May 03, 2019

கழற்சிங்கர்

Image result for கழற்சிங்கர்

பல்லவ குறு-நில மன்னராக சிறப்புடன் அரசாண்டு வந்த கழற்சிங்க நாயனார். பரமசிவனின் நாமத்தையும் அவர் புகழ்பாடுதலையுமே தலையாய கடமையாக கொண்டு வாழ்ந்தவர்.
திருத்தொண்டு புரிதற் பொருட்டு, பல சிவஸ்தலங்கள் தரிசித்து , திருவாரூர் கோவிலை அடைந்தார். அவருடன் அவர் தேவியானவளும் உடன் வந்திருந்தார். கோவிலை வலம்
வந்தவள் பூஜைக்கு வைத்திருந்த மலரொன்று நிலத்தில் வீழ்ந்திருந்ததை பார்த்து, அதன் அழகில் மயங்கி அதனை ஆவலோடு முகர்ந்தாள்.
இதனை கண்ணுற்ற செருத்துணை நாயனார் எனும் பக்தர், இறைவனுக்கு அளிக்கவிருந்த மலரை முகர்வதா, என வெகுண்டு, முகர்ந்த மூக்கை அறுத்தார். அரசியார் வலியின் மிகுதியால் துடித்துப் புலம்ப அதனை கேட்டு வெளியே வந்த கழற்றி நாயனார், இக்கொடுஞ்செயலை செய்தவர் எவரென வினவ, மூக்கை அறுத்த சிவனடியார் காரணத்தை உரைத்தார். உடனெ நாயனார், "பூவை எடுத்த கையைத் தானே முதலில் வெட்டியிருக்க வேண்டும்" எனச் சொல்லி, உடைவாளை உருவி அரசியாரின் கைகளை துண்டித்தார். இத்தகைய அரிய பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் கழற்சிங்க நாயனார்.
திருத்தொண்டு புரிந்த வண்ணம் சிவநெறி தழைத்தோங்க கழற்சிங்க நாயனார் நெடுங்காலம் ஆட்சி புரிந்தார். அவர் பக்தியின் நெகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு சிவபதம் அருள, திருக்கையிலாயம் அடையும் பெறு பெற்றார்..

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment