை ஒரெழுத்தில் அடக்கி விடும் அக்ஷர மந்திரங்களை பீஜாக்ஷரங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. பெரும்  நலன் பயக்கும் அபாரசக்தி மிக்க இம்மந்திரங்களை தீக்ஷை பெற்று ஜபிப்பதே சிறந்தது. 

#622 க்லீம்-காரீ = க்லீம் எனும் பீஜாக்ஷர மந்திரத்தின் வடிவமானவள் 

()
கேவலா = தனியொன்றாக- ஒன்று மட்டும்

#623 கேவலா = அவள் மட்டுமே தனித்தன்மையுடன் எதனையும் சாராதிருப்பவள் - முழுமையானவள்- தன்னில் தானே உறைந்து (அதனால்)  எல்லாமுமானவள் .

()
குஹ = மர்மமான - அந்தரங்கமான - வெளிப்படாத

#624 குஹ்யா = மறைபொருளானவள் - அனைவராலும் எளிதில் உணரப்படாதவள் (அவளது வழிபாடு அனைவராலும் பின்பற்ற இயலாதது) 

()
கைவல்ய = கைவல்யம் - மோக்ஷம் 
பத = பதவி - ஸ்தானம்
கைவல்ய பதம் = வீடுபேறு 
தாயினி = வழங்குபவள் 

#625 கைவல்ய-பத தாயினீ = முக்தி நிலை அருள்பவள் 

()
புர = முதன்மை - ஆரம்பம் - புராதனம்

#626  த்ரிபுரா = மும்முர்த்திகளைக் காட்டிலும் புராதனமானவள் ie அனைத்துக்கும் முதலான ஆதார சக்தி *

*இந்நாமத்தை முக்குணங்கள், முத்தேவர்கள் மும்மூர்த்தி) , மூவகை சக்தி, மூன்று உலகங்கள், முத்தொழில்கள், முக்காலம் என மூத்தன்மை உடைய அனைத்துடனும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.


()
வந்த்யா = போற்றத்தக்க
ஜகத் = ஜகம் - உலகம்

#627 த்ரிஜகத் வந்த்யா = மூவுலகிலும் புகழ்ந்து போற்றி வழிபடப்படுபவள்
(பூ, புவர், சுவர் லோகங்கள்) 

#628 த்ரிமூர்த்தி = மூம்மூர்த்திகளின் ஐக்கிய வடிவமானவள் (பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர்)

()
த்ரிதஸா = தெய்வங்கள் - தேவர்கள் - கடவுளர்கள்

#629 த்ரிதசேஸ்வரீ = கடவுளர்களுக்கெல்லாம் ஈஸ்வரி  - சர்வேஸ்வரி (பிரபஞ்சத்திற்கு தலைவி)   

()
அக்ஷ = எழுத்துகள் - அசை

#630 த்ரயக்ஷரீ = மூன்று அக்ஷரங்களின் வடிவானவள் ( அ - உ - ம் எனும் அக்ஷரங்களால் ஆன  ஓம் எனும் பிரணவ மந்திர வடிவம்) 

(தொடரும்) Thanks and reference:
Spokensanskrit.com
manblunder.com

A humble attempt to discuss meanings word by word - ShakthiPrabha 

May 28, 2019

குங்கிலியக்கலய நாயனார்


Image result for குங்கிலிய கலய நாயனார்

மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த பெருமான் திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரராக வீற்றிருக்கிறார். பெருமைவாய்ந்த திருக்கடவூர் திருத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார் குங்கிலியக்கலய நாயனார். திருக்கடவூரில் பிறந்து அங்கு குடிகொண்டுள்ள அமிர்தகடேஸ்வரருக்கு தூபம் இடுவதை தன் திருப்பணி என நினைத்து நாள் தவறாமல் செய்து வந்தார்.
.
வறுமை தோன்றிய பொழுதிலும் தமது அன்றாட ஆடம்பரங்களையும் செலவுகளையும் குறைத்தாலும் குங்கிலியம் இடுவதை தவறாமல் ஆற்றினார். வறுமையின் காரணமாக சில நாட்கள் மக்களும் மனைவியும் உணவின்றி வாடும் நிலைமைக்கு ஆளானார்கள். பொற்தாலியை விற்றுப் பணம் பண்ணி நெல் வாங்கி வரும்படி மனைவி பணித்தமையால் அதை விற்க கொண்டு சென்றார். வழியெங்கும் குங்கிலியம் இடுவதற்கு இனி பணத்திற்கென்ன வழி என்று யோசித்து வருந்தியபடியே சென்றவருக்கு, குங்கிலியப் பொதி விற்றுக்கொண்டு வரும் வணிகன் கண்ணில் தென்பட தாங்கொணா இன்பம் அடைந்து பொற்தாலிக்கு குங்கியம் வாங்கி வந்தவராய், உடன் இறைவனுக்கு குங்கிலியம் ஏற்றி தமை மறந்து சிவனாரையே சிந்தித்தபடி கோவிலில் தங்கிவிட்டார்.
.
வாடிய மனைவி மக்கள் , வயிறு ஒட்டியும் பட்டினியால் மனம் வாடியும் அழுத கண்ணீரோட உறங்கிவிட, கருணை ததும்ப மனைவியின் கனவிலும் தோன்றிய ஈசன், பொன்னும் மணியும் நெல்லும் பல செல்வங்களும் நிறைத்து அருளினோம் என்று கூறி மறைந்தார். உறக்கம் கலைந்த மனைவி இல்லம் முழுதும் வளங்களால் நிரம்பியிருக்க கண்டு இறைவனின் கருணை எண்ணி கண்ணீர் சொறிந்தாள். "பசியுடன் இருக்கும் நீ உன் மனை சென்று பால் சோறு உண்டு பசி நீங்கப்பெருவாய்" என்று குங்கலிய நாயனாருக்கு உமையொருபாகன் உரைத்து அருளினான். இல்லம் வந்த நாயனார் இறைவனின் எல்லையில்லா அன்பை எண்ணி கைகூப்பி தொழுதார்.
.
செல்வத்தைக் கொண்டு தம்பதிகள் இருவரும், சிவபணிகள் இன்புற செய்து கொண்டும் அடியார்களுக்கு இன்னமுதளித்தும் நல்வாழ்வு வாழ்ந்திருந்தனர்.
.
இவ்வாறு இருக்கும் வேளையில், திருப்பனந்தாளில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானின் லிங்கத்திருமேனி, முன்பொரு சமயம் தாடகை என்ற பெண்ணொருத்தியின் மாலையை சுவீகரிக்கும் பொருட்டு சாய்ந்து இடம் கொடுத்திருந்தது. அந்த நிகழ்வுக்கு பின்னர் லிங்கமானது சாய்ந்தே இருந்தது. லிங்கத்தை நிமிர்த்த பெரும் சேனைகொண்டு முயன்றும் சோழ மன்னன் தோல்வியுற்றான். அரசனின் வருத்தம் தெரிந்த குங்கிலிய நாயனார்,
உடன் புறப்பட்டு திருப்பனந்தாளில் தனது நாதனை நேராக்கும் பொருட்டு, பெரிய கயிற்றினை தம் கழுத்தில் பூட்டிக்கொண்டு இழுத்து தம் மென்-மேனியை வருத்திக் கொள்ளலானார். பக்தர் மேனி வருத்துவதை காணப் பொருக்காத ஈசன் தாமே இளகி நேர் நின்று அருளினார். இப்பேற்பட்ட அரிய பக்தியையும் பரமனின் கருணையும் கண்ணாரக் கண்ட தேவர்களும் பூமழை தூவினர்.
.
சில காலம் திருப்பனந்தாளில் இறைவனுக்கு சேவை செய்த நாயனார், பின்னர் திருக்கடவூர் சென்றார். பின்பொரு முறை ஞானசம்பந்தர் பெருமானுக்கும் நாவுக்கரசருக்கும் தமது இல்லத்தில் திருவமுதளித்து அவர்களின் பேரருளுக்கும் ஈசனின் கருணைக்கும் பாத்திரமானார். பலகாலம் சிறப்புற வாழ்ந்து இறுதியில் சிவபதமடைந்து பேரின்ப வாழவை கிடைக்கபெற்று இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய 

லலிதா சஹஸ்ர நாமம் (611 - 620) (with English meanings)

Image result for music and dance paintings


விபூதி விஸ்தாரம்

கலாத்மிகா
கலா நாதா 
காவ்யா லாப வினோதினீ
சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா
ஆதிஷக்தி
அமேயா
ஆத்மா
பரமா
பாவனாக்ருதி
அனேஹ கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ 

()
கலா = கலா வடிவங்கள் - கலைகள் 
ஆத்மிகா = ஆன்மா - உயிர்

#611 கலாத்மிகா = கலைகளின் ஜீவனானவள்  ie கலாம்சமானவள் 

#612 கலா நாதா = கலைகளின் அதிபதி i.e இறைவி

() 
காவ்ய = காப்பியங்கள் - காவியங்கள் - கவிதைகள்
ஆலாப / லாப = பேசுதல் - உரைத்தல்
வினோத = ஆனந்தம்

#613 காவ்யாலாப வினோதினீ = காவியங்கள் உரைக்கப்படுவதை கேட்டு ஆனந்திப்பவள் 

()
சசாமர = சாமரம் - அரச வம்சத்தினர் உயர் குடியினர் அல்லது இறைவனுக்கு வீசும் சாமரம் 
ரமா = ஸ்ரீலக்ஷ்மி தேவி
வாணீ = ஸ்ரீசரஸ்வதி
சவ்ய = இடது - வலது
தக்ஷிண = வலம் - தென்புறம்

#614 சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா = ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவியரால் இருபுறமும் சாமரம் வீசி துதித்தேற்றப்படுபவள் 

#615 ஆதி ஷக்தி = பிரபஞ்சத்தின் மூலாதார சக்தி 

()
அமேயா = அளக்க முடியாத

#616 அமேயா =  அளவற்றவள் - அளக்க முடியாதவள்

#617 ஆத்மா = ஜீவனாகி இருப்பவள் (சகல ஜீவராசிகளிலும் உறைபவள்) 

()
பரம = அதிஉன்னத = மிக உயர்ந்த

#618 பரமா = ஒப்பற்றவள் 

()
பாவன = மாசற்ற
க்ருதி = படைப்பு (இவ்விடத்தில் கொள்ளத்தக்க பொருள்) 

#619 பாவனா-க்ருதி - தூய்மையின் சாந்நித்யம்

()
ஜனனீ = மாதா
ப்ரம்மாண்ட = பிரபஞ்சம்
கோடி = கோடி
அனேக = பல- கணக்கற்ற

#620 அனேக கோடி ப்ரம்மாண்ட ஜனனீ = பற்பல கோடி ப்ரபஞ்சங்களை தோற்றுவித்தவள் (பிரபஞ்சங்களின் அன்னை)  


(தொடரும்) 


Lalitha Sahasranama (611 - 620) 


Vibhoothi VisthaaramKalaathmika
Kala Nadha
Kavya Laapa vinodhini
Sachamara rama vaNi Savya dhakshina Sevitha
AdiShakthi
Ameya
Atma
Parama
Pavana-Krithi
Aneha Koti Brahmanda janani


()
Kala = Art forms
Athmika = Soul 

#611 Kalaathmika = Who is the soul(spirit) of all forms of art.

#612 kalaa-naadha = Who is the chief(Ruler-leader)  of all arts  

()
Kavya = poetries - epics
(AA)Laapa = To speak (Lapana = talking) 
Vinodha = pleasure

#613 kavyalabha vinodhini = Who finds pleasure listening to poetries and epics
 being narrated


()
SaChamara = whisks used as fans (chowrie) as a royal respect
Rama = Goddess Lakshmi
VaNi = Goddess Saraswathi
Savya = rightside - leftside 
Dhakshina = right - southern 

#614 Sachaamara rama vaaNi savya Dhakshina Sevitha = She Who is being worshipped 
by Goddess Lakshmi and Saraswathi on either side, who idolize her with chowries 


#615 Aadhi Shakthi = She who is the primeval Energy (of the universe) 

()
AmEya = cannot be measured 

#616 AmEya = Who is immeasurable (magnanimous) 

#617 Athma = Who is the self (soul or jiva in all beings) 

()
Parama = Highest 

#618 Parama = Who is Absolute

()
Pavana = pure
krithi = creation (as per the context) 

#619 Pavana Krithi = Who is manifestation of purity 

()
Janani= mother 
BrahmaNda = cosmos 
kOti = crore
Anekha= several = many 

#620 ANeka kOti BrahmaNda Janani - Who is the mother of many many crores
of worlds (multiple universes)  (to Continue) 

May 22, 2019

தேர்தல் 2019

Image result for election symbols tamilnadu

பம்பரமென சுழன்று ஒய்ந்த
வாழ்வில் இனி நம்பிக்கையில்லை

என்று தளரும் நேரத்தில்..


நாட்டு நடப்பை 
சுருட்டிய தாளில் முரசொலிக்கும்
நாளைய செய்திகள்...


சூரியன் இன்றுடன் அஸ்தமித்துவிடவில்லை....
நாளை மீண்டும் உதிக்கும்
என்ற நம்பிக்கை பிறக்கும்


துளிராக தழைத்திருக்கும்
இரு இலைகளின் நடுவில்
எட்டிப்பார்க்கும் 
செழித்த மாம்பழங்கள்


முறுக்கேறிய கைகளால்
ஏர் பூட்டி மண்வளம் செழிக்கச் செய்யும்
விவசாயத்தினால் பஞ்சமின்றிப் போகும்


நேற்று நட்ட மரக்கன்றுகள்
உயர்ந்த சோலைகளாகி
சாலையெங்கும் நிழல் தரும் 
மும்மாரி தட்டாமல் முழங்கும்
தடாகமெங்கும் தாமரை மலர்ந்து 
தமிழ்த்தரணி எங்கும் எழில் சேர்க்கும்