March 07, 2019

ஏயற்கோன் கலிக்காம நாயனார்.

Related image


திருப்பெருமங்கலம் என்ற சோழத் திருவூரில், ஏயற்குடியில் பிறந்த் வேளாளர். சிறந்த சிவபக்தி செய்து அடியார் தொழுவதை தவமென்று ஏற்றிருந்தார். அவருக்கேற்ற குணவதியை மணந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரே சுந்தரமூர்த்தி நாயனார்.

சுந்தரமூர்த்தி நாயனார்,இறைவனை பரவை நாச்சியாரிடம் தூது அனுப்பியதை கேட்ட கலிக்காமனார் மிகுந்த சினம் கொண்டு இறைவனை ஏவுதற்கும் பக்தனுக்கு ஏற்புண்டாகுமோ என்று வெதும்பினார். கடவுளே இசைந்தாலும் பக்தன் அவரை ஏவலாமா, இப்படிப்பட்ட பக்தனை நேரே கண்டால் சினம் மேலிட்டு தகாத செயல் செய்யவும் துணிந்துவிடும் அளவிற்கு பெரும் கோபம் கொண்டிருந்தார்.

இச்செய்தி அறிந்த சுந்தரர், இறைவனிடம் கலிக்காம நாயனாரை சமாதனம் செய்து தங்கள் இருவரின் நட்புக்கும் வழி வகுக்குமாறு வேண்டினார். திருநீலகண்டன், தீரா சூலை நோயை கலிக்காம நாயனாருக்கு உண்டு பண்ணி, அது தீரும் பொருட்டு சுந்தரரை தரிசிக்க வலியுறுத்தினார். சுந்தரரால் தான் இந்த நோய் தீரும் என்பதானால், அந்த நோய் தீராமல் தொடர்ந்து வாட்டட்டும் என்று சொல்லிவிடுகிறார். சுந்தரரிடத்திலும் சிவனார் இது பற்றி உரைத்து ஏயற்கோனின் நோய் தீர்க்கப்பணித்தார்.

சுந்தரர் வருவதை அறிந்த கலிக்காம நாயனார், அவரால் தன் நோய் தீருமென்றால் அதற்கு மரணமே மேலெனக் கருதி தன்னை மாய்த்துக்கொண்டார். அவர் மனையாளும் உடன் உயிர்விடத் துணியும் நேரம், சுந்தரர் வந்து விடுகிறார். சிவனடியாருக்குறிய மரியாதை செய்வித்து, தன் கணவன் இறந்ததை மறைத்து, அவர் நலமுடன் இருப்பதாக மனைவி உரைத்தாலும், அதனையே தாமே நேரில் காண விழைகிறார் சுந்தரர். உள்ளே கலிக்காமனாரின் சடலத்தைக் கண்ட சுந்தரர், மனம் மிக வருந்தி தானும் உயிரைப் போக்கிக் கொள்ள எத்தனிக்கிறார். அனைவருக்கும் இறைவன் காட்சி தந்து, கலிக்காம நாயனாரின் பகையறுத்து அருளி, அன்பு மேலிடச் செய்தமையால், மிகுந்த அன்பு கொண்டு இருவரும் ஆரத்தழுவி நண்பர்கள் ஆனதாக வரலாறு.

தமது இன்னுயிர் உள்ளவரை இறைவனை வழுவாது பக்தி செய்து, திருத்தொண்டுகள் புரிந்து, பின் சிவலோகப் பதவி அடைந்தார் கலிக்காம நாயனார்.


ஓம் நமச்சிவாய 

No comments:

Post a Comment