December 15, 2009

கோபம் அஹங்காரத்தின் வெளிப்பாடு

கோபங்கள் ஆத்திரங்கள் எல்லாமே பிறரின் நன்மைக்காக வருபவை அல்ல. அதனால் அது நியாயமான கோபமாக இருப்பது அரிது. அஹங்காரத்தால் மட்டுமே கோபம் வரும் வாய்ப்பு அதிகம். ஏன் கோபப்படுகிறோம்?

1. இவனால் நான் படும் அவமானம் நிறைய
2. என் சொல் பேச்சை மதிக்க மறுக்கிறானே (அஹங்காரம்)
3. இவனுக்காக இன்னும் எத்தனை நாள் எனக்கு கஷ்டம்.

சில நேரங்களில் நாம் படும் வருத்தமும், நியாயமான கோபமும் ஒரு புறம் இருந்தாலும், அதை மிஞ்சிவிடுகிறது, நம் சுயத்தின் வெளிப்பாடு. இன்னொருவரின் மேல் கோபம் ஏன் வருகிறது?

இவன், எனக்கு பெருமை சேர்க்கவில்லை. என்னை மதிக்கவில்லை. என் அஹத்தை புண் படுத்திவிட்டான். ஆக, முன்னே ஜம்-மென்று "என்" எனும் அஹங்காரமே வீற்றிருக்கிறது.

பல தருணங்களில் உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்பட அமைந்து விடுகிறது. "தான்" எண்ணும் எண்ணத்தைத் தாண்டி அன்பு செலுத்த மிக உயரிய பக்குவம் அவசியமாகிறது.

ஒரு தாய் "இவன் என்னுடையவன், என் இரத்த்தில் ஜனித்தவன், என்னில் பாதி" என்று பிள்ளைகளிடம் அன்புற்றிருக்கிறாள். கணவன் மனைவியிடம், இவள் எனக்கு இல்லற சுகம் தருகிறாள். எனக்கு பிள்ளை பெற்று, என் தேவைகளை கவனிக்கிறாள் என்று அன்புற்றிருக்கிறான்.

மனைவி கணவனிடம் இவனால் எனக்கு பாதுகாப்பு, இருக்க இடம், உடை, உணவு எனக்கு இடுகிறான் என்று அன்புற்றிருக்கிறாள். இவை இல்லாமலேயே இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது. ஆகவே, love has its selfish motive- மறுக்க முடியாத உண்மை.

முதலில் நான். அதன் பின்னர் வருவதே மனைவி மக்களிடம் செலுத்தப்படும் அன்பும் கூட." 'எனக்காக' என் மனைவி/ கணவன் அன்பு செலுத்தப்படுகிறான். 'எனக்காக' என் மக்கள் என்னால் அன்புசெலுத்தப்படுகிறார்கள். "என்"னைத் திருப்திப்படுத்தாவிட்டால் என் அன்பு அகன்று விடும் ". இது தான் "சுயம்" அகலாத ஆத்மாவின் அடிப்படைத் தத்துவம்.

சுயம் அகன்று மிகுந்த பக்குவப்பட்ட மனதினுக்கோ எங்கும் "தான்" என்ற தத்துவம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிவதால், சகல உயிர்களிலும் அவன் ஆத்ம தத்துவத்தையே கண்டு அன்புற்றிருக்கிறான். இங்கே அன்பு பிராவாகம் எடுத்தோடுகிறது.

3 comments:

  1. யாஞவல்கியர் அப்படியா சொல்கிறார்?

    ஒருவனுக்குத் தன்னைத் தவிர நேசிக்கத் தகுந்த உயர்ந்தபொருள் ஒன்று இல்லை. மனைவி, குழந்தை என்று நேசிப்பதுமே, இவர்களில் தன்னைக் காண முடிவதுதான் என்று சொல்லப் படுவதைக் கொஞ்சம் நிதானமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்!

    உபநிஷத்துக்கள், உள்ளார்ந்த உண்மையைச் சொல்பவை.கொஞ்சம் பொறுமையாக, முன்கூட்டிய முடிவுகள் இல்லாமல், புரிகிற வரை காத்திருப்பது நல்லது.

    ReplyDelete
  2. /இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது. ஆகவே, love has its selfish mitive/

    முழுக்கவே தவறான அனுமானம்!

    "At first, one loves, when one is loved.

    Next one loves spontaneously, but one wants to be loved in return!

    Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

    And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!"

    இப்படி பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தால் அன்பு என்பது படிப்படியாக வளருவது என்பதும், பக்குவமான நிலையில் சுயநலக் கலப்பற்றதாக உயர்ந்து அன்பே சிவமாகிக் கனிந்து நிற்கும் என்பதும் புரியும்!

    ReplyDelete
  3. கருத்துக்கு மிக்க நன்றி க்ருஷ்ணமூர்த்தி.

    தங்கள் பதிவைக் கண்ட பிறகு, வேறொரு வலைதளத்தில் மேற்கண்ட பகுதியை மீண்டும் படித்தேன்.

    சுட்டி இங்கே

    http://www.swami-krishnananda.org/disc/disc_24.html

    /////If anything is dear and lovable, the thing that is loved is not actually loved, it is not dear. The Self in the object is what is actually attracting. The Self in the object attracts the Self in us and then the object looks attractive. It is not the object that is attractive, because a corpse cannot attract anybody, a dead body does not attract. It is the life principle that attracts, the Selfhood in the object is attracting. The beauty and the grandeur of the life principle, it is that which attracts. Where is this Selfhood? Again the question arises - everywhere! ////


    மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.



    /////மனைவி, குழந்தை என்று நேசிப்பதுமே, இவர்களில் தன்னைக் காண முடிவதுதான் என்று சொல்லப் படுவதைக் கொஞ்சம் நிதானமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்!
    ////


    என்று நீங்கள் சொன்னது தான் சரி. நான் எழுதியிருந்த கோணம் தவறு என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    தவறான கருத்தை எழுதி உலவ விட்டிருப்பதற்காக மிக்க வருந்துகிறேன்.

    முடிந்தால் பதிவை edit செய்கிறேன்.

    வருககக்கும் கருத்துக்கும் கோடி நன்றி :)

    ReplyDelete