February 10, 2009

ஹாய் பாலா, இரண்டு நிமிடம் ப்ளீஸ்!

வலைப்பதிவுகளிலிருந்து, தெருமுனை அரட்டைக் கச்சேரி வரை தமிழ்மக்களின் நாவில் சரளமாய் பேசப்படும் தலைப்பு "அகோரி / நான் கடவுள்'.பேசப்படும் நபர் பாலா.அவரைக் கண்டு களித்த பலர் பாலாவைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கி, புகழோ புகழென புகழ்கின்றனர்.பாலாவின் படைப்பு 'விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது' என்று பலர் கூறக்கூடிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.He is completely submerged in hero- worship.

நாலே நாலு படங்கள் பண்ணியிருக்கிறார். நான்கும் வெற்றிப்படங்கள். பாராட்டப்பட வெண்டிய விஷயம். (இங்க கொஞ்சம் கை தட்டுங்க)சேது - நந்தா - பிதாமகன் - நான் கடவுள்

ஒன்றை மிஞ்சும்படி இன்னொன்று. படம் பார்த்த யாரும் சிரித்தபடி வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு படம் எடுக்கிறார். கொடுத்த காசுக்கு எப்படி எல்ல்லாம் அழ வைக்க முடியும், எவ்வளவு pessimism காண்பிக்க முடியும், எத்தனை அழுகிய / பழுதுபட்ட இடங்களை உயிரூட்ட முடியும், என்று, தன்னுள் தானே ஆழ்ந்து, இன்னும் இன்னும் கீழே என நோண்டித் தோண்டிப்பார்க்கிறார்.


ஒரு நாணயத்தின் சொத்தையான துருபிடித்த பக்கத்தையே படம் பிடிப்பேன் என அடம்பிடித்து, அதனை ஆராய்ந்து அதன் நெளிவு சுளிவுகளை மனசில் வாங்கி, அடி வாங்கிய நாணயத்தின் மன நிலையை படம் பிடிப்பது மட்டுமே என் முழு நேர இயக்குனர் பணி என்று முடிவெடுத்திருக்கிறாரா? இந்த முடிவு அவரை எங்கு கொண்டு போகுமோ?! (national award? well I wish with all my heart it does, it should and given all his devotion, may be it will) (மறுபடியும் யோசிக்காம கை தட்டிடுங்க)
இப்படிப் பட்ட படங்கள் மட்டுமே சாதிக்க முடியும. இதைச் செய்தால்தான் நான் சாதனையாளன் வரிசையில் இடம் பெறூவேன். இப்படி படம் இயக்கினால் தான் நம்மால் முத்திரை பதிக்க முடியும், என்று தன்னைச் சுற்றி குறுகிய வட்டம் வரைந்திருக்கிறார் பாலா என்று எண்ணியிருந்தேன். சில பல நேர்காணல்களை படிக்க நேர்ந்த போது, the man comes clean as someone who tells a tale which he could relate to, not just something which takes him to the limelight.அவருக்கு இப்படிப்பட்ட பச்சாதாபங்களை உயிரூட்டுவது எளிதாய் அமைந்துவிடுகிறது. தன்னிடம் இருப்பதைத் தான் ஒருவன் மற்றாவனுக்கு பகிர்ந்து மகிழ முடியும். அப்படியெனில் பாலாவிடம் மண்டி இருப்பது சமூகத்தின் மீது ஒருவித ஆதங்கம், கோபம், பச்சாதாபம், வெறுப்பு, இவை மட்டும் தான் என கணக்கு போட்டு விடுவது எளிது.'உனக்கு என்ன வந்தது? இரண்டணா பெறாத உபயோகமற்ற உன் கருத்துக்கள் எவர் மதிப்பார்கள்.' என்று உள்ளிருந்து ஒருத்தி கதறினாலும், பாலாவின் எண்ணம் இயக்கம் எழுத்து பாராட்டப் படுகிறது என்று சமூகத்தின் அத்தனை மூலையில் இருந்து குரல் வந்தாலும், I cant help feeling sad for him. பாலா மிகுந்த திறமைசாலி என்பதிலோ கலைத்திறன் மிக்கவர் என்பதிலோ வெள்ளித்திரையில் மின்னுவதற்கு சரக்குள்ள மனிதர் என்பதிலோ எள்ளளவும் ஐயம் இல்லை. அத்தனைத் திறமையையும் ஆக்கத்தையும், இயலாமையின் வெளிப்பாட்டிலேயே செலவிட்டுவிடுகிறாரே என்பது தான் என் ஆதங்கம்.விளிம்பு நிலை மனிதர்களோ அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது சிறுபான்மையினரின்
கதைகளையோ பாலாவைப் போல் யாராலும் இத்தனை நயத்துடனும் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் வெளிக்கொணர முடியாது। இவர்களைப் பற்றிய விழிப்பை பாலா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஒப்புக்கொள்கிறேன். குற்றம்புரிந்து சிறைச்சாலை செல்லும் ஒருவனின் கேள்விக்குறியான எதிர்காலம், அதையும் தாண்டி அவனுள் சொல்லப்படாத சில ஏக்கங்கள், காதலின்தோல்வியை ஏற்க முடியாது மனநோய்க்கு இறையாகும் இன்னொருவன், சமூகத்தின் பார்வையில் ஏளனத்திற்கு உள்ளான ஒருவனின் கதை, உணர்வுகள், அவனுள் உறங்கும் நட்பின் வெளிப்பாடு. எல்லாம் சரி தான். ஆனால் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொணர்ந்த பிறகு,பாலா செய்வது, அந்த கதாபாத்திரத்தின் உயிரை உணர்வை கொன்றுவிட்டு தன் இயக்குனர் திறனுக்கு வெற்றி சூட்டிக்கொள்கிறார். நான் கேட்பதெல்லாம் இது தான். இப்படிப் பட்ட சமூகத்தில் கரும்புள்ளியாய் திகழும் இவர்களின் கதைகளை படம் பிடிக்காதீர்கள் என சொல்லவரவில்லை. அப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்த பலரின் கதையில் புதிய உதயத்தை உருவாக்கி ஒரு புன்முறுவலுடன் எங்களை அனுப்பி வையுங்களேன் பாலா?! ஏன் உங்களுக்கு சோகத்திலும் நம்பிக்கையற்ற சூன்யத்தில் உழல்வதும், உழலவைப்பதும் மட்டுமே பிடித்திருக்கிறது? கடிவாளம் கட்டிக்கொண்டு ஒரு கோணத்தை மட்டுமே ஏன் சிந்திக்கிறீர்கள்? அது தான் எதார்த்தம் என்றால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான்கில் ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம். Even probability theory fail to give hand to your reality.

சமுதாயத்திடமிருந்து நாம் பெற்றுவரும் கல்விக்கும், வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு திரும்ப ஏதேனும் செய்யவேண்டிய பொறுப்பில் இருக்கிறான். அவனது உழைப்பு, வரிப்பணம், சேவை இத்யாதியைத் தவிர குறைந்தபட்சம் பிறருக்கு சில நல்ல செய்திகள், வலிமையுட்டும் வார்த்தைகள் பகிரதல் வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது। சாதாரண run-in-the-mill தனி மனிதனுக்கே இந்த நியதி என்றால் தான் சொல்லவரும் செய்திகள் உலகம் முழுதும் பார்க்கப்படுகின்றன என்று தெரிந்த இயக்குனர்களுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது.நான்கில் ஒன்றேனும் வித்தியாசமான அணுகுமுறையுடன் திகழ்ந்திருக்கலாம் என்பது தான் என் தனிப்பட்டக் கருத்து.
குறிப்பிட்ட இயக்குனர், காதல் தோல்வி அல்லது காதல் சம்பந்தப்பட்ட படங்கள் எடுத்தால், அவனின் சரக்கு தீர்ந்து விட்டது, he gets boringly repetitive என்று பத்திரிகைகள் முதல் டீக்கடை அரட்டை அடிப்போர் வரை சாடுகிறோம்। மசாலாப் படங்கள் மட்டுமே எடுத்து, punch dialogue என்ற புதிய பெயரில் நம்மை வாட்டும் இயக்குனர்களுக்கு "ரசனை போதாது" என்று பட்டம் கட்டி, மட்டம் தட்டிவிடுகிறோம்। அப்படி இருக்க, வித்தியாசமாய் இருக்கிறது என்பதற்காகவோ, யாரும் யோசிக்க முடியாத கோணங்களில் சிந்திக்கிறார் என்பதாலோ பாலாவிற்கு நான் மேதை பட்டம் கொடுக்க தயாராக இல்லை. He should watch he doesn't get repetitively negative in approach.


வட்டதை விட்டு வெளியே வந்து 'art films need not be broody' என்ற ரீதியில் படம் எடுத்தாலும் கூட இவருக்கு எதிர்காலம் இன்னும் பிரகாசமாய் இருக்க வாய்ப்புண்டு। அதை முதலில் அவரே ஆழமாய் நம்ப வெண்டும்। தன்னுள் அமிழ்ந்து இருக்கும் கலைக்குக் கருப்பு வர்ணம் மட்டுமே பூசி பரிசளிப்பதை விடுத்து, கலைக்கு கலைநயத்துடன் வேறு வண்ணங்கள் சேர்த்துப் பாருங்களேன் பாலா!? குறைந்தது ஒரு கருப்புப் படத்திற்கு ஒரு வர்ணப் படம் ஃப்ரீ என்ற ரீதியிலாவது தொடருங்கள்। உங்களின் வண்ணங்களற்ற உயிரற்ற உணர்வுகளின் ஓவியப் பரிசளிப்பு எங்களுக்கு பல நேரங்களில் மனவருத்தத்தையும், ஆழ்ந்த துக்கத்தையுமே மட்டுமே தருகிறது।

அதைப்பற்றி ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை பாலா?

பாலா இன்னும் 4 படங்கள் இப்படியே செய்தார் என்றால், I need to conclude
'He lacks confidence to approach anything vibrantly।'
Not that my ideas matter to him। Even remotely.