December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (நால்வகை சன்யாசம்)


சன்யாசத்தில் நான்கு வகை உண்டு. க்ரம சன்யாசம், ஆதுர சன்யாசம், அதி ஆதுர சன்யாசம், ஆபத் சன்யாசம் என்பன.

(இதனைப் பற்றிய வலையில் கண்ட விளக்கங்களை இங்கு இடுகிறேன்)

க்ரமம் என்றால் நியதி rule. அஃதாவது படிப்படியாய் சன்யாசம் பெறுவது. முறைப்படி சன்யாசம் பெறுவது. க்ருஹஸ்தாஸ்ரம் தொடங்கி, வானப்ரஸ்தம் தொடர்ந்து, 60 வயதிற்கு மேல் பக்குவம் அடைந்த சிலர் க்ரம சன்யாசம் மேற்கொள்ளலாம். அல்லது முறையாய் குருவின் ஆசியோடு சன்யாசம் வாங்கிக்கொள்ளலாம். இது தான் க்ரம சன்யாசம் என்று நினைக்கிறேன். அதிஆதுர சன்யாசம் மற்றும் ஆதுர சன்யாசம் பற்றி தெரியவில்லை. ஆதுரம் என்றால் படிப்படியாக என்று பொருட்படலாம். சரியாய் தெரியவில்லை.

பெற்றோரின் ஒப்புதல் இன்றி சன்யாசம் மேற்கொள்ளக்கூடாத. இதற்காகவே ஷங்கராச்சார்யார், முதலையின் பிடியில் இருக்கும் போது, 'சன்யாசம் என்பது மறு பிறவி, இந்த முதலைக்கு என்னை இப்பிறவியில் தீண்டும் கர்மா உள்ளது, நான் சன்யாசம் மேற்கொண்டால் எனக்கு இன்னொரு பிறவி, ஆகவே முதலை என்னை விட்டுவிடும், எனக்கு ஒப்புதல் அளி' என்று தாயாரை வேண்டுகிறார்। அதன் படி தாயார் சம்மதத்தின் பேரில் அவர் உடனே 'ஆபத்-சன்யாசம்' மேற்கொண்டாராம். சன்யாசம் மேற்கொள்ளும் போது ப்ரிஷை மந்திரம் என்று ஒன்று சொல்லவேண்டுமாம். அதன் அர்த்தம் "நான் ஒருவருக்கும் தீமை/தீங்கு இழைக்க மாட்டேன்" என்பது.

மாத்வாச்சாரியார் சன்யாசம் பெற அவர் பெற்றோர் மறுத்தனர். அவரை போகமல் இருக்க வேண்டி அவர் தந்தை அவரை வலம் வந்து நமஸ்கரித்தார்। உடனே மாத்வாச்சார்யார் சிரித்து "பிள்ளையைத் தந்தை வணங்கி என்ன சன்யாசி ஆக்கிவிட்டீர்கள்" என்றாராம். சன்யாசியை பெரியவர் சிறியவர் என எல்லோரும் வணங்கவேண்டும் பெற்ற தந்தையும் வணங்கவேண்டும் . சன்யாசி தனது தாயாரை மட்டும் விழுந்து வணங்கலாம் என்பது நியதி.

2 comments:

  1. //சன்யாசி தனது தாயாரை மட்டும் விழுந்து வணங்கலாம் என்பது நியதி.//

    எல்லா இடங்களிலும், தாய்க்குக் கொடுக்கும்
    மரியாதையே தனித் தன்மைத்துதானதுதான்.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி. :)

    பத்துமாதம் சுமந்ததோடன்றி, தன்னுயிரை பணயம் வைத்து இன்னொரு உயிரை ஈன்றெடுக்கிறாள் அல்லவா அங்கே தன்னலம் மறைந்து விடுவதாலேயே தாய்க்கு மரியாதை போலும் :)

    ReplyDelete