December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆன்மா)

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு வருவதற்கு முக்கியப்பங்கு வகிப்பதே "மரணம்". மரணம் பற்றிய பயம், அல்லது அறியாமை, அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம். இறந்த பின் என்ன? இறப்பது யார்? இறந்த பின் ஒன்றுமில்லாமல் சூன்யத்தில் கலந்து விடுவோமா? ஒன்றுமில்லாதது என்பது என்ன? இப்படிப் பலக் கேள்விகள் அடுக்கடுக்காய் மனிதப்பிறவிகள் பலருக்கும் இடைவிடாது தோன்றியபடி இருக்கும்.

இன்னார் இறந்து விட்டார் என்றால், ஏதோ ஒன்று, இன்னாரின் உடலில் இருந்து பிரிந்து செல்கிறது. இன்னார் என்று இதுவரைக் கூறிவந்தது அவர் உடலை. ஆனால் அந்த "ஏதோ ஒன்று" பிரிந்து சென்றதும், உடலுக்கு அங்கு மதிப்பு இல்லை. "அது" பிணம் என்ற அஃரிணைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால் x அல்லது y அல்லது Z அவரவர் உடல் அல்ல. அதிலிருந்து பிரிந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத பொருள்.

அதை "உயிர்" என்று வைத்துக்கொள்வோம். உயிர் என்றால் என்ன? உயிர் என்றால் இதயத்துடிப்பு என்று மீண்டும் உடலுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பது அறிவீனம். உயிர் என்றால் மூளை என்போமேயானால், people who are declared brain dead sometimes exist in coma state, i.e indicating that 'life-force' has not departed. உயிர் என்பது இதயத்துடிப்பு என்றால், இதய்மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அவ்வுடலில் புதிதாய் உருவெடுத்திருப்பது வேறொருவனா?

உயிர் என்றால் செயலாற்றல், உயிர் என்றால் இயக்கம். அப்படியெனில் உயிர் என்றால் என்ன? life force. ஆன்மா அல்லது soul என்றும் சோல்லலாம். ஆன்மா என்பது எங்கும் பரவி வியாபித்திருக்கும் ஒன்று என்றால், ஒவ்வொரு தனிமனித உடலில் மாயையால் கட்டுண்டு, ஆசைகளின் தொகுப்புக்களைச் சேமித்து, வெவ்வேறு உடல் தாங்கி பிறந்தும் இறந்தும் கிடப்பது ஜீவ-ஆத்மா (ஜீவனின்/மனிதனின் ஆத்மா). மாயின் சாயை இன்றி எங்கும் சிதறிக்கிடப்பது நிறைந்திருப்பது பரமாத்மா (the brahman) ஒரு மனிதன் இறந்தால், அவன் தரித்திருந்த உடலினின்று பிரிந்து செல்வது "ஜீவாத்மா".

No comments:

Post a Comment