April 20, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (287-290) (with English Meanings)பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

நிஜாக்ஞா ரூப நிகமா;
புண்யா புண்ய ஃபலப்ரதா;
ஸ்ருதி சீமந்த சிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூலிகா;
சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா;


() நிஜ = உள்ளுரையும் - இயல்பான
ஆக்ஞா = ஆணைகள்
ரூப = ரூபம் கொண்டு
நிகமா = வேதங்கள் - வேத சாஸ்திரங்கள்


# 287 = நிஜாக்ஞா ரூப நிகமா = தன்னுள் உள்ளுரையும் ஆணைகளையே பிரபஞ்ச வேதத்தின் ரூபமாக்கியவள்

() அபுண்யா = பாபங்கள்
ஃபல = பலன் 
ப்ரதா = வழங்குதல்


# 288 புண்யாபுணய ஃபலப்ரதா = புண்ய பாப கார்யங்களின் பலன்களை பங்கிட்டுக் கொடுப்பவள்

() ஷ்ருதி = வேதம் (வேத வடிவான வேத-மாதா) 
சீமந்த = உச்சி வகிடு 
சிந்தூர = குங்குமம்
க்ருத = பேறப்பட்ட
பாதாப்ஜ = தாமரைப் பாதம்
தூலிக = தூசி


# 289 ஷ்ருதி சீமந்த சிந்தூர க்ருத பாதாப்ஜ தூலிகா = தனது பாதத்தாமரைத் தூசியால் வேதமாதாவின் வகிட்டு சிந்தூரத்தை அலங்கரிப்பவள் *

* நான்கு வேதங்களை தேவதைகளாக உருவகப்படுத்தி, அவர்கள் அன்னையை தொழுதெழும்போது, அவள் பாதத்தின் தூசி (சிவந்த நிறம்)  சிந்தூரமாக வேத-தேவதைகளின் வகிட்டை அலங்கரிப்பதாக நாமம் உரைக்கிறது.

() சகல = முழுவதும் - சர்வமும்
ஆகம = வேத சாஸ்திரங்கள்
சந்தொஹ = அபரீமிதம் - முழுமை - அனேகம்
ஷுக்தி = முத்துச்சிப்பி 
சம்புட = உறை - தொகுப்பு
மௌக்திக = முத்து


# 290 சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா = சிப்பியென விளங்கும் ஆகம நியமங்களின் உள்ளுரையும் முத்தாக திகழ்பவள் *

* ஆகம நியமங்கள் அனைத்தும் முத்தை சுமந்து நிற்கும் சிப்பியைப் போன்றதே. அதனுள் உறையும் பரம்பொருளே சாரமானவள்.  பரம்பொருளை அடைவதற்கான வழிகளே நியம சாஸ்திரங்கள். பக்தியினாலும் ஞானத்தாலும் பரம்பொருளின் அருகாமையை உணர்ந்தவனுக்கு சாஸ்திரங்களும் ஆகம நியமங்களின் முக்கியத்துவமும் அதிக ஈர்புடையதாக இருக்காது.

(தொடரும்)

Lalitha Sahasranama (287 - 290)

Pancha Brahma Swaroopam

Nijaagnya roopa nigama;
punyaapunya phala pradhaa;
Shruthi seemantha sindhoori Krutha paadhaabhja dhoolika;
Sakala-agama sandhoha shukthi samputa maukthika;


() nija = inborn or innate 
aagnya = order 
roopa = form
nigama = vedas or vedic texts


#287 nijaagnya roopa nigama = She Whose inherent commands have become vedas

() apunya = wrong doings 
phala = fruits - result
pradha = giver


#288 Punya-apunya phala pradha = Who apportions the fruits of sins and virtues

() Shruthi = veda (personified vedic goddess) 
seemantha = parting of hair 
sindhoor = vermilion - (kumkum)
krutha = obtained
paadhaabja = lotus like foot 
dhoolik = dust


#289 Shruthi seemantha sindhoori Krutha paadhaabhja dhoolika = Dust from whose lotus feet has become the auspicious sindhoor(kumkum) of Vedic goddesses *
*Four vedhas who are personified as goddesses, prostrate mother lalitha and dust from mother's 
feet settle down as sindhoor in their parted hair.


() sakala = all - total 
aagama = guidelines on vedic rituals
sandhoh = abundance - multitude - totality
shukthi = pearl oyster shell 
samputa = folder - package
mauthik = pearl


#290 Sakala-agama sandhoha shukthi samputa maukthika = Who is like the precious pearl, inside the shell of vedic doctrines *


* The naama reflects that she is the precious pearl inside the vedas or vedic rituals and scriptures. She is the susbtance, rest of it is only the path or guidelines which leads us in right direction.  Even oyster or shell is done away with, when we get the pearl. Likewise if we reach her abode and grasp her with our undiluted bhakthi, doctrines and rituals are merely the path and hence is of no greater concern when we reach the destination.


( to continue)

வரவேற்புஆடை வனப்பு அழகைக் கூட்டி 
அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
உற்றவரை உறவுக்கு உகந்தவரை
அங்குமிங்கும் படபடக்கும்
வண்டு விழிகளால் துழாவி
கண்மலர்களால் வரவேற்று
கோலாடிக் கொண்டாடினாள்.

உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும் 
சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
கூடியாடி குதித்ததில்,
மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் ! 

( வல்லமை போட்டி - 20-4-18 )

April 14, 2018

Lalitha Sahasranama (286) VarNashrama Dharma (Caste System) (தமிழிலும்)Pancha Brahma Swaroopam

Varna-ashrama vidhayini;

() VarNa-Ashram = stages of life - (also) - caste and order
    Vidhayini - causing - prescribing

#286 Varna-ashrama vidhaayini = She who has prescribed Varnashrama as way of life **


* Varna is caste. Caste is attributed to a person based on the individual's passion, interest, aptitude, capablity and attitude. Four types of caste mentioned, which consisely covers basic professions and paths that are generally tread. Tagging a caste to a person should be based on individual's mind and attitude.
Caste however are equal and no divisions or acknowledgements need to be given for any caste's superiority over another. Every caste is sacred and vital, if an individual performs his dharma according to his inherent nature.
* Brahmins includes all those who meditates on Brahman i.e. seek truth. It may include reflecting upon truth, unravelling secrets of universe, meditating, praying, educating those who are interested about things which are beyond sensual perceptions. Qualities mandatory for this class includes humility, truth, simplicity, non-violence etc.
* Kshatriya includes all those who are interested in welfare of others. They are lofty souls who work for the progress of others, fight for their rights and ensure security and protection. Qualities mandatory would be valour, courage, impartiality, fair-mind and the likes.
* Vaishya tags you all those activities which includes trade, agriculture and other necessities of life without which livelihood becomes impossible. These people are life providers for other classes. Dedication, being ambitious, talent, honesty are some of the virtues needed.
* Shudras include those activities which includes service to others. Without them there would be no compassion and hospitality. Without them there is no mercy and selflessness. They feel "Service to humanity is service to god". Quality which decides this class would be compassion, kindness, selflessness and sacrifice.
We all understand every human being has all of these qualities and nature within him. What decides his caste is his predominant interest. No class or clan is less than any other. Every class is vital, without which society and creation would collapse. It is interesting to notice that we all belong to every class at different point of time. Dont we all include all these activities in our daily life in different degrees?
We shall now see the other meaning: (VarNa-Ashram = stages of life )
Varna-ashrama also means four stages of human life.

Brahmacharya - Learner-student- Bachelor
Gruhastha - A householder
Vanaprastha - Retirement and rest
Sanyasa - Renunciation and search for truth

Human birth is precious, and some of us dont do well in any stage of life. Almost all do not enter the final stage at all, before which death awaits and drags him to a different realm.
It can be assumed that while 'varna' talks on caste, 'ashrama' talks on walks or stages of life.
This is posted as a seperate post for clarifications on VarNashrama which is hugely subjected to critism and misunderstanding.

லலிதா சஹஸ்ரநாமம் (286)

பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

வர்ணாஷ்ரம விதாயினீ;

() வர்ணாஷ்ரம = குல வேற்றுமை (அல்லது) வாழ்வின் நிலைகள் 
விதாயினி = ஏற்படுத்தியிருத்தல் - நியமித்தல்


#286 வர்ணாஷ்ரம விதாயினீ = வர்ணாசிரம முறைகளை வகுத்திருப்பவள் **

வர்ணம் என்றால் குலம். குலப் பிரிவுகள், தனிமனிதனின் ஆர்வம், திறன், புத்தி, குணம், நாட்டம் முதலியவற்றால் ஏற்படுகிறது. நான்கு பிரிவுகள் தோராயமாக அவரவர் ஆற்றும் கடமைகளையொட்டியும், வாழ்கை முறைகளையொட்டியும் விவரிக்கப்பட்டுள்ளன.
தனி மனிதனை குலத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கு அவரவர் நாட்டம் ஆர்வம், திறன் போன்றவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


குலப்பிரிவுகள் எந்தவித ஏற்றத் தாழ்வுக்கும் உட்படுத்தப்படுவது இல்லை. எக்குலமும் உயர்குலமே. எக்குலத்தின் பங்களிப்பும் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. அவரவர் தம் கடமைகளை தமது மனவிருப்பப்படியும் தர்மப்படியும் செய்வதொன்றே அத்தியாவசியம்.


* பிராம்மணர்கள் என்ற பிரிவில அடங்குபவர்கள், மெய்ப்பொருளைப் பற்றிய தேடலில் ஈடுபட்டவராகவும் அதற்கான தாகம் கொண்டவராகவும் இருப்பர். தியானம், பூஜை பிரார்த்தனை யாகங்கள் முதலியவற்றில் நாட்டமுடையவராக இருப்பது இயல்பு. பிரபஞ்ச உண்மைகளை உணர்பவர்களாகவும், அதனை தெளிவுற விரும்பியோருக்கெல்லாம் எடுத்துரைப்பவராகவும் இருப்பவர்கள். உண்மை, எளிமை, அஹிம்சை முதலியவைகளை
இவர்கள் குண நலன்களாக பெற்றிருப்பர்.


* க்ஷத்திரியர்கள் பிறர் நலனிலும் பொது நலனிலும் அக்கறை கொண்டவர்கள். பிறர் நலனுக்கும், அவர்கள் உரிமைக்கும் போராடும் உன்னத நல விரும்பிகள். தைரியம், பாகுபாடு அற்ற சம-நோக்கு, வலிமை முதலியவை அமையப்பெற்றிருப்பர்.


* வைசியர்கள் வியாபாரம், வெளாண்மை, உழவு, நெசவு, கலை முதலியவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களின் பங்களிப்பின்றி உணவு உற்பத்தி முதல் அன்றாட வாழ்விற்குறிய எதுவும் சாத்தியமில்லை.  திறமை, இலட்சியம், உழைப்பு, நேர்மை முதலியவை அத்தியாவசிய குண நலன்கள்.


* சூத்திரர்கள் என்ற பிரிவில் வருபவர்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டவராக இருப்பர். பிறருக்கு உழைப்பதிலும், பிறருக்காக தம் வாழ்வை அற்பணிக்கும், உயர் குணம் கொண்டவராக இருப்பர். பிறர் துன்பம் தாளாதவராகவும் அவர்கள் துயர் துடைப்பவராகவும் இருப்பது இவர்கள் இயல்பு. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு இலக்கணம் ஆகுவர். இவர்களின் கருணையும், பரோபகாரமும், உபசரிப்புமின்றி இவ்வுலகம் அன்பும் அர்பணிப்பும் இழந்து வாடும் வரண்ட வாழ்வுக்கு தள்ளப்படும். கருணை, அன்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, தியாகம் முதலியவை அடிப்படை குணங்களாக கொண்டவர்கள்.ஆழ்ந்து யோசித்தோமேயானால், ஒவ்வொரு மனிதனும் இவ்வத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றிருப்பான்.  அவனிடம் எக்குணமும் எதன் ஈடுபாடும் அதிகம் என்பதைப் பொருத்தே குலம் வரையறுத்து கூற இயலும். எக்குலமும் மற்ற குலத்தினின்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஒவ்வொருவரின் பங்களிப்பும் சமூகத்தின் சுமூகமான ஓட்டத்திற்கும் ஊட்டத்திற்கும் இன்றியமையாதது. நம் அன்றாட வாழ்வில் அனைவரும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு குலத்திற்குறிய குணங்களை பிரதிபலிக்கிறோம் என்பதே சுவாரஸ்யமான உண்மை. வர்ணாசிரமம் என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளை சிந்திக்கலாம்.

வர்ணாசிரமம் வாழ்கையின் நான்கு நிலைகளை குறிக்கும் சொல்.

பிரம்மச்சரியம் =  மாணவன் - கல்வி கற்பவன் - பிரம்மச்சாரி
கிருஹஸ்தம் = இல்லம் கொண்டு மண வாழ்கையில் ஈடுபட்டுள்ளவன்
வானப்ரஸ்தம் =  ஒய்வு பெற்றுவிட்ட பருவத்தில் உள்ளவன்
சன்னியாசம் = அனைத்து விருப்பு வெறுப்பையும் துறந்து, சத்தியத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுதல்


மனிதப்பிறவி போற்றுதற்குறியது, அதனை நல்வழியில் பயன்படுத்தாமல், நம்மில் சிலர், எந்த பருவத்திலும் சரியாக கடமையாற்றாமல் தோற்றுவிடுகிறோம். நம்மில் பலரோ கடைசி பருவமென்ற  விருப்பு வெறுப்பற்ற  துறவு நிலைக்கு எத்தனிப்பதே இல்லை. அதற்கு முன் மரணம்  நம்மை வரவெற்று வேறு பரிணாமத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது.


'வர்ண' என்ற சொல் குலத்தை குறிப்பதாகவும் 'ஆசிரம' என்ற சொல் வாழ்கை நிலைகளை குறிப்பதாகவும் புரிந்துணரலாம்.


வர்ணாசிரமத்தை பற்றிய புரிதலுக்காக இந்த நாமாவை தனிப்பதிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

LikeShow More Reactions
Comment

சூரியகாந்தி
வானத்து இளவரசன் இங்குமங்கும் வீசி விளையாடும் வட்டத்தட்டு
மஞ்சளாய்ச் சிதறி பூவலம் முடித்து செம்மஞ்சளாகிச் சாயம் போகும் சாகசக்காரன்
நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும் குளிர்-நிலா
வெண்மேகத் திரைச்சீலைளின் பின்னால் கண்ணாம்பூச்சியாடும் மாயத்திரள்
மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை
வானெங்கும் தங்கமென பரவியிருக்கும் பிரபஞ்ச ஜோதி
கருமேகங்கள் கடத்திப் போயிருக்கும் மெய்ப்பொருள்
உதிப்பதும் பின் மறைவதுமாய் கேலிக்கும் காதலன்
பரிமாணங்கள் பல அணிந்தாலும் உயிர்கட்கு ஆதாரமாகி சோறூட்டிச் சீராட்டும் நீயே எங்கள் சாமி – உன் சேயே இந்த பூமி

(வல்லமை படப்போட்டிக்கு பதித்தது - 12-4-18)

மீனும் நானும்கொஞ்சம் கொஞ்சமாய்
மெல்ல அடங்கியது மூச்சு
முதலில் துள்ளி
பின் துவண்டு விழுந்தது
உயிர் துறந்தும்
எமக்குணவாகியது
குழம்பில் தக்கையாய்
கொதித்த போதும்
அதன் உடலெங்கும் சேலை வாசம்
ஏனோ
என் தொண்டைக்குழியில்
மாட்டிக் கொண்டது முள்
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

April 07, 2018

தலைவனின் தடம்


இன்றைக்கேனும் ஒரு மாமனிதன் நடந்துவிட மாட்டானாவென மணல் மெத்தையிட்டு மரக்குடை விரித்து காத்திருக்கும் பாதை.
கால்கள் பாவாத அரிய வழியிதென கண்டுணரும் தலைவன், கோடியில் ஒருவன், தடம் புரளாத எளியன், தடம் பதிக்கும் தருணம், பூக்களும் மலர்ந்து வாழ்த்துக்கள் சொரியும்.
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

April 03, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (281 - 285) (with English meaningsபஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ;
சஹஸ்ர ஷீர்ஷ வதனா;
சஹஸ்ராக்ஷீ;
சஹஸ்ர பாத்;
ஆப்ரம்ம கீட ஜனனீ;


() உன்மேஷ = திறப்பு -
நிமிஷ = கண் மூடுதல் - நொடிப் பொழுது 
உத்பன்ன = தோன்றுதல்
விபன்ன = மறைதல் - அழிவு 
புவன = புவனம் - அண்ட சராசரம்
ஆவலீ = தொடர்


#281 உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவானவலீ = அவளது விழி சிமிட்டும் நொடிப்பொழுதுகளில் பேரண்டங்களை தோன்றி மறையச் செய்பவள் *

விழி மலரும் பொழுது இச்சா சக்தியாக அண்டங்கள் தோன்றுவதும், கண்மலர் மூடி தன்னுள் உரையும் பொழுது பிரளயகாலத்தில் புவனங்கள் மறைந்து போவதுமாகிய அசாதாரண செயல்பாடுகளின் காரணகர்த்தா

() சஹஸ்ர = ஆயிரம் - ஆயிரமாயிரம்
சாஹஸ்ர = கணகற்ற
ஷீர்ஷ = தலை
வதன = முகம்


#282 சஹஸ்ர ஷீர்ஷ வதனா = ஆயிரமாயிரம் சிரங்களையும் முகங்களையும் உடையவள் *

() அக்ஷீ = கண்கள்

#283 சஹஸ்ராக்ஷீ = கணக்கற்ற கண்களையுடையவள் *

() பாத் = கால்கள் - பாதம்

#284 சஹஸ்ரபாத் = எண்ணற்ற பாதங்களை உடையவள் *

அம்பாளின் பரபிரம்ம ஸ்வரூபம் எங்குமாகி பரந்து விரிந்திருக்கிறது என்பதை இந்த நாமாக்கள் படிப்பிக்கின்றன. அவளே அண்டசராசரமாக பரந்திருக்கிறாள். அவளே எங்கும் கால்களையும் சிரங்களையும் முகங்களையும் உடையவளாகி  வியாபித்திருக்கிறாள்.

() ஆபிரம்ம = பிரம்மாவுடன் சேர்த்து 
கீட = பூச்சி - புழு - கிருமி
ஜனனீ = தாய்


#285 ஆபிரம்ம கீட ஜனனீ = பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா

குறிப்பு:

பகவத்கீதையின் 13 அத்தியாயம் ஸ்லோகம் 14:

சர்வத: பாணி பாதம் தத்
சர்வ தோஷி ஷிரோ முகம்
சர்வத: ஷ்ருதி மல்லோகே
சர்வமாவ்ருத்ய திஷ்டதி


கைகளையும் கால்களையும் கண்களும் சிரங்களும் முகங்களுமாக காதுகளுமாக
பிரபஞ்சமெங்கும் விரிந்திருக்கிறது என்று பொருள். பரபிரம்மத்தின் இவ்விளக்கமே சஹஸ்ர நாமத்தின் சில நாமங்களாக நாம் பார்த்தோம்.Lalitha Sahasranama (281 - 285)

Pancha Brahma Swaroopam

unmesha nimishothpanna vipanna bhvanavali;
Sahasra sheersha vadhana;
Sahasrakshi;
Sahasra padh;
Aabrahma keeta janani;


() unmesha = flashing - opening
nimisha = shutting the eye - twinkling - in a moment
uthpanna = sprung - come forth
vipanna = destroyed - ruin 
bhuvana = world 
AvaLi = series


#281 unmEsha nimshothpanna vipanna bhuvanaavali = Who, within the flash of opening and closing of her eyes, creates and dissolves strings of universe *

When her eyes blooms open icha shakthi springs open the series of universe when her eyes shuts for repose waves of universe disintegrate.


() sahasra = Thousand
Saahasra = thousand fold or infinite
Sheersha = head
Vadhana = face


#282 Sahasra Sheersha vadhana = She who has innumerable heads and faces *

() Akshi = eyes

#283 Sahasraakshi = Who has innumerable eyes - Who has thousands of eyes *

() paadh = feet

#284 Sahasrapaadh = Who has thousands of feet

Names means to convey that she is parabrahman whose presence is everywhere,
manifold. It is she who has expanded into various forms, therefore she is spread
across in infinite patterns. 


() Aabrahma = including brahma 
keeta = insect - worm - virus 
janani = mother


#285 Aabrahma keeta janani = She who has created from LordBrahma to a 
humble insect (highest to lowest in hierarchy)


Note:

Bhagavad gita chapter 13 sloka 14 says:

sarvatah pani-padam tat 
sarvato 'ksi-siro-mukham 
sarvatah srutimal loke 
sarvam avrtya tisthati.


Supreme personality has its existence extended infinitely. 
It has its hands, foot, head and face everywhere.
It has its ears and is spread in everyworld and encompasses everything.


We can understand that, Supreme Godhead's nature is covered here in Lalitha sahasranama
as mother Lalitha's traits.

April 01, 2018

காத்திருப்பு - வல்லமைபடப்போட்டிகாத்திருப்பு

அவருக்கெனக் காத்திருந்த
கன்னிப்பொழுதெல்லாம்
கடந்த காலம்!
சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
எதிர்பார்த்துப் பூத்திருந்தது
முடிந்த கணங்கள்!
பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
காண விழித்திருக்கிறது
முதுமையின் மிச்சம்!
மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
மாறாத ஒன்றாக
எனது காத்திருப்பு!
காத்திருப்பின் பதட்டத்தை;
துருவேறிய கம்பிகளின்
தடம்சுமந்த என் கைகள்
அழியாச் சாட்சி சொல்லும்!

ஜன்னல் கைதிகள்

கருப்பு வெள்ளைக்குள் சுருங்கிவிட்ட எம் உலகில், வீட்டின் பரப்பளவுக்குள் குறுகிக்கிடக்கும் சிந்தனைத் தேக்கங்கள். சாளரத்தின் வழியே படமாகும் காட்சி சேகரிப்புக்களால் மட்டுமே வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. ஜன்னல் கம்பிகள் எண்ணப்படுவதெல்லாம் சிறைச்சாலைகளில் மட்டுமல்ல.
(வல்லமை படப்போட்டிக்காக எழுதியது)
( "காத்திருப்பு" என்ற முதல் கவிதை "அந்த வார சிறந்த கவிஞர்" என்ற சிறப்பிக்கப் பட்டது. வல்லமை இதழுக்கும் நடுவர் குழுவுக்கும் ஆசிரியர்க்கும் ஏனையோருக்கும் பெரு நன்றி.)