March 23, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (495 - 503) (With English meanings)


யோகினி ந்யாஸம்

மணிபூராப்ஜ நிலயா;
வதனத்ரய சம்யுதா;
வஜ்ராதிகாயுதோபேதா;
டாமர்யாதிபி ராவ்ருதா;
ரக்த வர்ணா;
மாம்ஸ நிஷ்டா;
குடான்ன ப்ரீத மானஸா;
சமஸ்த பக்த சுகதா;
லாகின்யம்பா ஸ்வரூபிணீ;

()
மணிபூர = மணிபூர சக்கரம் மூன்றாம் சக்தி கேந்திரம். பத்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறத் தாமரையைக் கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது
ஆப்ஜ = தாமரை

#495 மணிபூராப்ஜ நிலயா = மணிபூர சக்கரத்தில் நிலைகொள்பவள்

()
வதன = முகம்
த்ரய = மூன்று
சம்யுதா = தாங்கியிருத்தல்

#496 வதனத்ரய சம்யுதா = மூன்று முகங்கள் தாங்கியிருப்பவள்

()
வஜ்ர = வஜ்ராயுதம் (இந்திரதேவன் தாங்கியிருக்கும் ஆயுதம்) (இடியேறு)
ஆதிக = முதலியன - போன்றவை
ஆயுத = ஆயுதங்கள்
உபேத = தாங்கியிருத்தல்

#497 வஜ்ராதிகாயுதோபேத = வஜராயுதம் முதலிய ஆயுதங்கள் தரித்திருப்பவள் (தாங்கியிருப்பவள்)

()
டாமரி = மணிபூர சக்கர யோகினியை சூழ்ந்துள்ள தேவதைகளில் ஒருவள்
ஆதிபி = மற்றோராலும்
ஆவ்ருதா = சூழப்பட்டு

#498 டாமர்யாதிபிராவ்ருதா = டாமரி முதலிய தேவதைகளால் சூழப்பட்டிருப்பவள்

#499 ரக்த வர்ணா = இரத்த நிறத்தவள்

()
மாம்ஸ = ஊன்
நிஷ்ட = இருத்தல்

#500 மாம்ஸ நிஷ்டா = ஊனில் நிறைந்திருந்து வழி நடத்துபவள்

()
குட = வெல்லம்
ப்ரீத = விருப்பமான - பிரியமான
ப்ரீத மானஸா = மன மகிழ்ச்சி

#501 குடான்ன ப்ரீத மானஸா = வெல்லம் கலந்த அன்னத்தை விரும்பி ஏற்பவள் (வெல்லம் கலந்த அல்லது வெல்லத்தில் சமைத்த அன்னம்)

()
சமஸ்த = முழுவதுமான - மொத்தமும்
சுகதா = சுகமளித்தல்

#502 சமஸ்த பக்த சுகதா = அனைத்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பவள் - சுகம் அனுக்ரஹிப்பவள்

#503 லாகின்யம்பா ஸ்வரூபிணீ = லாகினியின் வடிவாகிய யோகினி*
லாகினி என்ற பெயருடைய யோகினி


( மேற்கண்ட நாமங்கள் லாகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது )


தொடரும்


Lalitha Sahasranama (495 - 503 )

Yogini Nyasam

MaNipooraabja nilaya;
Vadhanathraya samyutha;
VajraadhikaayudhopEtha;
Daamaryadhibhi ravrutha;
Raktha varNa;
Mamsa nishta;
Gudaanna preetha maanasa;
Samastha bhaktha sukhadha;
Lakinyamba swaroopiNi;


()
maNipoora = maNipoora is the third primary chakra. It called solar plexus chakra.
and is associated with color yellow
abja = lotus (maNipoora is represented with a lotus with ten petals)

#495 maNipooraabja nilaya = She who resides in maNipoora chakra


()
Vadhana = face
Thraya = three
Samyutha = consisting - containing

#496 Vadhana-thraya Samyutha = Who has three faces

()
Vajra = thunderbolt (a weapon that is held by Indra)
adhika = et caetera ie. etc - and so on
aayudha = arms
upetha = possessing

#497  VajraadhikaayudhopEtha = Who is armed with Vajra and similar other weapons.

()
Damari = one of the deities surrounding the yogini
aadhibhi = and by others
Avruta = Is surrounded by

#498 Damaryadhibhi Ravrutha = Who is surrounded by Damari and other deities

#499 Raktha varNa = Whose complexion is blood red

()
Maamsa = flesh
Nishta = to position

#500 Maamsa Nishta = Who presides over the flesh

()
Guda = Jaggery - Unprocessed sugar
Preetha = pleased - delighted
preetha-Maanasa = gratified in thought and mind

#501 Gudanna preetha manasa = Who is fond of rice with Jaggery (rice cooked or mixed with jaggery)

()
Samastha = total - put together
sukatha = giving pleasure or delight

#502 Samastha Bhaktha Sukatha = Who bestows happiness to all her devotees

#503 Lakinyamba Swaroopini = Who is in the form of yogini Lakini *

* Yogini who presides manipoora is Lakini i.e her name is Lakini, above naamas talk about Lakini-amba her nature and appearance.


(To Continue)


(A humble try to decipher meanings in English and Tamil - Shakthiprabha)

No comments:

Post a Comment