December 11, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (உணவே உணர்வு)

ஒரு சந்யாசி தேசாந்திரமாய் திரிந்துகொண்டிருந்த போது, அரசர் ஒருவர் சந்யாசியை வருந்தி அழைத்து, தனது மாளிகையில் உணவு அருந்த வற்புறுத்துகிறார். சந்யாசியோ, 'பிறர் மனையில் உணவருந்துவதில்லை', என்ற கொள்கை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி மறுத்து கூறுகிறார். அரசர் மிகவும் மனம் வருந்தி, மிக்க பணிவன்புடன் மீண்டும் தன் கோரிக்கையை சந்யாசி முன் வைக்கவும் மறுக்க இயலாமல் அவரும் ஒப்புக்கொண்டு உணவருந்துகிறார்.

உணவு உண்டு முடிக்கும் தருவாயில், அரச மண்டபத்தில் அழகாய் தொங்கிக்கொண்டிருந்த மணிமாலை, ஒன்று பளிச்சென மின்னி கண்ணைக் கவர்ந்தது. சந்யாசிக்கும் அந்த மாலையை அபகரிக்கும் எண்ணம் தோன்றுகிறது. அவர் மாலையை களவாடி குடிலுக்கு திரும்புகிறார்.

அரசரோ, அனைவரின் பேரிலும் சந்தேகம் கொண்டு, விசாரிக்கிறார். உண்மை வெளிவராது போகவே, சித்திரவதை செய்தாவது திருடனை கண்டுபிடிக்க எண்ணுகிறார்.

குடிலில் சற்று நேரம் கழித்து தன் செயல்களை ஆராய்ந்த சந்யாசிக்கு தனக்கு எவ்வாறு இப்படி ஒரு அவதூறு/கஸ்மல எண்ணம் எழுந்தது என வருந்தி, மாலையை அரசரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறார். சந்யாசியின் திருட்டை அரசர் என்று நம்ப மறுக்க, சந்யாசி உடனே, "இதற்குத் தன் நான் பிறர் மனையில் உட்கொள்வதில்லை" உணவில் தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு மாறுபட்டதாய் நான் செயல்படக் காரணம், வழக்கத்திற்கு மாறாக நான் கொண்ட உணவு தான் என்கிறார்.

அரசரும் யார் சமைத்த உணவு என்றும், அரிசி எங்கிருந்து வந்தது என்பன போன்ற ஆராய்ச்சி நடத்துகிறார். விசாரணையில், அரிசி, ஒரு கொள்ளைக்கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அரிசி எனத் தெரியவருகிறது. உணவை சமைப்பவனும், அதைத் தீண்டுபவனின் சிந்தனையும் கூட உணவில் பரிமாறப்பட்டுவிடுகிறது.


தொற்றுவியாதி உள்ள ஒருவனின் வீட்டில் இருந்த உயிரற்ற வஸ்துக்களுக்கும் கிருமிகள் பரப்பும் வாய்ப்பு உள்ள போது, அன்னத்தில் எண்ண அலைகளின் தாக்கம் இருக்காதா என்பது வாதம் .


நம் உடல், பஞ்சபூதங்களால் ஆனது, அதை உயிரூட்டுவது உணவு. அது உணவினால் ஆக்கப்படுவது. எங்கள் வீடுகளில் கூட சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடனும், இறை தியானத்துடனும் சமைத்தால், அந்த எண்ணம் சமைக்கப்படும் உணவில் தங்கி, உண்பவருக்கு நல்லது விளைவிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

No comments:

Post a Comment