May 17, 2019

காரி நாயனார்




திருக்கடவூரில் அந்தணர் குலத்தோன்றிய தமிழ் அறிஞர். மொழி வல்லமை மிக்க உள்ளவராய் திகழ்ந்தவர். அவர் நாவிலும் சரஸ்வதியும், உள்ளத்தின் ஈசனும் நொடிப்பொழுதும் அகலாது குடி கொண்டிருந்தனர்.
.
தொல்காப்பிய நூல், திருச்சிற்றம்பலக் கோவை முதலிய ஆதி நூலகளுக்கும், அருந்தமிழ் புகழ் கூறும் காவியங்களுக்கும் மறைபொருள் விளக்கம் அளித்தார். புனையப்பட்டிருக்கும் புறநிலை இன்பம் கூறும் பாடல்களிலும் மறைந்திருக்கும் அகத்து இன்பத்தை சுட்டிக்காட்டி பொருள் விளக்கி தமது பெயரில் "காரிக் கோவை" என்று நூல் இயற்றினார். அதனை சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்கள் முன் விளக்கி பெரும் புகழும் செல்வமும் பெற்றார்.
.
பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவாலயங்கள் எழுப்புவதிலும், சிவப்பணி ஆற்றுவதிலும், அடியார்களுக்கு பொருள் அள்ளி வழங்குவதிலும் கருத்தாய் இருந்தார். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர், அபிராமவல்லியை பூக்களாலும் பாக்களாலும் தினம் துதித்தார். சிவ நாமம் க்ஷணப்பொழுதும் மறவாமலும், பல திருத்தோண்டு ஆற்றியபடி தமது வாழ்வை செவ்வனே வாழ்ந்தமையால் மகிழ்ந்த இறைவன் புகழுடம்புடன் திருக்கயிலாயம் சேர்பித்து தமது திருவடியில் இடமருளினார்.
.
ஓம் நம: சிவாய

No comments:

Post a Comment