December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (விஞ்ஞானத்திற்கு அப்பால்)

சில விடயங்கள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை, அவற்றை விஞ்ஞானத்தால் விளக்க முடியாது. அப்படிப்பட்ட உன்னதமான அதிசயங்களை ஜீசஸ் முதலிய இறைத் தூதர்கள், அவதாரங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒரு முறை விவேகானந்தர் பாரிஸ் நகரம் போயிருந்த போது, "நீங்கள் எமக்கு இயேசு க்ருத்துவைப் போன்றவர், எம் பாவங்களை நீக்கி அருளுங்கள்" என்று அங்குள்ள பக்தர்கள் வேண்டிக்கொண்டனராம். அதற்கு விவேகானந்தர் "என்னால் அன்னாரைப் போல் செய்வது முடியாத காரியம். அவர் பெரிய மஹான்" என்று மறுத்துவிட்டாராம்.

அரபிந்தோ ஆஸ்ரமத்தைச் சேர்ந்த மதர் மீரா, பறக்கும் தட்டு ஒன்றை கண்ட போது, அது vital planeஇல் (like earth plane) இருந்து, i.e. ஒரு வேறொரு கிரகத்திருலிருந்து வந்திருப்பதாக கண்டுணர்ந்தாராம். இவையெல்லாம் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து சுட்டிக்காட்டுகிற சிறு நிகழ்வுகள்.

நம் நடுவே நடமாடும் சாமான்யன் என நாம் கருதும் ஒருவன் இறையின் பரிபூர்ண அம்சமாய் இருக்கலாம். இறைவன் என்பவன் நான்கு கைகளுடனோ அல்லது க்ரீடம், நகைகள் தாங்கி, மாலைகள் தாங்கி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முள் ஒருவனாய் அவன் பேசலாம், தோன்றலாம், சிலாகிக்கலாம்.அவனை அடையாளம் காண நம் மனம் பக்குவப்பட்டிராததால், நாம் அறிய மாட்டோம். எப்படி ஒரு விஞ்ஞானியை இன்னொரு விஞ்ஞானியே அடையாளம் காண முடியுமோ, அவனோடு அவனுக்குச் சமமாய் அளவளாவ முடியுமோ, புரிந்துகொள்ள முடியுமோ அப்படி, only a soul with elevated frequency இறையருள் பெற்ற இன்னொருவனையோ அல்லது இறையின் மனிதவடிவையோ அடையாளாம் காண முடியும்.

No comments:

Post a Comment