ராமன் அவதாரமாக மண்ணில் அவதரித்த போது, அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டார். ஒரு மனிதனாக எப்படியெல்லாம் உழன்று துன்பங்களை இன்பங்களை எதிர்கொள்ளாவேண்டுமோ அவ்வாறு வாழ்ந்தார். அப்படி வாழ்ந்ததால், துன்பத்திற்கும், குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாக நேர்ந்தது. இறைவனின் அவதாரமே ஆயினும், அவர் அனுபவிக்க வெண்டிய கர்மாக்கள் இருந்தன. விஷ்ணுவாகிய அவருக்கு, சாபக்கடன் தீர அவ்வாறு உழல நேர்ந்தது.
முன்பொரு சமயம் சனத்குமாரர் என்ற ஞானியின் மேல் விஷ்ணு தவறாக கோபம் கொண்டிருந்தார். தவறற்ற தன் மேல் கோபம் கொண்டிருந்த விஷ்ணுவின் மேல் சனத்குமாரர் கோபம் கொள்ள, பூவுலகில் பிறக்குங்கால் நீ உழன்று சிக்கல்கள் சந்திக்க நேரிடும் என்று சபித்துவிடுகிறார். இதைத் தவிர பிருகு முனிவரின் மனைவியை விஷ்ணு கொல்ல நேர்ந்து விடுவதால், "மனைவியைப் பிரிந்து வருந்த நேரும்" என அவரும் சாபமிடுகிறார். நரசிம்ஹ அவதாரத்தை கண்ட பயத்தில் தேவதத்தனின் மனைவி இறந்துவிடுவதால்,
கோபமுற்ற தேவதத்தன் "மனைவியைப் பிறிந்து நீயும் அவதியுறுவாய்" என சபித்து விடுகிறார். இப்படி ஞானிகளும் மஹான்களும் உரைத்த சாபங்கள் பொய்த்துப் போகாது. அதனாலேயே ராமாவதாரத்தில் விஷ்ணு மிகுந்த மன உளைச்சலுக்கும், பிரிவுத் துயருக்கும் ஆளாக நேர்ந்தது.
உயர்ந்த செல்வச்செழிப்பில் புரண்டும் ராமன் மன அமைதியின்றி மிகுந்த குழப்பத்திற்கு ஆளாக நேர்ந்தது. நிலையற்ற இந்த செல்வமும், புகழும், வளமும், உயர்வும் என்ன நல்லன செய்துவிடுகிறது? பயனற்ற இந்த வாழ்வின் இலக்கு என்ன? எதை நோக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம்? எதையோ நிலையான இன்பம் அதன் பின் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று விரக்தி மேலிட அவர் பேசக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய ஒரு துறவியின் மனநிலையில் நின்று கேள்விகள் கேட்கிறான் ராமன். இப்பேற்பட்ட ஆன்மீகத்
தேடல் விரக்தியின் வெளிப்பாடாக இருத்தல் கூடாது என்று ராமனின் சந்தேகங்களுக்கும், விளக்கங்கள் அளிக்கிறார் வசிஷ்டர்.
அந்நூல் "யோக வாசிஷ்டம்" என்ற பெயரில் விளங்கங்களாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இராமாயணத்தில் அனுபந்தமாக இதையும் சேர்த்திருக்கிறர் வால்மீகி.

No comments:
Post a Comment