நண்பர் பதிவர் D.R. Ashok தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். பிடித்த - பிடிக்காத 10 விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு। நல்ல முயற்சி. நம் நண்பர்களை, உடன் பழகும் பதிவர்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
பிடிச்ச பத்து, பிடிக்காத விதிகள்.
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. (தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால்) எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.
__________________________________________________________________
பிடித்த 10 பிடிக்காத 10
____________________
1. சமயமும்-ஆன்மீகமும்
பிடித்தது: சமயம் சார்ந்து நில்லாத பொது ஆன்மீக நெறிகள். சில பௌத்த / சமண / ஹிந்து தத்துவங்கள்.
பிடிக்காதது: மதம் எங்கெல்லாம் மனிதனுள் பிரிவினைச் சிந்தனையை தோற்றுவிக்கிறதோ, அப்படிப்பட்ட அனைத்து சிந்தனைகளும், நெறிகளும், வழிமுறைகளும்।
2. குணம்
பிடித்தது: மன்னிக்கும் குணம், சுயம்-அகன்ற பக்குவம், பிறரை துன்புறுத்தாமை, ' take it easy' policy
பிடிக்காதது: தற்புகழ்ச்சி, belittling others.
3. திரைப்படங்கள்
பிடித்தது: காதலை மைய்யமாய்க் கொண்ட (romance) படங்கள், thrillers (திகில் படங்கள் அல்ல), art films
பிடிக்காதது: Dark themes.
4. நடிகர்/நடிகையர்
பிடித்தவர்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், ராதா, மாதவன், ஜீவா
பிடிக்காதவர்: ரேவதி, கவுண்டமணி (சத்தம் தாங்க முடியலைங்க )
5. இயக்குனர்
பிடித்தவர்: பாலச்சந்தர், சேரன், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமஹேந்த்ரா, தங்கர்பாச்சன், ஃபாசில், கே.விஸ்வநாத்
பிடிக்காதவர்: பேரரசு, பாலா (தற்போதைக்கு)
6. தொலைக்காட்சி தொகுப்பாளர்
பிடித்தவர்: நீயா நானா- கோபிநாத், மமதி
பிடிக்காதவர்: தமிழை சரியாக உச்சரிக்காமல் கடித்துத் துப்பும் அனைத்து தொகுப்பாளர்களும்.
7. பாடகர்கள்
பிடித்தவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி, எல்.ஆர் ஈஸ்வரி, எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம், சுனிதா சாரதி, மால்குடி ஷுபா,
பிடிக்காதவர்கள்: சில நேரங்களில் மூக்கால் பாடும் டி.எம்.எஸ் (பல பாடல்களில் பிடிக்கும் என்றாலும்)
8. தொலைக்காட்சியில்
பிடித்தது: சில நேரங்களில் ஒளிபரப்பப்படும் நல்ல திரைப்படங்கள்
பிடிக்காதது: தொலைக்காட்சி தொடர்கள், game shows, போட்டி நிகழ்ச்சிகள் என சரமாரியாக அனைத்தும்.
9. எழுத்தாளர்கள்
பிடித்தவர்: கல்கி, சுஜாதா
பிடிக்காதவர்: ரமணி சந்திரன் (yawn அறுவை : ) (mnb range க்கு எழுதுவதாக நினைத்து எழுதப்பட்டிருக்கும் மஹா போர் romance)
10. சாதனையாளர்கள்
பிடித்தவர்கள்: விஞ்ஞானிகள் பலரும், social activists
பிடிக்காதவர்கள்: world record-ற்காக வினோதமான விஷயங்கள் செய்ய முனைந்த அனைவரும்.
பிடித்த பாடல்கள்......பிடித்த கவிஞர்......பிடித்த இதிஹாஸ பாத்திரங்கள்........அடடா...10 தானாம்... இங்கனயே நிறுத்த வேண்டிய கட்டாயம்!
______________________
ரெண்டு பேரையானும் கூப்பிடணமாம். அதனால....(முன்பு அழைக்கப்படாதிருந்தால்)
ஐயப்பன் (ஜீவ்ஸ்)
ஷைலஜா
R.Gopi
தமிழ்ப் பறவை
ராமலக்ஷ்மி
ஆகிய ஐவரை பதிவைத் தொடர அழைக்கிறேன். :)
முதல் கேள்வியிலேயே சிக்ஸர் அடிச்சியிருக்கீங்க.
ReplyDelete//சுயம்-அகன்ற பக்குவம், பிறரை துன்புறுத்தாமை//
ரொம்ப பெரிய ஆளுபோல நீங்க(நம்மக்கும் இப்டி கொஞ்சம் அனுப்பி வைங்க)
கே.விஷ்வனாத் - சலங்கை ஒலி ஒரு க்ளாஸ். கேள்வி தமிழ்நாடுக்குள் எனபதால் அவரை குறிப்பிடவில்லை. He is my favourite.
ரமனிசந்திரன் - கைய கொடுங்க.. இங்க நிறைய பெண்களுக்கு அவர்தான் பேவரைட்.. என்ன கொடுமை பாருங்க.
நான் பிடிப்பில்லாமல் அசால்டாகதான் தொகுத்தேன் 5 நிமிடங்களில், நீங்கள் ஸ்ரத்தையோடு தொகுத்துயிருக்கிறீர்கள். அதனால் நல்ல மணம் வீசுகிறது.
//ரமனிசந்திரன் - கைய கொடுங்க.. இங்க நிறைய பெண்களுக்கு அவர்தான் பேவரைட்.. என்ன கொடுமை பாருங்க.//
ReplyDeleteநாம என்னத்த சொல்லறது :| :|
///நான் பிடிப்பில்லாமல் அசால்டாகதான் தொகுத்தேன் 5 நிமிடங்களில், நீங்கள் ஸ்ரத்தையோடு தொகுத்துயிருக்கிறீர்கள். அதனால் நல்ல மணம் வீசுகிறது.///
அப்படி இல்லை. அதே 5 அல்லது 10 நிமிடங்களில் சிறிதே ஸ்ரதையோடு எழுதியது தான். உங்கள் பதிவின் மணமும் மிகவும் அபாரம்.
//பிடித்தது: மன்னிக்கும் குணம், சுயம்-அகன்ற பக்குவம், பிறரை துன்புறுத்தாமை, ' take it easy' policy
ReplyDeleteபிடிக்காதது: தற்புகழ்ச்சி, belittling others//
நல்ல குணங்கள்தான்.இப்போ இருக்கிற கார்பரேட் வாழ்க்கைக்கு ஒத்து வராதே...
ஒரே படத்துல பாலாவைப் பிடிக்காமப் போயிடுச்சா...??!
சாதனையாளர்கள் விருப்பமும் நன்று....
அழைப்பில இருக்கிற தமிழ்ப்பறவை நாந்தான்னு நினைக்கிறேன். விரைவில் பதிவிட முயல்கிறேன்... நன்றி...
சுவராஸ்யம் சக்தி!
ReplyDeleteநன்றி பா.ராஜாராம் :)
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை...அழைப்பில் சொல்லியிருக்கும் நீங்களே தாங்க. நீங்களே தான்.
reg corporate world, ஆம், எத்துறையாய் இருப்பினும், இன்று இப்படிப்பட்ட குணங்கள் வைத்துப் பிழைக்க முடிவதில்லை என்றே பலர் சொல்லக் கேள்வி. :( வருத்தமாய் இருக்கிறது...எனினும்...
"என்னையும் அரசியல்வாதி ஆக்கிடாங்களேப்ப்பா" என்ற முதல்வன் வசனம் நினைவு வரது :|
பாலா ஓரே படத்தில் பிடிக்காமல் போகவில்லை. பல படங்கள் பொறுத்தேன். எனக்காக அவர் படம் எடுக்கவே மாட்டேன் என்கிறார் :)))))))))))))
என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் என்ன. எனக்கு பிடித்த, பிடிக்காத விஷயத்தையே சொல்லி இருக்கிறிர்கள்.
ReplyDeleteவாங்க தமிழ்-உதயம். நீங்க பெரிய எழுத்தாளர் என்பதை உங்கள் வலைப்பூவில் நுகர்ந்து உணர்ந்து கொண்டேன்.
ReplyDeleteஎனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது, தெரிந்திருந்தால் உங்களையும் அழைத்திருப்பேன் :)
கருத்துக்கு மிக்க நன்றி :) நிறைய ஒத்துப்போகும் கருத்துக்கள் போலும் :)
நடிகை ரேவதியைப் பிடிக்காதா? ஏங்க? மெளனராகம், அஞசலி படம்லாம் பார்க்கலையா?
ReplyDelete//பிடிக்காதவர்கள்: சில நேரங்களில் மூக்கால் பாடும் டி.எம்.எஸ் (பல பாடல்களில் பிடிக்கும் என்றாலும்)//
தப்பு மேடம். அவரை மாதிரி ஹைபிட்சுல பால்களை பாட இதுவரை யாரும் வரலை.
இது என் கருத்து மட்டுமே.
மற்றவை எல்லாம் ஓகே. அதுல கவுண்டமணி செம நக்கலு. உண்மைதான் அவருக்கு
கவுண்ட மணிங்கறதை சவுண்டு மணின்னு மாத்தி வைக்கணும். :-)
நேரடியான கருத்துக்கள்.., வாழ்த்துக்கள்..,
ReplyDeleteநன்றி பேனாமூடி :)
ReplyDeleteநன்றி ப்ரதாப் :)
//ஏங்க? மெளனராகம், அஞசலி படம்லாம் பார்க்கலையா? //
ஓ பார்த்தேனே! நடிகைக்குறிய glamour அவருக்கு குறைவு என்பது என் எண்ணம். "girl next door" லுக்கு. இதனாலேயே ஓரவஞ்சனையுடன் அவர் நடிப்பும் பிரமாதமாக எனக்கு ஒட்டவில்லை போலும் :(
//தப்பு மேடம். அவரை மாதிரி ஹைபிட்சுல பால்களை பாட இதுவரை யாரும் வரலை.
இது என் கருத்து மட்டுமே.//
மிகச் சரி :) டேக் கூட வாங்காமல் ஒரே முறை பாடி முடித்துவிடக்கூடிய இசை மேதைகள் பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் டி.எம்.எஸ் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அவருடைய ஆரம்ப கால பாடல்களில் nasal tone கம்மியாக இருப்பதால் எனக்கு இன்னுமே பிடிக்கும்.
//உண்மைதான் அவருக்கு
கவுண்ட மணிங்கறதை சவுண்டு மணின்னு மாத்தி வைக்கணும். :-)//
:)))))))) நல்லா இருக்கே! மணி என்றாலே சவுண்டு தானே :)அதற்கேற்றார் போல் தான் பேசி(ஏசி)யிருக்கிறார் :)))))))))
தொடர் பதிவிட்டு விட்டேன்...
ReplyDeleteநேரம் கிடைக்கையில் படிக்கவும்
http://thamizhparavai.blogspot.com/2009/12/blog-post_08.html
அழைப்புக்கு நன்றி...