இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதன் மூலம் தன் முழு வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறது இறைத் தத்துவம். "மனிதர்களில் நான் மன்னன்" என்கிறான் க்ருஷ்ணன். சிறந்த மன்னனின் கவனத்தில் பாதுகாப்பில் அத்தனை மனிதர்களும் அடங்கிவிடுகின்றனர். அத்தனை மனிதர்களையும் அவன் பரிபாலிக்கிறான். அவர்களின் பிரதிநிதியாய் இவன் விளங்குகிறான். "பறவைகளில் நான் கருடன், நதிகளில் நான் கங்கை, யஷர்களில் நான் யமன்" என்றெல்லாம் கூறுபவன், மந்திரங்களில் "நானே ஓம்காரம்" என்கிறான். மாண்டுக்ய உபநிஷத் "ஓம்கார ஏவதம் சர்வம்" என்கிறது. எல்லாம் ஓம்காரத்தில் ஒலிகளே. நடந்தது, நடப்பது எல்லாமே ஓம்காரத்தில் அடக்கம். அவற்றைக் கடந்து நிற்பதும் அந்த ஓம்காரமே என்கிறது ஹிந்து மதம்.
அத்தனை மந்திரங்களும் 'ஓம்காரத்தில்' அடங்கிவிடுகிறது. மந்திரங்களின் பிரதிநிதியாய் ஓம்காரம் விளங்குகிறது. அனைவருக்கும் தெரிந்த விளக்கம் தான், ஓம் என்பதன் கூற்று "அ-கார, உ-கார ம-கார" ஷப்தங்கள்.
'அ'காரம் என்பது விழிப்பு நிலையான படைத்தலை, அதன் ஆரம்பத்தை உணர்த்துகிறது. "அ" என்று ஆரம்பிக்கிறது ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும்.
"உ"காரம் காப்பதைக் குறிக்கிறது. தொடர்தலை, வளர்த்தலை, பரிபாலித்தலை குறிக்கிறது. கனவு நிலையின் பிரதிபலிப்பு
"ம" காரம் ஆழ்ந்த நித்திரைக்கு ஒப்பான அழிவு நிலையை காட்டுகிறது.
அத்தனைக்கும் அப்பாற்பட்ட இன்னொரு நிலை "துரீய" நிலை.
துரியம் என்றால் என்ன? அந்த பெயர் எதை குறிக்கிறது? அந்த நிலை என்ன? அது எந்த நிலை என்று சொல்வதை விட அது எந்த நிலையெல்லாம் இல்லை என்று சொல்வது சுலபம். நாம் விழித்திருக்கும்போது உணரும் நிலை அல்ல; தூங்கும்போது கனாக்காணும்போது உணரும் நிலை அல்ல; கனவே இல்லாது ஆழ்ந்துறங்கும் நிலையும் அல்ல. இந்த மூன்று நிலையில் மாறி மாறி பயணிப்பவரது நிலை எதுவோ அதுதான் அந்த நிலை.
அதை அறியும்போது மாத்திரமே அது அதுதான் என்று புரியும். அங்கு மனமில்லாதாதல் சொல்லும் பொருளும் அதை குறிக்க உதவாது. அதனால்தான் அறிந்தவரால் அதை சொல்ல முடிவதில்லை. அதை சொல்ல முடியும் என்று சொல்பவர் அதை அறியவில்லை என அறியலாம். காரணம் அந்நிலையை அடைந்தவர் திரும்ப உடல் உணர்வுக்கு திரும்பும்போது முதலில் அடையும் திகைப்பே அதுதான். என்னவென்று தனக்குத்தானே கூட எந்த சொல்லாலும் அதை விளக்க முடியாமல், அந்த உணர்வை எண்ண முடியாமல் திகைப்பார். ஆகவே அறிந்தவர் இந்த விஷயத்தில் மாத்திரம் மௌனியாகிறார். இப்படி மௌனியாகிறவரே முனிவர் எனப்படும் நிலையை அடைந்தவராவர்.
துரியம் என்றே சொல்லிற்கே நான்காவது பகுதி என்றுதான் பெயர். ஜாக்ரத் எனும் சொல்லான விழிப்பு நிலைக்கு விளக்கமாக அந்த பெயர் இருப்பதை காணுங்கள். ஜாக்ரம் என்றால் விழிப்பு. ஸ்வப்ன எனும் நிலை கனவு நிலை. ஸ்வப் என்றால் தூக்கம். அதிலிருந்து வந்த சொல் ஸ்வப்னம். சுஷூப்தி என்பது மூன்றாவது சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'நன்றாக முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க நிலை நன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த நிலையின் தன்மையை வைத்தே இருக்கும் சொல்.ஆனால் துரியத்திற்கு என்ன பொருள் என்றால் நான்காவது நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க முடியாததால், இதன் பெயரையே நான்காவது நிலை என்று வைத்து விட்டார்கள்.
http://aaththigam।blogspot.com/2008/10/16.html
(நன்றி)
No comments:
Post a Comment