August 11, 2018

சின்ன சின்ன வரிகள்


சடுதியில் வீசிய வைரத்தை
கண்ணாடிக் கற்களில் தேடியே
தொலைந்து போகும் பயணம்

**** 

பேரிடிகளைத் தாண்டி 
கடும்புயல் சீற்றத்தின் நடுவிலும் 
அழகாய் ஆடி நிற்குது ஒற்றைப் பூ

-ஷக்திப்ரபா

August 09, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (351-357) (with English meanings)க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம்

வாமகேசி;
வஹ்னி மண்டல வாசினீ;
பக்திமத் கல்ப-லதிகா;
பஷுபாஷ விமோசனீ;
சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா;
சதாசார ப்ரவர்த்திகா;
தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா;

() வாம = அழகிய - எழில் நிறைந்த
    கேஷ = கேசம்

#351 வாமகேஷி = வனப்பான கேசத்தையுடையவள்

() வஹ்னி = நெருப்பு
    மண்டல = கோள வீதி - பிரந்தியம் - பகுதி
    வாசினீ = வாசம் செய்பவள்

#352 வஹ்னி-மண்டல வாசினீ = மூலாதாரத்தில் நிலைகொண்டிருப்பவள் (குண்டலினியாக மூலாதாரத்தில் நிலைத்திருப்பவள் )

() பக்திமத் = பக்தர்கள்
   கல்ப = எண்ணம் / நோக்கு / சிந்தனை
   லதிகா = இளம் கொடி
   கல்ப-லதிகா = இச்சைகளை பூர்த்தி செய்யும் / வரமருளும் தெய்வீகக் கொடி

#353 பக்திமத் கல்ப-லதிகா = பக்தர்களுக்கு இச்சா பூர்த்தி அனுக்ரஹிக்கும் கல்பலதிகக் கொடியானவள்

() பஷுபாஷ = லௌகீக விஷயார்த்தங்களின் ஈடுபாடு ; பந்தபாசங்கள்
விமோசன = விடிவு, விடுதலை

#354 பஷுபாஷ விமோசனீ = அஞ்ஞானத்தினால் விளையும் தளைகளிலிருந்து முக்தியருள்பவள்

() சம்ஹ்ருதா = அழித்தல் - அழிவு
  ஷேஷ = மிகுதி - எஞ்சியது
  பாஷாண்ட = தவறான கோட்பாடுகள் உடையோர்

#355 சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா = தவறியோரை தண்டிப்பவள் *

சிலர் பாஷாண்டா எனும் சொல்லுக்கு இறைமறுப்பாளர்கள் அல்லது இறைக் கொள்கைகளை மறுப்பவர்கள் என்று அர்த்தம் கற்பிக்கலாம். இவ்விடத்தில் 'heretic' என்ற சொல்லுக்கு, " அற நூல்கள் கூறும் நல்லவைகளில் நம்பிக்கை அற்றவர்" அல்லது அதை பின்ப்ற்றாதவர் என்று பொருள் கொள்ளவேண்டும். i.e. நற்சிந்தனை அல்லதவர். நற்செயல் புரியாதவர் என்று புரிதல்.

() சத = சத்துவம் - சத்தியம் - உண்மை
ஆசார = ஒழுக்கம் - நன்னடத்தை
ப்ரவர்திக = காரணமாதல் - ஊக்குவித்தல்

#356 சதாசார ப்ரவர்த்திகா = நல்லொழுக்கத்தை சிந்தனைகளின் காரணமாகி அதனைத் தூண்டுபவள்

() தாப = வலி (மனம் அல்லது உடல் சார்ந்த உபாதை) - துன்பம்
த்ரயாக்னி = மூன்று வகை அக்னி (த்ரய = மூன்று)
சந்தப்த = அவதியுற்ற - துயருற்ற
சம = இணை - சமமான
ஆஹ்லாதன = திருப்தியுறச்செய்தல் - மகிழ்வூட்டல்
சந்திரிகா = நிலவொளி

#357 தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா = முப்பெரும் அக்னியால் அல்லலுறுவோருக்கெல்ல்லாம் நிலவொளியின் குளுர்ச்சியைப் போல் ஆறுதலளிப்பவள் *

* மூன்று வகை தாபங்கள் என்பன:
ஆதிபௌதிக: இயற்கை சீற்றத்தாலும், பிற உயிர்களாலும் நேரும் இன்னல்கள்
ஆதியாத்மிக: சுயத்தின் மன மற்றும் உடல் உபாதைகளால் விளையும் இன்னல்
ஆதிதைவிக: நுண் சக்தி / சூக்ஷ்ம சக்தியால் விளையும் இன்னல்கள்

(தொடரும்)

Thanks and Reference:


Lalitha Sahasranama (351 - 357)

Kshetra Kshetragnja Roopam


Vaama kEshi;
Vahni-mandala Vaasini;
Bhakthimat kalpa lathika;
Pashupaasha vimochani;
Samhrutha Shesha paashanda;
Sath-aachara pravarthika;
Thapathrayagni santhaptha samaahlaadhana chandrika;


() Vaama = pretty - lovely
   Kesha = hair

#351 Vaama Keshi = Who has beautiful, lavish hair

() Vahni = fire
   Mandala = orbit - path of heavenly body - zone, area or region
   Vaasini = live-dwell

#352 Vahni-mandala Vaasini = Who resides in mooladhara *

* Different interpretations are around. Here it may be interpreted that she who resides in mooladhara in the form of sacred fire i.e Kundalini shakthi.

() Bhakthimat = devoted
   Kalpa = idea or thought
  Lathika = small creeper
  Kalpa-lathika = Auspicious creeper that fulfills wishes or desires.

#353 bhakthimat kalpa lathika = Who is kalpa-lathika (granting boon) to those who
are devoted to her.

() Pashupaasha = bondage due to materialistic / mundane needs
   Vimochana = Liberation

#354 Pasupaasa vimochani = Who liberates us from ignorance (mundane bonds which are worldy in nature)

() Samhrutha destroy
   Shesha = remains - surplus - residues
   Paashanda = heretical - unorthodox - non-theistic (atheist)

#355 Samhrutha Sesha Paashanda = Who destroys heretics *

It is wise to remember heretics here mean those who do not follow that which is prescribed in sacred doctrines. Sacred texts generally talks on leading good disciplined life and ways to uplift themselves from the shackles of the mundane existence. Here atheist or heretic generally suppose to mean those who do not stick to harmonious way of living or who cause injury to others (who are ill in nature)


() Sat = satva - sathya- truth
aachara = discipline - good conduct
Pravarthika = who causes - makes things happen - inspires

#356 Sadhaachara pravarthika = She who causes and inspires right conduct (upon all beings)

() Thaapa = pain (mental or physical) - misery
    Thrayagni = three types of fire (thraya = three)
   Sandapta = pained - inflamed - wearied
   Sama = equal - to match
   Aahlaadhana = act of gladdening - giving happiness
   Chandra = moonshine

#357 Thapathrayagni Sandhapta Samaahlaadhana Chandrika = She who soothes like moonlight
to jeevas suferring from three types of agony *

* Three types of misery includes: 

Aadhibhautika : Disturbances from nature including pancha bhoothas and other external
forces.
Aadhyaathmika: distubarnaces from vibrational plane (of body and mind)
Aadhidaivika : Distbances influenced by astral forces

Thanks and Reference:


(to continue)


August 08, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (346-350) (with English meanings)க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம்


விஜயா;

விமலா;
வந்த்யா;
வந்தாரு-ஜன வத்ஸலா;
வாக்வாதினீ;

() விஜய = வெற்றி

#346 விஜயா = அனைத்திலும்-அனைத்தையும் வெற்றி கொள்பவள்

() விமல = சுத்தம் - களங்கமில்லாத

#347 விமலா = அப்பழுக்கற்ற பரிசுத்த வடிவானவள் ; தூய்மையின் சாரமானவள்        ( களங்கம் என்று கற்பிக்கப்பட்ட  இருமைத்தன்மை, மாயை, அறியாமை 
முதலியவற்றிலிருந்து விடுபட்டவள். )

() வந்த்ய = வணக்கத்துக்குறிய - துதிக்கத்தகுந்த - புகழ்மிக்க

#348 வந்த்யா = போற்றி தொழுவதற்குறியவள்

() வந்தாரு = மதிப்பளிக்கும் - புகழ்பாடும்
   ஜன = பிரஜைகள் - மக்கள்
   வத்ஸலா = வாத்ஸல்யம் - அன்பு - கனிவு - பாசம் (தாயன்பு)

#349 வந்தாரு-ஜன வத்ஸலா = பக்தர்களின் பால் தாய்மையின் கனிவை பொழிபவள் *

வந்தாரு-ஜன என்பதை அவள் புகழ்பாடி போற்றும் மக்கள் ie பக்தர்கள் என்று உணரவேண்டும். அவர்கள் அன்னையை தொழுதேத்துவதால் பக்தர்கள். அத்தகைய பக்தர்களே அவளுக்கு பிள்ளைகள். அவர்களிடத்தில் ஒரு தாய் சேயிடம் கொண்ட கருணையை, அன்பைப் பொழிபவள் . 

() வாக் (கங்கை என்னும் சொல்லில் வரும் "க" உச்சரிப்பு) இச்சொல் வாச் அல்லது வாச (சக்கரம் என்ற சொல்லின் "ச" உச்சரிப்பு) எனும் சொல்லுடன் கூட்டுச் சொல்லாய் உபயோகிக்கப்படுகிறது. )

வாத = பேசும் - உரைக்கும் - சொற்பொழிவு - சொல்லாடல்

#350 வாக்வாதினீ = சொல் அல்லது வாக்கின் ஆதாரமாய் திகழ்பவள் (அவற்றின் மூலக் காரணம்  - பிறப்பு)

(தொடரும்)

Lalitha Sahasranama (346 - 350)

Kshetra Kshetrajna Roopam

Vijaya;
Vimala;
Vandhya;
Vandharu Jana Vatsala;
Vaag vaadhini;

() Vijaya = Triumph/Victory

#346 vijayaa = She Who is ever trumphant

() Vimal = pure - clean

#347 vimala = Who is the true essence of purity (dirt here refers to illusion or duality
arising out of ignorance )

() Vandhya = praise worthy

#348 Vandhyaa = She who is celebrated / worshipped/ is venerable

() Vandhaaru = respectful -praising
   Jana = people - subjects
   Vathsala = tender- loving - love towards a child

#349 Vandhaaru-jana vatsala = She who has motherly love towards her devotees *

'Vandhaaru-jana' means people who are respectful towards her. They celebrate her, therefore her devotees. She has vaathsalyam or motherly love towards her devotees.

() vaag (is mentioned to be in compound for Vaach or Vaacha)
   vaadha = speaking - saying- discoursing

#350 Vaagvaadhini = She who is quintessence of speech (cause or origin of speech)

(to continue)

July 12, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (341 - 345) (with English meanings)க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம்

க்ஷேத்ர ஸ்வரூபா';
க்ஷேத்ரேஸி;
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ;
க்ஷய விருத்தி நிர்முக்தா;
க்ஷேத்ர பால சமர்ச்சிதா;


() க்ஷேத்ர = உடல் - தேகம் - சரீரம்
ஸ்வரூப = வடிவம் - ரூபம்


#341 க்ஷேத்ர ஸ்வரூபா = ரூப-வடிவாகவும் தன்னை வெளிப்படுத்துபவள் *

*  உடல் என்பது சூக்ஷும / ஸ்தூல/ காரண சரீரத்தையும் குறிக்கும்


() ஈஷா = இறைவன் - எஜமானன்- ஆள்பவன்
ஈஷி(த்வா) = ஆளுமை- இறைவி - தலைவி - இறையாண்மை
க்ஷேத்ரேஷா = சிவன்


#342 க்ஷேத்ரேஷி = அனைத்து ரூப-வடிவ காரணிகளை (அதன் தத்துவங்களை) ஆளுபவள் 


#342 க்ஷேத்ரேஷி =  க்ஷேத்ரேஷனாக விளங்கும் சிவனின் துணைவி

() க்ஷேத்ரக்ஞா = அறிவு - அறிபவன் - ஜீவன் - ஆத்மா

#343 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினி = ரூப நாம வடிவங்களாகவும், அதன் அறிவாகவும் - அறிபவனாகவும் விளங்கும் அனைத்தையும் பரிபாலிப்பவள்

() க்ஷய = தேய்கின்ற = தாழ்ச்சி 
விருத்தி = வளர்கின்ற = வளர்ச்சி = பெருக்கம்
நிர்முக்தா = விடுபடுதல்


#344 க்ஷய விருத்தி நிர்முக்தா = உயர்ச்சி வீழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டுத் திகழ்பவள்

() பாலன = பரிபாலனம் - பராமரிப்பு
சமர்ச்சித = போற்றுதல் - அலங்கரித்து வழிபடுதல் - கௌரவித்தல்
க்ஷேத்ரபால = சிவனின் குழந்தை வடிவம்


#342 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = ஜீவாத்மாக்களால் அர்ச்சிக்கப்படுபவள் (க்ஷேத்ரம் என்ற ரூப நாமத்தை பராமரிக்கும் ஜீவன்) 


#342 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = தேவதைகளால் ஸ்துதி செய்யப்படுபவள் ( ரூப நாம வடிவங்களை தாங்கும் ஜீவனை பரிபாலித்து காக்கும் தேவதைகள்) 


#342 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = ஈசனால் போற்றப்படுபவள்
* அவரவர் புரிதலின் கோணத்திற்கு ஏற்ப பொருள் உணரப்படும்

(தொடரும்)


Lalitha Sahasranama (341- 345 )

Kshetra Kshetrajna Roopam

Kshetra Swaroopa;

Kshetreshi;
Kshetra kshethrajna paalini;
Kshaya Vruthi Nirmuktha;
Kshetra Paala Samarchitha;


() Kshetra = body 
swaroopa = form


#341 Kshetra Swaroopa = Who is in the form of matter (bodies; gross / subtle)

() Esha = lord, powerful, master
Eshi(thva) = supremacy, goddess, commanding, reigning 
Kshetresha = Shiva


#342 Kshetreshi = Who rules the entire manifestation of matter (bodies)


#342 Kshetreshi = who is the consort of Kshetresha (shiva)

() Kshetrajna = knowledge , knower, soul

#343 Kshetra Kshetrajna paalini = Who protects the gross manifestations and the jiva + pervading
the body (ie the soul)


() Kshaya = waning - decrement
Vruthi = increment - increase 
Nir-muktha - liberated - set free


#344 Kshaya Vruthi Nirmuktha = she who surpasses growth or decay

() paalana = to care - maintain 
samarchith = to honour - decorate - worship
Kshetra pala = shiva's infant form


#345 Kshetra-paala samarchitha = Who is glorified and worshipped by jivas (who care for their bodies)


#345 Kshetrapaala samarchitha = Who is glorified by shiva (Kshetrapaala)


#345 Kshetrapaala samarchitha = Who is worshipped by demi-gods (protectors of jivas)

* Interpretations vary according to each one's perspective

(to continue)

லலிதா சஹஸ்ரநாமம் ( 334 - 340 ) (with English meanings)


பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

விஷ்வாதிகா;

வேத வேத்யா;
விந்த்யாசல நிவாசினீ;
விதாத்ரீ;
வேத ஜனனீ;
விஷ்ணு மாயா;
விலாசினீ;


() விஷ்வ = ஜகம் - ஜகத் - உலகம் - பிரபஞ்சம்
   அதிக் = அதை விட - அதிகமாக - மேம்பட்ட - அசாதாரணமான


#334 விஷ்வாதிகா = ஜகத்திற்கு அப்பாற்பட்டவள் - ( அறிவுக்கு புலப்படாதவள் - புலனுக்கெட்டாதவள் ) 

() வேத்யா = அறியப்படுவது - அறிவினால் உணரப்படும் பொருள் 
   வேத = மெய்ப்பொருள் - மெய்யறிவு


#335 வேத வேத்யா = வேதத்தினால் உணரப்படுபவள் *

* வேதம் என்பது மெய்யறிவைக் குறிக்கும். மெய்ப்பொருளை உணர்ந்து உய்தலை  உணர்த்துகிறது. இப்பயணம் கர்மம், பக்தி, ஞானம் போன்ற எவ்வழியிலும் உணரப்படலாம்.


() அசல = மலை

#336 விந்தியாசல நிவாசினீ = விந்திய மலைத்தொடர்களில் வாசம் செய்பவள்

() விதாத்ரீ = தாய் - சிருஷ்டிப்பவள்

#337 விதாத்ரீ = அன்னை (பிரபஞ்சத்தை சிருஷ்டித்து பரிபாலிக்கும் மஹாமாதா)

() ஜனனீ = பிறப்பிக்க செய்பவள் - மாதா

#338 வேத ஜனனீ = வேதத்தை சிருஷ்டித்தவள்

() மாயா = மாயை

#339 விஷ்ணு மாயா = விஷ்ணுவின் மாயா சக்தியாய் விளங்குபவள் *

* மஹாவிஷ்ணு பிரபஞ்சத்தை பரிபாலிப்பவர், அதில் லலிதாம்பிகையே மஹாமாயையாய் உட்புகுந்து பிரபஞ்ச செயல்பாட்டுக்கு துணைபுரிகிறாள்.


() விலாஸ் = விளையாட்டு

#340 விலாசினி = விளையாட்டில் ஈடுபடுபவள் - கேளிக்கைகளில் களிப்பவள் ( தனது சிருஷ்டியுடன் ) *

* மாயத் திரையிட்டு பிரபஞ்சத்தை ஊடுருவி, மெய்யறிவை ஜீவாத்மாக்களிடமிருந்து மறைத்து,  கண்ணாமூச்சி ஆடுவதையே அம்பிகையின் கேளிக்கை என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.( பஞ்ச பிரம்ம ஸ்வரூபம் முற்றிற்று )

(அடுத்த நாமாக்கள் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபத்தை விளக்கும்)

(தொடரும்) 
Lalitha Sahasranama (334 - 340)

Pancha Brahma Swaroopam

Viswadhika;
Veda vEdhyaa;
Vindhyachala Nivaasini;
Vidhaathri;
Vedha Janani;
Vishnu Maya;
Vilaasini;


() Vishva = universe 
    adhik = much - more - extraordinary - better


#334 vishva-adhika = Who is surpasses the universe ( its theories or doctrines )

() Vedhya = That which is learnt / object of knowledge
   Vedha = Knowledge that is true


#335 Vedha Vedhyaa = She who is the knowledge obtained through Vedha *

* Vedha here means knowledge of truth, it can be obtained by any path (gnaana, karma, bhakthi) on our journey towards supreme.


() achala = mountain

#336 Vindhyachala Nivaasini = Who resides in vidhyachala mountain ranges.

() Vidhaathri - Female creator - Mother - Creator

#337 Vidhaathri = The Mother (creates and fosters the megacosm)

() Janani = Mother

#338 Veda Janani = Who created the Veda (Supreme cause of veda)

() Maya = illusion - unreality

#339 Vishnu Maya = Who functions as the illusory power of Vishnu *

* Mahavishnu sustains the universe, in which Mahamaya has pervaded as illusory veil.

() Vilas = Play - sport

#340 Vilaasini = Who indulges playfully ( with her creation ) *

* By being playful we may understand that she veils the knowledge, plays trick and hides the brahman(truth) away from the reach of Mortal Jivas.


( We finish names reflecting "Pancha Brahma Swaroopam" ) 
( Next names would enumerate her "Kshetra Kshetrajna roopam" )

(to continue)

லலிதா சஹஸ்ரநாமம் (322 - 333) (with English Meanings)பஞ்ச பிரம்ம ஸ்வரூபம் 

காமகலா ரூபா;
கதம்ப குசுமப்ரியா;
கல்யாணீ;
ஜகதீ கந்தா;
கருணா ரஸ சாகரா;
கலாவதீ;
கலாலாபா;
காந்தா;
காதம்பரீ-ப்ரியா;
வரதா;
வாம நயனா;
வாருணீ மத விஹ்வலா;

#322 காமகலா ரூபா = காதல் கலையின் உருவகமானவள் *
* ஆசை மற்றும் காமங்களின் உருவகம் என்றும் உணரலாம். காமம் ஆசை இச்சை முதலியவையே ஜகத்தின் சிருஷ்டிக்கு காரணம். அதனை சூக்ஷ்ம வடிவில் தன் கர்பத்தில் சுமந்திருப்பவள்.

() கதம்ப = கதம்ப மரம் (கீழே படத்தில் பார்க்கவும்) 
   குசும = மலர்
#323 கதம்ப-குசும ப்ரியா = கதம்ப மலர்களை நேசிப்பவள்

() கல்யாண = அதிர்ஷ்டம் - நன்மை நிறைந்த
#324 கல்யாணீ = சுபீஷமும் நல்வளமும் நல்கக்கூடியவள்

() ஜகத் = உலகம் - உலகங்கள் - பிரபஞ்சம்
   கந்தா = முடிச்சு = குமிழ்வடிவான வேர் - வேர்
#325 ஜகதீகந்தா = ஜகத்துத்தின் துவக்கத்திற்கு காரணமானவள்; அதன் படைப்புக்கு வேரானவள்

() சாகர = கடல்
   ரச = 'பாவம்' (bhavam) அல்லது பொருள் நயம் என்று கொள்ள வேண்டும்
#326 கருணாரச சாகர = கருணைக் கடலாக விளங்குபவள்

() கலா = கலை
   வத் = ஒற்றுமை - ஒன்று போல - அதே வகை
#327 கலாவதீ = அனைத்து கலைககளின் சாரமானவள் - அனைத்து கலைகளையும் தன்னகத்தே கோண்டவள்

() ஆலாப் = உரை - பேச்சு
#328 கலாலாபா = கலைநயத்துடன் உரையாடுபவள் (மனதுக்கு ரம்யமாக- அலங்காரமாக- இசையாக)

() காந்த = வனப்பு நிறைந்த - அழகான
#329 காந்தா = வசீகரமானவள்

() காதம்பரீ = கலைவாணி - பெண் தெய்வம்
   காதம்பரீ = கதம்ப மலர்களிலினின்று வடிக்கப்பட்ட மது
#330 காதம்பரீப்ரியா = கலைவாணியினிடத்து அன்பு கொண்டவள் - கதம்ப மலர்களின் மதுவை விரும்புபவள் *

* இந்த நாமம் கலைவாணியை குறிப்பதாகக் கொள்ளலாம். முந்தைய நாமங்கள் கலைகளைப் பற்றியும், கலைவடிவாக அன்னையே விளங்குவதாகவும் குறிப்பிடிவதால், கலைகளின் பிரதிநிதி, ஞானம், இசை, வாக்கு மேலும் அனைத்து கலாவடிவங்களாகவும் திகழும் சரஸ்வதினியிடத்தில் அன்பு கொண்டவள் என்று அர்த்தம் உணர்ந்து கொள்ளலாம்.
() வரத = ஆசி வழங்குதல் - பிரார்த்தனைக்கு செவி சாய்த்தல்
#331 வரதா = வரமருள்பவள்

() வாம = அற்புதமான
#332 வாம நயனா = எழில் விழியாள்

() வாருணீ - ஒரு வகை மது (அமிர்தம்)
   விஹ்வலா = உணர்ச்சி வேகத்துக்கு உட்பட்டு - பரவசம்
   மத = தன்னிலை மறந்த உற்சாகம்
#333 வாருணீ மத விஹ்வலா = வாருணீ என்ற அமிர்தத்தினால் தன்னிலை மறந்த உற்சாகத்திற்கு உட்படுபவள் *

* பேரானந்தம் என்ற அமிர்த நிலையை குறிப்பிட்டு, அதனால் வரும் பரவச நிலை உணர்த்தப்படுகிறது. பரவசமும் பேரானந்தமும் உணர்ச்சிக்கு உட்பட்டது. அன்னிலையின் உணர்ச்சி மிகுதியினால் பெருகும் உற்சாகம் பேசப்பட்டுள்ளது. ஞானத்தின் படிக்கட்டுகளில் உணர்ச்சி மிகுதியால் பெருகும் உவகையும், அன்னிலையே பிரபஞ்ச அன்பின் பெருக்கினால் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் பேரமைதியில் நிலைக்கிறது. அதன் பின் அன்னிலையே உவகையும் அமைதியும் கலந்த வீடுபெறு நிலை என்ற சிலரின் புரிதல்.

இது பற்றி விரிவாகவும், தெளிவாகவும் படிக்க :
(தொடரும்)


Lalitha Sahasranama (322 - 333)

Pancha Brahma Swaroopam

Kaamakala Roopa;
Kadhamba Kusumapriya;
kalyaaNi;
Jagathi Kandha;
Karuna rasa saagara;
Kalaavathi;
Kalaa laapa;
Kaantha;
Kaadhambari priya;
Varadha;
Vaama Nayana;
VaaruNi madha Vihvala;

#322 Kaamakala Roopa = She who personifies the 'art of love' *

* Can be deciphered as personification of 'totality of desire'. Desire and Will are the primary requisites for creation. She represents the subtle form of totality of Desires (of Jiva).

() Kadamba = Kadamba tree (see the picture below)
   Kusuma = flower

#323 Kadamba Kusuma priya = She who is fond of Kadamba flowers

() Kalyana = luck - beneficial

#324 Kalyani = She who bestows fortune and prosperity

() Jagath = world - worlds - cosmos
    Kanda = knot - bulbous root

#325 Jagathi Kandha = She who is the beginning and cause of the world

() Sagar = ocean
Rasa = here to mean 'flavour'

#326 Karuna-Rasa Saagara = Who is the ocean of benevolence

() Kala = art
vat = likeness - resemblance

#327 Kalavathi = Who is quintessence of all forms of art

() aalaap = talk - speech

#328 Kala-aalaapa = Whose talk is artistic (musical-sweet-decorative-pleasing)

() Kanth = lovely - beautiful

#329 Kaanthaa = She who is alluring

() Kadambari = Wine distilled from flowers of kadamba tree -
Goddess - Goddess Saraswathi

#330 Kadambari Priya = Who is fond of Saraswathi - Who is fond of Wine (distilled from kadamba flowers) *

* We can assume this name to mean Goddess Saraswathi, as it talks on art and forms of art. Goddess Saraswathi represents knowledge, talk, speech and all other forms of art.

() Varada = grants boon - answers prayers

#331 Varadhaa = Who readily confers boon

() Vaama = splendid - pretty

#332 Vaama Nayana = She who has adorable eyes

() VaaruNi = Wine
   Vihwala = agitated
   Madha = intoxication

# Vaaruni madha vihwala = Who is intoxicated by VaaruNi(ambrosial drink)*

We may wonder, why would she be agitated with intoxication when in spiritual one-ness. Ecstasy may not be termed as peace. Ecstasy is excitement, emotions of heightened happiness. When in ecstacy, there is more turbulence or disturbance than quietness or tranquility. During spiritual oneness there can be intense ecstasy depending upon changing waves of compassion or love and at one point, culminating into peace, so intently that peace and ecstasy cease to be different.  

( Try reading the following link on peace and ecstasy by aurobindo

( to continue)