December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கிரகங்கள் சகுனங்கள் )

பூனை குறுக்கே போனால் புறப்படும் காரியம் சரியாய் நடைபெறாது என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இன்று அதை மூட நம்பிக்கை என்று முத்திரைக் குத்தி புறம் தள்ளி விட்டாலும், பழங்காலத்தில் இதெல்லாம் சகுன சாஸ்திரம் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டதாம். அஃதாவது, பூனை குறுக்கே புகுந்து நமக்கு என்ன உணர்த்துகிறது? பூனை என்ன முற்றும் அறிந்த ஞானியா? என்றால், பூனையை குறுக்கே போக வைப்பது நம்மை ஆட்டுவிக்கும் கர்ம வினைகள். வானிலையில் இன்று மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம் என்று மைய்யத்தில் எப்படி ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்களோ, அதே போல், கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, இது போன்ற எச்சரிக்கைகள், சிறு சமிக்ஞைகள் முதலியவை உருவாக்கி நம்மை தயார்படுத்துகிறது இயற்கை. கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, மனிதன் மனம், உடல், ஆன்மா முதல் பாதிக்கப்பட்டுவிடலாம். அல்லது எழுச்சி பெறலாம்.

ஏழாம் நூற்றாண்டில் மதுரை நகரை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் சமண மதத்தைச் சேர்ந்தவன் அவன் மனைவி மங்கையர்க்கரசியோ சைவ சமயத்தைச் சேர்ந்தவர். மன்னருக்கு நோய் அண்டும் பொழுது அமைச்சர் குலச்சிறையாரின் ஆலோசனையின் பேரில் திருஞானசம்பந்தரை அழைக்கிறார்கள். அப்பொழுது சமண மதம் செழித்து வந்த காலகட்டம். அப்பர், சம்பந்தரிடம் இப்பொழுது நேரம் சரியிருக்கிறதோ என்று பரிட்சித்து பின் செல்லலாம். சமணர்களால் தாங்களுக்கு ஊறு ஏதேனும் விளையுமோ என்று அஞ்சுகிறேன் என்று உரைக்க, சம்பந்தரோ, "நாளும் கோளும் இறைவனின் அடியாரை என் செய்யும்!" என்று பதில் மொழி கூறி "வேயுறு தோளி பங்கன்" என்ற கோளறு பதிப்பகத்தை திருவாய்மொழிந்தருளினார்.

"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!"


கோளறு பதிப்பகம் பாராயணம் செய்வோர்க்கு கோள்களால் நேரும் இடர்கள் குறையும் என்பது நம்பிக்கை.

சரி, இந்த கோளும் நாளும் என் செய்யும் என்று சம்பந்தரே சொல்லிவிட்டார். அப்புறம் ஏன் பூனை, நாய் என சகுனத் தூதர்களை நினைத்து பயப்படுவது? பின் ஏன் எமகண்டம், இராகு காலம், நல்ல நேரம் எல்லாம்? கோளும் நாளும் ஒன்றும் செய்யாது என்பது சரி. ஆனால் யாருக்கு? பக்தியில், ஞானத்தில், இறைவனின் அடி தொழும் பரிபூர்ண நிலை எய்திய பக்தர்களுக்கு. நம்மைப்போன்று பக்குவம் அடையாத பலருக்கு இருக்கும் ஆன்ம பலன் கோள்களின் பலத்தை வெல்லும் அளவு வலுவானதல்ல. எளிதல்ல.

No comments:

Post a Comment