May 30, 2019

Lalitha Sahasranama (621 - 630) (தமிழிலும்)



Vibhoothi Visthaaram

Divya Vigraha;
Klimkaaree;
Kevalaa;
Guhya;
Kaivalyapadha dhaayini;
Tripura;
Trijagad Vandhya;
Trimurthi:;
Tridasheshwari;
Tryakshari;

()
Divya = Beautiful  - Celestial
Vigraha = shape   - body

#621 Divya Vigraha = She who has divinely splendorous form 

()
Klim = Bija akshara *

*Bija akshara is a seed letter that forms the mantra for one particular deity. Bijakshara for each divine form may vary.  It is very potent and generally chanted after proper initiation from a right guru. 

#622 Klim-kaaree = Who is in the form of (crux) Bija Mantra Klim 

()
Kevala = only - that alone 

#623 Kevalaa = She who is nothing but that.- Who stands unique and alone ie established
in herself and  comprising of "everything" - Who is absolute.  

()
Guha = mysterious - private

#624 Guhya = Who is secretive ie Who cannot be comprehended by all. (whose worship cannot be upheld by everybody) 

()
Kaivalya = emancipation
Pada = post - rank - State (here in this context) 
Kaivalya-Padha = State of Moksha (liberation) 
Dhaayini = to give 

#625 Kaivalya-Padha Dhayini = Who bestows ultimate liberation ie final emancipation

()
pura = in the beginning 

#626 Tripura = Who is the ancient than the trinity (older ie the source) *

*Some devotees read this name to refer that  she is in the form of all 'three folds' like triguna, tridevas, trishakthis, three worlds, three types of activities etc..


()
Vandhya = to be adored - praised
Jagat   = world

#627 Trijagat Vandhya = Who is considered venerable and worshiped in all three three worlds(lokas)  (bhu, bhuvar, suvar)


#628 Trimoorthi = Who is the unified form of trinity (Brahma, Vishnu, Maheshwara) 

()
Tridasa = divine - heavenly beings - divinity  - Gods

#629 TridasEshvari = Who is the God of Gods - Mighty Ruler. 

()
Aksha = Letters- syllables

#630 Tryakshari = She Whose form is the three sacred syllables ( A U M ) 

(to Continue) 


லலிதா சஹஸ்ர நாமம் (621 - 630) 

விபூதி விஸ்தாரம்

திவ்ய விக்ரஹா;
க்லீம்காரீ;
கேவலா;
குஹ்யா;
கைவல்யபத தாயினீ;
த்ரிபுரா;
த்ரிஜகத்-வந்த்யா;
த்ரிமூர்த்தி;
த்ரிதசேஷ்வரீ;
த்ரயக்ஷரீ;

()
திவ்ய =  தெய்வீகமான -  அழகு
விக்ரஹ = அமைப்பு  - உடல்

#621 திவ்ய விக்ரஹா = தேய்வீக எழிலமைப்பை உடையவள்  

()
க்லீம் = பீஜ அக்ஷரம் *

* பீஜ அக்ஷரம் என்பது சக்தி வாய்ந்த ஓரெழுத்து மந்திராக்ஷரங்கள். பீஜம் என்றால் விதை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் பீஜாக்ஷரம் வேறுபடும். மந்திர சக்தியை ஒரெழுத்தில் அடக்கி விடும் அக்ஷர மந்திரங்களை பீஜாக்ஷரங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. பெரும்  நலன் பயக்கும் அபாரசக்தி மிக்க இம்மந்திரங்களை தீக்ஷை பெற்று ஜபிப்பதே சிறந்தது. 

#622 க்லீம்-காரீ = க்லீம் எனும் பீஜாக்ஷர மந்திரத்தின் வடிவமானவள் 

()
கேவலா = தனியொன்றாக- ஒன்று மட்டும்

#623 கேவலா = அவள் மட்டுமே தனித்தன்மையுடன் எதனையும் சாராதிருப்பவள் - முழுமையானவள்- தன்னில் தானே உறைந்து (அதனால்)  எல்லாமுமானவள் .

()
குஹ = மர்மமான - அந்தரங்கமான - வெளிப்படாத

#624 குஹ்யா = மறைபொருளானவள் - அனைவராலும் எளிதில் உணரப்படாதவள் (அவளது வழிபாடு அனைவராலும் பின்பற்ற இயலாதது) 

()
கைவல்ய = கைவல்யம் - மோக்ஷம் 
பத = பதவி - ஸ்தானம்
கைவல்ய பதம் = வீடுபேறு 
தாயினி = வழங்குபவள் 

#625 கைவல்ய-பத தாயினீ = முக்தி நிலை அருள்பவள் 

()
புர = முதன்மை - ஆரம்பம் - புராதனம்

#626  த்ரிபுரா = மும்முர்த்திகளைக் காட்டிலும் புராதனமானவள் ie அனைத்துக்கும் முதலான ஆதார சக்தி *

*இந்நாமத்தை முக்குணங்கள், முத்தேவர்கள் மும்மூர்த்தி) , மூவகை சக்தி, மூன்று உலகங்கள், முத்தொழில்கள், முக்காலம் என மூத்தன்மை உடைய அனைத்துடனும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.


()
வந்த்யா = போற்றத்தக்க
ஜகத் = ஜகம் - உலகம்

#627 த்ரிஜகத் வந்த்யா = மூவுலகிலும் புகழ்ந்து போற்றி வழிபடப்படுபவள்
(பூ, புவர், சுவர் லோகங்கள்) 

#628 த்ரிமூர்த்தி = மூம்மூர்த்திகளின் ஐக்கிய வடிவமானவள் (பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர்)

()
த்ரிதஸா = தெய்வங்கள் - தேவர்கள் - கடவுளர்கள்

#629 த்ரிதசேஸ்வரீ = கடவுளர்களுக்கெல்லாம் ஈஸ்வரி  - சர்வேஸ்வரி (பிரபஞ்சத்திற்கு தலைவி)   

()
அக்ஷ = எழுத்துகள் - அசை

#630 த்ரயக்ஷரீ = மூன்று அக்ஷரங்களின் வடிவானவள் ( அ - உ - ம் எனும் அக்ஷரங்களால் ஆன  ஓம் எனும் பிரணவ மந்திர வடிவம்) 

(தொடரும்) 



Thanks and reference:
Spokensanskrit.com
manblunder.com

A humble attempt to discuss meanings word by word - ShakthiPrabha 

No comments:

Post a Comment