December 11, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மது-மாமிசம்)

விருந்து என்றாலே மதுபானங்களும் உண்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சகஜம் ஆகிப்போன ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி மாமிசம் உண்பதும் கூட ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவாய் மாறிவிட்டது. தேவர்களும் கூட சோமபானம் குடிப்பவர்கள் தானே என்று தமக்குத் தாமே பலர் நியாயப்படுத்திக்கொள்கின்றனர். இதைப்பற்றி கூறவரும் சோ அவர்கள், சோமபானம் என்பதும் சுராபானம் என்பது வெவ்வேறு. சோமபானம் என்பது, வித்யையை ரக்ஷிக்கக் கூடிய உயர் பானம் என்றும், அதை அருந்துவதே பெறும் பேறு என்றும், ஒரு வகைக்கொடியில் இருந்து தயாரிக்கபடுவதாகவும் அது மனிதர்களுக்கு கிடைப்பது அரிது என்றும் கூறினார். தேவர்கள் விரும்பி அருந்துவது சோமபானம். (to be differentiated from sura panam)

http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Soma

(for reference)

பிராமணன் மாமிசம் உண்பது தவறா என்றால் தவறு தான், என்று கூறினாலும், பண்டைய கால வழக்கங்களில் முனிவர்களில் அகத்தியர் உட்பட பலரும் மாமிசம் உண்பவர்களாகவே இருந்தனர். ஒரு முறை அகத்தியர், வாதாபி - இல்வலன் என்ற அரக்கர்களின் சூஷ்மத்தில் சிக்காமல் "வாதாபி ஜீரணோ பவ" என்று வாதாபியை ஜீரணித்த பின்பு, புலால் உணவினால் வந்த கேட்டை மனத்தில் நிறுத்தி, பிராமணன் ஆகப்பட்டவன், மாமிசம், மதுரசம் முதலியவற்றை தவிர்த்தல் நல்லது என வழிவகுத்தார்.


நமது டவுட்டு: புலால் உண்ணுதல், சாத்வீக குணத்திற்கு ஏதுவாகாததாகவும், சாதகனுக்கு ஊறு விளைவிக்கலாம் என்று கீதை முதல் பல வேதங்களில் கூறப்பட்ட ஒன்று. சாதக நிலையைத் தாண்டிய ஒரு பிரம்ம ஞானியோ, அல்லது ஸ்திதப்ரஞ்ஜனோ (அகத்தியரைப் போன்ற மஹாதுறவிகள்) புலால் உண்டால் அதன் நன்மை தீமை அவனை பாதிப்பதில்லை. பிறப்பால் பிராமணன் என்று பகுத்துப் பேசாமல், சாதகம் செய்யும் அனைவரும் புலால் உண்ணுதல், மதுபானம் அருந்துதல் முதலியவற்றைத் தவிர்த்தல் நலம். எந்த நிலையும் கடந்தவன் அகோரியாகக் கூட இருக்கலாம். உணவு அவனை பாதிப்பதில்லை. ஆனால் ஆரம்ப நிலைச் சாதகனுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம் எனத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment