December 11, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (புராணங்களும் இதிஹாசங்களும் கட்டுக்கதைகளா)

புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்ற கருத்து நெடுங்காலமாய் நிலவிவருகிறது। நம் ஹிந்து மதத்தில், வாழைப்பழ ஊசி போல், இலைமறை காய்மறைவாய், பூடகமாய், சொல்லப்பட்ட கருத்துக்கள் நிறைய. அவற்றைச் சொல்வதற்கு புராணக் கதைகள் நிறையவே உதவியிருக்கின்றன என்பது இன்னொரு கோணம். புராணங்கள் எல்லாம் நம் மனம் புத்திக்கு அப்பாற்பட்டவையாய் இருப்பதாலேயே அது பொய் என ஆகிவிடுவதில்லை .

சில காலம் முன்பு பசி, தாகம் இன்றி ஒரு பெண் உயிர்வாழ்வதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அதிசயங்களாய் பேசப்பட்ட போது அதை நம்பும் மக்கள், விஷ்வாமித்ரர் இராமருக்கு "பலா-அதிபலா" என இரண்டு மந்திரங்கள் உபதேசித்ததன் பேரில், அவர்கள் பசி தாககமற்று தம் வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள்? என்பது கேள்வி.

எதுவொன்றும் விஞ்ஞானத்தின் முத்திரையுடன், அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் ஒப்புக்கொள்ளும் நம் அறிவு, மனம், மனத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மாவைச் சார்ந்த விஷயத்திற்கு பகுத்தறிவு என்ற பெயரில் ஆராய முற்படுகிறது. அது விஞ்ஞான ரீதியில் இன்னும் நிரூபணம் ஆகவில்லை என்றால் அது பொய் என்று அலட்சியமாய் தள்ளிவிடுகிறது. மந்திரங்கள் தற்காலத்தில் துரிதமாக பலித்துவிடுவதில்லை. அதற்கு காரணம் நாம் எல்லோரும் இன்றைக்கு மன-ஆன்ம பலம் குறைந்த சாமான்யர்களாய் மட்டுமே வாழ்கை வாழ்கிறோம்.

நாசா ஷட்டில் இந்திய இலங்கைக்கு நடுவே உள்ள இராமர் பாலத்தை படமெடுத்துக்காட்டியிருக்கிறது. அதை நம்மால் மறுக்க முடியுமா? இராமரும் க்ருஷ்ணரும் வாழ்ந்ததற்கு archeological evidences நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் எப்படி மறுக்க முடியும். கதையாய் கட்டுக்கதையாய் எழுதிய பின், அதற்கேற்றாற் போல் பாலத்தை கட்டியிருக்கவா முடியும்? இதெல்லாம் இருந்ததால் தானே கதை (சரித்திரம்) உருவானது. மேலும் இதிஹாசங்களைப் பற்றி பேசும் போது, நாயகர்களாம் இராமரையும், க்ருஷ்ணனையும் ஹீரோ வர்ஷிப் மட்டும் செய்யவில்லை.

வால்மீகியோ, வியாசரோ உண்மைகளை புட்டு வைக்கின்றனர். இராவணனைப் புகழ வேண்டிய இடத்தில் அவனை உயர்த்திப் பேசியிருக்கின்றனர். எப்பேர்பட்ட சிவபக்தன் இராவணன் என்பதற்கு பல இடங்களில் அவனை புகழ்ந்திருக்கின்றனர். அவனின் தேஜஸைப் பற்றி சிலாகித்திருக்கின்றனர்.


அதே போல் க்ருஷ்ணனிடம் துரியோதனன் மஹாபாரதப்போர் முடிந்ததும் "சீ இதெல்லாம் ஒரு வெற்றியா?! யாரையாவது முறையாய் வென்றாயா? எபேர்பட்ட பித்தலாட்டக்காரன் நீ. பித்தலாட்டம் செய்தல்லவா பீஷ்மர் முதல் துரோணர் வரை வீழ்த்தியிருக்கிறாய். இதோ இப்பொழுது என்னையும், தொடையில் அடித்து பீமன் வீழ்த்த அதை அங்கீகாரம் செய்தது நீ தானே. வெட்கமாக இல்லையா " என்று காரி உமிழ்வதும், உடனே க்ருஷ்ணன் வெட்கி தலைக்குனிவதும், மேலிருந்து தேவர்கள் பூமாரி துரியோதனன் மேல் பொழிந்ததாய் இதிஹாசம் கூறுகிறது.

ஆகையால், இதிஹாசங்கள், தெய்வம் என்பதால் உயர்த்தியும், மற்றோரைத் தாழ்த்தியும் பேசப்பட்டதல்ல। They stated mere facts irrespective of the characters involved, இதையெல்லாம் எப்படி அண்டப்புளுகு, ஆதாரமில்லை என்று தள்ளி வைக்க முடியும் என்று சோ சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை பகிர்ந்தார்.

கொசுறு டவுட்டு: புரணங்கள் கட்டுக்கதைகள் என்று கூறுவதற்கு இதிஹாசங்களை மட்டுமே விளக்குகினார் சோ. புராணக்கதைகள் நடந்ததற்கு சான்று மிகக்குறைவு. அவை மிக மிக பழமை வாய்ந்த கதைகள். இதிஹாசங்களை ஒப்புக்கொள்ளும் பலரும் கூட புராணங்களும் அதனைச் சார்ந்த கிளைக்கதைகளும் நம்ப மறுக்கிறார்கள். (இங்கே புராணம் என்பது பிரம்ம புராணம், விஷ்ணுபுரணம் உட்பட்ட வியாசரால் தொகுக்கப்பட்ட 18 புராணங்கள். இவற்றிற்கு ஆதாரங்கள் எனக்குத் தெரிந்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. )

4 comments:

  1. ஓக்கே, ஓக்கே, எனது இந்த லேபலின் கீழ் உள்ளப் பதிவுகளைப் பார்க்கவும்.

    பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. சோ அவர்கள் சினிமாவில் மட்டுமல்ல பத்திரிக்கையுலகிலும், அரசியல் உலகிலும் கூட காமெடியன் தான். இலங்கைக்கு அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டதும், அது அங்கு நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு சோ / ஜெயகாந்தன் வக்காலத்து வாங்கியதும் மறக்க கூடிய ஒன்றல்ல.

    //நாசா ஷட்டில் இந்திய இலங்கைக்கு நடுவே உள்ள இராமர் பாலத்தை படமெடுத்துக்காட்டியிருக்கிறது.//

    ராமர் பாலம்னு சொல்லியிருக்கா ? மொத்தத்துல பாலம் என்ற வார்த்தையாவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? நாம் சோ போன்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிக்க வேண்டி வருவதே அவர்களின் நம்பிக்கை வளர்ச்சிக்கு தடையாகும்போதுதான். சேது சமுத்திர திட்டத்துக்கு இவர்கள் நம்பிக்கை தடையாகும்போது தான் விமர்சிக்க வேண்டிவருகிறது.

    ஏற்கெனவே ஒரு பதிவில் கூறியுள்ளேன். ஆன்மீகம் என்பது இயற்கை கடன் கழிப்பது போன்றதாகும். அது ப்ரைவேட் . பப்ளிக் லைஃப்ல கொண்டு வராதிங்கப்பா.

    //இராமரும் க்ருஷ்ணரும் வாழ்ந்ததற்கு archeological evidences நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. //

    விட்டா பர்த் சர்ட்டிஃபிகேட்டா கொண்டுவந்துருவாங்க போலிருக்குப்பா

    ReplyDelete
  3. சகோதர்...மேற்கண்ட கருத்துக்கள் உங்களுடையதா இல்லை திருவாளர் சோ-வுடையதா?

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி

    டோண்டு ராகவன் :)
    சித்தூர் முருகேசன் :)
    ஸ்வாமி ஓம்கார் :)

    ஸ்வாமிஜி,

    இப்பதிவுகள் உடனுக்குடன் நிகழ்ச்சியை பார்த்து விட்டு, மறுநாள் தொடரைப் பற்றிய சுருக்கத்தை நான் வேறொரு வலைத்தளத்தில் பதித்து வந்தேன். இது தொடரின் சோ அவர்கள் கூறிய சில நல்ல கருத்துக்கள் விளக்கங்கள் பற்றிய எனது சுருக்க உரை. என் கருத்துக்களை இதில் நான் முன்வைக்கவில்லை. :)

    டோண்டு ராகவன்,

    "சோவின் எங்கே பிராமணன்" குறித்த உங்கள் பதிவுகள் சிலவற்றை நான் தொடர் ஒளிபரப்பப்பட்டிருந்த சமயத்தில் படித்திருக்கிறேன் :) . இம்முறை நீங்கள் இட்ட சுட்டி (link) வேலை செய்யவில்லை.

    ReplyDelete