December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மனுஸ்ம்ருதி)

'மனுஸ்ம்ருதி' குறித்தும் அதனைப் பற்றி எழும் சர்சைகளும் அதற்கு சோ அவர்களின் பார்வையும்.

மனுஸ்ம்ருதி என்பது மனு என்ற ஒரு அரசனால், முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட சில judgements / verdicts on general conduct and behaviour of every individual. அது இன்றைய நடைமுறைக்கு மாற்றப்பட்டே புழங்குகிறது, எந்த ஒரு சட்டமும், காலத்திற்கும் வழக்கத்திற்கும் தகுந்தாற்போல் மாற்றப்பட்டு நிற்பது இயல்பு. எனவே ராஜாராம் மோஹன்ராய் போன்றோர் 'சதி' வழக்கத்தை விட்டொழித்தில் மனுஸ்ம்ருதிக்கு புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை. மேலும், யஞ்யவல்க்யர்-ஸ்ம்ருதியில் சட்டமும் ஏனைய வழக்கங்களும் அதன் தீர்ப்புகளும் காலத்தின் பேரில் மாறி வந்தே ஆகவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி ஒரு நாட்டின் சட்டம் அவ்வப்பொழுது திருத்தி அமைக்கப்படுகிறதோ, அத்தனையும் அந்த சட்டம் உள்வாங்கி இடம் கொடுக்கிறதோ, வளைந்து கொடுக்கிறதோ, அதே போல் மனுஸ்ம்ருதியும் விதிவிலக்கல்ல. Any wisely written law accomodates the amendments in its due course and manusmruthi is no exception.

மேலும் வர்ணாசிரம வழக்குப்படி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மனுஸ்ம்ருதியில் அதிக சலுகைகள் அளிக்கபட்டிருப்பதாக கருத்து நிலவி வருவதும் பொய்யானதே. மனுஸ்ம்ருதியில் பிராமணன் ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு மற்றோனை விட தண்டனை பன்மடங்கு அதிகம் பரிந்துரைக்கபட்டிருக்கிறது. பிராமணனை விட அரசனையே அதாவது க்ஷத்ரியனையே உயர்த்திப்பேசுகிறது. ராஜ்யஸ்ய யக்ஞம் முதலியவை நடைபேறும் போது க்ஷத்ரியனாம் அரசன் மேல் அமர முன் பிராமணன் கீழ் பணிந்து அமர்வதே வழக்கமாம்.

இங்கே பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகப்பட்டவன் அல்ல. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணனும் அல்ல. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்று கூற இயலும். மேலும் பிறப்பால் ஒரு வகுப்பில் பிறந்த எவனும், தன் நடத்தையால், குணத்தின் இயல்பால் இன்னொரு வகுப்புக்கு மாறுவதும் இயல்பு.

No comments:

Post a Comment