December 23, 2009

எங்கே பிராமணன் (நீங்கள் ஆத்திகரா?) (பகுதி 4/5)

கொள்கையில் பிடிப்பு நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும் அதி தீவிரமாய் இருப்பதில்லை. அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவதற்கும், கொள்கை மாற்றிக்கொள்வதற்கும் கேலிக்கும் நாம், நம் சொந்த விடயங்களில், எவ்வளவு முறை கொள்கையை விட்டுக்கொடுத்திருக்கிறோம் வளைந்து கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு கொணர வேண்டும். "The only constant is change" என்பது பிரபல வழக்குமொழி மட்டுமல்ல, உண்மயாதும் கூட. பல பரிணாமங்களில், விகிதத்தில் நம் உடலில், உணர்வில், கொள்கைப் பிடிப்பில், சிந்தனையில் அறிவில் மாற்றம் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

அதனாலேயே உண்மையான ஆத்திகனோ உண்மையான நாத்திகனோ கிடைத்தற்கறியவன். நிறைய நாத்திகர்களிடமும், குறைந்தபட்ச நம்பிக்கை அவ்வப்பொழுதோ, அல்லது தன்னை மிஞ்சியதொரு ஷக்தியை எதிர்நோக்கும் போதோ, இழை போல் மெல்லியதாய் தலையெடுக்கும். அதே போல் உண்மை ஆத்திகன் என்று எவரும் இல்லை. சோதனை காலத்தில் "இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா" என்று துவளும் ஆத்திகர்கள் ஏராளம்.

மின்னஞ்சல் மூலம் வந்த மனதைத் தொட்ட கதை ஒன்று. அதனை தமிழாக்கம் செய்தால் சுவை குறைந்து விடுமோ என அஞ்சி, உங்களுக்காக அதை அப்படியே ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

As drought continued for what seemed an eternity, a small community of farmers was in a quandary as to what to do। Rain was important to keep their crops healthy and sustain the towns people's way of life. As the problem became more acute, a local pastor called a prayer meeting to ask for rain.

Many people arrived. The pastor greeted most of them as they filed in. As he walked to the front of the church to officially begin the meeting he noticed most people were chatting across the aisles and socializing with friends. When he reached the front his thoughts were on quieting the attendees and starting the meeting.

Eyes scanned the crowd as he asked for quiet। He noticed an eleven year-old girl sitting quietly in the front row। Her face was beaming with excitement. Next to her, poised and ready for use, was a bright red umbrella. The little girl's beauty and innocence made the pastor smile as he realized how much faith she possessed. No one else in the congregation had brought an umbrella. All came to pray for rain, but the little girl had come expecting God to answer.

இக்கதையில் வரும் சிறுமியின் நம்பிக்கை, ஆத்திகன் நம்மவரில் எத்தனை பேருக்கு இறைவனிடம் இருக்கிறது? - சிந்திக்க வேண்டிய கேள்வி। சுத்த நாத்திகனாகவும் இல்லாமல், ஆத்திகனாகவும் இல்லாமல் நம் அறிவும் மனமும் பெண்டுலம் போல் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆத்திகன் நாத்திகன் ஆவதும், நாத்திகன் ஆத்திகன் ஆவதும் அடிக்கடி நடைபெறுகிறது.


நம்பிக்கை எத்தனை பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு குமரில பட்டரின் கதை சான்று. கர்ம யோகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர், பௌத்த மதத்தை அறிந்து கொள்ள, தம்மை சீடனாக அறிமுகப்படுத்திக்கொண்டு பாடம் பயின்று வருகிறார். ஞானமார்க்கத்தின் வழியை பின்பற்றும் அவர்களால் வேதங்கள் நிந்திக்கப்படுவதை சகிக்க முடியாதவராய் கண்ணீர் உகுக்கிறார். இவரைப் பற்றிய உண்மை தெரிந்ததும் இவருக்கு தண்டனை விதிக்கும் வகையில் மலை உச்சியில் இருந்து குதிக்க ஆணையிடுகின்றனர். அப்போது அவர் "வேதம் உண்மையாய் இருந்தால் அது என்னைக் காக்கும்" என்று கூவிக்கொண்டே குதித்தும் அவருக்கு பெரியதாய் அடி ஏதும் படவில்லை. எனினும் கல்லடி பட்டு ஒரு கண் குருடானது. வேதம் உண்மையாய் இருந்தும் எனக்கேன் இந்த கதி? என்று அவர் நினைக்கையில் அசரீரி ஒலிக்கிறது "வேதம் உண்மையானால்" என்ற சிறு சந்தேகத்தை வைத்ததனால், உனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை" என்றது. சிறு இழையேனும் நம்பிக்கை இல்லாதிருந்தால், பக்தியின் பலன் முழுமையாக கிட்டாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

http://www.statemaster.com/encyclopedia/Kumarila-Bhatta

http://www.kamakotimandali.com/blog/index.php?p=512&more=1&c=1&tb=1&pb=1

(diff versions of the same story)


வேதங்களின் முறைப்படி வர்ணரீதியாக ஒருவனும் பிராமணனே அல்ல என்று அஷோக் சொன்னதை பாகவதர் வித்தியாசமான கோணத்தில் நாதன் தம்பதியருக்கு விளக்குகிறார். அஷோக் செய்தது "நான் யார்" என்ற இலக்கை நோக்கிப் போவதற்கு ஒரு சிறு ஊந்துகோல், ஒவ்வொருவரும் தன்னைத் தானே பரீட்சை செய்து கொள்ள வேண்டிய ஆன்ம விசாரம். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுவதனால் ஒருவன் உசத்தி என்றோ, ஆன்மவிசாரத்தில் ஈடுபாடாததானால் இன்னொருவன் மட்டுபட்டிருக்கிறான் என்றோ நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. கடவுளின் சாரம்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆன்ம ஒளியை க்ரஹித்து வெளிக்கொணரும் ஒருவனின் ஜ்யோதி அதிகம் ப்ரகாசிக்கிறது. ஒளியின் தத்துவம் மாறுபாடாது இருக்க, அதை உள்வாங்கி ஒளிசிந்தும் தன்மை சிலருக்கு அதிகமாக இருக்கலாம். உயர்வும் தாழ்வும் கூட மாயையினால் நாமே கற்பித்துக் கொள்வது.

ஆன்மவிசாரத்தில் மட்டுமே ஈடுபட்டால் போதுமே, விதிக்கப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியமா? என்று அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். சடங்குகளும், சம்பிரதாயங்களும் தேவையற்றவை. அவையனைத்தும் ஆன்ம குணங்களுக்கு வழிகாட்டியாய் விளங்குபவை மட்டுமே. தர்ம சாஸ்திரத்தில் நாற்பது வகை சமஸ்காரங்கள செய்து எட்டு ஆன்ம குணங்களைப் பெறவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி எட்டு ஆன்ம குணங்கள் ஏற்கனவே ஒருவன் பெறப்பெற்றிருந்தால் அவனுக்கு சமஸ்காரமும் சடங்கும் அவசியம் இல்லை.

அன்பு
ஷாந்தி (சகிப்புத் தன்மை / பொறுமை)
அனசூயை (பொறாமை இன்மை)
சௌச்சம் (சுத்தம்)
அனாயாசம் (பதட்டமோ படபடப்போ இன்றி செயல்படுதல், calm and composed)
மங்களம் (நற் சொற்களை, சிந்தனைகளை பேசுதல், செய்தல், அப்படி செய்து மற்றோரையும் தன்னுயிரையும் சந்தோஷமாக்குதல்)
அகார்பணம் (தன்னைத் தாழ்த்தி கொள்ளும் (அல்லது உயர்த்திக்கொள்ளும்?) கருமித் தனம் இல்லாதொழிதல் i.e absence of inferior or superior feelings about oneself)
அச்ப்ருஹம் (பற்று இன்மை)

ஆகிய எட்டு குணங்கள் உங்களுள் பின்னிப்பிணைந்திருக்கிறதா? அப்படியெனில் சடங்கும் சம்பிரதாயமும் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஆன்மவிசாரத்தில் மட்டுமே கூட ஈடுபட தகுதிபெற்றவர் என்று கொள்ளலாம்.

December 20, 2009

எங்கே பிராமணன் பாகம் இரண்டு - பகுதி 3/4 (ஆழ்வார் பாசுரங்கள்)

நம்மாழ்வார் இராமனின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. "உள்ளே யாரையும் அனுமதியாதே" என்ற இராமனின் ஆணையை மீறி லக்ஷ்மணன், துர்வாச முனிவரின் கோபம் நாட்டையே சீரழித்து விடுமோ என அஞ்சி, அவரை மட்டும் அனுமதிக்கிறான். சொல் மீறி செயல்பட்டதால் புளியமரமாய் பிறப்பெடுப்பாய், என்று ராமன் லஷ்மணனை சபித்துவிடுகிறான். 'உன் மரத்தின் நிழலிலேயே நானும் வந்து இருப்பேன்' என்று இராமன் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது. நம்மாழ்வார் சரித்திரத்தில், அவர் பிறப்பே அன்னாரின் தனித்துவத்தை சுட்டிக்காட்ட வல்லதாய் உள்ளது. பிறந்தது முதற்கொண்டு ஜீவன் மட்டுமே தாங்கி அசைவின்றி இருந்த குழந்தை, முதன் முதலில் அசைந்து நகர்ந்து சென்றது கோவிலின் அருகில் இருந்த ஸ்தலவிருஷமான புளியமரத்தடியிலே என்கிறது வரலாறு. ஆன்மதாகம் பெருக்கெடுத்து குருவை தேடி அலையும் மதுரகவி ஆழ்வாரின் சந்தேகத்தை நம்மாழ்வார் முதல் முதலில் திருவாய் திறந்து, தீர்த்து வைத்தார். சரீரத்தில் கட்டுண்ட ஆன்மாவின் கதியைப் பற்றி மதுரகவி ஆழ்வார் கேள்வி எழுப்ப அதற்கு பதினாறு வயது நிரம்பிய பாலகனாம் நம்மாழ்வார் முதன்முதலாய் வாய்திறந்து பதிலுரைததாய், 'நம்மாழ்வார் சரித்திரம்' தெரிவிக்கிறது.


உரைக்க வல்லேன் அல்லேனுன்
உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே.
பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன்


என்பது நம்மாழ்வார் பாசுரம்.

உன் பெருமையிலும், கீர்த்திலும், மூழ்கி கிடக்கும் நான், உன் பெருமையை, சிறப்பை, தனித்துவத்தை எவ்வாறு கூறுவேன்? உன்னைப் பற்றி கூறும் திறமை எனக்கு இல்லை. உன்னிடம் கரைகாணா அன்பு கொண்டிருக்கிறேன், சத்தியமானவனே, உன்னை மேன்மக்களும் அறிஞர்களும் ஞானிகளும் துதி செய்ய, அவர்களுடன் சேர்ந்து, அவர்களைப் பார்த்து, அவர்களுள் ஒருவனாய் நானும் உன்னை துதிசெய்கிறேன். என்று தோராயமாய் பொருள் கொள்ளலாம்.

குற்றமற்றதாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தனியொருவனாய், மானிட உருவில், ஒரு கட்டுண்ட ஜீவன் எவ்வாறு விளக்க முடியும்! பரம்பொருள் பெரும் கடல் என்றால் நாம் ஒரு துளியல்லவா, அதனின் குணங்களையும், நிர்குணங்களையும் தனியொருவனாய், தனியொரு துகளாய் சொல்லும் வல்லமை யாருக்கு உள? உயர்ந்தவர்களும் அறிஞர்களும் உன் புகழ் பாட, அந்த கோஷத்தில் நானும் ஒரு துளியாய் கலந்து கொள்கிறேன் என்று சொல்வதாய் உணரலாம். துகளிலும் துகள் நான், உன் பெருமை நான் எவ்வாறு கூறுவேன் எனும் போதே, அஹங்காரம் அடிப்பட்டு போவதைக் காண முடியும். நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவராய் கருதப்படுகிறார்.

திருமங்கையாழ்வாரின் சரித்திரமும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் சரித்திரமும், நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், சரித்திரம் படித்திராவிடினும் கூட, "திருவருட்செல்வர்" எனும் திரைப்படத்தில், நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கதாபாத்திரங்கள்.

திருமங்கையாழ்வாரை இறைவன் பணிசெய்ய முதலில் தூண்டுவது அவர் மனைவி. அதன் பின் அவர் இறைவனே கதியென கிடப்பதும், இறைவனினுக்கு ஆலயம் எழுப்ப, வலியோரிடம் திருடி பொருளீட்டுவதைக் கூட நியாயப்படுத்தியும் வந்திருக்கிறார். இறைவனும் இறைவியும் சாமான்யர்களாய் இவர் முன் பொருள் பறிகொடுத்து, பின் இவரின் அறிவீனத்திற்கு பாடம் புகட்டியதாய் கதை உண்டு.

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள்மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனது அடியே சரணமே


என்று இவர் பாடிய பாசுரத்திற்கு,

கருமையான வண்ணம் (நீல) வண்ணம் உடையோனே! கனல் வடிவானவனே! நீர் வடிவானவனே! மலை மேனி உள்ளவனே, பல வடிவுகள் உள்ளவனே, மலர்மகள் வாழும் சிறுபுலியூரில் ஜல சயனதிதில் உறைபவனே! அருட்கடல் அமுதே! உன் அடியே ஷரணம். என்பது விளக்கம்.

விஷ்ணுவின் சிறந்த பக்தர் ஒருவர் இறைவனின் துதி மறந்து தேவதேவி எனும் தாசியின் மயக்கத்தில் கிடந்து, பின் மீண்ட கதை தான் விப்ரநாராயணர் தொடரடிப்பொடியாழ்வார் ஆன கதை. இறுதியில் இறைவன் இவர்களின் பழி அகற்றி, ஆட்கொள்கிறார். அதன் பின் தொடரடிபொடியாழ்வார் என பெயர் கொண்டு நிறைய பாசுரங்கள் பாடி இறைவனின் சேவையில் ஈடுபடுகிறார்.பழி அவரைச் சூழ்ந்து வாழ்வு இருண்டிருந்த பொழுது அவர் எழுதிய பாசுரம்:

ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை;
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்;
ஆர் உளர் களைகண்? அம்மா! அரங்க மா நகருளானே!


எனகென்ன சொல்லிகொள்ள உறவோ, ஊரோ, நிலமோ நாதியோ இல்லாதவன். (எவ்வகை ஆதரவும் இல்லாதவன்) இப்பூவுலகில் பரம்பொருளே உன் பாதம் ஒன்றையே பற்றியிருக்கிறேன். உன் பாதம் ஒன்றே எனக்குத் துணை. கருமை நிறம் கொண்ட என் கண்ணனே! நான் கதறுகிறேன். அரங்க மா நகரத்தில் உறைபவனே என் குறை தீர்க்க யார் உளர்? என உருகுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.


இதெல்லாம் ஏன் திடீரென்று? என்றால், சார்யார் தனது மகனின் பொறுப்பற்ற நடத்தையைப் பற்றி கவலையோடு சிந்தித்தவண்ணம் பாசுரங்களை பாடி இறைவனிடன் குமுறுகிறார். அப்பாசுரங்களும் அதனின் ஆழ்ந்த விளக்கங்களும், அதனைத் தொடர்புடைய சில தகவல்களும் சோ அவர்களால் விளகப்பட்டன.

இன்றைய தொடரில் விவாகரத்து அதிகரித்து விட்டதைப் பற்றி சாம்புவும் வேம்புவும் பேசிக்கொள்வதாய் காட்சியிருந்தது. போன தலைமுறை வரை அமைந்திருந்த கூட்டுக்குடும்ப வாழ்வில், தம்பதிகளுக்குள் அவ்வப்போது எழும் சிறு சிறு சச்சரவுகளும் பெரியோர்களால் தீர்க்கப்பட்டுவிட்டதால், 'விவாகரத்து' என்பதே அதிகம் சிந்திக்கப்படாத விஷயமாய் இருந்தது. இன்றைக்கு இதே அறிவுரைகளை பணம் வாங்கிக்கொண்டு 'marriage counselling' என்ற பெயரில் மூன்றாம் மனிதர் தலையிட்டு சரி செய்ய முயல்கிறார் என அங்கலாய்க்கின்றனர். இதனைப் பற்றி சோ கருத்து தெரிவிக்கையில், பண்டைய காலத்திலும் விவாகரத்திற்கும் மறுமணத்திற்கும் விதவைத் திருமணங்களுக்கும் 'அர்த்த சாஸ்திரத்தில்' இடம் இருந்திருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார். விவாகரத்திற்கு இருதரப்பினரும் விண்ணப்பிக்க வேண்டும். i.e. divorce on mutual consent என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.

சகுனங்கள் கனவுகளைப் பற்றி அக்னி புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சகுனங்கள் சில நேரம் ஆபத்தை உணர்த்துவதும் உணர்த்தாமல் போவதும் கூட கர்மவினைப் படியே நடைபெறுகிறது. கனவுகளைப் பற்றியும் இப்புராணத்தில் பேசப்பட்டிருக்கிறது.

இரவு காலத்தை 4 வகையாக பிரித்து

முதல் பாகத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்தில் பலிதம் இருக்கும் என்றும் இரண்டாம் பாகத்தில் கண்ட கனவு ஆறு மாதங்களில் பலிக்கலாம் மூன்றாம் பாகத்தில் கண்ட கனவு மூன்று மாதங்களில் பலிக்கலாம் நான்காம் பாகத்தில் கண்ட கனவு பத்து அல்லது பதினைந்து நாட்களில் பலிக்கலாம் என்று புராணம் கூறுகிறது.

(பொதுவாக நமக்கு முதல், இரண்டு, மூன்றாம் பாக கனவுகள் மறந்து விடும் என்று நினைக்கிறேன்)

நளினி தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். குயிலியின் பேச்சில் வழக்கம் போல, இயல்பை விட நாடகத்தன்மை அதிகம் தெரிகிறது.

December 16, 2009

எங்கே பிராமணன் - முதல் அத்தியாயம் (உன்னுள் தேடு) dec14

உலகில் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குள்ளே தேடாமல் வெளியே தேடுவதால் முயற்சி தோல்வியடைவதோடு மட்டுமின்றி, எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றத்தால் மனவருத்தம் எஞ்சி நிற்கிறது. தத்துவக் கதைகள் பலவற்றிலும் சுட்டிகாட்டியது போலவே, தொலைத்த பொருளை தொலைத்த இடதில் அல்லவா தேட வேண்டும்? இக்கதையை பல முறை நாம் கேட்டுணர்ந்திருந்தாலும், நம் வாழ்வில் தொலைக்கும் சிறு சந்தோஷங்களைக் கூட நாம் வெளியே தேட முயற்சிக்கிறோம். அன்போ, அமைதியோ, இன்பமோ முதலில் நம் மனதில் கொணர்ந்தால், அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதும் காணப்பெறுவதும் எளிதாகப் பெறும்.

நம் கதையில் நாயகன் அஷோக் "எங்கே பிராமணன்" என தேடித் தேடி எவருமே தென்படாததால் மனவருத்தம் கொண்டு துவண்டு விடுகிறான். ஏட்டில் சுட்டிக்காட்டிய பிராமணனுக்குறிய தகுதியும் வாழ்வு முறையும் இக்காலத்தில் எவரும் பின்பற்றுவதே இல்லாததால், அது தொலைந்தே விட்டதோ என்ற கவலை மேலிடுகிறது. அப்போது அவனைத்தேடி வருகிறார் ஒரு பெரியவர். அவர் கூறுவதும் இதைத் தான்.

"தொலைந்தவனை நீ உன்னுள் தேடு" என்கிறார். "உன்னிடதில் அவன் ஒளிந்திருக்கலாம், கஸ்தூரி தன்னிடமே வைத்திருந்தும் அதை அறியாத கஸ்தூரி மானைப் போல, நீயே உன்னுள் அவனை ஒளித்து வைத்திருக்கலாம். அப்படி ஒருவன் அகப்படவில்லையெனில், அவனை நீயே உன்னுள் செதுக்கு. எப்படி ஒரு வண்ணத்துப் பூச்சி தன்னை தானே செதுக்கி உருமாற்றிக்கொள்கிறதோ, மாற்றத்தை தன்னுள் தானே கொணர்கிறதோ, அப்படி நீயே மாற்றத்தை உன்னுள் கொண்டு வர வேண்டும். தேடுவதை நிறுத்து, தேடுவதை நிறுத்தினாலே தேடுவது கிடைக்கும்"

சென்ற பாகத்திலும் இதைத் தான் பார்த்தோம்.

'நான் யார்' போன்ற கேள்விகளுக்கு மட்டுமின்றி ஏனைய் பல கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு நமக்குள் தேடினால் தென்படுவதே.

"ஒரு பிச்சைக்காரன் பாறையின் மேல் அமர்ந்து தினமும் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் ஒரு நாள் பாறையை தோண்டிய போது அங்கு புதையலே இருப்பது தெரிந்தது, அது தெரியாமலே, இத்தனை நாள் அவன் வெளியில் பிச்சை எடுத்திருக்கிறான், அது போலத்தான் வெளியே அமைதி தேடும் முயற்சி." என்று சென்ற பாகத்தில் வயோதிக வேடத்தில் வந்து நாரதர் கூறிய கதையை மீண்டும் நினைவு கோரலாம். இம்முறையும் இந்த உபதேசத்தை வயோதிக சன்யாசியின் வேடத்தில் வந்து நாரதரே சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில் காட்டப்படும் கைலாயத்தை பார்த்தாலே நமக்கு எரிச்சலாய் வருகிறது. சிவன் வேடத்தில் வருபவர் நடிப்பால் நம்மைக் கொன்று விடுகிறார். "ஹ்ம்ம்", "ம்ம்ம்ம்" என்று சுருதி ஏற்ற இறக்கத்துடன் அவர் நாரதருக்கு செவி மடுப்பது எரிச்சலின் உச்ச கட்டம். கைலாய கூட்டத்தில் நாரதராக வருபவர்க்கு மட்டும் போனால் போகிறது என்று பாஸ் மார்க் தரலாம்.

எங்கே பிராமணன் - முன்னுரை

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும் விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும் கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே குடிபுகுந்துவிட்டார்கள்.

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.



எங்கேயோ படித்தது போல் இருக்கிறதா? என்ற கேள்விக்கே இடமின்றி தமிழகத்து இலக்கிய ரசிகர்களின் நெஞ்சத்தில் ஆழ அமர்ந்திட்ட எழுத்தல்லவா இது!! அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முன்னுரையை வாசகர்கள் மறக்கவும் முடியுமா? சிவகாமியும் மாமல்லரும், நம் மனதில் ஆசனமிட்டு உட்கார்ந்ததோடு மட்டுமின்றி, நம்முள் இரண்டற கலந்துவிட்டதற்கு மேலே கூறிய ஒரு அமானுஷ்ய முன்னுரையும் காரணமாக இருக்கலாம் என திட்டவட்டமாய் எனக்கு பல முறை நினைத்ததுண்டு. அப்படி ஒரு ஷக்தி இந்த முன்ன்ரைக்கே உண்டு என்றால் கதையைப் பற்றி பேசவும் வார்த்தை உண்டோ?!

என்ன ஒரு உயிர்ப்புள்ள முன்னுரை! அமானுஷ்யமும் சரித்திரமும் கலந்து கண் முன் தீட்டப்பட்ட எப்பேர்பட்ட அருமையான ஓவியம்! எப்படி இல்லாமல் போகும்? எழுதியவர் கல்கி ஆயிற்றே.

இதே போல் சோவிற்கும் தன் கதாபாத்திரங்கள் பேசினால் எப்படியிருக்கும் என்ற ஆசையை, இரண்டாம் பாகம் ஆரம்பித்த அன்றே தீர்த்து நிம்மதி அடைந்தார். ஆம். ஆயனரும், சிவகாமியும், மாமலரும் போல் இங்கே வசுமதியும், நீலகண்டனும், சாம்புவும் கதாபாத்திரத்தினின்று எழும்பி உயிர்பெற்று இவர் முன் கேள்விகள் கேட்கின்றனர்.

"எனக்கு கேள்விகளை கேட்க மட்டும் தான் தெரியும்" என்ற நாகேஷ் வசனம் நினைவு வருகிறது. சோ-வுக்கும் ஏறக்குறைய அதே நிலை தான். கேள்விகளை மட்டும் கெட்டு விட்டு, அதற்கு உபாயம் சொல்லமலேயே கழண்டு கொண்டு போக முடியுமா? 'எங்கே பிராமணன்' என்ற தேடலுக்கு பதில் சொல்லுங்கள் என கதாபாத்திரங்கள் உறும.....

அதன் விளைவாக இரண்டாம் பாகம் தொடர்கிறது.......

December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் end of part1 (தொலைந்து விட்ட உண்மை பிராமணன்)

தேடலின் முடிவு தான் என்ன? இன்றளவும் 'உண்மை பிராமணன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் எவரேனும் இருக்கின்றனரா? ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. வர்ண முறைப்படி இன்று பிராமணன் மட்டுமல்ல எவருமே வாழவில்லை என்பதே உண்மை.

பிராமணன் என்பவன் பிரம்ம ஞானத்தை தேடுபவன். அவன் ஒவ்வொரு காரியமும் அதனை நோக்கி அதன் பொருட்டே செய்யப்படும்.

க்ஷத்திரியன் என்றால் உலகை நாட்டை மக்களைக் காப்பவன். க்ஷத்ரம் என்றால் வலிமை. அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தி முறையாக பாலிப்பவன் உண்மை க்ஷத்திரியன்.

வைசியன் என்பவன் நியாயமான முறையில் வாணிபம் தொழில் அல்லது விவசாயம் செய்து பொருளீட்டி வருபவன்.

சூத்திரன் என்பவன் பிறர் துன்பத்தை பொறுக்காதவன் என்று பொருளாம். அதனாலேயே அவனுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் இயல்பில் அமைகிறது.

தற்கால மனிதர்களை எந்த பிரிவில் சேர்ப்பது? யார் சுயநலமற்று சிந்திக்கிறார்கள்?


இப்பூவுலகில் இன்றளவும் வாழ க்ருஹஸ்தனுக்கு வேறு வழிகள் உண்டோ? நாளைய சோற்றைத் தேடி, வாழ்வைத் தெடி, தனக்கென இல்லாவிடினும் பிள்ளைகளின் வளத்தைப் பெருக்க பந்தங்களால் கட்டுண்டு இயலாமையால் மீண்டும் மீண்டும் பணத்தை நோக்கியே நம் ஓட்டம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

எனக்கென ஒரு குடிசை போதும், பிறர் நலனுக்காக பிரார்த்தனை செய்து வாழ்கை வாழ விரும்புகிறேன்। எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிடி சோறு, உடுத்த இரு மாற்றுத் துணிகள்। இப்படி சிந்திக்கவும் சிலர் இருக்கின்றனர். ஆனாலும் அச்சிந்தனை கணநேரத்திற்கு மேல் நீடிப்பதில்லை. நம் வாழ்வை நாம் நிர்ணயிக்க முடிவதில்லை. நமக்கென குடும்பம் இருக்கும் பொழுது பிணைப்பிலிருந்தும் பொறுப்பிலிருதும் விடுபட முடிவதில்லை. நம் பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்து, நெல் பொறுக்கி உண்ணவும் உஞ்ச விருத்தி செய்து வயிறு நிரப்பவும் சொல்லிக்கொடுக்க முடிவதில்லை.
பிறர் நலன் கருதி யாகமும், தவமும், பூஜைகளும் ஹோமங்களும் செய்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு அக்காலத்தில் மதிப்பு இருந்தது. முறைகளை க்ரமப்படி செய்து, அத்தனை உயிர்களின் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வழி வகுத்தனர். உலக நலன் கருதினர். அனைவரும் உய்யவேண்டி தம் திறமையை, கல்வியை ஞானத்தை செலவிட்டனர். அப்படிப்பட்ட பிராமணனுக்கு உணவிடுதலை கர்மமாக செய்து வந்தனர். அவர்களுக்கு தானம் தருவதை பாக்கியமாகக் கருதினர்.

http://www.vhp-america.org/whatvhpa/sanghatanmantra.htm

இவை மட்டுமல்லாது, சமப்பார்வையும், தவமும், பொறுமையும், தானமும் சீலமும், இந்தியங்களை அடக்குதலும் அவர்கள் இயல்பாய் இருந்தன. இப்பேற்பட்ட மனநிலையும் குணமும் இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? ஒரு க்ருஹஸ்தனால் அப்படிப்பட்ட வாழ்கை வாழ்வது கடினம். சேமிப்பு சிறிதும் இன்றி, ஒருவன் வாழ முற்படுவானேயானால் அன்ன ஆகாரமின்றி தெருவிலல்லவா நிற்பான்?

உண்மை பிராமணாக இருக்க விடாமல் எது செய்கிறது? யார் காரணம்? "காலத்தின் கட்டாயங்கள் மாறி வருகிறது" என்பதே நமக்கு நாமே கூறிக்கொள்ளக்கூடிய சமாதானம். குறைந்தது 'இருக்க இடமும், உடுக்க உடையும் அடுத்த வேளைக்கு சோறும்' சேர்த்து வைக்கும் கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். சன்யாசம் வாங்கியவன் கூட இன்றைக்கு அடுத்த வேளைக்குறிய உணவேனும் செமிக்காமல் இருப்பதில்லை. எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கிறோம், மாற்றுகிறோம், பெறுகிறோம். திறமையை, சேவையை,

உழைப்பை, கல்வியை, நியாயத்தை, நீதியை, ஏன் அறிவைக் கூட விற்று பணமாய் மாற்றிக்கொள்கிறோம். அதுவும் சில நேரங்களில் நியாயங்களுக்கு உட்பட்டு, சிலநேரங்களில் அதையும் தாண்டி.

நாம் எல்லோரையும் இன்றைக்கு ஒரே வர்ணமாக ஒன்றுபடுத்திக்கொள்ளலாம். நாம் எல்லோரும் இன்று வைச்யர்களாக மட்டுமே வாழ்கிறோம் (நியாயமான பணம் ஈட்டினோமேயானால்) .

'உண்மை பிராமணனை' இன்றும் தேடித் தேடி அலைகிறோம். நம் காலடித்தடங்கள் பூவுலகமெங்கும் 'எங்கே பிராமணன்' என்று ஒலித்தவண்ணம் இருக்கிறது. இன்று வரை அப்படிப்பட்டவன் தென்படவேயில்லை

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆன்மாவின் நோக்கம்)

எவன் பிரமாணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன!? என்ற கெள்வி எழலாம். இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகின்றோம்? 'நாம் தினமும் செய்யும் பல விஷயங்களால் நமக்கு விளையும் பயன் தான் என்ன' என்று சற்றே ஆராய்ந்தால், இப்படிப்பட்ட கேள்விகள் முன் நிற்காது. வரலாற்றுத் தகவல்கள் முதல், பொழுதுபோக்கு சமாசாரங்கள் தொட்டு, பொது அறிவு வரை, வெறும் தகவல்களைத் தெரிந்துக்கொண்டு என்ன பயன்? நம் வாழ்வில், உழைப்பினாலன்றி, யாதொரு மாற்றமும் தேவையற்ற தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதால் வந்து விடுவதில்லை.

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறுதியான ஆன்ம இலக்கை நோக்கி ஓரடியேனும் எடுத்து வைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டது. அறிவுபூர்வமான விடைகள் பல விடயங்களுக்கு கிடைக்காது போயினும், ஆன்ம இலக்கை நோக்கி முயன்றுகொண்டிருப்பதே நம் ஒவ்வொருவரின் மறைமுக இலட்சியம் என்பது மறுக்க முடியாத உண்மை. நமக்குக் கிடைக்கும் சில தகவல்கள், பொக்கிஷங்களாகி வேகமாக இலட்சியத்தை நோக்கி நம்மையறியாமலே நகரச் செய்யக்கூடியது. மேலும், தற்காலத்தில் மிக அதிகமாக விளங்கி வரும், பிரிவுகளும், ஜாதி-மத-இனக் கலவரங்களும், மனிதர்கள் பாதை வழுவி, எத்துணை தூரம் சென்றுவிட்டனர் என்று உணர்த்துகிறது. ஆன்மீக அறிவு, பிரிவுகளைக் கடந்த மனித நேயத்தை உருவாக்க வல்லது. நமது பார்வையை குறைந்தபட்ச பேதங்கள் அகற்றி
பார்க்கச்செய்ய வல்லது.

"ஆத்மைவ ஆத்மனோ பந்துஹு ஆத்மைவ ரிபுஹு ஆத்மனஹ" என்கிறது பகவத்கீதை.

ஜீவாத்மனுக்கு ஆத்மனே தோழன். நண்பன். அவனை உயர்த்தி விடுபவன். ஆத்மனுக்கு அவனே பகைவனும் கூட. ஒருவன் தன்னை உயர்த்திக் கொண்டால் ஆத்மன் நண்பனாக பணிபுரிந்து மேலே எழுப்பி விடுகிறது. மனசை ஜெயித்தபாடில்லை என்றால் அதுவே தனக்கு பகைவனாகவும் மாறும் வல்லமை படைத்தது. மனம் என்னும் இந்திரியத்தை கையாளத் தெரியாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்பவன் தனக்குத் தானே பகைவன் ஆகின்றான். தன்னைத் தானே ஜெயித்தவன் பரம்பொருளின் அருகாமையை அடைகிறான்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பிராமணனின் குணங்கள்)

தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை, இடைவிடாது கேட்கப்பட்ட கேள்வி, கேட்கப்படும் கேள்வி பிராமணன் என்பவன் யார் என்பது தான். அப்படிப்பட்ட முக்கியக் கேள்வியா இது? என்றால், "ஆம்" என்பது தான் பதில். பிரம்மத்தை துதிப்பவன் எப்பேற்பட்டவன், எத்தகைய குணங்களை உடையவன். அவன் அருகதை என்ன, அவனின் அறிவு எப்படிப்பட்டது என்பதை உணர இக்கேள்வி மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட மனிதன் பிரம்மத்தை உணர முடிந்தவன், நுகர்ந்தவன் என்பதால் அவனை உயர்த்துகின்றனர். அவன் இறையறிவு பெறுகிறான் என்பதால் அவனை ஆசனத்தில் அமர்த்துகின்றனர். அவ்வப்பொழுது மங்கப்பட்ட அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வருகிறது. வர்ண முறையை பிறப்பினால் அறிந்து கொள்கிறது. இது பிறப்பினால் வருவதல்ல, என்று வலியுறுத்தப்பட்டாலும், ஜாதி என்ற போர்வை சமூகத்தில் அடர்ந்து போர்த்தப்பட்டுள்ளதால் உண்மை விளக்கம் தெளிவு பெறுவது பலராலும் முடியாமல் போகிறது.

உண்மையான பிராமணன் என்பதைப் போல் உண்மையான க்ஷத்ரியன் யார், வைசியன் யார் என்றெல்லாம் ஆராய்ந்தால் அவரவர் தொழில் தர்மப்படியும், இயல்பினாலேயே அவர்களுக்குறிய குணாதிசயங்களைக் கொண்டும், ஈடுபாடுகளை நிலைநிறுத்தியும் அறியப்படவேண்டியது.

மஹாபாரதத்தில் பல இடங்களில் "யார் பிராமணன்" என்ற கேள்வி எழுகிறது. i.e. எழுப்பப்படுகிறது. அதற்கு தக்க பதிலும் உரைக்கப்படுகிறது. யக்க்ஷ ப்ரஷ்னத்தில் யக்ஷனாக தோன்றி தர்மதேவன், யுதிஷ்டிரனை தொடர் கேள்விகள் கேட்கிறான். அக்கேள்விகளுள் ஒன்று "எவன் பிராமணன்"

அதற்கு யுதிஷ்டிரனும் " எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது, இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல" என பதிலளிக்கிறான்.

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது: "எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்" காலத்தின் போக்கில் (ஆதி காலம் முதல்) வர்ணக்கலப்பு அவ்வபொழுது ஏற்பட்டு விடும். ஸ்வதர்மங்கள் கலந்து விடும். அதனால் பிறப்பினால் ஒருவனின் வர்ணம் நிர்ணயிக்க முடியாதது என்பதே கண்கூடு. என்கிறது மஹாபாரதம்.

கீதையில் கண்ணன் கூறுவதும் இதற்கு சான்று.


"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"

chathurvarNyam maya srushtam guna karma vibhagasha:
thasya karthaaram api maam viththyakarthaaram avyayam

It was me who created the four varnas and their jobs as per a being's nature and activities. Me being the creator of these divisions, one should still understand that I am the non-performer and the unchangeable. (the division is hence based on
nature and their attitude and not by birth, can be quite clearly understood)

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.



எத்தனை பேசினாலும் படித்தாலும், புரிந்துணர்ந்தாலும், விழலுக்கு இறைத்த நீராய் சில நேரங்களில் மனதில் மாயை குடிகொண்டு விடுகிறது. அதே போல் உலகில் புரிந்துணர்ந்த பேர்கள் மத்தியிலேயே பிறப்பினால் நாமே வகுத்துக்கொள்ளும் ஜாதியை விட்டொழிக்க முடிவதில்லை. தாழ்ந்த வகுப்பு என்ற நாமே நிர்ணயிக்கும் வகுப்பில் ஒருவன் பிறந்தானென்றால், அவனின் மதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது வேதனைக்குறிய விஷயம்.

ராமானுஜரிடம் தாழ்ந்த வகுப்பில் பிறந்ததால் தாழ்ச்சியாகக் கருந்தப்படுகிறான் "உறங்காவிழி தாசன்" எனும் சீடன்.ராமானுஜர் அவனின் பெருமையை தயாள குணத்தை, கொடைத்தன்மையை ஞானத்தை செயலால் மற்றோருக்கு எடுத்துணர்த்தியதாக சொல்வதுண்டு. அந்நாளிலேயே ஆலயத்தில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்குமாறு செய்து ஹரிஜனப்பிரவேசம் செய்தார். நடைமுறை வாழ்வில், ஞானிகள் அல்லாத சாதாரண பிரஜைகளிடையே இந்த ஞானத்தை வளர்க்க உதவியவர் இராமனுஜர்.


பிறப்பால் எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பது சர்ச்சைக்குறிய விஷயமே அல்ல. தன் ஒழுக்கத்தால் நடத்தையால் எவனும் எந்த வர்ணத்திற்கும் மாற முடியும் என்று சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. சூத்திரன் என்ற வர்ண முறையைச் சேர்ந்தவனும் கூட பிராமணன் ஆகலாம்.

சூத்திரனுக்குறிய அடையாளங்கள், அவன் பிறருக்கு தன் உடலால், உழைப்பால் சேவை செய்பவன். உடலுழைப்பை ஏனையோருக்கு வழங்குபவன் சூத்திரன் என்று பொதுவாக அறியப்படுகிறது. அதே போல் பிராமண வர்ண முறையை (ஜாதி அல்ல) சேர்ந்தவனும் தன் தேர்வினால், சுத்திர வர்ண முறையை தழுவி வாழலாம். வாழ்வின் முறையை நாம் ஒவ்வொருவரும் மாற்றி அமைத்துக்கொண்டே தொடர்கிறோம். விச்வாமித்ரன் என்ற க்ஷத்ரியன், பிராமணனாக மாறி, காயத்ரி மந்திரத்தை உலகுக்கே உபதேசித்து, பிராமணீயத்திற்கு பாதை வகுத்தார். கசப்பு கடைக்காரன் உண்மையான பிராமணனாக வாழ்ந்த கதையின் குறிப்பை முன்பே கண்டோம். சத்யகாம ஜாபலி உயர்ந்த பிராமணன்.

பிராமணன் என்பவனுக்குறிய குணங்கள் - வாழ்க்கை முறை:

* மனசை அடக்கி, இந்திரியங்களை ஜெயித்து, தவம், பொறுமை, ஞானம், கருணை, சத்தியம் முதலியவை இருக்கப்பெற்றவன்.

* அவன் தானாக அவனுக்கு கிடைக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். வயலில் எரியப்பட்டதை பொறுக்கி எடுத்து பொங்கித் திங்கலாம். யாசித்துப் பெறலாம், 'உஞ்சவிருத்தி' செய்து உணவைப் பெறலாம்.

* இப்படிப்பட்ட கடினமான பாதையை, வைராக்கியம், சத்தியம், பக்தி, ஆசையின்மை என்ற ஊர்திகளைக் கொண்டு கடக்கவேண்டும்.

* பொறாமையின்மை, ஞானம் போன்ற ஷக்திகளே இந்த இவ்வூர்திகளுக்கு உரமிடும் குணங்கள்.

பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் சந்தியாவந்தனங்களும், வழிகாட்டியாக விளங்கும் படிப்பறிவான சாஸ்திர சம்பிரதாயங்களும் வேதங்களும், அங்க அடையாளாங்களும் மட்டும் உண்மையான பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை கொடுத்து விடுவதில்லை. படிப்பறிவினாலோ, அறிவினாலோ, புண்ய ஸ்தலங்களுக்கு செல்வதாலோ, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதினாலோ வந்துவிடுவதில்லை. தெளிந்த அறிவோடும், ஆன்மீகச் சிந்தனையோடும், ஒவ்வொரு கணமும் வாழப்பழக வேண்டும். ஏட்டுச் சுரைக்காயாக அறிவு இருந்து பயனிலை. அதனை பயன்படுத்தி வாழ்ந்தாலே ஒரு மனிதன் பிரம்ம ஞானத்தை பெறும் நிலைக்கு மாணாக்கன் ஆகும் உயர்வினைப் பெறுகிறான். தன்னடக்கமும், விடாமுயற்சியும் (வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்து உயரத்தை எட்ட எத்தனிக்கும் ஆன்ம தாகம்), ஞானம், வைராக்கியம் பெற்றவன் இன்னிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள தகுதியாவனாகிறான் என்று உபநிடதம் கூறுகிறது.


'பணம் சேர்ப்பது' என்பதே பிராமணனுக்கு விதிக்கப்படாத கர்மா. பணத்திற்காகத் தான் புரோகிதர்கள் கூட வேதம் ஓதுவதும், யாகம் நடத்துவதும் செய்கின்றதால், 'விதிமீறல்' ஏற்படுகிறது. பிராமணனுக்கான கர்மவிதியே அடிபட்டுப்போகின்றது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (யார் பிராமணன்?)

யார் பிராமணன்? பூணூல் போட்டால் அவன் பிராமணனா? பிராமண வகுப்பில் பிறந்ததால் மட்டும் அவன் பிராமணனா? பூணூல் என்பது அக்காலத்தில் மூன்று வர்ணத்தவரும் அணிந்து வந்தனர். மந்திரங்கள் மூன்று வகுப்பு மக்களும் சொல்லி வந்தனர்.

பிரமணீயம் பிறப்பாலல்ல நடத்தையால் பெறப்படுவது. பிராமணீயம் என்பது ஜாதி அல்ல அது இறைவனை அறிந்தவனின் நிலை. பூணல் போட்டால் பிராமண நிலை வந்துவிடுமா? அவ்வளவு எளிதான நிலையா அது?! எத்தனைப் பக்குவம் பெற்றிருக்கவேண்டும் பிராமணனாக வாழ்வதற்கு! பூணல் போட்டதாலும், ஜாதியினால் பிராமணக் குலத்தில் தோன்றியதாலும் ஒருவன் பிராமணன் ஆகின்றான் என்றால் இப்புவியில் தர்மமும், மகிழ்ச்சியும் நிரம்பி, பூவுலகே தேவலோகமாகிவிடாதா?! அப்படிப்பட்டவனை, அப்படிப்பட்டவர்களை உலகமே கொண்டாடுமே! அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்கையா வாழ்கிறான் இக்காலத்தில் பிராமணனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜாதி-பிராமணனும்?!?

தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும், புராணங்களிலும் நகைச்சுவைப் பாத்திரமாகவோ கலகம் மூட்டுபவராகவோ மட்டுமே சித்தரிக்கப்படும் நாரதர் அதி மேதாவி. பல சாஸ்திரங்கள், கல்விகளைக் கற்றுணர்ந்தவர். ஞானி. அவருக்கு தெரியாதது கிடையாது. எனினும், தனக்கு தெரியாததை உபதேசம் பெற எண்ணினார். ஸ்கந்தனின் அம்சமான சநத்குமாரரை அணுகுகிறார்.

"தங்களுக்கு என்னென்ன தெரியும்" என வினவுகிறார் சநத்குமாரர்.

"எனக்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாசங்களும், இலக்கணங்களும், சகுன சாஸ்திரங்களும், இன்னும் எண்ணற்ற ஏனைய பல சாஸ்திரங்களும் தெரியும்."

"இத்தனை பெயர்களைக் கூறுகிறீர்களே, இவையெல்லாம் ஞானமா? இவையா அறிவு? உண்மை அறிவுன் முன், ஞானத்தின் முன் இவையெல்லாம் வெறும் பெயரளவுச் சொற்கள்" என்கிறார் சநத்குமாரர்.

அவருக்கே அப்படிப்பட்ட நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? எனக்கு சகலமும் தெரியும்" என்ற மமதை கொள்ள எள்ளளவும் அருகதையற்றவர்கள். உண்மையான அறிவாளி இருப்பதே கடினம், அப்படியே இருந்தால் என்றால், அவன் தன்னை அறிவாளி என பறைசாற்றிக்கொள்வதில்லை.

சத்யகாமன் என்பவனின் தாய் ஜபலா. அவள் பல இடங்களில் பலபேர்களின் சம்பந்தம் வைத்திருந்ததால், சத்யகாமன் யாருக்கு பிறந்தவன் என்று அவளால் கூற முடியவில்லை. சத்யகாமன் கௌதம முனிவரிடம் பாடம் பயில சென்ற போது அவன் பிறப்பைக் கேட்டு மற்ற மாணாக்கர்கள் எள்ளி நகையாடினர். ஆனால் கௌதமரோ "நீ உண்மையை பேசினாய். நீயே பிராமணன்" என்றார். பிராமணத்துவம் ஒரு தகுதி. தங்களின் நடத்தையால் எவரும் அதைப் பெறலாம்.

ஒரு முனிவன் தவத்திலிருக்கும் போது பறவை அவன் மேல் எச்சமிட்டுவிட்டது. அதனை கண்ணாலேயே சுட்டெரித்தார். அதன் பின் பிட்சைக்கு சென்ற இடத்தில், அவ்வீட்டுப்பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்த பின், பிட்சை இட்டாள். இவர் மீண்டும் முறைக்க "என்னையும் பறவை என்று நினைத்தாயோ" என்றாள் அவள் ("கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா") இதைக் கேட்டதும் ஆச்சரியமுற்று அவன் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் என்றான். என் கணவனுக்கு பணிவிடை செய்வதே என் கடமை. நான் பத்தினி தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்றாள். தனக்கும் உபதேசம் செய்விக்க அவர் வேண்டுகோள்விடுக்க. "இன்ன ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரன் இருக்கிறான் அவனிடம் போய் பாடம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறாள்.

அவன் பெயர் தர்மவியாசன். "ஒஹொ அந்த பெண் அனுப்பினாளா" என்று வந்த விஷயத்தை முன்னமே உணர்கிறான் அக்கடைக்காரன். எப்படி இந்த ஞானம் என முனிவன் கேட்க. "என் பெற்றோர்க்கு பணிவிடை செய்வதே சிறந்த தர்மம் என நான் கொண்டிருக்கிறேன்" என்கிறான். உடனே முனிவன் "நீ தான் பிராமணன்" என்று தெளிந்து அவனடியில் பாடம் பெறுகிறான்.

சோ-வின் எங்கே பிராமணான் part1 (வேதம் கற்றால் பிராமணனா?)

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?' என வினவுகிறது நம் உள்ளுணர்வு.

சாஸ்திரங்களுக்கும் வேதத்திற்கும் என்ன வித்தியாசம்? சாஸ்திரங்கள் புவியில் வாழும் வழிமுறைகளையும் விதிகளையும் லோக வாழ்வுக்கு தேவையான அறிவையும் பிரிவுகளாய் எடுத்துறைக்கிறது. வேதமோ பரம்பொருளை நோக்கி நாம் செய்யும் பயணம். சாஸ்திரங்கள் தெரிந்ததால் அவன் இறையை உணர்ந்திருக்கிறான் என்றோ, உயர்ந்தை இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளான் என்ற எண்ணமோ பெரும்பாலும் தவறானது. வேதம் கற்றிருந்தால் மட்டுமே ஒருவனின் அறிவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிவாகக் கொள்ளலாம்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாய் பிரிவாகியுள்ளது.

இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன. ரிக் வேதம் செய்யுள் நடையோடும், யஜுர் வேதம் உரை நடையின் வழியிலும், சாம வேதம் கானம்/பாடல்களாகவும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.

பொதுவாக ரிக்வேதம் 10 மண்டலங்களாகவும், 10415 ரிக்குகள் உடையதாகவும், 1029 சூக்தங்கள் உடையதாகவும் சிறந்து காணப்பெறுகின்றது. கடவுள் ஒருவரே! அவரே தலைவர், அவரே பலராக ஆகின்றார் என்பன ரிக் வேதத்தின் சாரமாகும்.

http://tamilvishai.com/home/?p=1306

யஜுர் வேதம் யாகங்கள் செய்யும் முறைகளை விளக்குக்குவதாக அமைந்துள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

சாம வேதம் பாடல்களின் வடிவில், ஒலிவடிவில் இறைவனைப் போற்றித் துதிக்கும் வேத ஒலிகள். வேதங்களின் நான் "சாம வேதம்" என்கிறான் கீதையில் கண்ணன். சாம வேதம் ஓம்காரத்தின் சாரம்சமாக கருதப்படுகிறது.

http://www.iloveindia.com/literature/sanskrit/vedas/sama-veda.html

அதர்வண வேதம் மந்திர யந்திர தந்திரங்களும், விஞ்ஞான கருத்துக்களும், உலகியல் ஆரோக்யத்திற்கும் வளமான வாழ்வுக்கு தேவையான அறிவும் அதர்வன வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இது அதிகம் வழக்கில் இல்லை.

http://www.dalsabzi.com/enlight_info/atharva_veda.htm

ஒவ்வொரு வேதமும் நான்கு பாகங்களாக பிரிக்கப்படலாம். 'சம்ஹிதை' என்பது மந்திர பாகம், 'ப்ரம்மணம்' என்பது யாகம் செய்யும் முறைகள், 'ஆரண்யகம்' யாகத்தின் அர்த்தங்களையும், அதன் நோக்கத்தையும் விரிவுபடுத்துகிறது. இறுதியாக வேதத்தின் ஒரு பகுதியான "உபநிஷதம்" .

வேதங்களின் அந்தமே 'வேதாந்தம்'. அதுவே பரம்பொருள். ரிஷிகள் உணர்ந்து உபதேசித்தது உபநிஷதம். ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டி. "நான் யார்" என்ற மையக் கேள்வியும், "ஜீவ - பரமாத்மா" பாகுபாடுகளும், பிரம்மத்தை அடையும் முறைகளும், ஆன்ம ஞானம் முதலியன பற்றிய விளக்கங்களும் உபநிஷதத்தின் முக்கிய கருத்துக்கள். மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. அதில் பன்னிரெண்டை முக்கியமாக சொல்வதன் காரணம், ஷங்கரரும், ராமானுஜரும், மாத்வரும் இவற்றை பாதுகாத்து உரை எழுதியிருப்பதால், புரிதல் எளிதாகிறது. படிப்பதால் அன்றி, உணர்வதால், உணர்ந்து நடப்பதால் ஒருவன் உயர் கதி அடைகிறான்.

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?

இப்பொழுது பதிலும் தெளிவாகிறது. வேதம் கற்பதால் அவன் அறிவு மட்டுமே விருத்தியடைகிறது. வேதம் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது. அது இலக்கு அல்ல. இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் பாதை. கற்றத்தைத் தாண்டி வேதத்தை "உணர்ந்தால்" உணர்ந்து அதன்படி நடந்தால், அவன் பிராம்மண நிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.

அவனின் தன்மைகளில் சிலவற்றை முன்பு கண்டோம். மேலும் சில குணங்களும் அவசியமாகிறது.

பிராமணன் என்பவன் சமப்பார்வையுடையவனாக இருக்க வேண்டும். சமப்பார்வை என்பது மனித ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பது. இரட்டைகளற்ற பார்வை. மரம், செடி, மிருகம், மனிதன் என்ற பேதமே அகன்று விடும் பார்வை. எல்லாம் ஒரே பொருளின் வெளிப்பாடுகள் என்ற பார்வை. மானம் அவமானம், விருப்பு வெறுப்பு, அற்ற நிலை.

நாளைக்கு என சேமித்து வைப்பவன் பிராமண நிலைக்கு தயார்படுத்திக்கொண்டவனில்லை. பொருளையோ பணத்தையோ சேமித்து வைத்தல் அவனுக்கு விதிக்கப்பட்ட இயல்பு அல்ல.

மேலும் அவனுக்கென கூறப்பட்டுள்ள ஷட்கர்மாக்களை (ஆறு) பற்றின்றி செய்பவனாக இருக்க வேண்டும்)

1. வேதம் கற்பது கற்பிப்பது
2. யாகம் செய்வது செய்விப்பது
3. தானம் வாங்குவது (உடன்) கொடுப்பது


பிராமணன் ஒரு ஞானியைப் போல் வாழ வேண்டும். பிறகு ஞானிக்கும் (வர்ண)பிராமணனுக்கும் என்ன வித்தியாசம்? வர்ண முறைப்படி பிரம்மணீயத்தை தழுவியவனுக்கு கர்மாக்கள் உண்டு. பிராமணன் கர்மாக்களை பற்றற்ற உணர்வுடன் செய்வதால் அவன் ஞானியின் நிலையில் தன்னை இருத்திக்கொள்கிறான். ஞானியோ கர்மாக்கெல்லாம் அப்பாற்பட்டு வேதத்தின் கருப்பொருளின் பரம்பொருளின் அருகாமை நிலையில் நிற்பதால், அவனை கர்மாக்களும் கூட கட்டுப்படுத்துவதில்லை எனக் கொள்ளலாம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஹிந்து மதத்தின் சனாதனம்)

ஹிந்து மதம் என்றால் ஹிந்துக்களின் மதம் என்று இன்றைக்கு எல்லோராலும் பொருளுணரப்பட்டாலும், ஹிந்து மதம் பெயரற்றது என ஏடுகளைப் புரட்டி நாம் அறியலாம். மதம் என்றால் சிந்தனை/நம்பிக்கை. 'சிந்து சமவெளி நாகரீகத்தை'த் தழுவிய மனிதர்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் சிந்து நாகரீகம் என பிற்காலத்தில் பெயர்சூட்டப்பட்டு, பின் 'ஹிந்து / ஹிந்துத்துவம்' என மருவியது. மதத்திற்கென தனி பெயர் இல்லை. ஏன் இல்லை? ஹிந்து மதத்திற்கு 'மூலம்' கண்டுணர முடிவதில்லை.

அதனால் இதற்கு "சனாதன தர்மம்" எனப் பெயர். 'சனாதனம்' என்றால் தொன்று தொட்ட காலம் முதல் வழங்கு வந்த தர்ம நெறிகள். சனாதன தர்ம முறைகள் மட்டுமே இருந்து வந்த காலத்தில், பிறவொன்று அதற்கு ஒப்பாக / கூட்டாக இல்லாததால், தானே தனித்து தழைத்து வந்ததால், அதற்கு தனியொரு பெயர் தேவையிருக்கவில்லை. உலகெங்கும் உள்ள வரலாற்றுக் கல்வெட்டுக்களும், ஒட்டிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும், புழங்கிவரும் மொழிச்சொற்களுமே சான்று. எஹிப்து நாட்டில் "மித்ர வருண சாக்ஷியாக" என்று கி.மு 1300 முன்னாலே உரைக்கும் கல்வெட்டைக் காணலாம். மெக்சிகோ நாட்டில் நவராத்திரி நாட்களில் "ராம்-சீதா" என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று தெரியவந்துள்ளது மேலும் அந்நாட்டில் சில இடங்களில் விநாயக விக்கிரஹங்கள் கண்டெடுக்கபட்டது. விஷு பண்டிகைக் காலத்தில், தெற்கு அமெரிக்காவில் ஆண்டிய மலைப்பகுதி பழங்குடியினர் "இன்காஸ்" என்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Inca_religion
http://www.myperu.org/fiestas_festivals_peru.html

உபநிஷதத்தில், ஆதாம் ஏவாள் கதைகளை நினைவூட்டும் வகையில், "ஜீவாத்மாவாக வரிக்கப்பட்ட ஒரு பறவை பழத்தைக் (ஜீவ ரசத்தை / உலக இன்பத்தை) களிக்க, அதை பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கிறதாம் பரமாத்மாவாக வரிக்கப்பட்ட இன்னொரு பறவை." சனாதன தர்மத்தின் சனாதனத்திற்கு எண்ணற்ற சாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஓம்காரமும் - துரியமும்)


இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதன் மூலம் தன் முழு வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறது இறைத் தத்துவம். "மனிதர்களில் நான் மன்னன்" என்கிறான் க்ருஷ்ணன். சிறந்த மன்னனின் கவனத்தில் பாதுகாப்பில் அத்தனை மனிதர்களும் அடங்கிவிடுகின்றனர். அத்தனை மனிதர்களையும் அவன் பரிபாலிக்கிறான். அவர்களின் பிரதிநிதியாய் இவன் விளங்குகிறான். "பறவைகளில் நான் கருடன், நதிகளில் நான் கங்கை, யஷர்களில் நான் யமன்" என்றெல்லாம் கூறுபவன், மந்திரங்களில் "நானே ஓம்காரம்" என்கிறான். மாண்டுக்ய உபநிஷத் "ஓம்கார ஏவதம் சர்வம்" என்கிறது. எல்லாம் ஓம்காரத்தில் ஒலிகளே. நடந்தது, நடப்பது எல்லாமே ஓம்காரத்தில் அடக்கம். அவற்றைக் கடந்து நிற்பதும் அந்த ஓம்காரமே என்கிறது ஹிந்து மதம்.

அத்தனை மந்திரங்களும் 'ஓம்காரத்தில்' அடங்கிவிடுகிறது. மந்திரங்களின் பிரதிநிதியாய் ஓம்காரம் விளங்குகிறது. அனைவருக்கும் தெரிந்த விளக்கம் தான், ஓம் என்பதன் கூற்று "அ-கார, உ-கார ம-கார" ஷப்தங்கள்.

'அ'காரம் என்பது விழிப்பு நிலையான படைத்தலை, அதன் ஆரம்பத்தை உணர்த்துகிறது. "அ" என்று ஆரம்பிக்கிறது ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும்.

"உ"காரம் காப்பதைக் குறிக்கிறது. தொடர்தலை, வளர்த்தலை, பரிபாலித்தலை குறிக்கிறது. கனவு நிலையின் பிரதிபலிப்பு

"ம" காரம் ஆழ்ந்த நித்திரைக்கு ஒப்பான அழிவு நிலையை காட்டுகிறது.

அத்தனைக்கும் அப்பாற்பட்ட இன்னொரு நிலை "துரீய" நிலை.

துரிய‌ம் என்றால் என்ன‌? அந்த‌ பெய‌ர் எதை குறிக்கிற‌து? அந்த‌ நிலை என்ன‌? அது எந்த நிலை என்று சொல்வ‌தை விட‌ அது எந்த‌ நிலையெல்லாம் இல்லை என்று சொல்வ‌து சுல‌ப‌ம். நாம் விழித்திருக்கும்போது உண‌ரும் நிலை அல்ல‌; தூங்கும்போது க‌னாக்காணும்போது உண‌ரும் நிலை அல்ல‌; க‌ன‌வே இல்லாது ஆழ்ந்துற‌ங்கும் நிலையும் அல்ல‌. இந்த‌ மூன்று நிலையில் மாறி மாறி பய‌ணிப்ப‌வ‌ர‌து நிலை எதுவோ அதுதான் அந்த‌ நிலை.

அதை அறியும்போது மாத்திர‌மே அது அதுதான் என்று புரியும். அங்கு ம‌ன‌மில்லாதாத‌ல் சொல்லும் பொருளும் அதை குறிக்க‌ உத‌வாது. அத‌னால்தான் அறிந்த‌வ‌ரால் அதை சொல்ல‌ முடிவ‌தில்லை. அதை சொல்ல‌ முடியும் என்று சொல்ப‌வ‌ர் அதை அறிய‌வில்லை என‌ அறிய‌லாம். கார‌ண‌ம் அந்நிலையை அடைந்த‌வ‌ர் திரும்ப‌ உட‌ல் உண‌ர்வுக்கு திரும்பும்போது முத‌லில் அடையும் திகைப்பே அதுதான். என்ன‌வென்று த‌ன‌க்குத்தானே கூட‌ எந்த‌ சொல்லாலும் அதை விளக்க‌ முடியாம‌ல், அந்த‌ உண‌ர்வை எண்ண‌ முடியாம‌ல் திகைப்பார். ஆக‌வே அறிந்த‌வ‌ர் இந்த‌ விஷ‌யத்தில் மாத்திர‌ம் மௌனியாகிறார். இப்ப‌டி மௌனியாகிற‌வரே முனிவ‌ர் என‌ப்ப‌டும் நிலையை அடைந்த‌வ‌ராவ‌ர்.

துரிய‌ம் என்றே சொல்லிற்கே நான்காவ‌து ப‌குதி என்றுதான் பெய‌ர். ஜாக்ர‌த் எனும் சொல்லான‌ விழிப்பு நிலைக்கு விள‌க்க‌மாக‌ அந்த‌ பெய‌ர் இருப்ப‌தை காணுங்க‌ள். ஜாக்ர‌ம் என்றால் விழிப்பு. ஸ்வ‌ப்ன‌ எனும் நிலை க‌ன‌வு நிலை. ஸ்வ‌ப் என்றால் தூக்க‌ம். அதிலிருந்து வ‌ந்த‌ சொல் ஸ்வ‌ப்ன‌ம். சுஷூப்தி என்ப‌து மூன்றாவ‌து சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'ந‌ன்றாக‌ முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க‌ நிலை ந‌ன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த‌ நிலையின் த‌ன்மையை வைத்தே இருக்கும் சொல்.ஆனால் துரிய‌த்திற்கு என்ன‌ பொருள் என்றால் நான்காவ‌து நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க‌ முடியாததால், இத‌ன் பெய‌ரையே நான்காவ‌து நிலை என்று வைத்து விட்டார்க‌ள்.

http://aaththigam।blogspot.com/2008/10/16.html

(நன்றி)

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மரணம்)

மரணம் தவிர்க்க முடியாதது. கீதையில் கண்ணன்,

'பிறந்த எவனுக்கும் மரணம் உண்டு
மரணித்தவனுக்கு மீண்டும் பிறப்பும் உண்டு'
என்கிறார்.

அசுரர்கள் சிலர் மரணமற்ற இருப்பை நோக்கி தவமியற்றி இறுதியில் தோல்வியே கண்டனர். மரணம் என்பது இயற்கையின் தன்மை, அதன் இன்றியமையாத செயல்பாடு. மரணத்தை ஜெயிப்பதோ வெல்வதோ இயற்கைக்கு எதிராக புறம்பாக செயல்பட நினைப்பது. அது நடவாத காரியம். (யோகிகள் அடையும் மரணமில்லா அமரத்துவம் வேறு) இது தெரிந்தும் மனிதனுக்கு மரண பயம் பீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மரண பயம் அவனை விட்டு விலகுவதே இல்லை. என்றைக்கேனும் மூப்பு எய்தி மடியப்போகும் உடல் என்றாலும் கூட, அது சுலபமாக இலகுவான விடுதலையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ருத்ரனாகிய பரமேச்வரனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற இன்னொரு பெயர் உண்டு. ம்ருத்யு என்ற மரணத்தை வென்றவன் என்று பொருள். அவனை நோக்கி துதிப்பது ம்ருத்யுஞ்ஜய மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிப்பதால் அகால மரணம் நேராது, மரண பயம் விலகும், மரணம் இலகுவாக இருக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல சத்தியமும் கூட.

சிலர் மரணத்தில் வாயில் வரை பயணித்து மீண்டு புனர்ஜன்மம் எடுத்து வருவர். அதை "சுக்ராச்சார்யார் செயல்" என்று சொல்வதுண்டு. அசுர குரு சுக்கிராச்சார்யார் இறந்தவனைக் கூட பிழைக்க வைத்து விடுவார் என்கிறது புராணம். சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி ப்ருஹஸ்பதியின் மகன் கசனிடம் தன் மனதை பறிகொடுக்கிறாள். அவனோ தேவர்களின் வெற்றியின் பொருட்டு சுக்ராச்சார்யாரிடம் "ம்ருக சஞ்ஜீவினி" மந்திரத்தை கற்க வந்தவன். 'ம்ருக சஞ்சீவினி' மந்திரம் இறந்தவனை பிழைக்க வைக்கும் மந்திரம். அசுரர்களுக்கு கசனின் எண்ணம் புரிந்து விடுவதால், அவனை கொல்ல பல முறை முயன்று தோற்கின்றனர். இறுதியில், கசன் இறந்தவுடன் அவன் உடலை உடன் எரித்து, உணவில் கலந்து சுக்ராச்சார்யாருக்கு கொடுத்துவிடுகின்றனர். கசன் இறந்தான் என்ற செய்தி தேவயானியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்த, அவள் பொருட்டு சஞ்சீவினி மந்திரத்தை வயிற்றிலிருந்த கசனுக்கு உபதேசிக்கிறார். அவன் வயிற்றைக் கிழித்து வெளியே வந்து மீண்டும் மந்திர பிரயோகம் செய்து சுக்ராச்சார்யாரை உயிர்ப்பிக்கிறான் என்பது கதை.

புராணக் கதைகளும் இதிஹாச கதைகளுக்கும் சான்றுகள் மிகக் குறைவு. வழிவழியாய் செவி வழியாய் வந்த செய்திகள். கல்வெட்டுக்களில் ஏடுகளில் படித்து பரப்பப்பட்ட கதைகள், கருத்துக்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய 'வரலாறு' நம் நம்பிகைக்கு பாத்திரமாவதைப் போல், புராணங்கள் தற்கால நவீன தலைமுறையின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உட்படுவதில்லை. நூற்றாண்டுகள் முன்பு நடந்தவைகளின் சான்று அழியாமல் இருப்பதால், நம்பிக்கை வைப்பது எளிதாகிறது. இறைத் தத்துவத்தின் பால் உள்ள நம்பிக்கை, சான்று இல்லாததால் தளர்ந்து நாத்திகவாதத்தை தழுவுவதைப் போல், புராணக் கதைகளுக்கு சான்றிதழ் வழங்கமுடியாததால், அவற்றை நாம் புறக்கணிக்க முற்படுகிறோம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (இறைவனுடன் என் உறவு)

இறையின் தத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் புரிதலுக்கு ஏற்ப ஒவ்வொரு விதமாக கையாள்கிறோம். இறையைத் தன்மைக்கு மனித உருவேற்றி அதனை பவ்யத்துடன் அணுகுவது ஒரு முறை என்றால், அவனையே பக்தியுடன் அணுகுவது இன்னொரு முறை. அதனையே பயத்தோடு அணுகுபவனும் உண்டு. நம் வாழ்வில் சந்திக்கும் நபர்களிடம் நாம் காண்பிக்கும் அன்பும், நாம் அவர்களை விளிக்கும் சொற்களும் நம் உறவின் ஆழத்தை பொருத்தே அமைகிறது.

இறைவனை தந்தை/தாய்/தோழன்/காதலன்/வேலைக்காரன் என பல உருவில் நெருங்கலாம். . திருமிழிசை ஆழ்வார் இறைவனுக்கு தொண்டாற்றும் கிழவிக்கு இறைத்தத்துவத்திடம் நமக்கிருக்கும் ஆழத்தையும் அன்பையும் பொருத்தே நம் உறவு அமைகிறதுஇளமையைக் கொடுத்தார். அவள் அழகில் மயங்கிய அரசன் தனக்கும் இளமை வேண்ட, ஆழ்வாரின் அதை சீடனே மறுத்துவிடுகிறான். அவனை நாடுகடத்திய விஷயம் கெட்டு திருமிழிசை ஆழ்வாரும் அவனுடன் புறப்படுகிறார். அப்பொழுது பாம்பின் படுக்கையில் இருக்கும் திருமாலையும் பார்த்து 'உனக்கு மட்டும் இங்கென்ன வேலை, வா என்னுடன்" என்று ஆணையிடுகிறாராம். அதை கெட்டு பெருமாளும் அவருடன் சென்று விட்டதால் அவருக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் வழங்கப்பெற்றது.

சுந்தரர் கடவுளை தூது அனுப்பினார். சிவன் பக்தருக்காக பிட்டுக்கு மண் சுமந்தார். பக்தர்களுக்காக இறைவன் செய்யாத விடயம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட பக்தர்களுக்கு? என்பது கேள்வி.

இறைவன் நெருங்கியவன் ஆகிவிட்டான். ஒருமையில் விளிக்கும் தோழமை. ஏசும் உரிமை எல்லாம் பெற்று விட்டோம். அப்படியென்றால் அவனை உரிமையோடு கேட்கலாமே "எனக்கேன் இதைச் செய்தாய்?" "எனக்கேன் இதைச் செய்யவில்லை" "என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்" என்று குமுறலாமே?! அது பக்தியா என்றால்...இல்லை. முதிர்ச்சி அடைந்த பக்தியின் அடையாளம் அதுவல்ல.

"எனக்கு எதை கொடுப்பது கொடுக்க மறுப்பது என்பது அவனுக்குத் தெரியும்" என்ற பற்றற்ற நிலையில் இறைவன் அளிக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது தான் பக்தியின் முற்றிய நிலை. இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்விற்கும் வளத்திற்கும் நாம் மட்டுமே பொறுப்பாளி. இறைவன் என்றொரு சுமைதாங்கி சுமக்கிறான் என்பதால் அவனிடம் நம் பாரத்தை போட்டு விட்டு, அவனை "ஏன் இதை மறுக்கிறாய், ஏன் இதை கொடுத்தாய்" என்று கேள்வி வேறு கேட்கிறோம்!

"நீ எதைக்கொடுக்கிறாயோ அதுவே உன் பிரசாதமாக ஏற்று வாழ்கிறேன்" என்று எந்த பக்தன் சொல்கிறானோ அவனுக்காக கட்டுப்பட்டு இறைவன் வருவான்.



மனிதனின் வாழ்கை விசித்திரமானது. சில விஷயங்கள் நம் புலனறிவுக்கு எட்டாதது. ஏன் தனிமனிதனின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள்? ஒருவன் உயர்ந்து நிற்க, இன்னொருவன் தாழ்ந்து சீரழிகிறேனே? பணத்தின் செழிப்பில் சிலர் சுக ஜீவனம் செய்ய, வறுமையில் சிலர் வதுங்குகின்றனரே? ஏன்? எதனால்? எப்படி சாத்தியம்? முடிவில்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில் மட்டுமே இருக்க முடியும்.

சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் ஏனைய, பிரபஞ்ச ரகஸ்யங்களாக எங்கும் நிரம்பிக் கிடக்கிறது என்பதை தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்வது ஒன்று தான் சாத்தியம். அதை "விதி" என்று ஒதுக்கி வைத்து நொந்துக்கொள்ளலாம். அல்லது சிந்தைக்கெட்டாத ஷக்தி என்று உயர்த்தி வைத்து வணங்கலாம். இல்லையெனில் புரியாத பொருளின் செயல்பாட்டுமுறை என்று விவாதிக்கலாம்.

எதுவாக இருப்பினும், அதன் முன், மனிதன் பலமிழந்து நிற்கிறான் என்பது உண்மை. அவனால் அதை வெல்ல முடியவில்லை. விஞ்ஞானம் அதன் முன் தோற்றுவிடுகிறது. எத்தனை பலம் கொண்டு போராடினாலும் அதை தவிர்க்கமுடியவில்லை.

கௌதமி என்பவள் தர்ம நெறிப்படி வாழ்கை நடத்துபவள். அவள் புதல்வனை பாம்பு கடித்து விடுகிறது. அவள்பால் உயர்ந்த மரியாதையும் கொண்ட அர்ஜுனகா என்ற வேடனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. 'நீ எப்பேற்பட்டவள்! உனக்கா இப்படி ஒரு கதி நேர வேண்டும். எல்லாம் பாம்பு செய்த வினை' என நொந்துக் கொள்கிறான். பாம்பைக் கொல்ல முற்படுகிறான். பாம்போ தான் எவ்வாறு காரண கர்த்தாவாக முடியும் என வாதிடுகிறது. 'யமனின் உத்தரவின் பேரிலல்லவா நான் இயங்கினேன். நான் எப்படி பொறுப்பாவேன்.' என மறுத்துரைக்கிறது. யமனோ 'இது காலதேவனின் ஆணையன்றோ?! அவர் இட்ட கட்டளையை கடமையாக்கிச் செய்பவனே நான்' என்கிறான். 'அவரவர் கர்ம வினைக்கேற்ப பலன் அமைகிறது. அவனவனே தன் விதியை, வாழ்வை, நிர்ணயித்துக்கொள்ள இதற்கு நான் எப்படி கர்தாவாக முடியும்' என்கிறானாம் காலதேவன்.

அவனவன் வாழ்வுக்கும், நடவுக்கும், இருப்புக்கும் அவனவனே பொறுப்பு, அவனவனே கர்த்தா. விதை விதைத்தவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பதே ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தாய் இருக்கிறது. மஹாபாரத ச்லோகங்களில் அதன் முடிவில் வரும் ச்லோகம், ஜீவனின் சாரம்சத்தை விளக்குவதாய் அமைகிறது।



"ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், பந்துக்களும், மித்ரர்களும், மாதாக்களும், புத்ரர்களும் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், முடிவுறாத இழையாக தொடர்ந்த வண்ணம் இன்னும் வந்து கொண்டே இருப்பர். மனதுக்கு ஒவ்வாத வருத்தமுறச் செய்யும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பயமுறுத்தும் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இவற்றினுள் மூழ்கி தொலைந்து போகின்றவர்கள் அஞ்ஞானிகள். ஞானியோ சலனமற்றத் தெளிவுடன் தன் பயணத்தைத் தொடர்வான்."

கடவுள் நமக்கு நாமே வித்திட்டுக்கொண்ட கர்மங்களைக் கழிக்க பொறுமையை வழங்கியருள்கிறான். அவனை நொந்து கொள்வதில் என்ன பயன்!?

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கல்யாண சடங்குகள்)

கல்யாணச் சடங்குகள் தற்காலத்தின் வசதிக்கு ஏற்ப வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டாலும், சுருங்கப்பட்ட திருமணங்களிலும் கூட சில சம்பிரதாயங்கள் மாறாது கடைபிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று மாலை மாற்றுதல். மணமான இருவர் மாலை மாற்றிக்கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. என்னுடைய எல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம் என்று உரைப்பதே மாலை மாற்றும் பழக்கத்தின் உள்ளர்த்தம். மேலும் 'என் மனநிலை இதுதான்' என மணமகன் மாலை சாற்றுகிறான். 'அதை நான் அப்படியே ஏற்கிறேன்' என்று மணமகள் மாலையை வாங்கிக் கொள்கிறாள் என்பது இன்னொரு அர்த்தமாம்.


சில வீட்டுத் திருமணங்களில் தாலி கட்டுதற்கு முன்பு, தலையில் நுகத்தடி நிறுத்துவது பழக்கம். மாடுகள் இரண்டும் சேர்ந்து வண்டியை சுமந்து கரைசேர்வது போல், புருஷனும் அவன் ஸ்த்ரீயுமாக இல்லறத்தை குடைசாயாது சமமாக நடத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதுவும் பிற்காலத்தில் நடைமுறைக்கு ஒத்தவாறு சொல்லப்பட்ட கருத்து. நுகத்தடி வைப்பதற்கு வேறு அர்த்தமும் உண்டாம். அத்திரி மஹரிஷியின் மகள் அபலா, தோல்வியாதியால் அவதிப்படுகிறாள். அதனால் அவளுக்கு திருமணம் நடந்தேறவில்லை. அவள் இந்திரனை நோக்கி பிரார்த்திக்கிறாள். அவனும் அவள் பிரார்த்தனைக்கு இரங்கி, அவளுக்கு நுகத்தடியை வைத்து, மந்திரம் ஓதி, நீர் விடுகின்றான். உடனே அவள் வியாதி நீங்கி பூர்ண குண்மடைந்து இந்திரனையும் மணக்கிறாள். மணமகளாகப்பட்டவளும் நோய் நொடிகளுக்கு பலியாகாது சிரஞ்சீவியாக இருக்கக்கடவது என்று மந்திரம் சொல்லி நுகத்தடியின் மேல் நீர் விடுவது வழக்கமாகியது.

சமீபத்தில் திருமணம் செய்து வைக்கும் சாஸ்திரிகள் பலர் திருமண சடங்கில் சப்தபதியின் முக்கியத்துவத்தை உரைக்கின்றனர். திருமணம் தாலிகட்டுவதுடன் முடிந்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலிகட்டிவிட்டதால் இருவர் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சப்தபதி என்ற சடங்கே திருமணத்தை பூர்த்தி செய்கிறது. 'தாலி' என்ற வழக்கமே பிற்பாடு தோன்றப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். 'பொன்' சேமித்தல் தம்பதியரின் அவசர-அவசிய காலகட்டங்களில் சேமிப்பாக இருக்க உதவும் என்பதால் தாலி வழக்கம் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனாலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்ய லஹரியிலும் அம்பாள் திருமாங்கல்யம் அணிந்திருபதாய் பாஷணைகள் இருக்கின்றன. சௌந்தர்ய லஹரியில் , அம்பாள் கழுத்தில் மாங்கல்யமாக மூன்று நூல்கள் மூன்று ரேகைகளாக இருக்கின்றன என்று ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இருக்கின்றதாம். அதனால் 'தாலி' பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் தெளிவாகக் கூறுவது கடினம். அடுத்து சப்தபதியைப் பார்ப்போம்.

சப்தபதி என்றால் 'ஏழு அடிகள்' என்று பொருள். ஒரு ஆடவனும் பெண்ணும் சப்தபதி எடுத்துவைத்தால் அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். ஏழு அடிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் தோழமை உறவு கொண்டாடப்படுகின்றது. யமனுடன் ஏழு அடிகள் சாவித்திரி எடுத்து வைத்ததனால், அவளை விலகச் சொல்லும் யமனிடம், சப்தபதி உன்னுடன் நடந்ததனால் "நீ என் நண்பன், நட்பின் பெயரிலாவது என் மணாளனை மீட்டுக் கொடு' என்று சாவித்திரி கேட்கிறாள்.



ஏழடிகள் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,
நான் வானம் என்றால் நீ பூமி
நான் மனம் என்றால் நீ வாக்கு
எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக"


என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.

உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்


என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்.

அதற்கு பின் வரும் சம்பிரதாயங்கள் "அம்மி மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதும்". நேர காலங்கள் சரியாக அமையாது துன்பம் நேரும் போதும் அம்மியைப் போல் கலங்காது அவள் உடன் வரவேண்டும் என்பது அம்மி மிதப்பதன் அர்த்தம். அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப் போல் என்று அழியாது சிரஞ்ஜீவியாக திகழ்பவள். பதிவ்ரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி. சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் உயர்ந்தவளாக கொள்ளப்பட்டிருக்கிறாள். "வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதிவ்ரதையோ அப்படியே நானும் ராமனை விட்டு பிரியாமல் இருபேன்" என்று சீதை கூறினாள். அருந்ததியை தரிசனம் செய்து 'இவளைப் போல் நீயும் இருப்பாயாக' என்று மணமகளுக்கு சொல்வது போன்ற நியாயம்.

(நியாயவாதியான நம்ம மனசு: மணமகனுக்கு அறிவுரைகள் ஒன்றும் இல்லையா? )

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆகம விதிகள்)

கோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் "பூ(bhoo) பரிட்சை" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)

சிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது

அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை

புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது

அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை

சில ஆலயங்கள் மிகவும் ஷக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (திருநீற்றின் மஹிமை)

திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.

"செய்யனே திருவாலவாய் மேவிய
ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்காகவே"


மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம் ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.

"
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."


என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.

சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறு சிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது. அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (தானங்களில் சிறந்தது எது?)

தானம் தர்மம் என்பதன் சிறப்பென்ன? தர்மம் செய்தலே உயர்ந்தது என்றாலும் எப்படிப்பட்ட தர்மத்திற்கு தலைவணங்கவேண்டும் என்றால், எவன் ஒருவன் தன் இருப்பிற்கு மீறி, தன்னை ஷக்தியைத் தாண்டி தர்மம் செய்கிறானோ அவன் செய்யும் தர்மத்தின் விலை மதிப்பிட முடியாதது. தனிமனிதன் தன்னிடம் இருக்கும் தனத்தைப் பொருத்தே தானம் செய்கிறான். தனக்கும் சேமித்து வைக்காது பிறருக்கு தானம் வழங்கும் கொடை குணம் இன்றைக்கெல்லாம் தேடினாலும் தென்படுவதில்லை. தானத்தின் சிறப்பை மஹாபாரதத்தின் கிளைக்கதை நன்று உரைக்கிறது.

போரில் வெற்றியடைந்து உலகத்தோரும் வானத்தோரும் வியக்க அஸ்வமேத யாகம் நடத்துகிறான் யுதிஷ்டிரன். உலகமே போற்றும் யாகத்தில் குறைவின்றி தான தர்மங்கள் நடைபெறுகின்றன. அவ்விடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கீரிப்பிள்ளை ஓடுகிறது. அதன் ஒரு பக்கம் மட்டும் தகதகவென தங்கமாய் ஜொலிக்கிறது. இவர்கள் நடத்தும் தர்மங்களை பொருட்டாகவே மதிக்காது அது மேலும் கூறுகிறதாம்.

"ஏழை பிராமணன் ஒருவன் தர்ம விதிப்படி வாழ்பவன். தனக்கென மறுநாளுக்கேனும் சேர்த்துவைக்காத உண்மை அந்தணன். பிட்சை எடுத்த உணவை உண்ணும் தருவாயில், முனிவன் ஒருவன் விருந்தினனாக வந்துவிடுகிறான். தன் பசியை பொருட்படுத்தாது தனக்கென சமைத்த உணவை முனிவனுக்கு கொடுத்துவிடுகிறான். முனிவனுக்கு போதவில்லை. உடனே பிராமணனின் மனைவியும் தனக்கென இருக்கும் பங்கை கொடுத்துவிடுகிறாள். மேலும் பசித்த முனிவனுக்கு அந்தணனின் மகனும் மருமகளும் கூட தங்கள் உணவை கொடுத்து உபசரிக்கின்றனர். அடுத்த வேளைக்கும் கூட சேகரிப்பு இல்லாத நிலையிலும், பசியையும் வென்ற அவர்களின் தர்ம குணத்திற்கு ஈடு இணை ஏதும் உண்டோ என மகிழ்ந்து தர்மதேவன் அவர்களை அருளிச்செல்கிறான். அவ்விடத்திலுள்ள காற்று பட்டதால் என் உடல் தங்கமயமாய் ஆனது. அன்றையிலிருந்து என் இன்னொரு பக்க உடலையும் தங்கமாக்க நானும் அலைந்து கொண்டிருக்கிறேன். அவன் தர்மத்திற்கு இணையாய் இன்று வரை நான் கண்டதில்லை"

கோடி பொன் கொடுத்த யுதிஷ்டிரனின் தர்மத்தை விட, ஒரு வேளை உணவிட்ட அந்தணனின் தர்ம சிந்தனை பெரிது. தன்னலத்திற்கென எதுவுமே சேகரிக்காது இருப்பதை மொத்தமும் கொடுத்துவிடும் தர்மத்திற்கு இணை கூறுவிட முடியுமா?

தன் அடுத்த வேளையைப் பற்றி சிந்திக்காது, இருக்கும் நெல்லிக்கனியை ஆதிஷங்கரருக்கு வழங்கிய அம்மையாரின் தர்மசிந்தனைக்காக ஆதிஷங்கரர் பணிந்து இறைவனை வேண்டினார். தன்னலம் கருதாத ஒருவனிடம் இறைவனின் அருகாமை நிறைந்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று. லட்சம் லட்சமாய் பணத்தில் புரண்டாலும், காலம் நேரம் ஆணையிடும் போது அத்தனை லட்சத்தையும் மறு யோசனையின்றி தர்மம் செய்துவிட்டு, தன் இலக்கை புன்சிரிப்புடன் எவனால் தொடர முடிகிறதோ அவன் உயர்ந்த நிலையில் இருப்பவன்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பஞ்சகர்மா)

பஞ்ச கர்மங்களாக ஐந்து கர்மங்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

"தேவ யக்ஞம்" : தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள் யக்ஞங்கள் தொண்டுகள், பூஜைகள். யக்ஞம் என்றால் நெய் ஆஹுதி வளர்த்து என்று மட்டும் பொருள் கொள்ளல் வேண்டாம். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவதும் இவ்வகையைச் சேரும்.

"மனுஷ்ய யக்ஞம்" : இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன அடக்கம்.

"பித்ரு யக்ஞம்" : பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன

"ப்ரம்ம யக்ஞம்" : பிரம்ம ஞானத்தை நோக்கிய பயணங்கள், வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல்.

"பூத யக்ஞம்" : என்ற ஐந்தாவது கர்மம், தெரியாமல் செய்த ஹிம்ஸைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் இதில் அடக்கம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது.

ஜைன மதத்தை சேர்ந்த துறவிகள் தாம் செல்லும் பாதையை பெருக்கி சுத்தப்படுத்திக்கொண்டும், தம் மூச்சுக்காற்றின் வழியாக நுண்ணுயிர்கள் கிருமிகளை சுவாசித்து அதை அழிக்காது இருக்க, சுவாச உரை ஒன்றும் அணிந்து கொள்கின்றனர்.

யாகத்திற்கும் யக்ஞத்திற்கும் செலவழித்தலை விட தான தர்மங்கள் செய்தல் உயர்ந்த காரியம். பாலையும் நெய்யையும் கற்சிலைக்கு அபிஷேகம் செய்வித்தலை விடவும், ஆஹுதிக்கு நெய் சொரிதலை விடவும் ஏழையின் பசிக்கு உணவளித்தால் அதன் உபயோகம் பன்மடங்கு, என்று சில நேரங்களில் நம்மில் பலருக்கு தோன்றலாம்.

அதற்கு விடையாய் பஞ்ச கர்மாக்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாய் கூறுவதையே நினைவு கோர வேண்டும். அக்கர்மங்களில் தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தேய்வத்திற்கும் தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

திருமூலர் தம் திருமந்திரத்தில்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


எனக்கூறுகிறார்.

எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் இறைவனுக்கு அளிக்க ஒரு இலை. கீதையில் கண்ணன் "பக்தியுடன் எனக்கு ஒரு பழமாவது, ஒரு பூவாவது, ஒரு இலையாவது அர்பணி" என்கிறான். இறைவனுக்குறிய கர்மாவைப் போல் வாயில்லா ஜீவன்களுக்கு சிறிது உணவளிப்பதும் நமது கடமை. இதுவே பூத யக்ஞமாக கூறப்படுவது. தினம் செய்யப்பட வேண்டிய கர்மாக்களில் இன்னொன்று நாம் உண்ணும் உணவை பகிர்ந்து ஒரு பிடி உணவாவது இன்னொருவனுக்கு அளித்து உண்ண வேண்டியது. இதுவே தான தர்மங்களாக விரிவடையும் மனுஷ்ய கர்மா அல்லது யாகம். இதையும் தாண்டி இன்னொன்றும் செய்ய வெண்டுமாம், அது, பிறருக்கு இதம் தரும்படி நம் பேச்சும் செயலும் அமைவது ஆகும்.

மனுஷ்ய யக்ஞம் செய்வதால் தேவர்களுக்குறிய கடமைகளை செய்ய வேண்டாம் என புறம் தள்ளக்கூடாது. தேவ கார்யங்கள் நடை பெறுவதால், பூமியில் செழிப்பும், சுபீக்ஷமும், நம்மைச் சுற்றியுள்ள அதிர்வாற்றல் இணக்கத்திற்குறியதாகவும் அமைகின்றன.


கண்ணுக்கு அல்லது புலன்களுக்கு எட்டாத / அப்பாற்பட்ட விஷயமாக இருப்பதால் நம்பிக்கை குறைந்துவிடுகிறது. சில செயல்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்து நம்மை நாமே சாந்தப்படுத்திக் கொள்கிறோம். விஞ்ஞானத்திற்கு விளங்காத விஷயங்களை, "மூடநம்பிக்கைகளாக" முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.

பரிசேஷனம் செய்வது ஒரு சில சாரார் கடமையாக செய்து வருகின்றனர். அதற்கு விஞ்ஞான விளக்கங்கள் கண்டு பிடித்து, தங்களின் reasoning ability குறித்து பெருமை படுகின்றனர். பரிசேஷனம் என்பது "ஆபோஜனம், பிராணஹுத்தி, உத்தராபோஜனம்" என்று மூன்று பகுதியாக செய்யப்படுகிறது. மந்திரங்கள் பிராணன், அபானன், துவங்கி பிரம்மத்தில் முடித்து அர்பணிக்கபடுகிறது. உண்டு முடித்த பின்பு உத்தரபோஜனம் செய்து பரிசேஷனத்தை முடிக்கவேண்டும். (இப்படி யாரேனும் செய்கிறார்களா என்னும் கேள்விக்குறியே வேண்டாம். வைதீகம் செய்வோர்கள் சிலரைத் தவிர, வேதத்தில் நாட்டம் கொண்டுள்ள வெகு சிலரைத் தவிர மீதி யாரும் செய்வதில்லை. )

தோர்பிக்கரணம் என்னும் தோப்புக்கரணம் போடுவது முதற்கொண்டு, நமஸ்காரம் செய்வது வரை எல்லாவற்றிற்கும் விஞ்ஞான அடிப்படையும் இருந்தால் நம்மை நாமே "அறிவாளிகள்" என்று மெச்சிக் கொள்கிறோம். "நம்பிக்கை"யின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியவைகளுக்கும் விஞ்ஞான விளக்கங்கள் தேவைப்படுவதால், நம்பிக்கையே அடிப்பட்டுப்போகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (அறிவூட்டலின் சிறப்பு)

ஆலயங்களின் சிறப்பும் சரித்திரமும் ஸ்தலபுராணமும் கேட்கத் திகட்டாதவை. ஆலய தரிசனம் ஒன்றே மன அமைதியைத் தரவல்லது என்றால் ஆலயத்தை நிறுவுதல் அதை விட சிறந்தது அதை போல் பன்படங்கு சிறந்தது ஒருவனுக்கு எழுத்தறிவித்தல்.

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. இப்பூதங்களைக் குளிர்வித்தல் புண்ய காரியம். அதாவது உடற்பசி போக்குதல், கண்ணுக்கு /செவிக்கு விருந்து, இவையெல்லாம் உடலை சாந்திப்படுத்தக்கூடியது. அடுத்தது மனம். மனம் என்னும் இந்திரியத்தை அமைதியைக் கொண்டு சாந்தப்படுத்தலாம். ஆலயம் செல்வதோ, இறை வழிபாடோ, இறை நம்பிக்கை அற்ற பொதுவானதொரு நற்சிந்தனையோ கூட மனதை சாந்தி படுத்த போதுமானது. உடலைக் காட்டிலும் மனம் சூட்சுமம் என்றால், மனதைக் கட்டிலும் அறிவு சூட்சுமம். அந்த அறிவுக்கு கல்வி அவசியம். கல்வி என்றால் இங்கு உயர்ந்த ஞானத்தை புகட்டக்கூடிய கல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகவே தான் அறிவை சுடர் விட்டு எரியச்செய்யும் கல்விக்கு மேலும் உயர்ந்த இடம். இதைச் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதைகளுள் சில ஞானத்தின் இருப்பிடமான சரஸ்வதி தேவியை பாடியுள்ளது.

”வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முழுதும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலப்பல பள்ளி”


என பள்ளியின் பெருமையைப் பாடியுள்ளார். மேலும் ஒரு படி சென்று அவரே, புண்ணியம் யாவிலும் சிறந்தது எழுத்தறிவித்தலே ஆகும் என்கிறார்.

"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்,
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்"

மேலே உள்ள கவிதையில் பேசப்படுவது பலன் பொருள் எதிர்பாராது ஒருவருக்கேனும் அறிவை ஊட்டுவது. பலன்/பொருள் எதிர்பார்த்தே இருந்தாலும் கூட, அறிவை ஊட்டும் ஆசிரியர் பணி, உயர்ந்ததாக இன்றும் கருதப்படுகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கேசவபெருமாள் கோவில்)

திருமயிலையில் சித்திரக்குளத்தருகே விளங்கும் பழங்காலக் கோவில்களுள் ஒன்று கேசவபெருமாள் கோவில். பெருமாளுக்கு கேசவன் என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன. கேசி என்ற அரக்கனை க்ருஷ்ணன் கொன்றவன். அதனால் அவன் கேசவன் என்று கொண்டாடப்படுகிறான். கம்சனின் ஆணைப்படி கேசி கண்ணனை அழிக்க குதிரை உரு கொண்டு தாக்குகிறான், இறுதியில் சம்ஹாரம் செய்யப்படுகிறான். பிருந்தாவனத்தில் இருக்கும் இந்த இடம் "கேசி கடம்" என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கேசவனைக் கொன்ற பின், அக்குளத்தில் முங்கி கண்ணன் குளித்ததாக ஐதீகம்.

மயிலையில் இருக்கும் கேசவ பெருமாளுக்கு வேறு ஒரு சரிதை சொல்வதுண்டு. இதில் குடிகொண்டுள்ள பெருமாளை ஆதிகேசவன் என்று அழைப்பர். முன்காலத்தில் மயிலாப்பூருக்கு மயூரபுரி பட்டிணம் என்று பெயர். பிருகு என்ற முனிவரின் யாகத்தை மது என்ற அரக்கன் அழிக்க முற்பட்டான். அவர் மஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார். யக்ஞத்திலிருந்து, விஷ்ணு லக்ஷ்மியுடன் தோன்றி அரக்கனை வதம் செய்தார். யக்ஞத்திலிருந்து தோன்றிய மஹாபுருஷன், நவரத்தினங்கள் பதித்த மகுடத்தை அணிந்திருந்தார், அவரின் கருமையான அடர்ந்த கேசம் ஜொலித்ததாம். அதனால் அவருக்கு கேசவன் என்று பெயர் என்பது இன்னொரு கருத்து. இங்கு தாயாராக மயூரவல்லி வீற்றிருக்கிறார்.

http://www.harekrsna.com/philosophy/associates/demons/vrindaban/kesi.htm http://www.dinamalar.com/anmegamnews_detail.asp?News_id=1274&cls=row3&ncat=HIN&ncat1=WRI
http://chennaionline.com/Religion/Temples/April09/02Aadhi-Kesava-Perumal-Temple.aspx

ஆழ்வார்களின் ஒருவரான பேயாழ்வாருக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவருக்கும் மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. மஹாவிஷ்ணுவைக் கண்ட பொய்கையாழ்வார் கடலையே எண்ணையாக வரித்து சூரியனை விளக்காக்கி துதிக்கிறார். பூதத்தாழ்வாரும் அன்பையே விளக்காக வைத்து இறை ஆர்வத்தை நெய்யாக்கி இறைவனை துதிக்கிறார். அதன் பின்னர், பேயாழ்வாருக்கு தரிசனம் தெரிகிறது. இவர் கேசவபெருமாள் கோவில் கிணற்றில் பிறந்தார் என வரலாறு கூறுகிறது.

"திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்
நிகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"


என்று திருவந்தாதி பாடுகிறார்.

http://azhvaar.wordpress.com/category/uncategorized/

கேசவ பெருமாள் கோவில் திருவத்தூரிலும் இருக்கிறது. இங்குள்ள தாயார் மரகதவல்லி. இறைவனாம் திருமால், கேசன் கேசி என்ற அரக்கர்களை வென்ற பின் இங்கு எழுந்தருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. கேசி என்ற அரக்கன் தாமிரபரணி ஆறாக ஓடுகிறான். அவனை ஒடுக்கி வென்று கேசவ பெருமாள் என்ற பெயருடன் இங்கு மஹாவிஷ்ணு திகழ்கிறார். விஷ்ணுவிற்கும் கேசிக்கும் நடக்கும் போரை சிவன் பனிரெண்டு உருவங்கள் தாங்கி கண்டு, பின் கேசவனை வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.

http://www.templenet.com/Tamilnadu/df087.html

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பெண்களின் குணங்கள்)

யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.

படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about rightiousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.

மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.

பெண்கள் பலவீனமானவர்களா? என்ற கேள்விக்கு நம்மில் பலரும், "ஆம்" எனச் சொல்லக்கூடும். உடல்-பலம் மட்டு பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் அமையும் பதிலது. இன்னும் சிலரோ, பெண்களுக்குப் பொறுமை அதிகம், சோதனைகளை எளிதில் ஜீரணித்து மீண்டு எழும் மனவலிமை அதிகம் படைத்தவர்கள் என்றும் கூறுவர். அதனால் பெண்கள் உடலால் பலவீனமானவர்களாக இருப்பினும் உண்மையில் அதிகம் மனோபலம் உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இருப்பினும் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மொழிகளில் பெண்களை எப்படி கையாள்வது என்று பேசும் போது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாராம். எப்படிப்பட்ட பலவீனம்? மனவலிமையில் மட்டுப்பட்டவர்கள். ஆசை அதிகம் அமையப்பெறுவதால் அடக்க ஆள முடியாதவர்கள். நன்றி உணர்வு இயல்பிலேயே அதிகம் இருக்கப்பெறாதவர்கள். எளிதில் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள் அதனால் அவர்களை காப்பது அவசியம். அவர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அவர்களை கோபித்தோ அடக்கியோ ஆளாமல் அன்பால் ஆளப்பட வேண்டியவர்கள். (here comes the grand idea of keeping one's spouse happy! and satisfying all her needs n fancies!)

எல்லா பெண்களும் அப்படியல்ல। பொதுப்படையாக முடிவு கட்டிவிட முடியாது. சத்துவ குணம் படைத்த பெண்டிர் இருக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும் பெண்கள் அதிக சதவிகிதம் மேற் சொன்ன வகையில் அடங்கியவர்கள்.

இதை விளக்கும் வகையில் தேவஷர்மா எனும் ரிஷியின் கதையை பீஷ்மர் கூறுகிறார்। தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள். அவள் அழகில் இந்திரன் மயங்கியிருப்பதால், தேவஷர்மா குடிலில் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் ருசியின் பலவீனத்தை பயன்படுத்தி ஆசையை கிளறி விடக்கூடும் என்று அபிப்ராயப்படுவதால், தம் சிஷ்யனான விபுலனை ருசியை பாதுகாக்கும் படி கூறுகிறார். விபுலன் ருசியின் உடலில் புகுந்து, இந்திரன் வரும் போது, ருசி விரட்டுவதைப் போல் விரட்டிவிடுகிறான். இந்திரனும், விபுலன் ருசியின் உடலில் புகுந்து விட்டதால் இனி தன் ஆசை நிறைவேறாது என்று புரிந்து கொண்டு சென்று விடுகிறானாம். ருசியின் உடலில் புகுந்ததை தேவஷர்மாவிடம் முதலில் விபுலன் மறைக்கிறான். பின் அவர் அதைக் கண்டுணர்ந்து, உன் எண்ணம் நல்லனவாக இருப்பதால், உன்னை நான் மன்னித்தேன், இனி உண்மையை மறைக்கும் பாவத்தை செய்யதே என்று எச்சரிக்கிறார். மேற்சொன்னக் கதையை தர்மருக்கு பீஷ்மர் பகிர்ந்து, பெண்கள் பலவீனங்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதை எடுத்துரைக்கிறாராம்.

(பயங்கரமாக கடுப்பாகிய நம்ம மனசு : என்னத்த சொல்ல!!!!)

சோ-வின் எங்கே பிராமணன் part1 (சமஸ்க்ருதத்தின் உயர்வு)


சமஸ்க்ருதம் தேவ மொழி / தெய்வ மொழி என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா மொழியுமே உயர்ந்த மொழிகள் தாம். எல்லா மொழியிலும் உயர்ந்த இலக்கியங்கள் புனையப்பட்டிருக்கின்றன. மொழி என்பது உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனம் என்பதைத் தாண்டி உயிரினும் மேலாக மதிப்பதற்கு இது தான் காரணம். கலைகளை இலக்கியங்களை கருத்துக்களை அவரவர் தாய் மொழியில் அறியும் பொழுது, புரியும் பொழுது, மொழி உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறது. அப்புறம் சமஸ்க்ருதத்திற்கு மட்டும் ஏன் தேவ மொழி என்று பெயராம்?

தேவர்களை கீர்வாணர் என்று விளிப்பதுண்டு. அவர்களால் பேசப்படும் சமஸ்க்ருதத்திற்கும் கைர்வாணி என்ற பெயர் உண்டு. தேவ ரகசியங்களும் மனிதனுக்கு சொல்லப்பட்ட மொழி சமஸ்க்ருதம். வேதங்கள் உபநிஷதங்கள் ப்ரம்ம ஞானங்கள், பாகவதம், கீதை முதலியவை உணர்த்தப்பட்ட மொழி சமஸ்க்ருதம். சமஸ்க்ருதம் என்றால் நன்றாக சொல்லப்பட்டது என்று பொருளாம். பேசு தொனிகள் அத்தனையும் எழுத்தில் வந்து விடுவதால், ஒவ்வொரு அசைவிற்கும் அக்ஷரத்திற்கும் மாத்திரைக்கும் எழுத்து வடிவம் உண்டு. இந்த சிறப்பு பல மொழிகளில் இல்லை (IF I am not wrong, I supp, hindi also has its script intact with the way its pronounced I dont know about any other language and my knowledge is limited).

இவ்வாறாக ஹிந்து மதத்திற்குறிய ஸ்லோகங்களும் பலவும் சமஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால், யாகங்கள் யக்ஞங்களுக்கு சமஸ்க்ருதம் ஏதுவான மொழியாய் திகழ்கிறது. ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும். அதனால் அதை திரும்பச் சொல்லவும் சரியான மொழியாய் சமஸ்க்ருதமே திகழ்கிறது. இருப்பினும், தாய்மொழியில் ஒருவனுக்கு இருக்கும் வன்மையோ புரிதலோ உணர்வோ மகிழ்ச்சியோ மற்ற மொழி பேசும் போது மட்டுப்படுகிறது.

இதனாலேயே சம்ஸ்க்ருதத்தைத் தவிர தாய்மொழி கற்பதும் அதைப் படித்து உணர்வதும் மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் இன்னமும் உணர்வு பூர்வமாய் அறிவு பூர்வமாய் விளங்கும் வாய்ப்பு உண்டு. அதே போல் தாய்மொழி மட்டும் கற்றுக்கொண்டு சமஸ்க்ருதத்தை கற்காமல் இருப்பதால் நட்டம் அதிகம். உயர்வான பல இலக்கியங்கள் உண்மைகள் கருத்துக்கள் விளங்காமலே போய்விடும்.

நம் தாய்மொழியாம் தமிழிலும் உயர்ந்த பக்தி இலக்கியங்கள் மெத்த நிரம்பியுள்ளன. திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.

பாரதி தம் கவிதையில் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் ஒன்றாய் உயர்த்தியதாய் கவிதை வருகிறது.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே
நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”


வேதத்தை மதித்த தமிழ்நாடு என்பதாலேயே பாரதி "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று பாடியுள்ளான். கல்வெட்டுக்களில் சிலது சமஸ்க்ருதத்தில் அரசர்கள் புகழ் பாடுவதையும், அவர்கள் சரித்திரம் சொல்வதையும் காணலாம். திருவள்ளுவர் பல இடங்களில் வேதம் சொல்லும் கருத்துக்களுக்கு ஒப்பு குறள் வழங்கியுள்ளார். மஹாபாரதப்போர் காலத்திலும் கூட பாண்டியனும், சோழனும் பாண்டவர்களுக்காக போரிட்ட செய்தி வரலாறு உண்டு. பல தமிழ் மன்னர்கள் யாகங்களும் வேள்விகளும் செய்ததாகவும், யாகம் செய்தவர்களைக் காத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெருஞ்சோற்று ஊதியன் என்ற பெயர் சேரலாதன் என்ற சேர மன்னனுக்கு உண்டாம். அவன் மஹாபாரதப் போரில் இரு தரப்புப் படையினருக்கும் உணவு வழங்கியதால் இது காரணப்பெயர் ஆகியது.

சமஸ்க்ருதத்தில் அந்தந்த தேவதைக்குறிய ஸ்லோகங்கள் பல இருப்பினும் கோவில்களிலோ வீடுகளில்லோ பூஜைகளுக்குப் பின் பொதுவான மந்த்ரம் ஒன்றைச் சொல்வது வழக்கம். இம்மந்திரம் எல்லார் நன்மையின் பொருட்டும் உலக நன்மையின் பொருட்டும் ஓதப்படுவது. இந்த ஸ்லோகம் தைத்ரிய உபநிஷதத்தில் வருகிறது.

"மித்ரதேவனும், வருணனும், இந்திரனும், அரியமானும், நன்மை புரியட்டும். நான் விஷ்ணுவை, ப்ரம்மனை, வணங்குகிறேன். எம்மையும் எமது ஆச்சார்யரையும் காப்பாற்றுவாயாக. வாயுதேவனே உன்னையே நான் பிரம்மமாக நினைக்கிறேன். உன்னையே சத்தியமாகவும் ருதமாக காண்கிறேன். எல்லோர் / (உலக) நன்மைக்காகவும் வணங்குகிறேன்."

ஷம்னோ மித்ரஸ்யம் வருண:
ஷம்னோ பவத்வர்யமான்
ஷம்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
ஷம்னோ விஷ்ணு ருருக்ரமஹ:
நமோ ப்ரம்மணே
நமஸ்தே வாயு
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி
சத்யம் வதிஷ்யாமி
தன்மாமவது தத்வக்தாரமவது
அவதுமாம்
அவதுவக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:

{மித்ரன் என்பவன் பகலுக்கு அதிபதி
வருணன் இரவுக்கு அதிபதி
இந்திரன் வலிமைக்கு அதிபதி
அரியமான் சூரியனின் தேவன் - எனக் கருதப்படுகிறார்கள். }

சோ-வின் எங்கே பிராமணன் part1 (வைணவம்)

முறையே ஹிந்து மதத்தில் பெரிய அளவில் போற்றப்படும் முப்பெரும் தத்துவங்கள், அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்பன. இவை மூன்றும் வேதங்களையோ வேதத்தின் வித்தான உட்பொருளையோ மாறுபடுத்தவில்லை. கோணங்கள் மற்றுமே மாறுபடுகின்றன. அத்வைதம் என்பது இரண்டல்லாத ஒன்றே என்று ஓதுவது, த்வைதம் பிரம்மமும் ஜீவனும் வெவ்வேறு என்று குறிப்பிடுகிறது. விசிஷ்ட அத்வைதமோ, நீயும் பிரம்மமும் ஒன்று தான், ஆனால், சில நிபந்தனைகளின் பேரில் என்ற தகுதி வாதம் வைக்கிறது. முறையே ஷங்கரர், மாத்வாச்சார்யர், ராமானுஜர் அத்வைத, த்வைத, விசிஷ்ட அத்வைதங்களை நிலைநிறுத்தினர். அதாவது மீண்டும் வலியுறுத்தினர். இவர்கள் காலத்தின் முன்பும், இக்கருத்துக்கள் வழங்கப்பட்டு வந்தவையே. த்வைத கருத்துக்களை பின்பற்றி வரும் வைணவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காரம் என்ற ஐவகை கர்மாக்கள் உண்டாம்.

*முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது

*இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.

*மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது

*நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:

"ஓம் நமோ நாராயண"
"ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே"
"ஸ்ரீமதே நாரயணாய நமஹ"

*ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும். சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: "


கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".

இதனை மேல் நிறுத்திப்பார்த்தால் த்வைதத்தின் முக்கிய பண்பு ஷரணாகதி. இறைவனே என்னைக் காக்க வேண்டும் என்ற பரிபூர்ண நம்பிக்கை. அவனை தன்னின்று வேறாய், உயர்த்திப் பார்ப்பது. அப்படி வரும் வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. இதில் தென்கலை வைணவத்தினர், மர்ஜாயன நியாயப்படி இறைவனிடம் ஷரணாகதி அடைகின்றனர்.

பூனை எவ்வாறு தன் குட்டியை தானே கவ்விக்கொண்டு போய் காக்கிறதோ, அப்படி இறைவன் உயிர்களை படைத்து, அவனே அவற்றை பரிபாலிக்கிறான். நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர். வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?

நாராயணனே சகலமும், சர்வமும் என்பது இருவரும் ஒப்புக்கொள்ளும் கூற்று என்றாலும், கூட மொத்தமாக தென்கலை வடகலை வைணவர்களிடம் இருபத்தெட்டு அபிப்ராய பேதங்கள் இருக்கின்றனதாம்.

1. மர்ஜார மர்கட - பூனை தன் குட்டியை கவ்விக் காப்பதை போல் இறைவன் காக்கின்றான் என்பது மர்ஜார தென்கலை வாதம்.

குரங்குக்குட்டியைப் போல் தானே முயன்று தாயைப் பற்றிக்கொள்ளல் வேண்டும், அந்த சிறு முயற்சியேனும் ஜீவாத்மா மேற்கொண்டு அதன் பின் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து விடலாம் என்பது மர்கட வடகலை நியாயம்.

2. இலக்குமி தேவிக்கு நாராயணனைப் போல் எல்லா வல்லமையும் பொருந்தப் பெற்றவள். மோக்ஷத்தையும் அளிக்கவல்லவள் என்கிறது வடகலை.

தென்கலை இலக்குமி தேவியை நாரயாணனுக்கு சமமாய் பார்க்கவில்லை.

3. பக்தி அல்லது ஷரணாகதி இருந்தால் போதுமானது என்று வடகலை வலியுறுத்த,

பக்தி மட்டுமே போதாது ஷரணாகதி அவசியம் என்பது மற்ற சாரார் கருத்து.

4. நாம் செய்யும் தவறுகளையும் பாபங்களையும் இறைவன் ஏற்றுக்கொள்கிறார் என்கிறது தென்கலை. பாவங்களை கடவுள் மன்னித்து புறம்தள்ளிவிடுகிறார் என்பது வடகலை கண்ணோட்டம்.

5. ஒருவன் துன்பத்தில் துவண்டால், இறைவனும் அவனுடன் சேர்ந்து துவள்கிறார் - தென்கலை இறைவன் இன்ப துன்பங்களுக்கு

அப்பாற்பட்டவர், அவர் துன்பத்தை விலக்கக்கூடியவர் - வடகலை.

6. சந்தியாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் அவசியமாக்குகிறது வடகலை।
ஞான நிலை எய்திய ஒருவனுக்கு நித்யகர்மாக்கள் அவசியமில்லை என்கிறது தென்கலை.
மேற்கூறியவை சொல்லப்படும் சில பேதங்களுள் சில.

வைணவர்கள் ஏன் மற்ற கோவில்கள் வருவதில்லை? மற்ற தெய்வங்களைத் தொழுவதில்லை என்பதற்கு விளக்குகிறார். நாரணன் ஒருவனே எல்லாம் வல்ல ஒரே கடவுள் என்ற உயர்ந்த நிலையில் அவனை வைப்பதால், அவனைத் தவிர இன்ன பிற தேவதைகளைத் தொழுதால், பக்தியின் அடர்த்தி குன்றிவிடும் என்றும், சிரத்தை மட்டுப்பட்டு விடும் என்றும் அவர்கள் தொழுவதில்லை என்று காரணம் கூறுகிறார். (பல வைணவர்கள் இதே காரணம் கூற நானும் கேட்டிருக்கிறேன்) இவர்களை "வீர வைணவர்கள்" என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே நவக்ரஹங்களின் சன்னிதியும் வைணவக்கோவில்களில் இருப்பதில்லை. நவக்கிரஹங்கள் பெருமாளை வழிபடுவதால், நாம் நேரடியாக பெருமாளிடம் பக்தி செலுத்தும் போது தனியாய் இன்ன பிற தெய்வங்களை வணங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தவில்லை. எனினும் எண்ணிவிடக்கூடிய ஓரிரெண்டு வைணவக் கோவில்களில் நவக்கிரஹங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள்.

வைணவன் வலியுறுத்துவது த்வைதம். அதாவது இறைவன் எல்லாம் வல்லவன். நீ அவன் ஆணைப்படி செயல்படுத்தப்படுகிறாய். இதன் அடிப்படையில் வைணவர்களுக்கு பக்தி மார்கமும், பக்தியில் ஈடுபாடும், தன்னை தாழ்த்தி, இறையை உயர்த்தும் பண்பும் உண்டு.

சைவர்கள் அல்லது சிவனை வழிபடுவோர் வலியுறுத்துவது "அ-த்வைதம்" அதாவது இரண்டற்ற நிலை. நீயே அது. அதுவே நீ என்ற நிலை. இதனால் அவர்கள் போக்கு ஞான மார்கமாக அமைவது இயற்கை.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மரமும் மனிதனும்)

மரங்களை வெட்டினால், சுற்றுப்புறச் சூழலின் மாசு அதிகரிப்பதாய் இன்றைய கண்டு பிடிப்பு. அதனாலேயே செடி கொடிகளை மரங்களை பாதுகாப்பது அவசியம். நம் சுவாசத்திற்கு ஏதுவாய் பிராண வாயுவை வழங்கும் எல்லா மரங்களும் செடிகளும் புனிதமானவையே. மற்ற மிருகங்களை மதித்தாலும் பசு எப்படி ஹிந்து வழிபாடுகளில் புனிதமாக கருதப்படுகிறதோ, அதே போல் எல்லா மரங்களும் புனிதமானவையாய் இருப்பினும், அவற்றில் சில மரங்கள் / செடிகளை நாம் வணங்குகிறோம். உதாரணம்: அரச மரம், வேப்பமரம். மஞ்சள் செடி. இவற்றின் காற்று பட்டாலோ அல்லது இலைகள / கிழங்குகளை உட்கொண்டாலோ உபயோகித்தாலோ

வியாதிகள் குணமாவதாக மருத்துவப்பலன்கள் கூறுகின்றன. அதே போல் துளசி. துளசியின் மருத்துவப்பலன் இன்றைக்கு உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். கொடும் வியாதியான, புற்று நோயைக் கூட மட்டுப்படுத்த வல்லது.

துளசிச் செடியை நம் வீடுகளில் புனிதமாகக் கருதி, வழிபட்டு வருகின்றோம். துளசி என்பவள் விஷ்ணுவிற்கு பிரீதியானவள். எதனால்? அவள் லக்ஷ்மியின் அவதாரம் என்பதால். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறதாம். தேவி பாகவதத்தில் இதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவதா ஷக்திகளுக்குள் எப்பொழுதேனும் வாக்குவாதம் நேர்ந்தால், அவற்றின் விளைவும் அதிக நன்மை பயப்பதாகவோ அல்லது சாபத்தில் கொண்டு விடுவதாகவோ இருந்து விடும். அவர்கள் ஷக்தி சாமான்யமானதல்ல என்பதால், விளைவுச் செயல்களுக்கு வீர்யம் அதிகம். கங்கை-ஸரஸ்வதி-லக்ஷ்மி மூவரும் வாக்குவாதம் செய்த போது கோபத்தின் உச்சத்தில் சரஸ்வதி லக்ஷ்மியை பூமியில் செடியாகிவிட சாபமிட்டுவிட்டாள். மிச்சம் இருந்த இருவரும் மேலும் வாதத்தைத் தொடர, அவர்கள் கங்கை நதியாகவும், சரஸ்வதி நதியாகவும் உருவெடுக்க நேர்ந்தது. லக்ஷ்மிக்கு ஆறுதலளிக்கும் விஷ்ணு, 'தர்மத்வஜனின் மகளாய் அவதரித்து, ஷங்கசூடனை மணந்து, பின் துளசிச் செடியாய் உருவெடுத்து மீண்டும் வைகுந்தம் வருவாய்' எனக் கூறி அருள்கிறார்.

இவ்வுலக நடைமுறைப்பலங்களைத் தவிர, பரத்திலும் நமக்குச் சிறப்பை சேர்க்க வல்லது துளசி. துளசியின் குச்சியைக் கொண்டு விளக்கேற்றினால், ஆயிரம் விளக்கேற்றிய பலன் உண்டாம். அதே போல் துளசியை பசையாய் உடம்பில் பூசி விஷ்ணுவை வழிபட்டால், ஆயிரம் முறை பூஜை செய்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். மேலும், இறந்தவனை எரிக்கும் முன், பூதவுடலுடன், துளசியையும் சேர்த்து க்ரியை செய்தால், அவன் வைகுந்தம் செல்வது திண்ணம்.

கோபம் அஹங்காரத்தின் வெளிப்பாடு

கோபங்கள் ஆத்திரங்கள் எல்லாமே பிறரின் நன்மைக்காக வருபவை அல்ல. அதனால் அது நியாயமான கோபமாக இருப்பது அரிது. அஹங்காரத்தால் மட்டுமே கோபம் வரும் வாய்ப்பு அதிகம். ஏன் கோபப்படுகிறோம்?

1. இவனால் நான் படும் அவமானம் நிறைய
2. என் சொல் பேச்சை மதிக்க மறுக்கிறானே (அஹங்காரம்)
3. இவனுக்காக இன்னும் எத்தனை நாள் எனக்கு கஷ்டம்.

சில நேரங்களில் நாம் படும் வருத்தமும், நியாயமான கோபமும் ஒரு புறம் இருந்தாலும், அதை மிஞ்சிவிடுகிறது, நம் சுயத்தின் வெளிப்பாடு. இன்னொருவரின் மேல் கோபம் ஏன் வருகிறது?

இவன், எனக்கு பெருமை சேர்க்கவில்லை. என்னை மதிக்கவில்லை. என் அஹத்தை புண் படுத்திவிட்டான். ஆக, முன்னே ஜம்-மென்று "என்" எனும் அஹங்காரமே வீற்றிருக்கிறது.

பல தருணங்களில் உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்பட அமைந்து விடுகிறது. "தான்" எண்ணும் எண்ணத்தைத் தாண்டி அன்பு செலுத்த மிக உயரிய பக்குவம் அவசியமாகிறது.

ஒரு தாய் "இவன் என்னுடையவன், என் இரத்த்தில் ஜனித்தவன், என்னில் பாதி" என்று பிள்ளைகளிடம் அன்புற்றிருக்கிறாள். கணவன் மனைவியிடம், இவள் எனக்கு இல்லற சுகம் தருகிறாள். எனக்கு பிள்ளை பெற்று, என் தேவைகளை கவனிக்கிறாள் என்று அன்புற்றிருக்கிறான்.

மனைவி கணவனிடம் இவனால் எனக்கு பாதுகாப்பு, இருக்க இடம், உடை, உணவு எனக்கு இடுகிறான் என்று அன்புற்றிருக்கிறாள். இவை இல்லாமலேயே இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது. ஆகவே, love has its selfish motive- மறுக்க முடியாத உண்மை.

முதலில் நான். அதன் பின்னர் வருவதே மனைவி மக்களிடம் செலுத்தப்படும் அன்பும் கூட." 'எனக்காக' என் மனைவி/ கணவன் அன்பு செலுத்தப்படுகிறான். 'எனக்காக' என் மக்கள் என்னால் அன்புசெலுத்தப்படுகிறார்கள். "என்"னைத் திருப்திப்படுத்தாவிட்டால் என் அன்பு அகன்று விடும் ". இது தான் "சுயம்" அகலாத ஆத்மாவின் அடிப்படைத் தத்துவம்.

சுயம் அகன்று மிகுந்த பக்குவப்பட்ட மனதினுக்கோ எங்கும் "தான்" என்ற தத்துவம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிவதால், சகல உயிர்களிலும் அவன் ஆத்ம தத்துவத்தையே கண்டு அன்புற்றிருக்கிறான். இங்கே அன்பு பிராவாகம் எடுத்தோடுகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (முயற்சி)


"மனிதன் முயன்று கொண்டே இருக்க வேண்டும். எந்த நல்ல காரியத்திற்கும் மனம் சோர்ந்து விடாது, தளராது முயன்று கொண்டே இருக்க வேண்டும். முயன்றால் எதையும் சாதிக்கலாம். சிறு காரியங்கள் முதல் பெரிது வரை இடைவிடாது முயலும் போது தன்-முயற்சி சாதிக்காதது எதுவும் இல்லை" என்றார் வசிஷ்டர்.

அப்படியெனில் முயற்சி ஒன்றே போதுமே, இறைவன் என்ற ஒன்று ஏன் தேவை? எதற்கு இருக்கிறது? - இது ராமன்

அதற்கு வசிஷ்டர் "முன் வினை கடுமையாய் இருக்கும் பட்சத்தில், முயற்சி வீணாகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். முன்வினைப்பயன் நல்லதாக இருந்தால், அல்லது கடுமை குறைந்து இருந்தால், சிறு முயற்சியும் கைகூடும்." என்கிறார்.

முன்வினை என்பது தான் சிலருக்கு சிறுமுயற்சியின் அதிர்ஷ்டமும், வேறு சிலருக்கு பல முயன்றும் தோல்வியும் தோன்றக் காரண்மாய் உள்ளது. Its all the question of balancing our account to reflect credit। Then we reap benefits.

ஒவ்வொருவரின் வாழ்விலும், விதியின் பங்கு நிச்சயம் உண்டு. ஆனால் விதி நல்லதாய் இருக்கிறதே என்று முயற்சி செய்யாமல் விட்டுவிட்டால், மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. விதியுடன் மனித முயற்சியும் வேண்டும். நாம் நம் செயல்களில் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். விதி நன்கு அமைந்தால், நலன் கூடுதல், முயற்சி செய்தும் பலன் இல்லாவிட்டால், அது தான் விதி .

நிலத்தை உழுது, பயிரிடுவது நம் கடமை. மழை பெய்வதும், பெய்யாதிருப்பதும் விதி.

Effort + fate = result
No effort + favourable-fate= minimised result
Effort + unfavourable-fate = play of fate.

என்பது தான் formula.


"நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள். தெய்வம் என்றால் இறைத்தீர்ப்பு. 'விதி' என்றும் சொல்வதும் இதைத்தான். இதன் வீர்யம் அதிகமாக இருக்கும் போது, நம் தனிப்பட்ட வைராக்கியத்தால் பெரிதும் சாதித்து விட முடியாது. விதியை வெல்ல போதிய அளவு நம் வைராக்கியத்தாலும் சித்தத்தாலும் முடியாத போது, அதனுடன் எதிர்த்து விளையாடி என்ன பயன்? அதை பகைத்து, அதனுடன் மல்லுக்கு நின்று ஆவது என்ன? நம்மை நாமே வருத்திக்கொள்வது மட்டுமே கண்ட பலனாய் இருக்கக்கூடும்.

நம் வாழ்வில் பிடிக்காத ஒன்று நடக்கிறது, அதை நம்மால் தடுத்து நிறுத்தும் வலிமையில்லை என்றால் என் செய்வது, அதனுடன் மோதுவதை விடுத்து, அதனுடன் இயைந்து, ஒப்பி வாழ்வதே சிறந்தது. "When u dont get what u love, love what u get" என்ற ஆங்கில பழமொழியும் இதையே நினைவுறுத்துகிறது. ACCEPTING life as offered, is the best remedy to live a meaningful life.

இன்னொரு பெரிய கேள்வி. நாம் ஏன் அலுத்துக்கொள்கிறோம்? தன்னிரக்கத்தில் மூழ்குகிறோம் என்றால், we try to hide and bury our inefficiency to accept life, under the pretext of pain. நாளாவட்டத்தில் அந்த வலியில் வாழப்பழகிக் கொண்டுவிடுகிறோம். அந்த வலியை நேசிக்கத் துவங்குகிறோம். நம் சோதனைகளுக்கும் முயலாமை, இயலாமை போன்ற எல்லா ஆமைகளுக்கும், வெகு சௌகரியமாக இந்த வலியை பழியாக்கி, இலக்காக்கி அதை சுட்டிக்காட்டி நாம் தப்பித்துக்கொண்டு விடுகிறோம்.

விதி என்பது என்ன என்றால், நிர்ணயிக்கப்பட்ட விஷயம். எது நிர்ணயிக்கிறது? ஆனாலும் நம்மால் ஆட்டுவிக்கமுடியாத ஒன்றை விதி மாற்றி அமைத்தால், எந்த மனிதனும், படை, பலம், புத்தியுடன் கூடிய எவனும் தடுமாறிவிடுகிறான். இவையெல்லாம் ஏன் நம் புத்திக்கு எட்டுவதில்லை? புரிபடுவதில்லை? நம் புத்திக்கும் அறிவுக்கும் புலப்படாத, புரியப்படாத விஷயங்கள் பல உள்ளன. அதை ஒப்புக்கொள்வதே புத்தியின் முதல் வெற்றிப்படி. அறிவுக்கு எட்டாத விஷ்யங்கள் தினம் நம் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவன் ஜெயிக்கவேண்டுமெனில் இன்னொருவன் மட்டுபட வேண்டும். ஒருவனின் ஜெயித்தல், இன்னொருவனின் தோல்வியால் தான் நிகழ்கிறது. ஏன் இன்னொருவன் தோற்கிறான். அவனுக்கு புத்தி மட்டு, அல்லது நேரம் சரியில்லை. ஏன் புத்தி மட்டு? ஏன் நேரம் சரியில்லை? ஏன் ஒருவன் உச்சாணிக்கொம்பில் உட்கார, இன்னொருவன் கீழே தூசிதட்டுகிறான்? இவையெல்லாம் நம்மை மீறிய விஷயங்கள். Therez always a controversy here as to why things happen? Is it destiny or Is it choice! Again thats a different topic by itself. I suppose we can safely conclude destiny and choice are inter-twined so closely, that its difficult to see them apart.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (நாடி ஜோதிடம்)

இறை என்ற நிலையில் எல்லாம் தெரிந்திருப்பதையும், ரிஷிகள்-ஞானிகள் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களால், ஞானக் கண் கொண்டு விஷயங்களை துல்லியமாய் கணித்து சொல்ல முடிவதையெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக சாமான்ய மனிதன் பார்க்கிறான். 'தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது அனைத்தும் யாம் அறிவோம்' என்ற திருவிளையாடல் வசனம் நினைவில் ஆடுகிறது. எப்படி இவர்களால் ஞானக்கண் கொண்டு நடப்பதையும் நடந்ததையும் கண்டுணர முடிகிறது? அது என்ன ஞானக் கண்?

எத்தனையோ பிறவிகள் ஜன்மங்கள் எடுத்துவிட்டதன் அறிகுறி நம் வாழ்வின் தடயங்களில் நிறைந்துள்ளது. மிருகமாய் பிறந்திருந்ததால் தான் இரை தேடுகிறோம். நரியின் தந்திரமும், யானையின் பலமும் ஒவ்வொரு மனிதனிடமும் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. ஆதி மனிதனாகப் பிறந்திருந்ததால் தான் இன்னும் இருட்டைக் கண்டு பயம் கொள்கிறோம்.

நடந்தவை, நடப்பவை எல்லாம் ஆகாசம் என்ற ether-ல் பதிவாகி இருக்கின்றன. இதை aakashic records என்று சொல்வார்கள். இதை படிக்க முடிந்தவர்கள், பிரித்து அறியக்கூடிய ஞானிகள் பலர் இருந்தார்கள். நாஸ்ட்ராடமஸ்-ன் கணிப்புக்களும் இவ்வகையைச் சார்ந்தது. நடந்த நடக்கிற, நடக்கப் போகிற என்ற கால வரையரையைக் கடந்து நிற்கின்ற பதிவுகள் ஆகாசம் எங்கும் நிரம்பியிருக்கின்றன.

நாடி ஜோதிடம் பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும்.

( நம் மனதின் டவுட்டு: ஆனால் நாடி செல்லும் ஏறக்குறைய பலருக்கு ஓலை கிடைத்து விடுகிறதே)

சொ-வின் எங்கே பிராமணன் part1 (துளசிதாசரின் பக்தி)

துளசிதாசர் சிறந்த பக்தர், ஆனால் அவர் வால்மீகியைப் போல் முதலில் வேறு பாதையில் சென்றுகொண்டிருந்தவர், திடீரென பாதை மாறியவர். துளசிதாஸருக்கு மனைவியின் மேல் மிகுந்த அன்பு, காதல் தாண்டிய மோஹம் உண்டு. அவள் துணையே கதி என்றிருந்தார். அவள் எங்கு சென்றாலும், அவள் பிரிவைத் தாங்காது பின் சென்றுவிடுவார். ஒரு முறை அவள் "என்னிடம் வைத்திருக்கும் மோஹத்தில் ஒரு பகுதியேனும் இறைவனிடம் செலுத்தி இரமனை தியானியுங்கள்" என்கிறாள். உடனே அவருள் மாற்றம் ஏற்படுகிறது. சிவபெருமான் அருள் புரிந்து அவரை "ராம சரித மானஸ்" எழுதுமாறு பணிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு இராமனின் பால் பிராட்டி சீதையின் பால் மிகுந்த பக்தியிருப்பதால், இராவணன் சீதையின் கூந்தலைப்பிடித்து அழைத்துப் போனதை எழுத மனமின்றி, அவள் சீதையே
அல்ல, அது மாயா-சீதா எனக் கதையை சற்றே கதையை திரித்து எழுதியதாய் கேள்வி.

ஹனுமனைத் துதித்து அவர் எழுதிய "ஹனுமான் சாலிசா" நாற்பது ஸ்லோகங்களைக் கொண்டது (வடமொழி ஹிந்தியில் உள்ளது)। அதை 21 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 7 முறை கூறி வந்தால், நினைத்த காரியம் ஜெயம், வியாதிகள் அற்றுவிடும் என்பது நம்பிக்கை. அப்பேற்பட்ட மஹான் எழுதியதால் அந்த ஸ்லோகத்தின் மகிமையும் பலனும் அதிகம். நிச்சயம் சித்திக்கும்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (அந்தணன் கடல் கடக்கலாமோ?)

'அறம் காப்பவர்களே அந்தணர்கள்' என்ற கருத்தை, மஹாபாரதம், பதினெண்புராணங்கள், மனுதர்மம், வேதங்கள் போன்ற நூல்கள் வலியுறுத்தியுள்ளன. அந்தணனுக்கு ஆறுவகையான அறங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேதம் ஓதுதல், வேதம் பயில்வித்தில், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல் தானம் வாங்குதல் என்பதே அவை. இத்தர்மங்கள் தழைத்திருக்கும் நாடு சுபீட்ஷம் பெற்றிருக்கும் என்பது சான்றோர் வாக்கு. இதை வலியுறுத்தும் குறள் ஒன்றும் உள்ளது. "ராஜா தர்மத்தை மறந்திருக்கும் நாட்டில் பசுக்கள் பால் கறப்பதில்லை, அங்கு அந்தணர் அறம் மறப்பர்." என்று குறளின் உரை கூறுகிறது. இந்த ஆறு அறங்கள் உலகை நல்வழியில் காக்க ஏதுவாய் அமைகிறது. இதனை முன்னிறுத்திப் பார்த்தால், அறம் மறந்த பூவுலகின் நிலைமை எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என நமக்குப் புரியும்.

அந்தணன் கடல் கடந்து செல்லுதல் ஏன் சாஸ்திரத்திற்கு விரோதம்? என்ற கேள்விக்கு convincing விளக்கம் ஒன்று உண்டு. நித்ய உபகர்மாக்களில் ஒன்று காயத்ரி மந்திர உச்சடனம். மும்முறை செய்யப்படவேண்டிய ஒன்று. பூமியில் செய்யப்படவேண்டிய வேண்டிய இக்கர்மா, கடல் கடந்து போகும் போது செய்ய முடியாமல் போவதால் இந்த விதி ஏற்பட்டது என்ற விளக்கம் தருகின்றனர் பெரியோர்.

"விவேகானந்தரைப் போன்ற பல துறவிகள் கடல் கடந்து அமைதியை பரப்பவில்லையா?" என்றால், அவர்கள் சென்றதன் நோக்கம், பொது நோக்கம், தன் சுய சம்பாத்தியத்தை பெருக்கிக்கொள்வதற்காக அல்ல என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய பதில்.

மேலும் இப்பாரத பூமி கர்ம பூமியாக இந்து மதத்தில் சொல்லப்படுகிறது. இதை பல்வேறு துறவிகளும் ஆச்சார்யர்களும் கூட உரைத்து வந்திருக்கின்றனர். பாரதம் = கர்ம பூமி, மற்ற பூமி போக பூமி என்ற சொல்லபடுகிறது.

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( பறவைகள் பேசுமோ?)

பட்சிகளுக்கும், ம்ருகங்களுக்கும், செடி தாவரங்களுக்கும் திரும்ப வார்த்தையால் அளவளாவ முடியாது பொனாலும், அவை தங்கள் சங்கேத அசைவுகளில் பதில் கொடுக்கும். நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் சாத்தியம் உண்டு. இதையும் தாண்டி அவர்கள் ஒலிக்கும் ம்ருக பாஷைகளைப் புரிந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இராமாயணத்தில் சுமந்திரர் கைகேயியிடம் "நீ உன் அன்னையைப் போல் அறிவற்று இருக்கிறாய்" என்று சீறுகிறார். கைகேயியின் தந்தைக்கு பட்சிகளின் மொழி புரியும் வரம் உண்டு. ஆனால் அவர் கேட்டதைப் பற்றி இன்னொருவருடன் பகிர்ந்தால் அது அவரது உயிர்க்கு ஆபத்தாக முடியும். ஒரு முறை அவை பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்து, புரிந்து இவர் சிரிக்க, அருகிலிருந்த அவரின் மனைவி சிரிப்பின் காரணத்தை கூறும்படி கேட்கிறாள். உயிரின் ஆபத்தை சுட்டிக்காட்டி இவர் மறுக்க, அவளோ அது பற்றிய கவலையின்றி விடாது நச்சரிக்க, அவளை தள்ளி வைக்க வேண்டியதாய் நிலைமை ஆயிற்றாம்.

ஜனஸ்ருதி என்ற அரசர் ஒரு ஞானியும் கூட. அவர் போய்க்கொண்டிருக்கும் போது "அவரை மறைக்காதே அவரின் ஞான ஒளி உலகெங்கும் பரவவேண்டும்" என்று இரு பட்சிக்கள் பேசிக்கொண்டதாய் புராணக்கதை கூறுகிறது. பறவைகள்/விலங்குகளுக்கும் பாஷை/மொழி/சங்கேத மொழி/ செய்கை உண்டு. அதைப் புரிந்தவர்கள் சிலர் இருந்தனர். அதை அறிந்துகொள்ளுதல் ஒருவகை கலை என்று எடுத்துக்கூறவே இக்கதைகள்.

சோ-வின் எங்கே பிராமணன் part1 (நந்தினி-அஷ்ட வசுக்கள் கதை)

பசுவை ஏன் உசத்தி வைத்திருக்கிறோம்? கோ-மாதா என்ற பெயரும் வழங்குவதுண்டு. பசு என்றால் சிறப்பு என்பதால், த்வாபர யுக முடிவில் அல்லலுற்ற பூமாதேவி தன் முறையீட்டை தெரிவிக்க இறைவனிடம் பசுவின் வடிவில் சென்றாளாம். பசு என்றால் என்ன சிறப்பு? நடைமுறை வாழ்வில் பசு என்ற பிராணி மட்டுமே பிறர்க்கு உதவும் பொருட்டு தன் செல்வத்தை செலவிடுகிறது. அதன் பால், நமக்கு பாலாய்-தயிராய்-வெண்ணையாய் நெய்யாய் உருக்கி பயன்பட உதவுகிறது. அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.

யார் நந்தினி? - நந்தினி என்பவள் கோ-மாதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் அவருடைய நித்ய கர்மாக்களுக்கு உதவியாக இருந்தவள் என்பதும் பல பேருக்கு தெரிந்த விஷயம். நந்தினியின் அபார திறமையின்பாற் ஆவல் மேலிட விச்வாமித்ரர் அவளை கோரியதும், வசிஷ்டர் அந்த கோரிக்கையை மறுத்ததும் புதிய விஷயமன்று.

அஷ்ட வசுக்கள் யார்? - நம்மில் பலருக்கு தெரியாத கதையும் விஷயமும் அடங்கியிருக்கிறது. தக்ஷனின் மகள் வசு. அவளின் புதல்வர்களே அஷ்ட வசுக்கள். அஷ்ட வசுக்கக்களும் சாபத்தின் காரணாமாக பூமியில் பிறக்க நேரிட்டது.

அப்படி என்ன தான் சாபம்? யார் கொடுத்தது? ஏன் கொடுக்கபட்டது? - ஒரு முறை அஷ்ட வசுக்கள் தம் மனைவியருடன் வசிஷ்டரின் ஆசிரமத்தின் அருகில் அளவளாவிக்கொண்டிருந்தனர். ப்ரபாசன் என்பவனின் மனைவி வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளைய வரும் நந்தினியின் பால் ஆசை மேலிட, அதனை கொண்டு வருமாறு தன் கணவனை பணித்தாள். ப்ரபாசன் முதலில் மறுத்தான், பின் மனைவியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நந்தினியை தன்னுடன் இட்டுச் சென்றான். இதனை ஞானக்கண் கொண்டு அறிந்த வசிஷ்டர் கோபம் மேலிட அஷ்ட வசுக்கள் பூமியில் பிறக்கக் கடவது என சபித்தாராம். அப்போது கங்கையும் பூமியில் தோன்றியிருந்ததால், தாங்கள் கங்கைக்கும் சந்தனுவிற்கும் புதல்வர்களாய் பிறக்க போவதாகக் கூறி, பிறந்தவுடன் தங்களை கொன்றுவிடும் படி அவர்கள் கங்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர். அஷ்ட வசுக்களில் ஒருவருக்கு நீண்ட நாள் பூமியில் இருக்கும்படி சாபம். அவர் தான் பீஷ்மர். அதனாலேயே அவர் தன் கர்மாவை/சாபத்தை பிறவி முழுவதுமாய் வாழ்ந்து தீர்த்துக்கொண்டார்.