March 30, 2019

லலிதா சஹஸ்ரநாமம் ( 535-541) (With English meanings)

விபூதிவிஸ்தாரம்


(ஸ்வாஹாவில் தொடங்கி ஏறக்குறைய 980 வரை, நாமங்கள் அனைத்தும் அம்பாளின் விபூதியை விஸ்தரிக்கும். கடைசி சில நாமங்கள் மட்டுமே ஐக்ய ரூபத்தில் தியானிக்கப்படும் )

ஸ்வாஹா;
ஸ்வதா;
அமதி;
மேதா;
ஶ்ருதி;
ஸ்ம்ருதி;
அனுத்தமா;

() 
ஸ்வாஹா = யாகத்தின் பொழுது உச்சரிக்கப்படும் துதி / போற்றுதல்

#535 ஸ்வாஹா = யாகத்தின் மந்திர உச்சாடனமும் அதன் அர்பணிப்பும் ஆகியவள் *

* அவளே மந்திர பலனாகவும், அதன் பொருட்டு அளிக்கப்படும் அர்பணிப்பாகவும் ஆகிறாள். ஆஹுதிகளின் த்யாக பலனாக. தன்னை ie. தான் எனும் மமகாரத்தை, அது தொடர்புடைய ஆசைகளை அர்பணிக்கும் தியாகம் என்றம் ஆழ்ந்த பொருள் கொள்ளலாம்.

()
ஸ்வதா = தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்யப்படும் யக்ஞ கார்யங்களில் ஓதப்படும் மந்த்ர உச்சாடனம்.

#536 ஸ்வதா = பிரார்த்தனையில் வரும் ஸ்வதா எனும் உச்சாடனமாக இருப்பவள்

#537 அமதி = அஞ்ஞானத்திலும் இருப்பவள்

#538 மேதா = ஞான வடிவமானவள்

#539 ஷ்ருதி = வேதங்களில் இருப்பவள்

#540 ஸ்ம்ருதி = வேதங்களை விவரித்து கொண்டாடும் சாரங்களில் இருப்பவள்*   
 *இதிஹாச புராணம், உபநிஷதங்கள் முதலியவை

#541 அனுத்தமா = அதிஉன்னத நிலையில் இருப்பவள்

(தொடரும்)

( அஞ்ஞானத்திலும் இருப்பவளும் அவளே, அடுத்த நாமமே அவளை ஞான வடிவாக காண்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அவளே எல்லாமாகவும் இருக்கிறாள். )

Lalitha Sahasranama (535 - 541)


Viboothi-Visthaaram

( We would be meditating on amba and her viboothis under "viboothi vistharam" almost until last but few naamas)

Swaha;
Swadha;
Amathi;
Medha;
Shruthi;
Smruthi;
Anuthama;


()
Swaaha = exclamation used during making oblations to the gods.

#535 Swaaha = She who is in the mantras and offerings during yagnas *
* She is personified as fruits of mantra, offerings during yagna. In deeper sense, She is in the form of sacrifice of the 'fruits of karma', ego or desires.

()
Swadha = Invocations used during the pooja towards gods or departed ancestors

#536 Swadha = She who is in the invocations of Swadha ( in the mantras )

#537 Amathi = She who not conscious ie. nescience or ignorance

#538 Medha = she who is intelligence i.e. personification of wisdom

#539 Shruthi = she who is the Vedas

#540 Smruthi = Who is in the form of Smrithi (religious texts enumerating Vedhas)

#541 Anuthama = Who is most superior

(To Continue)

(It may be interesting to notice, one who is present in nescience, is immediately glorified as 'wisdom' and later kept on highest pedestal as "most superior". It reassures her omnipresence)

March 26, 2019

கண்ணப்பர்

Image result for கண்ணப்பர்


வேடுவர் குலத்தில் பிறந்து சிறந்த வில்லாளனாக திகழ்ந்த இவரது இயற்பெயர் திண்ணன்.
நண்பர்களுடன் வேட்டையாட சென்றவருக்கு பூர்வ வினையால், அடர் காட்டின் நடுவே சிறிய சிவன் கோவில் இருப்பதை காண நேர்ந்தது. ஊழ்வினை கரைய, கண்ட க்ஷணத்தில் சிவன் மேல் காதல் கொண்டார் திண்ணன். தன்னிடமிருந்த எதையானும் அர்பணிக்கும் தணியாத் தாகம் அவரை ஆட்கொண்டது. வேட்டையாடிய மாமிசத்தையே படைத்து வணங்கிச் சென்றார். சிவனைக் காண மறு நாளும் ஆவல் எழுந்தது. இம்முறை நிறைய மாமிசம் கொண்டு, சென்று ஆசை தீர பேசி விட்டு வந்தார். ஈசனின் லிங்கத் திருமேனி அழுக்காகி பரமரிப்பின்றி இருப்பதை உணர்ந்து, தன்னிடம் பாத்திரங்கள் ஏதும் இல்லாததால் வாயினால் நீர் கொணர்ந்து, இறைவனின் திருமேனியில் உமிழ்ந்து, தனது பக்தியை வெளிப்படுத்த, அதுவே திருமஞ்சனம் என இறைவன் ஏற்றார். கூடைகள் இல்லாததால் மலரை தன் தன் தலையில் சேகரித்து அதையே இறைவனுக்கு பூசித்தார்.


அக்கோவிலை அந்தணர் ஒருவர் பராமரித்து வந்தார். கண்ணப்பர் சென்ற பிறகு அந்தணர் வருவதும், இறைவனின் கோலத்தைக் கண்டு தாங்கொணா துயர் அடைந்து மறுபடி சுத்தம் செய்து பூஜிப்பதுமாக நாட்கள் சென்றன. இப்படி ஒரு அவச்செயலை செய்வது யார் என்று துக்கம் மேலிட முறையிட்டவருக்கு, உமாபதி, தனது பக்தனின் மேன்மையை மறைந்திருந்து காணப் பணித்தார்.


மறு நாள் கண்ணப்பர் வந்த போது சிவலிங்கத்திலிருந்து ஒரு கண்ணில் குருதி பெருக்கேடுத்தது. பச்சிலை வைத்தியம் செய்தும் பயனின்றி போகவே சற்றும் தயங்காமல் தனது கண்ணை அம்பினால் பெயர்த்தெடுத்து சிவனுக்கு பொருத்தினார். இரத்தம் வருவது நின்றது. ஆனால் அது க்ஷண நேர திருப்தி. உடன் மற்றொரு கண்ணில் குருதி வழிந்தது. இம்முறை நாயனார் தனது காலை லிங்கத்தின் குருதி வழியும் கண்ணின் மேல் வைத்து அடையாளப்படுத்தி, தனது இன்னொரு கண்ணையும் பெயர்த்தெடுக்கும் வேளையில் "நில் கண்ணப்ப" என்று மும்முறை கூறி தடுத்தாட்கொண்டார் இறைவன். இழந்த பார்வையை அருளியவரிடம் தன்னையே அர்பணித்து பக்தியில் சிறந்து விளங்கினார். கண்ணப்பர் என்ற பெயர் காரணம் சொல்லாமலே விளங்கும்.

ஓம் நமச்சிவாய

முத்துக்கள் அரிதானவை


அறிவுப்பசி தீர்க்கும்
ஆராய்ச்சி அரட்டை
அலசல்களில்
வளவளவென
ஆர்பரிக்கும் சத்தம்.
ஆழ்கடலின் அமைதியில்
அமிழ்ந்திருக்கும் அறிவைத் தேடி
அரிதாய் சிலரே
மூழ்கி முத்தெடுக்கப் போவதால்;
மேலெழும்பி நிற்பதெல்லாம்
சலசலவென
கரையெங்கும் உமிழப்படும்
அலைகளின் பேரிறைச்சல்.

March 25, 2019

கணம்புல்லர்

Image result for கணம்புல்லர்


இருக்குவேளூர் என்ற ஊரின் தலைவராக வாழ்ந்தார் கணம்புல்ல நாயனார். பெரும் பொருட்செல்வத்துக்கும் சிவபெருமான் அருட்செல்வத்துக்கும் பாத்திரமானவர். அன்றாடம் ஊர் கோவிலில் திருவிளக்கு ஏற்றி பணி செய்து ஆண்டவன் திருவடி பற்றியிருந்தார். நாளடைவில் செல்வம் குன்றி வறுமை புகுந்தது. வளத்தையெல்லாம் விற்று ஊரை விட்டு சிவஸ்தல யாத்திரை மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராக பயணித்து திருவிளக்கு ஏற்றியவர் தில்லையை வந்தடைந்தார். மேற்கொண்டு பயணிக்காமல் தில்லையிலேயே தங்கி திருப்பணியைத் தொடர்ந்தார்.

தில்லையிலிருக்கும் திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோவிலில் திருவிளக்கிட்டு வந்தார். வறுமை விடாது துரத்த, செல்வமெல்லாம் கரைந்தது. தம்மிடத்திலிருக்கும் மிச்ச பொருட்களையெல்லாம் விற்று, திருப்பணி தொடர்ந்தவணணமிருந்தார். விற்கவும் பொருளின்றி செல்வம் சற்றும் ஒட்டாமல் விட்ட நிலையில், யாசிக்க உளம் இடம்கொடாமல் கணம்புல் என்ற வகைப் புல்லை அறுத்து அதனை விற்று காசாக்கி விளக்கேற்றி வந்தார்.

அன்றொரு நாள் கணம்புல்லை வாங்க ஆளின்றி போனது. துயரத்தை உள்ளத்தில் வைத்து, எப்படியும் விளக்கேற்றியே தீருவது என்ற உறுதியுடன், கணம்புல்லையே திரியாக்கி விளக்கேற்றினார். ஆனால் குறிப்பிட்ட ஜாமம் வரை திருவிளக்கு எறிய புல்லின் அளவு போதாது போகவே, அன்பு மேலிட்டு கொண்ட கொள்கையில் வழுவாதவர், தனது முடியையே காணிக்கையாக்கி விளக்கை எரிக்கத் தொடங்கினார்.

விளக்கேற்றினால் இம்மையிலும் மறுமையிலும் இருள் நீங்கி ஒளி கூடும் என்று நம்பியவர் எப்பாடு பட்டாவது தமது கடமையெனக் கொண்ட திருவிளக்குப் பணியை சிரமேற்கொண்டு செய்தார். பெருமான் ரிஷப வாகத்தில் சிவ சக்தியாக காட்சியளித்து அவர் நினைந்த வண்ணமே நலம் நல்கி, பெருங்கருணை புரிந்து ஜீவமுக்தியும் சிவலோக பிராப்தியும் வழங்கியருளினார்.

கணம்புல்லை எரித்து திருப்பணியாற்றியதால் கணம்புல்லர் என்று பொற்றப்பட்டார்.

ஓம் நமச்சிவாய

லலிதா சஹஸ்ரநாமம் ( 528-534 ) (With English meanings)யோகினி ந்யாஸம்

சஹஸ்ரதள பத்மஸ்தா;
சர்வ வர்ணோப ஷோபிதா;
சர்வாயுத தரா;
ஷுக்ல சம்ஸ்திதா;
சர்வதௌ முகீ;
சர்வௌதன ப்ரீத சித்தா;
யாகின்யம்பா ஸ்வரூபிணீ;


()
சஹஸ்ர = ஆயிரம் 
தள = இதழ்
சஹஸ்ரதள = ஆயிரம் இதழுடைய
பத்ம = தாமரை
ஸ்தா = நிலைத்தல் = நிலைபாடு

#528 சஹஸ்ரதள பத்மஸ்தா = சஹஸ்ரார சக்கரத்தில் நிலைபெற்றிருப்பவள் *
*சஹஸ்ரார சக்கரம் என்ற ஏழாம் படிநிலை சக்கரம், ஆயிரம் இதழுடைய தாமரை கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது.


()
சர்வ வர்ண = அனைத்து வர்ணமும்
ஷோபிதா = சோபித்தல் - அழகுற ஜொலித்தல்

#529 சர்வ வர்ணோப ஷோபிதா = அனைத்து வர்ணமாக சோபிப்பவள்

()
ஆயுத = ஆயுதங்கள்
தரா = கொண்டிருத்தல்

#530 சர்வாயுத தரா = அனைத்து வித அஸ்திர ஆயுதங்களையும் தாங்கியிருப்பவள்

()
ஷுக்ல = சுக்கிலம் - விந்து 
ஸம்ஸ்தித் = இருத்தல்

#531 ஷுக்ல சம்ஸ்திதா = சுக்கிலத்தை வழிநடத்தி ஆளுபவள்*
* உடற் சிருஷ்டி உற்பத்தியை பிரதிபலிக்கிறாள். அதனை வழிநடத்துபவளாகிறாள்

()
சர்வதோ = எங்கும் - கணகற்ற
முகீ = முகம்

#532 சர்வதோ முகீ = எவ்விடத்திலும் எத்திசையிலும் வியாபித்திருக்கும் முகமுடையவள் *
*எல்லையில்லாத, முடிவற்ற முகமுடையவள்

()
ஓதன = சமைக்கப்பட்ட அரிசி - உணவு
ப்ரீத = பிரியமான
சித்தா = சித்தம் - மனம்

#533 சர்வௌதன ப்ரீத சித்தா = அனைத்து உணவையும் பிரியமாக ஏற்பவள்

#534 யாகின்யம்பா ஸ்வரூபிணீ = யாகினி எனும் யோகினியானவள் - யாகினி என்ற வடிவம் தாங்கியவள் * 

(மேற்கண்ட நாமங்கள் யாகினி என்ற யோகினியின் தோற்றம் மற்றும் பெருமைகளை விவரிக்கின்றன)

(இந்த நாம வரிசையுடன், 'யோகினி நியாஸம்' என்னும் கீழ் நாம-தியானம் முடிகிறது)

தொடரும்Lalitha Sahasranama (528 - 534 )


Yogini NyasamSahasradhaLa padmastha;
Sarva varNobha Shobitha;
Sarvayudha dhara;
Shukla Samsthitha;
Sarvatho mukhi;
Sarvoudhana preetha chitha;
Yakinyamba swaroopiNi;


()
Saharasra = Thousand
dhaLa = Petal
padma = a Lotus
Stha = to station - position

#528 SahasradhaLa padmastha = She who resides in Sahasrara chakra (crown chakra)*               * Crown chakra is the 7th primary chakra, associated with lotus which has thousand petals.

()
Sarva varNa = all colored
Shobitha = adorned

#529 Sarva varNobha Shobhitha = Who is embellished in all colors.

()
aayudha = arms - weaponry 
dhara = bearing - having

#530 sarvaayudha dhara = Who holds all types of weaponry

()
Shukla = mucus(semen) 
Samsthith = placed - formed - is present

#531 Shukla Samsthitha = Who is presides and rules in semen *
* Who represents and presides creation of the body.

()
sarvatho mukha = facing all directions - Unlimited

#532 Sarvatho mukhi = Who has faces in all directions - Who is turned everywhere*
*Infinite faces

()
Odhana = cooked rice - food 
preetha = is fond of 
chiththa = mind - thoughts

#533 Sarvaudhana preetha chitha = Who is pleased with all types of food

#534 Yakinyamba swaroopiNi = She who is yogini Yakini

(Above naamas glorify and meditates upon Yakini, yogini representing Sahasra chakra)

(We complete Yogini Nyasam)

(To Continue)

(A humble effort to analyse word by word meanings - ShakthiPrabha )

March 24, 2019

லலிதா சஹஸ்ரநாமம் ( 520-527 ) (With English meanings)Add captionயோகினி ந்யாஸம்

ஆக்ஞாசக்ராப்ஜ நிலயா;
ஷுக்ல வர்ணா;
ஷடானனா;
மஜ்ஜா சம்ஸ்தா;
ஹம்ஸவதீ முக்ய ஷக்தி சமன்விதா;
ஹரித்ரான்னைக ரசிகா;
ஹாகினி ரூப தாரிணீ;


()
ஆக்ஞா சக்கரம் = ஆக்ஞா சக்கரம் ஆறாம் படிநிலை சக்தி கேந்திரம் - நெற்றிக்கண் சக்கரம்-
ஞானச் சக்கரம் - புருவ மத்தியில் உள்ளது
ஆப்ஜ - தாமரை (இரண்டு வெளிர் நிற இதழ்கள் கொண்ட தாமரை- ஒளி ஊடுருவம் தன்மையுடையது (transparent)

#521 ஆக்ஞா-சக்ராப்ஜ நிலயா = ஆக்ஞா சக்கரத்தில் நிலைபெற்றவள்

()
ஷுக்ல = வெண்மை

#522 ஷுக்ல வர்ணா = வெண்ணிறம் கொண்டவள்

()
ஷட = ஆறு
ஆனன = முகம்

#523 ஷடானனா = ஆறு முகங்கள் உடையவள்
() 
மஜ்ஜா = மஜ்ஜை (எலும்பு மஜ்ஜை) 
ஸம்ஸ்தா = இருத்தல்

#524 மஜ்ஜா சம்ஸ்தா = எலும்பு மஜ்ஜைகளை வழிநடத்தி ஆளுபவள்

()
ஹம்ஸவதி = ஆக்ஞா சக்கரத்தின் யோகினியை சூழ்ந்துள்ள ஒரு சக்தியானவள் 
முக்ய = பிரதான
ஷக்தி = சக்திகள்- தேவதைகள்
சமன்வித் = இணைந்திருத்தல் - தொடர்புடன் இருத்தல்

#525 ஹம்ஸவதீ முக்ய ஷக்தி சமன்விதா = ஹம்ஸவதீ (மற்றும் க்ஷமாவதீ) போன்ற சக்திகளால் சூழப்பட்டவள் *   
                                                  
* இரு இதழ்களிலும் ஹம்ஸவதீ மற்றும் க்ஷமவதீ என்னும் சக்தி தேவதைகள் இணைந்திருக்க, அவர்களை வழி நடத்துபவளாகிறாள்


() 
ஹரித்ரா = மஞ்சள்
ஹரித்ரான்ன = மஞ்சள் கலந்த அரிசிச் சோறு 
ரசிகா = விருப்பமுடைய - கொண்டாடப்படும்

#526 ஹரித்ரான்னைக ரசிகா = மஞ்சள் கலந்த அன்னத்தை பிரியமுடன் ஏற்பவள்

()
ரூப = ரூபம்- வடிவம்
தாரண = தாங்கிய

#527 ஹாகினி ரூப தாரிணீ = ஹாகினி என்ற வடிவம் தாங்கியவள்*

* மேற்கண்ட நாமங்கள் ஹாகினி என்ற யோகினியின் தோற்றம் மற்றும் பெருமைகளை விவரிக்கின்றன

தொடரும்Lalitha Sahasranama (521 - 527 )Yogini Nyasam


Ajna-Chakrabja nilaya;
Shula varNa;
Shadaananaa;
Majja Samstha;
Hamsavathi mukhya shakthi samanvitha;
Haridhrannnaika rasika;
Hakini Roopa Dharini;

()
Ajna-chakra = Ajna (agna) chakra also called thirdeye chakra- sixth primary chakra 
Abja - lotus (with two transparent white petals)

#521 Agna-Chakrabja nilaya = She who resides in Ajna chakra

()
Shula - white - whitish - spotless

#522 Shukla varNa = Who is white in color ( light complexion )

()
Shata = six 
aanana = face

#523 Shataananaa = Who has six faces

()
Majja = marrow of the bones
Samstha = existing - contained in - belong to

#524 Majja Samstha = Who presides over bone marrow in the body

()
Hamsavathi = One of the deity accompanying the yogini of Ajna chakra
mukhya = main
shakthi = deity
Samanvith = connected or associated

#525 Hamsavathi mukhya shakthi Samanvitha = Who is surrounded by shakthis like Hamsavathi ( and Kshamaavathi ) *
* Ajna chakra is represented by lotus containing two petals, occupied by Hamsavathi and Kshamaavathi

()
Haridhra = Turmeric
haridhrannna = Rice mixed with turmeric
rasika = is fond of - appreciating

#526 Haridrannaika rasika = Who likes cooked rice mixed with turmeric

()
Roopa = appearance - form 
Dharini = bearing = possessing

#527 Hakini Roopa Dharini = She who is in the form of Yogini Hakini *

* Above Naamas glorify Hakini devi, who represents and rules Ajna chakra

( A humble effort to decipher meanings in English and Tamil - ShakthiPrabha) 

(To Continue)

லலிதா சஹஸ்ரநாமம் ( 514 -520 ) (With English meanings)
யோகினி ந்யாஸம்

மூலாதாராம்புஜாரூடா;
பஞ்ச வக்த்ரா;
அஸ்தி சம்ஸ்திதா;
அங்குஷாதி ப்ரஹரணா;
வரதாதி நிஷேவிதா;
முத்கௌதனா சக்த சித்தா;
சாகின்யம்பா ஸ்வரூபிணீ;

()
மூலாதார = மூலாதார சக்கரம் - முதல் சக்தி கேந்திரம் - சிவப்பு நிறச் சக்கரம்
அம்புஜ = தாமரை ( நான்கு இதழுடைய தாமரை)
ரூடா = முளைத்தல் - படர்ந்திருத்தல்

#514 மூலாதாரம்புஜாரூடா = மூலாதாரத்தில் நிலைபெற்றிருப்பவள்

()
பஞ்ச = ஐந்து
வக்த்ர = முகங்கள்

#515 பஞ்ச வக்த்ரா = ஐந்து முகங்கள் உடையவள்

()
அஸ்தி = எலும்பு
ஸம்ஸ்தித் = இருத்தல்

#516 அஸ்தி சம்ஸ்திதா = உடலின் எலும்புகளை வழிநடத்தி ஆளுபவள்

()
அங்குச = அங்குசம் எனும் ஆயுதம்
ஆதி = முதலியவை - போன்றவை
ப்ரஹரணா = ஆயுதங்கள் (முதலிய ஆயுதங்கள்)

#517 அங்குசாதி ப்ரஹரணா - அங்குசம் முதலிய ஆயுதங்கள் தாங்கியவள்

()
வரதா = மூலாதாரத்து யோகினியை சூழ்ந்திருக்கும் தேவதா ஸ்வரூபங்களுள் ஒரு சக்தி
ஆதி = முதலிய - முதலியவர்கள்
நிஷேவித் = உபசரிக்கப்படுதல்

#518 வரதாதி நிஷேவிதா = வரதா முதலிய தேவதைகளால் சூழப்பட்டு பணிசெய்யப்படுபவள்

()
முத்க = பயறு வகை - பச்சை பயறு - உளுந்து முதலியன
ஓதன = சமைக்கப்பட்ட அரிசி - சாதம் - சோறு
சக்த = பிடித்தமான
சித்தா - சிந்தை - மனம்

#519 முத்கௌதன சக்த சித்தா = பயறுடன் கூடிய அன்னத்தை சிந்தைக்குகந்து விரும்பி ஏற்பவள்

#520 சாகின்யம்பா ஸ்வரூபிணீ = சாகினி என்ற யோகினி - சாகினி என்ற ரூபம் தரித்தவள்*

(மேற்கண்ட நாமங்கள் சாகினி என்ற யோகினியின் தோற்றம் பெருமைகளை விவரிக்கின்றன)

தொடரும்


Lalitha Sahasranama (514 - 520 )


Yogini Nyasam


Moolaadharambujarooda;
Pancha Vakthra;
asthi Samsthitha;
Ankushadhi praharaNa;
Varadhaadhi NishEvitha;
Mudhgoudhana saktha chitha;
Sakinyamba SwaroopiNi;

()
Mooladhara = Mooladhara chakra - First chakra / root chakra - Associated with REd color
ambuja = Lotus (with four petals)
rooda - has sprung - grown - mounted

#514 Moolaadharambujarooda = Who stays put in Mooladhara chakra

()
Pancha = five
Vakthra = faces

#515 Pancha Vakthra = Who has five faces

()
Asthi = bone
Samsthitha = resting - lying - standing

#516 Asthi Samsthitha = Who presides or rules over the bone in the body

()
Ankusha = elephant hook - goad
aadhi = and so on - etc
praharaNa = weapon (and other weapons)

#517 Ankushadhi praharaNa = She who holds angusha(goad) and other weaponry

()
Varadha = One of the deity surrounding the yogini of Mooladhara
aadhi = and others
Nishevitha = served by

#518 varadhadhi nishevitha = Who is surrounded by deities like Varadha

()
Mudhga = gram - black gram or green gram
Odhana = cooked or boiled rice
saktha = is fond of
chitha = thinking - mind

#519 Mudhgowdhana saktha chitha = Who is fond of rice cooked with gram

#520 Saakinyamba Swaroopini = She who is in the form of goddess Sakini *
(above naamas glorify and meditate upon Sakini the goddess who presides mooladhara)

(To Continue)

Lalitha Sahasranama (504 - 513 ) (தமிழ் விளக்கத்துடன்)


Yogini Nyasam

Svadhishtaanambujagatha;
Chathur Vakthra Manohara;
Shulaadhyayudha Sampanna;
Peetha VarNa;
Athi garvitha;
Medho nishta;
Madhu preetha;
Bhandinyadhi samanvitha;
Dhadyanna saktha hrudhaya;
Kakini Roopa Dharini;


()
Svadhishtana = Swadhishtana chakra - The second primary chakra - Color associated is orange.
ambuja = lotus (of six petals)
gatha = connected with - being in

#504 Swadhishtaanambujagatha = Who resides in Svadishtana chakra

()
Chathurvakthra = fourfaced
Manohara = appealing

#505 = Chathurvakthra manohara = Who has four beautiful faces

()
Shula = spear - trident
aadhi= and so on - and others
ayudha = arms - weapon
Sampanna = posssessing - endowed - furnished

#506 Shulaadhyayudha Sampanna = Who holds spear(trident) and other weaponry

()
Peetha = Yellow - Golden
#507 Peetha varNa = Who is has yellow/Golden complexion

#508 Adhigarvitha = Who is very proud

()
Medha = Fat of the body
Nishta = to position

#509 Medho Nishta = Who presides in the fatty layer of the body

()
Madhu = honey

#510 Madhu preetha = Who is fond of honey

()
Bandhini = One of the deity surrounding the yogini of svadishtana
Aadhi = and so on - and others (in this context)
Samanvitha = associated with - connected with

#511 Bandhiyadhi samanvitha = Who is surrounded (connected) by shakthis like Bandini

()
Dhadya = curd
Dhadyanna = curdrice
saktha = fond of
hrudhaya = heart

#512 Dhadyanna saktha hrudaya = Who is fond of Curd Rice

()
Roopa = form - appearance
Dharini = bearing - holding

#513 Kakini Roopa Dharini = She who is in the form of Kakini *
*Above Naamas glorify Kakini, who resides in presiding deity of Swadhishtana

(To Continue)லலிதா சஹஸ்ரநாமம் ( 504-513 )


யோகினி ந்யாஸம்


ஸ்வாதிஷ்டானாம்புஜகதா ;
சதுர் வக்த்ர மனோஹரா;
ஷூலாத்யாயுத சம்பன்னா;
பீத வர்ணா;
அதி கர்விதா;
மேதோ நிஷ்டா;
மதுப்ரீதா;
பந்தின்யாதி சமன்விதா;
தத்யன்ன சக்த ஹ்ருதயா;
காகினி ரூப தாரிணீ;

()
ஸ்வாதிஷ்டான - ஸ்வாதிஷ்டான சக்கரம் - இரண்டாம் சக்தி கேந்திர சக்கரம் - செம்மஞ்சள் நிற (ஆரஞ்சு நிறம்) சக்கரம்
அம்புஜ = தாமரை (ஸ்வாதிஷ்டானம் ஆறு இதழ்களுடன் கூடிய தாமரை)
கதா = இருத்தல் - இணைந்து அல்லது தொடர்பு கொண்டிருத்தல்

#504 ஸ்வாதிஷ்டானாம்புஜகதா = ஸ்வாதிஷ்டானத்தில் நிலைபெற்றிருப்பவள்

()
சதுர்வக்த்ரா = நான்கு முகமுடைய
மனோஹர = ஈர்ப்புடைய - சோபையுடன் கூடிய

#505 சதுர்வக்த்ர மனோஹரா = அழகிய நான்கு முகங்கள் கொண்டவள்

()
ஷூல = சூலாயுதம்
ஆதி = முதலியன - போன்றவை
ஆயுத = ஆயுதங்கள்
சம்பன்னா = உடைத்தாயிருத்தல் - வழங்கப்பெற்றிருத்தல்

#507 ஷுலாத்யாயுத சம்பன்னா = சூலம் முதலிய ஆயுதங்கள் தாங்கியிருக்கிறாள்

()
பீத = மஞ்சள் - பொன்

#507 பீத வர்ணா = மஞ்சள் / பொன்னிறத்தவள்

#508 அதிகர்விதா = மிகுந்த செருக்கு / கர்வம் உடையவள்

()
மேத = உடலின் கொழுப்பு
நிஷ்ட = நிலையிருத்தல்

#509 மேதோ நிஷ்டா = உடலின் கொழுப்பு படலங்களில் நிலைத்து ஆளுகிறாள்

()
மது = தேன்

#510 மதுப்ரீதா = தேனை மிகப் பிரியமாக விரும்பி ஏற்பவள்

()
பந்தினி = ஸ்வாதிஶ்டான யோகினியை சூழ்ந்துள்ள சக்திகளுள் ஒருவள்
ஆதி = போன்ற - முதலியவை - முதலியவர்கள்
சமன்வித் = தொடர்புடன் கூடிய - கூடியிருத்தல்

#511 பந்தின்யாதி சமன்விதா = பந்தினி முதலிய தேவதைகளால் சூழப்பட்டிருப்பவள்

()
தத்ய = தயிர்
தத்யன்ன = தயிர்சாதம்
சக்த = ப்ரியமான
ஹ்ருதயா = இதயம் - உள்ளம்

#512 தத்யன்னா சக்த ஹ்ருதயா = தயிருடன் கலந்த அன்னத்தை உளம் விரும்பி ஏற்பவள்

()
ரூப = உருவம் -
தாரிணீ - தாங்கிய - கொண்டுள்ள

#513 காகினீ ரூப தாரிணீ = காகினி என்ற ரூபம் தரித்திருப்பவள் - காகினியாகப்பட்டவள் *
* மேற்கண்ட நாமங்கள் காகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவற்றை தியானிக்கிறது

தொடரும்

(A humble try to analyse the meaning word by word -ShakthiPrabha )

March 23, 2019

கணநாதர்


Image result for கணநாதர் நாயன்மார்


சீர்காழியில் அந்தணர் குலத்திலே பிறந்து பெருமானுக்கு திருத்தொண்டாற்றியவர். சீர்காழியில் வழங்கி வரும் இறைவன் திருத்தோனியப்பரிடம் அன்பு மிகக் கொண்டு திருப்பணி செய்து வந்தார்.
தமை நாடுபவரை அவரவரின் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்றவாறு மலர் பறித்தல், மாலை கட்டுதல், திருமஞ்சனத்திற்கு உதவுதல், அலகிடுதல், மெழுக்கிடுதல், விளக்கு ஏற்றுவது, கோவிலை கூட்டுவது, திருமுறை எழுதுதல், ஓதுதல், நந்தவனம் அமைத்தல் என வகுத்து, அவற்றை அவர்களுக்கு முறையே பயிற்றுவித்து, அவர்களை அடியார்களாக மாற்றும் பெரும்பணி செய்து வந்தார். இல்லற தர்மம் சிறப்புற பேணி அடியார்களை வழிபட்டு வந்தார்.

எப்பொழுதும் திருஞ்சானசம்பந்தரை வணங்கி, வழிபட்டு வந்த பலனாக ஜீவகாலம் முடிந்ததும், கைலாயமடைந்து கணங்களுக்கு நாதர் ஆனார் என்கிறது பெரியபுராணம்.
'அடியார்க்கும் அடியாராகிய கணநாத நாயனார்' என்று திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடுகிறார் சுந்தரர்.

ஓம் நமச்சிவாய

லலிதா சஹஸ்ரநாமம் (495 - 503) (With English meanings)


யோகினி ந்யாஸம்

மணிபூராப்ஜ நிலயா;
வதனத்ரய சம்யுதா;
வஜ்ராதிகாயுதோபேதா;
டாமர்யாதிபி ராவ்ருதா;
ரக்த வர்ணா;
மாம்ஸ நிஷ்டா;
குடான்ன ப்ரீத மானஸா;
சமஸ்த பக்த சுகதா;
லாகின்யம்பா ஸ்வரூபிணீ;

()
மணிபூர = மணிபூர சக்கரம் மூன்றாம் சக்தி கேந்திரம். பத்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறத் தாமரையைக் கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது
ஆப்ஜ = தாமரை

#495 மணிபூராப்ஜ நிலயா = மணிபூர சக்கரத்தில் நிலைகொள்பவள்

()
வதன = முகம்
த்ரய = மூன்று
சம்யுதா = தாங்கியிருத்தல்

#496 வதனத்ரய சம்யுதா = மூன்று முகங்கள் தாங்கியிருப்பவள்

()
வஜ்ர = வஜ்ராயுதம் (இந்திரதேவன் தாங்கியிருக்கும் ஆயுதம்) (இடியேறு)
ஆதிக = முதலியன - போன்றவை
ஆயுத = ஆயுதங்கள்
உபேத = தாங்கியிருத்தல்

#497 வஜ்ராதிகாயுதோபேத = வஜராயுதம் முதலிய ஆயுதங்கள் தரித்திருப்பவள் (தாங்கியிருப்பவள்)

()
டாமரி = மணிபூர சக்கர யோகினியை சூழ்ந்துள்ள தேவதைகளில் ஒருவள்
ஆதிபி = மற்றோராலும்
ஆவ்ருதா = சூழப்பட்டு

#498 டாமர்யாதிபிராவ்ருதா = டாமரி முதலிய தேவதைகளால் சூழப்பட்டிருப்பவள்

#499 ரக்த வர்ணா = இரத்த நிறத்தவள்

()
மாம்ஸ = ஊன்
நிஷ்ட = இருத்தல்

#500 மாம்ஸ நிஷ்டா = ஊனில் நிறைந்திருந்து வழி நடத்துபவள்

()
குட = வெல்லம்
ப்ரீத = விருப்பமான - பிரியமான
ப்ரீத மானஸா = மன மகிழ்ச்சி

#501 குடான்ன ப்ரீத மானஸா = வெல்லம் கலந்த அன்னத்தை விரும்பி ஏற்பவள் (வெல்லம் கலந்த அல்லது வெல்லத்தில் சமைத்த அன்னம்)

()
சமஸ்த = முழுவதுமான - மொத்தமும்
சுகதா = சுகமளித்தல்

#502 சமஸ்த பக்த சுகதா = அனைத்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பவள் - சுகம் அனுக்ரஹிப்பவள்

#503 லாகின்யம்பா ஸ்வரூபிணீ = லாகினியின் வடிவாகிய யோகினி*
லாகினி என்ற பெயருடைய யோகினி


( மேற்கண்ட நாமங்கள் லாகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது )


தொடரும்


Lalitha Sahasranama (495 - 503 )

Yogini Nyasam

MaNipooraabja nilaya;
Vadhanathraya samyutha;
VajraadhikaayudhopEtha;
Daamaryadhibhi ravrutha;
Raktha varNa;
Mamsa nishta;
Gudaanna preetha maanasa;
Samastha bhaktha sukhadha;
Lakinyamba swaroopiNi;


()
maNipoora = maNipoora is the third primary chakra. It called solar plexus chakra.
and is associated with color yellow
abja = lotus (maNipoora is represented with a lotus with ten petals)

#495 maNipooraabja nilaya = She who resides in maNipoora chakra


()
Vadhana = face
Thraya = three
Samyutha = consisting - containing

#496 Vadhana-thraya Samyutha = Who has three faces

()
Vajra = thunderbolt (a weapon that is held by Indra)
adhika = et caetera ie. etc - and so on
aayudha = arms
upetha = possessing

#497  VajraadhikaayudhopEtha = Who is armed with Vajra and similar other weapons.

()
Damari = one of the deities surrounding the yogini
aadhibhi = and by others
Avruta = Is surrounded by

#498 Damaryadhibhi Ravrutha = Who is surrounded by Damari and other deities

#499 Raktha varNa = Whose complexion is blood red

()
Maamsa = flesh
Nishta = to position

#500 Maamsa Nishta = Who presides over the flesh

()
Guda = Jaggery - Unprocessed sugar
Preetha = pleased - delighted
preetha-Maanasa = gratified in thought and mind

#501 Gudanna preetha manasa = Who is fond of rice with Jaggery (rice cooked or mixed with jaggery)

()
Samastha = total - put together
sukatha = giving pleasure or delight

#502 Samastha Bhaktha Sukatha = Who bestows happiness to all her devotees

#503 Lakinyamba Swaroopini = Who is in the form of yogini Lakini *

* Yogini who presides manipoora is Lakini i.e her name is Lakini, above naamas talk about Lakini-amba her nature and appearance.


(To Continue)


(A humble try to decipher meanings in English and Tamil - Shakthiprabha)

லலிதா சஹஸ்ரநாமம் (485- 494) (With English meanings)

Image result for வதனத்வயாயோகினி ந்யாஸம்


அனாஹதாப்ஜ நிலயா;
ஷ்யாமாபா;
வதனத்வயா;
தம்ஷ்ரோஜ்வலா;
அக்ஷ-மாலாதி தரா;
ருதிர சம்ஸ்திதா;
கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா;
ஸ்னிக்தௌதன்ன ப்ரியா;
மஹா வீரேந்த்ர வரதா;
ராகின்யம்பா ஸ்வரூபிணீ;

() அனாஹத = அனாஹத சக்கரம் எனும் இதயச் சக்கரம், பச்சை நிறமுடைய
   நான்காம் குண்டலினி சக்தி கேந்திரம்.
   அப்ஜ = தாமரை

#485 அனாஹதாப்ஜ நிலயா = அனாஹத சக்கரத்தில் நிலைத்திருப்பவள்.

() ஷ்யாம = கருமை - கரும்பச்சை

#486 ஷ்யாமாபா = கரும்பச்சை நிறத்தவள்

() த்வயா = இருமை - இரட்டை - இரண்டு

#487 வதனத்வயா = இரு முகம் கொண்டவள்

() தம்ஷ்ரா = பெரிய பற்கள் - தந்தம்
   உஜ்வலா = மின்னுதல்

#488 தம்ஷ்ரோஜ்வலா = தந்தத்தைப் போன்ற பெரிய பற்களை பிரகாசிப்பவள்

() அக்ஷமாலா = ஜப மணிகளாலான மாலை.
  ஆதி = முதலியவை - போன்றவை (இவ்விடத்தில் பொருந்தி வரும்     அர்த்தங்கள் )
  தரா = கொண்டிருத்தல்


#489 அக்ஷ-மாலாதி தரா = ஜபமணிகளாலான மாலைகளை தரித்தவள் (ருத்ராக்ஷம் போன்ற ஜபமாலைகள் பலவும்) *

* அக்ஷ என்றால் எழுத்துக்கள் என்றும் பொருளுணரப்படுவதால், அக்ஷ என்பது சமஸ்க்ருத மொழியின் 'அ' முதல் 'க்ஷ' வரையிலான  எழுத்துக்களையும் குறிப்பதென்பதால், அவ்வெழுத்துக்களால் அணியப்பட்ட மாலை என்பதும் சிலரின் கருத்து.


() ருதிர = உதிரம் = ரத்தம்
   ஸம்ஸ்தித் = இருத்தல்

#490 ருதிர சம்ஸ்திதா = உதிரத்தில் உறைந்திருந்து வழி நடத்துபவள்

() காலராத்ரி = அனாஹத சக்ர யோகினியை சூழ்ந்துள்ள பனிரெண்டு    சக்திகளுள் ஒருவள்
  ஆதி = முதலியவை - போன்றவை (இவ்விடத்தில் பொருந்தி வரும் அர்த்தங்கள் )
  யுக = குழு
  ஷக்த்யுக = சக்திகளின் குழு
  வ்ருதா = சூழப்பட்ட

#491 கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா = காலரத்ரி முதலிய சக்திகளால் சூழப்பட்டவள் *

* அனாஹத சக்கரத்தின் யோகினி பனிரெண்டு இதழ் கொண்ட தாமரையால் பிரதிபலிக்கப்படுகிறாள். ஒவ்வொரு இதழும் ஒரு சக்தி ஸ்வரூபத்தால் ஆளப்படுகிறது. பனிரெண்டு சக்திகளால் சூழப்பட்டு, அவர்களை ஆள்பவளும் ஆகிறாள்.


() ஸ்னிக்த = கொழுப்பு நிறைந்த = கொழுப்புடன் கூடிய
    ஓதன = சமைத்த அரிசி - அரிசிச்சோறு                                       
    ஔதன = பால் மடி - (அதனின்றுபெறப்படும் நெய், வெண்ணை முதலிய
    பொருட்களையும் குறிக்கும் )

#492 ஸ்னிக்தௌதன ப்ரியா = நெய்யுடன் கூடிய (அல்லது கொழுப்பு சத்து நிறைந்த) அன்னத்தை விரும்பி ஏற்பவள்

() மஹாவீர = வலியவர்கள் - வீரன் - வீரத்தனம்
   இந்த்ர = முதலாவதான - பிரதான - மேலான

#493 மஹாவீரேந்திர வரதா = வீரர்களுக்கு அற்புத அரிய வரங்கள் அருள்பவள் *

* மஹாவீரேந்திர என்ற சொற்பதத்திற்கு, புலனின்பங்களை வெற்றி கண்ட ஞானிகள், யோகிகள் என்ற ஆழ்ந்த பொருள் உணரலாம்.

() ராகின்யம்பா = ராகினி என்ற அம்பிகை - அனாஹதத்தை ஆளும் ராகினி என்ற    யோகினி

#494 ராகின்யம்பா ஸ்வரூபிணீ = ராகினி என்ற யோகினி தேவதை (அனாஹத சக்கர தேவதையின் பெயர்)

( மேற்கண்ட நாமங்கள் ராகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது )


தொடரும்


Lalitha Sahasranama (485 - 494)

Yogini Nyasam

(Naamas enumerating yOgini Raakini, described as the presiding deity of anaahatha chakra)

Anaahathabja Nilaya;
Shyaamabha;
Vadhanadvaya;
Dhamshtrojvala;
Aksha-maaladhi dhara;
Rudhira Samsthitha;
Kalarathryadhi Shakthyuga Vrutha;
Snigdoudhana priya;
Mahaa-veerendra varadha;
Rakinyamba Swaroopini ;


()
Anaahatha = Anaahatha Chakra - The Heart chakra which is the fourth primary chakra, is Green in color
abja = Lotus

#485 Anahathabja nilaya = Who resides in Anaahatha Chakra

() Shyaama = Dark Green - dark color

#486 Shyamabha = Who is dark green in complexion

() Dvaya = two - double

#487 Vadhanadvaya = Who has two faces

() Dhamshtra = large tooth - tusk
   ujvala = to shine

#488 Dhamshtrojvala = Whose big teeth shines radiantly *
*  Her teeth are large like tusks

() Akshamala = Garland made of rosary beads
   adhi = et caetera ie. etc - and so on (in this context)
   dhara = to possess - carry

#489 Aksha-maaladhi dhara = Who wear garlands of rosary beads etc  (and the like ) *
* Another school of thought is that, Akshamala here refers to beads representing sanskrit
alphabets "a" to "ksha" . Aksha also means letters or alphabets.

() Rudhira = blood
    Samsthith = sitting - resting - placed

#490 Rudhira Samsthitha = Who presides over blood in the body.

() Kalarathri = one of the twelve deity surrounding the yogini who presides over anaahatha
   Adhi = et caetera ie. etc - and so on (in this context)
   yuga = team
   Shakthyuga = team of shakthis
   Vrutha = Is surrounded by

#491 kaalarathryadhi shakthyuga vrudha = Who is surrounded by shakthis like Kalarathri*
* In Anahatha, presiding yogini is represented by 12 petalled lotus, each petal is represented by a shakthi . Twelve shakthis surround her.

() Snigdha = greasy - glutinous - fat                                                           
   Odhana = coocked Rice
   Audhana = udder ( Can refer to butter / ghee and byproducts of milk obtained from 
    udder)

#492 snigdoudana priya = Who likes offerings made of rice mixed with ghee (or fatty substance)

() Mahaveera = great hero = strong men
   Indra = Chief - first of the kind- best

#493 Mahaveerendra varadha = Who great boons to great warriors. *
* Deeper meaning associates 'mahaveerendra' to mean adepts or saints who won over
worldly desires.

() Rakinyamba = Deity or yOgini representing anaahatha chakra

#494 Rakinyamba Swaroopini = She is in the form of deity Rakini *

( * This set of naamas talks about yOgini Rakini, her appearance and nature)

(to continue)

March 21, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (475 - 484 ) (With English meanings)
( யோகினி ந்யாசம் என்ற தலைப்பின் கீழ் நாம் தியானிக்கவிருக்கும் நாமங்கள் குண்டலினி சக்கரத்தை பிரதிபலிக்கும் 'யோகினி' தேவதைகளை விவரிக்கும் பெயர்கள் . கீழிருக்கும் நாமங்கள் "டாகினீஸ்வரி" என்ற விஷுத்தி சக்கரத்தை வழி நடத்தும் யோகினியை துதிக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு சக்கரத்தை ஆளும் தேவதைகளையும் தியானிக்கவிருக்கிறோம்)


யோகினி ந்யாஸம்

விஷுத்திசக்ர நிலயா;
ஆரக்தவர்ணா;
த்ரிலோசனா;
கட்வாங்காதி ப்ரஹரணா;
வதனைக சமன்விதா;
பாயசான்ன ப்ரியா;
தவக்ஸ்தா;
பஷுலோக பயங்கரீ;
அம்ருதாதி மஹா ஷக்தி சம்வ்ருதா;
டாகினீஶ்வரீ;

()
விஷுத்தி சக்ர = ஐந்தாம் குண்டலினி சக்தி கேந்திரம் - தொண்டையில் இருக்கும் நீல நிற சக்தி கேந்திரம்

#475 விஷுத்தி சக்ர நிலயா = விஷுத்தியில் நிலைபெற்றிருப்பவள்

()
ஆரக்தா = செஞ்சந்தனம் ( i.e. சிவப்பு சந்தனம் - அடர் சிவப்பு இல்லாத இளஞ்சிவப்பு என்றும் கொள்ளலாம் )

#476 ஆரக்தவர்ணா = செஞ்சந்தன நிறம் உடையவள் (அடர் சிவப்பு அல்லாத மிதமான சிவப்பு)

#477 த்ரிலோசனா = மூன்று கண்களையுடையவள்

()
கட்வாங்க = மண்டையோட்டுடன் கூடிய தண்டாயுதம்
ஆதி = இத்யாதி - இதைப் போல (இவ்விடத்தில் பொருந்தி வரும் அர்த்தங்கள் இவை)
ப்ரஹரணா = ஏந்தியிருத்தல் - போராயுதங்கள் கொண்டிருத்தல்

#478 கட்வாங்காதி ப்ரஹரணா = கட்வாங்கம் போன்ற தண்டாயுதமும் மற்றைய ஆயுதங்களையும் (கபாலம் சூலம் ) ஏந்தி ஆயுத்தமாயிருப்பவள்

()
வதனைக = வதன-ஏக - ஒரு முகம்
சமன்விதா = கொண்டிருத்தல்

#479 வதனைக சமன்விதா = ஒரு முகமுடையவள்

()
பாயஸ = பாலில் வெந்த அரிசிச்சோறு

#480 பாயஸான்ன ப்ரியா = பாயசம் என்ற இனிப்பை விரும்பி ஏற்பவள் (பால் அன்னம்)

()
த்வசா - தவக் = தோல்                                                              
ஸ்தா = இருத்தல்

#481 த்வக்ஸ்தா = சருமத்தை, தொடு உணர்வை ஆக்ரமித்து வழிநடத்தும் தேவதை

()
பஷு = மிருகம் - மிருகத்தையொத்த - மிருக குணம்
லோக - மனிதர்கள் - உலகம் - மனிதகுலம்
பயங்கரி = பயங்கரமாக இருப்பவள்

#482 பஷுலோக பயங்கரி =  மிருக குணைத்தை உடையவர்களுக்கு பயங்கரமானவள் ie. அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கும் இகலோக சுகங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கும் மருட்சியளிப்பவள்.

()
சம்வ்ருதா = சூழப்படுதல் - பாதுகாத்தல் - மூடியிருத்தல்

#483 அம்ருதாதி மஹாஷக்தி சம்வ்ருதா = அம்ருதா, கரிஷிணி முதலிய மஹாஷக்திகளை வழிநடத்தி பாதுகாப்பவள் - அவர்களால் சூழப்பட்டிருப்பவள் *

* மஹாஷக்திகள் அம்ருதா, கர்ஷிணி, ஊர்த்வா, உமா, இந்திராணி, ஈசானி, கேசி முதலியவர்களை வழிநடத்தும் யோகினி

#484 டாகினீஶ்வரீ = விஷுத்தி சக்கரத்தின் தேவதை, டாகினீஶ்வரீ.

(தொடரும்)


Lalitha Sahasranama (475 -484)

(Naamas under "yogini Nyasam" talks about presiding 'yoginis' represented in kundalini chakras. First we are meditating on Vishudhi chakra's presiding deity "Daakineeshvari" continued by other yoginis)

Yogini Nyasam

VishudhiChakra Nilaya;
ArakthavarNa;
TriLochana;
khatvangadhi praharana;
vadhanaika Samanvitha;
Paayasanna priya;
Twakshtha;
Pashuloka bayankari;
Amruthaadhi Maha Shakthi SamvRRitha;
Daakineeshvari;

() Vishudhi Chakra = Fifth primary chakra; the Throat chakra; Chakra is blue in color.

#475 Vishudhi Chakra Nilaya = One who resides in Vishudhi Chakra

() Araktha = red sandalwood ie. milder red

#476 ArakthavarNa = Whose complexion is that of red sandalwood ie milder red

#477 Trilochana = Who has three eyes

() Khatvanga = a club or staff with a skull on top
   Aadhi = and so on - Et cetera i.e etc (here in this context)
   Praharana = to combat - a carriage box (is armed with)

#478 Khatvangadhi praharana = Who is armed with club and other weapons / who combats with club and other weapons

() Vadhanaika = Vadhana-Eka - Single face
   Samanvitha = to possess

#479 Vadhanaika samanvitha = Who has a single face

() Paayasa = Rice boiled in milk

#480 Payasanna priya = Who is fond of sweetrice ( called "paayasam")

() Tvacha / Tvag = Skin                                                               
   Stha = to reside - is present

#481 Twakstha = Who presides over the skin (organ of touch)

() Pashu = Animal - beastly
loka = men - world - human race
Bhayankari = who is fearful

#482 Pashuloka Bhayankari = Who is fearful for men who are animalistic - fearful for men who are ignorant - who are drowned in materialistic needs.

() Samvrrtha = Guarded or restrained - enclosed or enveloped - surrounded

#483 Amruthaadhi MahaShakthi Samavrritha = Who is surrounded by Mahashakthis - Who guards, rules or presides over these MahaShakthis. *

* Mahashakthis are namely Amrutha, Karshini, Urdwa, Uma, Indrani, Easani, Kesi

#484 Daakineeshvari = Daakineeshwari who is the presiding yogini of Vishudhi chakra

(to continue)