February 10, 2009

ஹாய் பாலா, இரண்டு நிமிடம் ப்ளீஸ்!

வலைப்பதிவுகளிலிருந்து, தெருமுனை அரட்டைக் கச்சேரி வரை தமிழ்மக்களின் நாவில் சரளமாய் பேசப்படும் தலைப்பு "அகோரி / நான் கடவுள்'.பேசப்படும் நபர் பாலா.அவரைக் கண்டு களித்த பலர் பாலாவைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கி, புகழோ புகழென புகழ்கின்றனர்.பாலாவின் படைப்பு 'விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது' என்று பலர் கூறக்கூடிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.He is completely submerged in hero- worship.

நாலே நாலு படங்கள் பண்ணியிருக்கிறார். நான்கும் வெற்றிப்படங்கள். பாராட்டப்பட வெண்டிய விஷயம். (இங்க கொஞ்சம் கை தட்டுங்க)



சேது - நந்தா - பிதாமகன் - நான் கடவுள்

ஒன்றை மிஞ்சும்படி இன்னொன்று. படம் பார்த்த யாரும் சிரித்தபடி வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு படம் எடுக்கிறார். கொடுத்த காசுக்கு எப்படி எல்ல்லாம் அழ வைக்க முடியும், எவ்வளவு pessimism காண்பிக்க முடியும், எத்தனை அழுகிய / பழுதுபட்ட இடங்களை உயிரூட்ட முடியும், என்று, தன்னுள் தானே ஆழ்ந்து, இன்னும் இன்னும் கீழே என நோண்டித் தோண்டிப்பார்க்கிறார்.


ஒரு நாணயத்தின் சொத்தையான துருபிடித்த பக்கத்தையே படம் பிடிப்பேன் என அடம்பிடித்து, அதனை ஆராய்ந்து அதன் நெளிவு சுளிவுகளை மனசில் வாங்கி, அடி வாங்கிய நாணயத்தின் மன நிலையை படம் பிடிப்பது மட்டுமே என் முழு நேர இயக்குனர் பணி என்று முடிவெடுத்திருக்கிறாரா? இந்த முடிவு அவரை எங்கு கொண்டு போகுமோ?! (national award? well I wish with all my heart it does, it should and given all his devotion, may be it will) (மறுபடியும் யோசிக்காம கை தட்டிடுங்க)




இப்படிப் பட்ட படங்கள் மட்டுமே சாதிக்க முடியும. இதைச் செய்தால்தான் நான் சாதனையாளன் வரிசையில் இடம் பெறூவேன். இப்படி படம் இயக்கினால் தான் நம்மால் முத்திரை பதிக்க முடியும், என்று தன்னைச் சுற்றி குறுகிய வட்டம் வரைந்திருக்கிறார் பாலா என்று எண்ணியிருந்தேன். சில பல நேர்காணல்களை படிக்க நேர்ந்த போது, the man comes clean as someone who tells a tale which he could relate to, not just something which takes him to the limelight.அவருக்கு இப்படிப்பட்ட பச்சாதாபங்களை உயிரூட்டுவது எளிதாய் அமைந்துவிடுகிறது. தன்னிடம் இருப்பதைத் தான் ஒருவன் மற்றாவனுக்கு பகிர்ந்து மகிழ முடியும். அப்படியெனில் பாலாவிடம் மண்டி இருப்பது சமூகத்தின் மீது ஒருவித ஆதங்கம், கோபம், பச்சாதாபம், வெறுப்பு, இவை மட்டும் தான் என கணக்கு போட்டு விடுவது எளிது.



'உனக்கு என்ன வந்தது? இரண்டணா பெறாத உபயோகமற்ற உன் கருத்துக்கள் எவர் மதிப்பார்கள்.' என்று உள்ளிருந்து ஒருத்தி கதறினாலும், பாலாவின் எண்ணம் இயக்கம் எழுத்து பாராட்டப் படுகிறது என்று சமூகத்தின் அத்தனை மூலையில் இருந்து குரல் வந்தாலும், I cant help feeling sad for him. பாலா மிகுந்த திறமைசாலி என்பதிலோ கலைத்திறன் மிக்கவர் என்பதிலோ வெள்ளித்திரையில் மின்னுவதற்கு சரக்குள்ள மனிதர் என்பதிலோ எள்ளளவும் ஐயம் இல்லை. அத்தனைத் திறமையையும் ஆக்கத்தையும், இயலாமையின் வெளிப்பாட்டிலேயே செலவிட்டுவிடுகிறாரே என்பது தான் என் ஆதங்கம்.



விளிம்பு நிலை மனிதர்களோ அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது சிறுபான்மையினரின்
கதைகளையோ பாலாவைப் போல் யாராலும் இத்தனை நயத்துடனும் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் வெளிக்கொணர முடியாது। இவர்களைப் பற்றிய விழிப்பை பாலா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஒப்புக்கொள்கிறேன். குற்றம்புரிந்து சிறைச்சாலை செல்லும் ஒருவனின் கேள்விக்குறியான எதிர்காலம், அதையும் தாண்டி அவனுள் சொல்லப்படாத சில ஏக்கங்கள், காதலின்தோல்வியை ஏற்க முடியாது மனநோய்க்கு இறையாகும் இன்னொருவன், சமூகத்தின் பார்வையில் ஏளனத்திற்கு உள்ளான ஒருவனின் கதை, உணர்வுகள், அவனுள் உறங்கும் நட்பின் வெளிப்பாடு. எல்லாம் சரி தான். ஆனால் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொணர்ந்த பிறகு,பாலா செய்வது, அந்த கதாபாத்திரத்தின் உயிரை உணர்வை கொன்றுவிட்டு தன் இயக்குனர் திறனுக்கு வெற்றி சூட்டிக்கொள்கிறார். நான் கேட்பதெல்லாம் இது தான். இப்படிப் பட்ட சமூகத்தில் கரும்புள்ளியாய் திகழும் இவர்களின் கதைகளை படம் பிடிக்காதீர்கள் என சொல்லவரவில்லை. அப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்த பலரின் கதையில் புதிய உதயத்தை உருவாக்கி ஒரு புன்முறுவலுடன் எங்களை அனுப்பி வையுங்களேன் பாலா?! ஏன் உங்களுக்கு சோகத்திலும் நம்பிக்கையற்ற சூன்யத்தில் உழல்வதும், உழலவைப்பதும் மட்டுமே பிடித்திருக்கிறது? கடிவாளம் கட்டிக்கொண்டு ஒரு கோணத்தை மட்டுமே ஏன் சிந்திக்கிறீர்கள்? அது தான் எதார்த்தம் என்றால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான்கில் ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம். Even probability theory fail to give hand to your reality.

சமுதாயத்திடமிருந்து நாம் பெற்றுவரும் கல்விக்கும், வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு திரும்ப ஏதேனும் செய்யவேண்டிய பொறுப்பில் இருக்கிறான். அவனது உழைப்பு, வரிப்பணம், சேவை இத்யாதியைத் தவிர குறைந்தபட்சம் பிறருக்கு சில நல்ல செய்திகள், வலிமையுட்டும் வார்த்தைகள் பகிரதல் வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது। சாதாரண run-in-the-mill தனி மனிதனுக்கே இந்த நியதி என்றால் தான் சொல்லவரும் செய்திகள் உலகம் முழுதும் பார்க்கப்படுகின்றன என்று தெரிந்த இயக்குனர்களுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது.நான்கில் ஒன்றேனும் வித்தியாசமான அணுகுமுறையுடன் திகழ்ந்திருக்கலாம் என்பது தான் என் தனிப்பட்டக் கருத்து.
குறிப்பிட்ட இயக்குனர், காதல் தோல்வி அல்லது காதல் சம்பந்தப்பட்ட படங்கள் எடுத்தால், அவனின் சரக்கு தீர்ந்து விட்டது, he gets boringly repetitive என்று பத்திரிகைகள் முதல் டீக்கடை அரட்டை அடிப்போர் வரை சாடுகிறோம்। மசாலாப் படங்கள் மட்டுமே எடுத்து, punch dialogue என்ற புதிய பெயரில் நம்மை வாட்டும் இயக்குனர்களுக்கு "ரசனை போதாது" என்று பட்டம் கட்டி, மட்டம் தட்டிவிடுகிறோம்। அப்படி இருக்க, வித்தியாசமாய் இருக்கிறது என்பதற்காகவோ, யாரும் யோசிக்க முடியாத கோணங்களில் சிந்திக்கிறார் என்பதாலோ பாலாவிற்கு நான் மேதை பட்டம் கொடுக்க தயாராக இல்லை. He should watch he doesn't get repetitively negative in approach.


வட்டதை விட்டு வெளியே வந்து 'art films need not be broody' என்ற ரீதியில் படம் எடுத்தாலும் கூட இவருக்கு எதிர்காலம் இன்னும் பிரகாசமாய் இருக்க வாய்ப்புண்டு। அதை முதலில் அவரே ஆழமாய் நம்ப வெண்டும்। தன்னுள் அமிழ்ந்து இருக்கும் கலைக்குக் கருப்பு வர்ணம் மட்டுமே பூசி பரிசளிப்பதை விடுத்து, கலைக்கு கலைநயத்துடன் வேறு வண்ணங்கள் சேர்த்துப் பாருங்களேன் பாலா!? குறைந்தது ஒரு கருப்புப் படத்திற்கு ஒரு வர்ணப் படம் ஃப்ரீ என்ற ரீதியிலாவது தொடருங்கள்। உங்களின் வண்ணங்களற்ற உயிரற்ற உணர்வுகளின் ஓவியப் பரிசளிப்பு எங்களுக்கு பல நேரங்களில் மனவருத்தத்தையும், ஆழ்ந்த துக்கத்தையுமே மட்டுமே தருகிறது।

அதைப்பற்றி ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை பாலா?

பாலா இன்னும் 4 படங்கள் இப்படியே செய்தார் என்றால், I need to conclude
'He lacks confidence to approach anything vibrantly।'
Not that my ideas matter to him। Even remotely.

46 comments:

  1. welcome back my dear friend!

    நல்வரவு நல்வரவு!
    வாராய் நீ வாஆஆஆஆராய்!

    பதிவைமுழுக்கப்படிச்சிட்டுப்பின்னூட்டமிடறேன் ஷக்தி!

    ReplyDelete
  2. ஷக்தி! உன் விமர்சனம் மிகத்தெளிவாக இருக்கிறது.நீண்ட நாளைக்குப்பிறகு உன் பதிவை படிப்பதில் முதலில் சந்தோஷப்படும் ஒரு ஜீவன் இருக்குமானால் அது நாந்தான்! ஆங்கிலமும் தமிழும் உனக்கு எழுதும்போது நன்குவசப்படும்.
    ஒரு திரைவிமர்சனமே இப்படி மனசை ஆக்கிரமிக்கிறது என்றால் உன் எழுத்தின் வெற்றி இதர படைப்புகளில் இமயத்தைத்தொட்டுவிடும் அதனால் நிறைய எழுது.
    வாழ்த்துகள்!

    படம்பார்க்காததால் கருத்தினை பிறகு சொல்கிறேன்.

    ReplyDelete
  3. நியாயமான கேள்விகள்.. சந்தேகங்கள்..

    எனக்கும் இதே போன்ற எண்ணங்கள்தான்..

    பாலாவிடம் அதீதமான கற்பனை வளம் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் அவர் தன்னை வைத்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில்தான் உள்ளது. இதுதான் அவரிடம் உள்ள பிரச்சினை..

    ஆனாலும் ஒன்று.. இப்படிப்பட்ட கோணத்திலும் ஒரு இயக்குரும், இயக்குதலும், சினிமாவும் இருக்கிறது என்பதும் திரைப்படத்துறையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

    ஆகவே நாம் இதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    யோசித்துப் பாருங்கள்.. புரியும்..

    ReplyDelete
  4. சூப்பர்ப்.. எந்த வரிகளை பாராட்டுவது என்றே தெரியவில்லை..

    பாலாவின் படங்கள் டார்க் பிலிம் வகைகள். இவரின் கதாநாயகர்கள் எல்லாம் கஞ்சா புகைத்து கொண்டோ, பெற்ற தாயை அவமானபடுத்தி கொண்டோ, பொறுப்பில்லாமல் திறிபவனாகவோ, காதலியிடம் கூட மென்மையில்லதவனாகவோ தான் சித்திரிக்கபடுகிறார்கள்.

    எழுதினால் எழுதி கொண்டே போகலாம்.. சூப்பர்ப்.

    ReplyDelete
  5. நானும் இத தான் யோசிச்சேன், ஆனா இன்னும் ஒரு படம் வரட்டும் அப்புறம் முடிவுக்கு வரலாம்னு விட்டுட்டேன். மத்தபடி பாலா அளவுக்கு இவ்வளவு அருகே இருந்து ஒரு படம் பண்றது ரொம்ப கஷ்டம்.

    என்ன பொறுத்த வரைக்கும் இந்த மாதிரி படமெல்லாம் எடுகற அளவுக்கு திறமையும் தைரியமும் ஒருங்கே பெற்ற பாலாவை வாழ்த்துவோம்.

    நீங்க இவ்வளோ எழுதியிறுப்பதும் அவரது வெற்றியே. நானும் உங்கள போலதான். அடுத்து என்ன எடுக்குறார்னு பாப்போம்..

    ~ மாறன்

    ReplyDelete
  6. SP - http://timesofindia.indiatimes.com/India_Buzz/God_of_small_things/articleshow/4105699.cms

    Bala : So, what’s going on in his mind post NK? “Sometimes, I wish I could do a love story,” he says, “I think I’m in an image trap right now with all my films portraying ‘the other world’. So, I guess I’ll have to take the plunge into ‘commercial cinema’ soon. I’d also like to include more dance sequences in my films in future.”

    :-)

    ReplyDelete
  7. //நான்கில் ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம்//

    ஏன்?

    நந்தாவில் சூர்யாவும் லைலாவும் இணைந்து குடும்பத்துடன் சிரித்தபடி "வணக்கம்" சொல்லியிருந்தால் பிதாமகன் முடிவு உங்களுக்கு உறுத்தியிருக்காதா?

    சேதுவில் காதலர்கள் இணைந்திருந்தால் நந்தாவின் முடிவு உங்களுக்கு சரியாக பட்டிருக்குமா?

    "எல்லா படத்திலயும் "pessimism"னு குறை சொல்றவங்க,இயக்குனரின் முந்தய படங்களை ஏன் மனசுல வெசுகிட்டு பாக்குரீங்க.

    ஒவ்வொன்னும் தனிப்படைப்பு...

    பாலா என்ன "போன படத்துல அப்பிடி climax வெசதால இந்த படத்துல சிரிச்ச மேனிக்கு முடிச்சுடுவோம்னா "script" எழுத முடியும்?

    its his style.thats how he thinks.

    u could complain if the approach looked like a forced one - sticks out of the plot etc...but not the approach itself.

    ReplyDelete
  8. good review. innamum padam pakkala.

    ReplyDelete
  9. /இப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்த பலரின் கதையில் புதிய உதயத்தை உருவாக்கி ஒரு புன்முறுவலுடன் எங்களை அனுப்பி வையுங்களேன் பாலா?!/

    /ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம்./

    what would u suggest?! that the Hero buys a lottery ticket, wins it and gives all the money to those people and every body is living happily everafter?! would that have been a reality?!

    It is an undeniable fact that people as depicted as in this film do exist in our community...it is also a fact that the so-called educated-normal people of the society do not even care to acknowledge the existence such people...leave alone looking at them as fellow human beings....so where could the happy ending for such people in real life come from?!

    There are lots of people in tamizh industry who can give all the happy endings that every one of us dream of...let a few handful of people who dare to hit the reality on our head be themselves....if possible just look at their work as it is..not without own inner cravings and expectations and ability of digestion of reality...it is what it is and will remain as it is unless we change it.....

    ReplyDelete
  10. ஷக்தி,

    வாழ்க்கை வெளுப்பாய் மட்டுமே இருப்பதாய் நினைப்பவர்களுக்கு பாலா படங்கள் பற்றிய இந்த விமர்சனம் வருவதில் தவறு இல்லை தான்.

    ஒரு கலைஞனிடம் நீ ஏன் இப்படிப் படம் எடுக்கிற! அப்படி ஏன் எடுப்பதில்லை என்று கேட்பதை உச்சக்கட்ட அயோக்கியத்தனமாய் பார்க்கிறேன்.

    இதை கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்களிடமே சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன், நீங்கள் பாலா போன்ற இயக்குநர்களிடம் சொல்லச் சொல்கிறீர்கள்.

    //Even probability theory fail to give hand to your reality. //

    காமெடிப் பண்ணாதீங்க, ஜெமோ சொல்வார் கலைஞனோட(கருணாநிதி இல்லை) வாழ்க்கையில் சாவு ஒரு மிக முக்கியமான விஷயம் என்று. ஏன் என்றால் அதன் பிறகு தான் அவன் செய்த படைப்பைப் பற்றிய இதுமாதிரியான விமர்சனத்தை வைக்க முடியும்.

    நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. Hi your article really good one.. if possible please provide your mobile no to: thamizhstudio.com

    thanks,
    thamizhstudio.com

    ReplyDelete
  12. விக்னேஸ் சண்முகம் அவர்களை வழிமொழிகிறேன்.

    //அப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்த பலரின் கதையில் புதிய உதயத்தை உருவாக்கி ஒரு புன்முறுவலுடன் எங்களை அனுப்பி வையுங்களேன் //

    விசு,விக்ரமன்,ks ரவிக்குமார்.....
    இவங்க படம் பாத்திங்கன்ன வேன நீங்க எதிர்பாக்குரமாதிரி முடிவு இருக்கும்.

    மெளனம் பேசியதே தவுத்து பாத்தீங்கன்னா அமீர் படம் கூட இப்படித்தான் இருக்கும்.புதுசா வந்த சசி படம் கூட முடிவு அப்படித்தான்.

    ஒருவேள இந்தப்படத்தோட முடிவு பூஜா சாகமா ஆரியாவோட சேந்திருந்தா உங்களுக்கு சந்தோசமா இருந்திருக்குமோ என்னவோ :-))

    பாலான்ன இப்படித்தான்னு நீங்களாவே ஒரு முன்முடிவுக்கு வந்தபின்னாடி இதை ஏங்க பாக்கவேனும்.

    ReplyDelete
  13. excellent. இதை யாராவது மறுக்கறாங்களான்னு பார்ப்போம்

    ReplyDelete
  14. hmmmm...

    பிரபா,

    சந்தோசம் மட்டுமா வாழ்க்கைகிறது? இல்ல வாழ்கிறவர்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கோமா? எனக்கும் உங்களை போல் கோபம் உள்ளது, ஆனால், பூஜாவை கொண்டதுக்கக இல்லை... ஹீரோவை கடவுள் ஆக்கியதர்க்கக.. சரி, பூஜா கேட்ட கேள்வியில் வலி உணர்ந்தீர்கள் அல்லவா? ஏதாவது தப்பா தோன்றியதா??

    இதப்பத்தி அதிகமா பேசனும்....

    நட்புடன்
    --குரங்கு

    ReplyDelete
  15. ஷக்தி:

    நீங்க நான் கடவுளை வெற்றிப்படம்னு (வியாபார ரீதியில்) அதற்குள் சொல்ல முடியுமா என்று தெரியலை.

    ***பாலா இன்னும் 4 படங்கள் இப்படியே செய்தார் என்றால், I need to conclude
    'He lacks confidence to approach anything vibrantly।'Not that my ideas matter to him। Even remotely.***

    நீங்க ஜெண்டிலா சொன்னதை நான் ரொம்ப க்ரூடா சொல்லி இருப்பேன். முடிந்தால் இந்த லின்க் பாருங்க!

    http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_18.html

    http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_10.html

    ----

    நல்ல விமர்சனம் ஷக்தி. தைரியமாக பாலாவின் நெகடிவ் பாயிண்ட்ஸையும் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்!

    -வருண்

    ReplyDelete
  16. வாங்க மேடம். நீங்க அதே ஷக்திதானா? இல்ல வேற யாராவது யட்சிணியா? :))

    படம் அழுவாச்சியா இருந்தா அதுக்கு என்ன பண்ண முடியும் ஷக்தி?

    என்னைக் கேட்டால் இம்மாதிரி படங்கள் - சமூகத்தின் இருள் பக்கங்களில் வாழும் மனிதர்களைப் பற்றிய படங்கள் - நிறைய வரவேண்டும். எத்தனை நாளுக்குத்தான் தமிழன் குலுக்கல் நடனங்களையும், பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகளையும், அபத்தக் காமெடிப் படங்களையும் பார்த்து பாயைப் பிராண்டிக் கொண்டிருப்பான்?

    கமலின் தசாவதாரத்தைவிட மஹாநதியை மிகவும் மதிக்கிறேன். விக்ரமின் சாமியை விட, பிதாமகன் எவ்வளவோ மேல். சூர்யாவின் வேல் படத்தைவிட நந்தா உயர்ந்தது. ஆர்யா இதுவரை செய்த படங்களை விட நான் கடவுள் தனித்து நிற்கப்போவது உறுதி.

    ஜெ.மோ.வின் ஏழாம் உலகம் படித்தீர்களா என்று தெரியவில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள்!

    இதைத்தான் இப்படித்தான் படைக்கவேண்டும் என்று எந்தப் படைப்பாளியிடமும் வற்புறுத்தமுடியாது. அவர்களுக்கு எதில் விருப்பம், திறமை, ஆர்வம் இருக்கிறதோ அதில்தான் கவனத்தைச் செலுத்துவார்கள். அதை ரசிப்பதும் ரசிக்காததும் அவரவர் விருப்பம்.

    My 2 cents to your 2 cents! :-)

    Welcome back!

    ReplyDelete
  17. ஷக்தி நியாஆஆஆஆஆஆஆ :-)

    நம்ம சுந்தர் சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன். ஏழாவது உலகம் படித்துப்பாருங்கள்.இப்படியும் ஒரு உலகம், அதில் நாமும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். குத்து பாட்டுகளும், அபத்த நகைச்சுவையும், அரைத்து அரைத்து நைசாய் போன காதல்கதைகளும், நியூசிலாந்து தெருக்கள் தரும் இன்ஸ்டண்ட் போதை போதும்! இது தரும் மயக்கத்தில், கோடிகளிலும் நாற்காலி கனவு காணும்
    நவயுக எம்ஜிஆர்கள்.

    விமர்சனங்களை படிக்க்கும்பொழுது, ஏழாவது உலகம் நாவலின் அடிப்படையுலும், அதே பிச்சைக்காரர்கள் பேசும்
    இடமும் அப்படியே நாவலில் உண்டு. ஆனால் என்னுடைய ரெண்டு
    செண்டு- படத்தில் வன்முறை அதிகம் என்று எல்லாரும் சொல்கிறார்கள். திரைப்படம் என்பது விஷீவல் மீடியா, அதில் அப்படியே காட்டாமல் எந்த தாக்கத்தையும் விஷிவலாய் காட்டலாம். இப்படிதான் இரானிய படங்கள் வருகின்றன என்கிறார்கள்.

    ReplyDelete
  18. ஷைலஜா, உண்மைத் தமிழன், Cable Shankar, மாறன், Ela, ஐயப்பன், சரவணகுமாரன், Anoop, Vigneshwaran Shanmugam, மோகன்தாஸ், தமிழ்-ஸ்டூடியோ, கார்த்திக், கார்க்கி, குரங்கு, வருண், சுந்தர், உஷா,


    வணக்கம் நண்பர்களே. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.


    முதலில் நான் கூறவிரும்புவது ஒன்று. my title says "hi bala, 2 mins please" 'நான் கடவுள்' பற்றி இப்பதிவில் நான் குறிப்பிட்டது இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு மேல் இல்லை.

    இது "நான் கடவுள்" பற்றிய விமர்சனம் அல்ல.


    இது திறமையான இயக்குனர் பாலாவைப் பற்றி என் கருத்து, சரியே சொன்னால் என் வேண்டுகோள்.

    சில பதிவுகளுக்கு என் பதில்களை சில மணிநேரத்தில் அளிக்கிறேன். உங்கள் அனைவரின் பதிவிற்கும், உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும் மீண்டும் நன்றி.
    :)

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  19. விமரிசனம்?..

    அது எதுவானால் என்ன?..

    ஆனால் அதை எழுதிய முறை?..

    வார்த்தைகள் தாமே வந்து விழுந்து
    அங்கங்கே தங்களுக்குரிய இடம் பிடித்துக் கொண்டு எழுத்துத் தொடர்களான ஐயோ,
    அந்த அற்புதத்தை என்னென்பேன்!

    ReplyDelete
  20. ஜீவி,

    நன்றி.

    தாங்களின் பொருள் நிறைந்த பதிவுகள் முன் இதெல்லாம் எம்மாத்திரம்!!? நீங்கள் என் வலைப்பதிவுக்கு வந்து என் எழுத்துக்களைப் படிப்பதே எனக்கு பெருமகிழ்ச்சி.

    என்றும் அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  21. //ஷைலஜா said...
    ஷக்தி! உன் விமர்சனம் மிகத்தெளிவாக இருக்கிறது.நீண்ட நாளைக்குப்பிறகு உன் பதிவை படிப்பதில் முதலில் சந்தோஷப்படும் ஒரு ஜீவன் இருக்குமானால் அது நாந்தான்! //

    ஷை,

    I am honoured. உங்கள் பதில் பதிவே எனக்கு பெரும் தெம்பு.

    என்றும் அன்புடன்,
    ஷக்தி.

    ReplyDelete
  22. ///// உண்மைத் தமிழன் said...

    ஆனாலும் ஒன்று.. இப்படிப்பட்ட கோணத்திலும் ஒரு இயக்குரும், இயக்குதலும், சினிமாவும் இருக்கிறது என்பதும் திரைப்படத்துறையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

    ////

    உண்மை தான்.

    ///ஆகவே நாம் இதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். //////

    இதில் நாம் விரும்பவோ விரும்பாமல் இருகவோ ஒன்றுமே இல்லை. அவர் படம் பிடிப்பது எதார்த்தத்தை. dark sides of realities alone. இதை விரும்பவில்லை எனில் எதார்த்ததையும் கண்டு ஓடி ஒளிகிறோம் என்பதே அர்த்தமாகிறது.
    அது முடியாத காரியம் அல்லவா?

    // யோசித்துப் பாருங்கள்.. புரியும்.. //

    ஒப்புக்கொள்கிறேன். Change is the mantra everywhere, cine-industry is no exception.

    ReplyDelete
  23. //Cable Sankar said...
    சூப்பர்ப்.. எந்த வரிகளை பாராட்டுவது என்றே தெரியவில்லை..

    பாலாவின் படங்கள் டார்க் பிலிம் வகைகள். இவரின் கதாநாயகர்கள் எல்லாம் கஞ்சா புகைத்து கொண்டோ, பெற்ற தாயை அவமானபடுத்தி கொண்டோ, பொறுப்பில்லாமல் திறிபவனாகவோ, காதலியிடம் கூட மென்மையில்லதவனாகவோ தான் சித்திரிக்கபடுகிறார்கள்.

    எழுதினால் எழுதி கொண்டே போகலாம்.. சூப்பர்ப்.
    //

    நன்றி ஷங்கர். ஆனால் அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்! நம் சமுதாயத்தில் நம் கண்முன்னே வலம்வரத்தானே செய்கிறார்கள்?!

    அதை படம்பிடித்து காண்பிப்பதும் ஒரு கலை.

    என்ன....

    பாலா அதை *மட்டுமே* படம் பிடித்து காண்பிக்கிறார் :P ;)

    ReplyDelete
  24. ////// Anoop said...
    SP - So, what’s going on in his mind post NK? “Sometimes, I wish I could do a love story,” he says, “I think I’m in an image trap right now with all my films portraying ‘the other world’. So, I guess I’ll have to take the plunge into ‘commercial cinema’ soon. I’d also like to include more dance sequences in my films in future.”
    //////////////

    Hi anoop. welcome to the blog. Its sad to see he completely misunderstood what is expected out of him.

    We do not want him to fall in the trap of doing 2 love duets and fight scenes, with suffocating punch dialogues.

    for god's sake NO. thats not what soem of us want.

    We want him to show hope, show life even after facing 'THE IMPOSIBLE'. After all, there is a dawn after every night.

    Nights alone dont make the world.

    Why do many ppl think, movies should fall in 2 categories.

    a. they make u sniff all thro and label itself art movies

    b. Craps in the name commercial movies?

    Why only black or white? Aren't there shades of grey?

    Thanks for the link, I very much, wiat for a diff movie from him, eager to watch, how does he shape up, but for movies on dark realities.

    :)

    ReplyDelete
  25. அட, மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே பார்வை!

    இதை பாலா படித்தால் நானும் மகிழ்வேன்! ஆனால் பாலாவுக்கு இது தெரியாமல் இருக்கும் என நினைக்கவும் முடியாது.

    எழுதும் நாம் நமது படைப்புகளைப் பின்னோக்கிப் பார்த்தோமானால் ஒரு சாயலும், ஒரே மாதிரியான எண்ணமும் நிறைந்துவிடுவதைக் காணலாம். இதற்கு எண்ணங்களின் ஆளுமை எனக் கொள்ளலாம், அல்லது எண்ணங்களுக்கு அடிமையாகுதல் எனவும் வைத்துக் கொள்ளலாம்.

    மக்களால் பாராட்டப்படும் இயக்குநர்கள் அனைவரின் படமும் ஒரு சாயலைக் கொண்டிருக்கும், அதாவது அவர்களது தனித்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

    இருக்கும் நிதர்சன நிலையை ஒருவர் அப்படியேச் சொல்லும்போது நமக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும். காரணம் நம்மால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறதே என்ற மனக்குறைதான். ஏன் இப்படி எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என. ஆனால் ஒன்று நேர்மறையான விசயங்களைப் போதிப்பதன் மூலம், எதிர்மறைக் கருத்துக்களை முன்னிறுத்தி அல்ல, சமூகத்தில் மாற்றங்கள் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

    நாம் நமது அன்றாட வாழ்வில் எதுவுமே காண்பது இல்லையா? கேட்பது இல்லையா? அல்லது கண்களை, காதுகளை மூடிக்கொண்டுச் செல்கிறோமோ என்பதைப் பொருத்தே அழுகையும் 'ஐயோ இப்படியெல்லாமா படம் எடுப்பார்கள்' என்ற வேதனையும் மிஞ்சும்.

    ஒட்டுமொத்த படைப்பாளர்களும் உணர்ந்து செயல்பட வேண்டியதன் பொறுப்பை மிகவும் துல்லியமாக, அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் ஷக்தி. மிகவும் அருமை. நன்றி.

    ReplyDelete
  26. ////vigneshwaran shanmugam said...

    ஏன்?

    நந்தாவில் சூர்யாவும் லைலாவும் இணைந்து குடும்பத்துடன்
    சிரித்தபடி "வணக்கம்" சொல்லியிருந்தால்
    பிதாமகன் முடிவு உங்களுக்கு உறுத்தியிருக்காதா?

    சேதுவில் காதலர்கள் இணைந்திருந்தால்
    நந்தாவின் முடிவு உங்களுக்கு சரியாக பட்டிருக்குமா?


    u could complain if the approach looked like a forced one - sticks out of the plot etc...but not the approach itself.
    ////

    வணக்கம் விக்கி. வருகைக்கு நன்றி.

    படத்தின் இரண்டு மணிநேரம் 25 நிமிடம் திரைக்கதையை இவ்வாறு
    அமைத்துவிட்டு, கடைசியில் சிரித்து 'வணக்கம்' சொன்னால் படம் பார்க்கிறவன்
    அடிக்க வரமாட்டானா?

    அதுவா நான் சொல்ல வந்தது?
    பழைய படங்களில் பார்த்துப் பழகிய திருப்பங்கள். திடீரென மனம் மாறும் வில்லன்கள்.
    சத்தியமாக இதையா எங்களைப்போன்ற சிலர் எதிர்பார்க்கிறோம்?

    ஒரு படம் "திரைக்கதை"யின் வடிவமைப்பில் முழுமைப் பெறுகிறது.
    அந்த திரைக்கதைக்கு ஒட்டாமல் வரும் காட்சிகளோ, வாக்கியமோ படத்தின்
    மெருகையே குலைத்து விடும் என்ற பாலப் பாடம் கூட தெரியாமலா நாங்கள் பேசுகிறோம்?

    திரைக்கதையை மண்பாண்டம் செய்யும் குயவனைப்போல் செதுக்கலாம்.
    செதுக்கவேண்டிய இடத்தில் சிறிது வளைந்து செதுக்கியிருந்தால், எப்பேர்பட்ட dark themes கூட
    *{எழுச்சி*யில் ஊக்கத்தில், நம்பிக்கையில் முடிந்திருக்கும்.

    பானை எல்லாம் செதுக்கி முடித்த பிறகு இறுதிக்காட்சியில் மாற்றம்
    செய்வதைப் பற்றி பேச்சுகே இடம் இல்லை.

    We need tounderstand diff between "sorrow" and "hopelessness".
    His movies doesn't finish off with sorrow, it finishes off with HOPELESSNESS.
    Hence the topic.

    சிரித்தபடி clmax இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
    அழுதபடி இருந்தல் கூட பரவாயில்லை.
    கதாபாத்திரங்களும், அவர்களை ஒட்டிய உணர்வுகளும், *சிதைந்தல்லவா* போகிறார்கள்.

    நம்பிக்கையை சிதைக்காமல் முடிக்கவேண்டும் என்றால், இளித்தபடி, சிரித்தபடி, முட்டாள்தனமாக முடிக்கவேண்டும் என்பதல்ல.

    ReplyDelete
  27. sp,

    i dint just mention the climax..my question could be rephrased like this

    //நான்கில் ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம்//

    சேது நீங்கள் சொன்ன படி எடுத்திருந்தால் நீங்கல் நந்தாவை எதார்த்தம் என்று கூறியிருப்பீர்களா!

    நந்தா நீங்கள் குரிப்பிட்டது போல எடுத்திருன்தால்,பிதாமகன் எதார்த்தமாக பட்டிருக்குமா உஙளுக்கு

    அல்லது பிதாமகனை வேறு இயக்குனர் இயக்கியிருன்தால் அது உஙளுக்கு எதார்த்தமாக பட்டிருக்குமா?

    ஒரு படத்தை ரசிக்கும் போது இயக்குனரின் முந்தைய படங்களை வைத்து எப்பிடி எடை போட முடியும்...இரண்டும் வெவ்வேறு படைப்புகள்தானே..

    what roles does the other movies of bala play in enjoying or judging his movies.

    ReplyDelete
  28. sp,

    do u mean pithamagan is completely dark?..nandha is completely dark?

    except the climax the whole film revolves around the lives of the outcasts who enjoy their life.

    surya - with laila and rajkiran

    siththan - with surya,sangeetha and co!

    its abt the happiness in their lives.

    ReplyDelete
  29. // Ela said...
    It is an undeniable fact that people as depicted as in this film do exist in our community...it is also a fact that the so-called educated-normal people of the society do not even care to acknowledge the existence such people...so where could the happy ending for such people in real life come from?!

    There are lots of people in tamizh industry who can give all the happy endings that every one of us dream of...let a few handful of people who dare to hit the reality on our head be themselves....if possible just look at their work as it is..not without own inner cravings and expectations and ability of digestion of reality...it is what it is and will remain as it is unless we change it.....
    //

    I completely agree with u. Very strong and very sensible post. I am bowled over with ur post word by word.

    and have nothing to deny.....

    except.... few of us also want postive hopes to be depicted in some movies by INTELLIGENT directors. Absolutely true, we have enough number of good-will movies showing 'alls well that ends well' devoid of masala stuffs.

    ***Bala's touch is special*** powerful, we want it to capture the positive sides of the society and its happenings.

    ஏதோ ஒரு ஒன்றையணா இயக்குனர் படம் பண்ணினால் நாங்கள் ஏன் கேட்கப்போகிறோம். பாலாவிடம் திறமை இருக்கிறது. He can capture poetry from any given still pictures. அந்த creativity ஏதேனும் ஒரு படத்தில் (வேறொரு கருவைக்கொண்டு) postive ஆக வெளிவந்தால் he can create larger impact to the society as a whole.

    நான் கடவுள் பார்த்த ஒவ்வொருவருக்கும், பிச்சைக்காரர்களின் பின் நடக்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் கண்முன் வரும். இப்படிப்பட்டவர்களை ஊக்குவிப்பதால் நன்மை விளையுமா என்ற கேள்வி எழும். அப்படி ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளார்.

    இந்த அபாரத் திறமை எழுச்சியூட்டும் இன்னும் சில படங்கள் செய்து, மின்ன வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஆவலில் எழுந்தது இக்கட்டுரை.

    விக்கி,

    இதே பதில் தான் உங்களுக்கும். ஒவ்வொரு திரைப்படத்தையும் முன்றைய படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவில்லை. இது திரைப்படத்தின் விமர்சனம் அல்ல. மீண்டும் கூறுகிறேன். இது பாலாவின் தனிப்பட்ட திறன் சமுதாயத்தின் புல்லுருவிகளைக் காண்பிப்பதில் *மட்டுமே* காண்பிப்பதில் செலவழியப்படுகிறதே என்ற சின்ன வருத்தம்.

    ReplyDelete
  30. //கார்த்திக் said...
    விக்னேஸ் சண்முகம் அவர்களை வழிமொழிகிறேன்.

    விசு,விக்ரமன்,ks ரவிக்குமார்.....
    இவங்க படம் பாத்திங்கன்ன வேன நீங்க எதிர்பாக்குரமாதிரி முடிவு இருக்கும். //

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கார்த்திக். :) (Are u karthikeyan from mandra mayyam)?


    ///ஒருவேள இந்தப்படத்தோட முடிவு பூஜா சாகமா ஆரியாவோட சேந்திருந்தா உங்களுக்கு சந்தோசமா இருந்திருக்குமோ என்னவோ :-))////

    நான் சொல்லவருவதை சரிவர புரிந்துகொள்ளாமல், தர்க்கம் செய்தால், என்னங்க செய்வது?

    மறுபடியும் நான் சொல்லவந்த வேறு சொற்கள் சேர்த்து எழுதுவேன், நீங்களும் உடனே "சூரியா லைலாவுடன் குதித்து பிக்னிக் கொண்டாடியிருந்தால்" சரியாக இருக்குமா என்று கேட்பீர்கள்.

    விட்டுவிடுவோம்.

    //
    பாலான்ன இப்படித்தான்னு நீங்களாவே ஒரு முன்முடிவுக்கு வந்தபின்னாடி இதை ஏங்க பாக்கவேனும்.
    //

    சொல்லி சொல்லி போர் அடிச்சுருச்ச்ங்க. இது படத்திற்கான விமர்சனம் அல்ல. I wouldn't have bothered if it was some xyz director who is interested in only giving commerical hits. பாலா வித்தியாசமானவராய்த் தெரிகிறார்.

    பாலா போன்ற திறமைசாலிகளிடமிருந்து வரும் கருத்துக்கள் *எல்லா தரப்பு மக்களும்* சென்றடைய வேண்டும் என்ற அவாவினால் எழுந்த கட்டுரை.

    ReplyDelete
  31. //கார்க்கி said...
    excellent. இதை யாராவது மறுக்கறாங்களான்னு பார்ப்போம் //

    வணக்கம் கார்க்கி. முதல் வருகைக்கு நன்றி :)

    எதை excellent என்று சொன்னீர்கள் எனப்புரியவில்லை. விக்னேஸ்வரனின் கருத்தையா அல்லது என் பதிவையா, எதுவாக இருந்தாலும் நன்றி. :)) :D

    ReplyDelete
  32. ///மோகன்தாஸ் said...
    ஷக்தி,

    ஒரு கலைஞனிடம் நீ ஏன் இப்படிப் படம் எடுக்கிற! அப்படி ஏன் எடுப்பதில்லை என்று கேட்பதை உச்சக்கட்ட அயோக்கியத்தனமாய் பார்க்கிறேன்.

    ///

    வாங்க மோஹன். :) சண்டைபொட்டு ரொம்ப நாளாச்சு :P

    ஒரு கலைஞனிடம் "ஏன் இப்படி படம் எடுக்கற" என்று கேட்பது அயோக்கியத்தனம் என்பதை விட அவன் உரிமையில் தலையிடுவது ஆகும்.

    ஆனால் அதே கலைஞனிடம் "ஆஹா இவ்வளவு திறமை இருக்கே, *இப்படியும்* சில கருத்துக்களை சென்றடைய செய்யலாமே என்று கோரிக்கை விடுப்பது தவறல்ல.

    நான் சொல்வது புரிகிறதா?

    ///// ஏன் இப்படி படம்
    இதை கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்களிடமே சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன், நீங்கள் பாலா போன்ற இயக்குநர்களிடம் சொல்லச் சொல்கிறீர்கள். ///////

    அவர்களிடம் எனக்கு எதிர்பார்ப்பு இல்லை மோஹன். இவரிடம் மண்டிக்கிடக்கும் திறமையில் மின்னும் நம்பிக்கையின் பெயரில் கேட்கிறேன்.

    ///காமெடிப் பண்ணாதீங்க, ஜெமோ சொல்வார் கலைஞனோட(கருணாநிதி இல்லை) வாழ்க்கையில் சாவு ஒரு மிக முக்கியமான விஷயம் என்று. ஏன் என்றால் அதன் பிறகு தான் அவன் செய்த படைப்பைப் பற்றிய இதுமாதிரியான விமர்சனத்தை வைக்க முடியும்.

    நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.
    ///

    :)

    :P தொடர்ந்து வாருங்கள் மாற்றுக்கருத்துக்களுக்கு பதில் பதிவு இடுவதே சுவாரஸ்யமான விஷயம். :)

    ReplyDelete
  33. //தமிழ் ஸ்டுடியோ said...
    Hi your article really good one.. if possible please provide your mobile no to: thamizhstudio.com

    thanks,
    thamizhstudio.com
    //

    Thanks. Keep visiting my blog. I shall get in touch with u later.

    regards,
    shakthi

    ReplyDelete
  34. //நல்ல விமர்சனம் ஷக்தி. தைரியமாக பாலாவின் நெகடிவ் பாயிண்ட்ஸையும் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்!

    -வருண்//

    நன்றி வருண் சுட்டிகளை படித்து, என் கருத்தை தெரிவிக்கிறேன். :)

    ReplyDelete
  35. நல்ல பதிவு. என்னால் சரிக்கு சம‌மாக விவாதிக்க முடியும் என்று நினைத்தாலும், நீங்கள் சொல்வதின் பெரும்பான்மை தவிர்க்க முடியாத உண்மைகள் என்ற காரணத்தால், மிகச் சிறந்த தொகுப்புக்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன். (சோடா ப்ளீஸ்! மூச்சு விடாம பேசுறது மட்டுமில்ல டைப் பண்றதும் கஷ்டம் :( )

    ReplyDelete
  36. // வற்றாயிருப்பு சுந்தர் said...
    வாங்க மேடம். நீங்க அதே ஷக்திதானா? இல்ல வேற யாராவது யட்சிணியா? :))
    //
    வந்தேன் வந்தேன் :D
    ஏன் திடீர்னு யட்சிணியான்னு கெட்டு எனக்கே சந்தேகம் உண்டு பண்ணிட்டீங்க :)))

    நலமா இருக்கீங்களா?

    //கமலின் தசாவதாரத்தைவிட மஹாநதியை மிகவும் மதிக்கிறேன். விக்ரமின் சாமியை விட, பிதாமகன் எவ்வளவோ மேல். சூர்யாவின் வேல் படத்தைவிட நந்தா உயர்ந்தது. ஆர்யா இதுவரை செய்த படங்களை விட நான் கடவுள் தனித்து நிற்கப்போவது உறுதி.//

    ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எல்லோரும் variations கொடுத்திருக்கிறார்கள். all the above said.


    //ஜெ.மோ.வின் ஏழாம் உலகம் படித்தீர்களா என்று தெரியவில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள்! //

    படிக்கவேண்டும். உஷா வேறு ரெக்கமெண்ட் செய்கிறார். படித்துப்பார்க்கிறேன்.

    // இதைத்தான் இப்படித்தான் படைக்கவேண்டும் என்று எந்தப் படைப்பாளியிடமும் வற்புறுத்தமுடியாது. அவர்களுக்கு எதில் விருப்பம், திறமை, ஆர்வம் இருக்கிறதோ அதில்தான் கவனத்தைச் செலுத்துவார்கள். அதை ரசிப்பதும் ரசிக்காததும் அவரவர் விருப்பம்.
    //

    உண்மை தான். மேலே கூறிய பதில்களில் உங்களுக்கும் பதில் அடங்கியுள்ளது.
    அவர்கள் ஒரே மாதிரியான படைப்பை படைத்தார்களேயானால் அவர்களுக்குள்ள திறனை
    ஒரு invisble கோட்டிற்குள் வெளிப்படுத்தி அங்கேயே முடித்துவிடுகிறார்கள்.
    அதைத்தாண்டியும் வெளிவரவேண்டும்.

    மேலும், திறன் உள்ள இடத்தில் தான் எதிர்பார்ப்பும் இருக்கும். ரசிப்பதால் தான்,
    இன்னும் இன்னும் செய்யுங்களேன், இப்படியும் அப்படியும் கூட செய்யுங்களேன் என்ற விண்ணப்பம்
    தொடர்கிறது.

    அப்புறம் தலையாய இன்னொரு கேள்வி. அது என்ன வற்றாயிருப்பு?

    ReplyDelete
  37. //// ramachandranusha(உஷா) said...
    ஷக்தி நியாஆஆஆஆஆஆஆ :-) //

    வாங்க உஷாஆஆஆஆ :D நானே தான். வருகைக்கு நன்றி.

    ///நம்ம சுந்தர் சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன். ஏழாவது உலகம் படித்துப்பாருங்கள்.இப்படியும் ஒரு உலகம், அதில் நாமும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். //

    இந்த உண்மையை இல்லை என்று யாராலும் கூறிவிட முடியாது உஷா.

    /// குத்து பாட்டுகளும், அபத்த நகைச்சுவையும், அரைத்து அரைத்து நைசாய் போன காதல்கதைகளும், நியூசிலாந்து தெருக்கள் தரும் இன்ஸ்டண்ட் போதை போதும்! இது தரும் மயக்கத்தில், கோடிகளிலும் நாற்காலி கனவு காணும்
    நவயுக எம்ஜிஆர்கள். ///

    உஷா, ஆக்கபூர்வமான, எழுச்சியுட்டும் நல்ல படங்கள் பற்றி தான் நான் பேசியது. குத்துப்பாட்டும், எட்டி உதைக்கும் நகைச்சுவையும், விதவிதமான டப்பாக்களில் வரும் காதல் மட்டுமே அல்ல.

    உண்மை தான். இதையெல்லாம் பார்த்து பார்த்து அலுத்துவிட்டது நமக்கு. அட! ஒருவன் வித்தியாசமாய் செய்கிறானே என அவனை கூர்ந்து நோக்குகிறோம். நடுநடுவே, புளிச்சுப்போன பழைய டப்பாத் திரைக்கதையை தவிர்த்து, வித்தியாசமான ஒரு கருவை அழகாய் சொல்ல இன்னொரு படம் ப்ளீஸ் என்று அந்த கலைஞனுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    I would be the last person to be happy if bala gets into the cliche of kuthu songs and love duets.

    /// அதில் அப்படியே காட்டாமல் எந்த தாக்கத்தையும் விஷிவலாய் காட்டலாம். இப்படிதான் இரானிய படங்கள் வருகின்றன என்கிறார்கள்.
    ///

    இந்த இரண்டு சென்ட்டை நானும் வழிமொழிகிறேன். Messages conveyed can be more powerful by subtle portrayals. இரானியப்படங்கள் நான் பார்த்ததில்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது புரிகிறது.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. //வெ.இராதாகிருஷ்ணன் said...

    மக்களால் பாராட்டப்படும் இயக்குநர்கள் அனைவரின் படமும் ஒரு சாயலைக் கொண்டிருக்கும், அதாவது அவர்களது தனித்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

    இருக்கும் நிதர்சன நிலையை ஒருவர் அப்படியேச் சொல்லும்போது நமக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும். காரணம் நம்மால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறதே என்ற மனக்குறைதான். ஏன் இப்படி எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என. ஆனால் ஒன்று நேர்மறையான விசயங்களைப் போதிப்பதன் மூலம், எதிர்மறைக் கருத்துக்களை முன்னிறுத்தி அல்ல, சமூகத்தில் மாற்றங்கள் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

    நாம் நமது அன்றாட வாழ்வில் எதுவுமே காண்பது இல்லையா? கேட்பது இல்லையா? அல்லது கண்களை, காதுகளை மூடிக்கொண்டுச் செல்கிறோமோ என்பதைப் பொருத்தே அழுகையும் 'ஐயோ இப்படியெல்லாமா படம் எடுப்பார்கள்'

    ///

    வாருங்கள் ராதாக்ருஷ்ணன். வருகைக்கு நன்றி . நல்ல பதில் பதிவு. மிக அழகான சிந்தனை. வித்தியாசமான பார்வை. ஒப்புக்கொள்கிறேன்.

    உங்கள் பார்வையும் என் பார்வையும் ஏதோ ஒர் இடத்தில் இணைந்திருக்கிறது. பதிவின் நோக்கங்கள் மட்டுமே வேறு.

    நன்றி.

    ReplyDelete
  40. //
    ராம்சுரேஷ் said...
    மிகச் சிறந்த தொகுப்புக்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன். (சோடா ப்ளீஸ்! மூச்சு விடாம பேசுறது மட்டுமில்ல டைப் பண்றதும் கஷ்டம் :( )

    //

    வாருங்கள் ராம்சுரேஷ். நன்றி.

    உங்கள் சோடா தவிப்பு எனக்கு புரிகிறது.

    மூச்சுவிடாம counter argument-ற்காக பதில் பதிவு எழுதி, எழுதி நாலைஞ்சு சோடா இங்க என் வீட்ல காலி. அதனால யாராவது இனி பதில் எழுதினா...

    "ஆமாங்க நீங்க சரி" ன்னு சொல்லிட போறேன். இனிமே counter argument வேணும்னா அடுத்த பதிவில் ரெடியா இருங்க ன்னு என்று சொல்லிவிடப்போகிறேன்.

    :))

    ReplyDelete
  41. ஊடகம் என்பது ஒரு ‘செய்தியை’ சொல்லவேண்டும்

    media should pass a message

    இவ்வகையில் பாலாவின் படங்களிலிருந்து ‘செய்தி’ ஏதும் பெற்றோமா என்பதும் கூட ஒவ்வொறு மனிதனிடமும் மாறுபட்டு இருக்கும் ...

    உங்களுடையது நல்ல அலசல் ...

    ReplyDelete
  42. என்னங்க தீடிர்ன்னு மின்னல் மாதிரி வந்திட்டு போய்ட்டீங்க.பின்னூட்டம் எழுதி எழுதி சோடா குடிச்சு களைச்சுப்
    போய்ட்டீங்க அதனால நான் ஒண்ணும் சொல்லல.

    //நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது என்றுஎண்ணியபடி தூங்கிப் போனேன்//

    திருவண்ணாமலைல எங்கள் விட்டுட்டு
    தூங்க போனவங்க போனவங்கதான்.?????????????

    ReplyDelete
  43. ////என்னங்க தீடிர்ன்னு மின்னல் மாதிரி வந்திட்டு போய்ட்டீங்க.பின்னூட்டம் எழுதி எழுதி சோடா குடிச்சு களைச்சுப்
    போய்ட்டீங்க அதனால நான் ஒண்ணும் சொல்லல.///

    :)))))))))

    நீங்க படிச்சீங்கன்னு தெரிஞ்சதே சந்தோஷம் :)

    nadula en password kaanama poiduchu (athavathu naan maranthu poiten :))))) )

    ennatha solli :)))))))))))

    ////
    திருவண்ணாமலைல எங்கள் விட்டுட்டு
    தூங்க போனவங்க போனவங்கதான்.?????????????
    ///

    :))))))

    சத்தியமா இன்னிக்கு அடுத்த பகுதி பொட்டுடறேன் :embarassed: :D

    ReplyDelete
  44. எடுப்பார் கைபுள்ளய ஆயிடிச்சி “நான்
    கடவுள்’. நானும் என் வலைல விமர்சனம் எழுதி “அஹம் பிரம்மாஸ்மி” ஆகிட்டேன்.முடிஞ்ச கருத்துச்சொல்லுங்க மேடம்! ததாஸ்து!

    ReplyDelete