ஸ்திதப்ரக்ஞன் என்றால் ஸ்திரமான எண்ணம் பிரக்ஞை உடையவன். இரட்டைகள் அற்ற நிலையில் உள்ளவன்.நானோ நீங்களோ பேசிய பிறகு எழுதிய பிறகு, இதையெல்லாம் பற்றிப் படித்த பிறகு, உண்மை அறிவு நிலை என்ன என்று எழுத்தளவில் அறிந்த பிறகு, மீண்டும் ஆசைகள், ஏமாற்றங்கள், புகழ்ச்சி, இகழ்ச்சி, பெருமை, சிறுமை பற்பல பிறவிகளில் சேகரித்த ஆசைகள், நிராசைகளை, என 'இரட்டைகளில்' மூழ்கி விடுகிறோம். ஒட்டுமொத்தமாய் தொலைத்துவிட, அழித்துவிட முடிவதில்லை. படிப்படியாய் உயர வேண்டிய பாதை. அதனால் தான் மனத்தை முதல் படியாக ஒருநிலைப் படுத்த, பஜனை, தியானம், ஸ்லோகங்கள் என பல பாலப்படிகள். இதையெல்லாம் பாராயணம் செய்யவும் இன்றளவில் நேரமும், விருப்பமும் இல்லாமல் போய்விடுகிறது. க்ஷண நேரத்தில் மனம் மீண்டும் ஆசைகளால் ஊந்தபட்டு..... முடிவில்லா சக்கரம்.
வெகு சொற்ப மனிதர்கள் ( aspirants, gnaanis), இறைத்தன்மைக்கு மிக அருகாமையில் தங்களை உணர்வதால், அவர்களை அவமானம் மானம் போன்ற இரட்டைகள் பாதிப்பதில்லை. இப்படிப்பட்டவர்களின் வாக்கு, சொல், செயல், சிந்தனை எல்லாமே நம்மை விட பன்மடங்கு அதிக பலம் வாய்ந்தது. Intensity can be higher. இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களின் பால் மிகுந்த கருணை மேலிட "இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறிய மாட்டார்கள், எனவே பிதாவே இவர்களை மன்னியுங்கள்" என்று மன்னித்தருளினார். அவர் கருணைக் கொண்டு மன்னித்திராவிட்டால், விளைவுகள் மிக அதிகமாக இருந்திருக்கலாம்.
Universal love என்று இதைச் சொல்வதுண்டு. தன்னைத் தவிர பிற ஒன்றை காணாது, எங்கும் தன்னையே கண்டுவிட்டதால், இரட்டைகள் அற்ற நிலை. Compasson and love hence flows towards one and all.
தானே எல்லாமாகி இருக்கிறோம் என்று அறிவு முழுமை பெறும்போது, அவமானம் மானம், துன்புறுத்துபவன், துன்புறுத்தபடுபவன் என்ற
வேற்றுமை கடந்து நிற்கும் பக்குவம் வரப் பெற்றுவிடும். அது அவ்வளவு சாமான்யமானதல்ல.
ஜடபரதரின் கதை அதற்கு சான்று.
ஜட பரதர் முற்பிறவியில் துஷ்யந்த மஹாராஜாவின் மகனாய் பிறந்தார். ராஜபோகத்தைத் துறந்து தேர்ந்த ஞானியாக விளங்கினார். ஆன்மநிலையை எட்டப்பெற்ற பின்னும் வீழ்ந்தார். எப்படி? தன்னை அண்டி வந்த மானின் மேல் அன்பு பாராட்டினார். மெல்ல மெல்ல மான் அவர் மனம் முழுவது ஆக்ரமிக்கத் துவங்கியது (like how a camel creeps into the tent). பாசம், அன்பு வேறூன்ற ஆரம்பித்த அவரின் மனதில், இறைவனைத் தாண்டி மானின் நினைப்பு மட்டுமே மிஞ்சியது. மான் ஒரு நாள் இறந்துவிட்ட போது அந்த துயரம் தாங்காமல், பாசத்தால் பீடிக்கப்பட்டார். துடித்தார். இந்த பாசத்தை அறுக்க, மீண்டும் ஞானப்படிகள் ஏற அவருக்கு மேலும் இரண்டு பிறப்பு தேவைப்பட்டதாம். அவரின் கடைசி பிறவி 'ஜட பரதர்' என கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் தவத்தின் நிலையிலிருந்து வீழ்ந்துவிட்டதை உணர்ந்திருந்த அவர், மேற்பட்ட பிறவிகளில் உணர்வுகளுக்கு இடம் கொடாத 'ஜடமாய்' இருந்து, இறுதி நிலையை எய்வேன் என்ற உறுதிபூண்டதாக சொல்லபடுகிறது.

No comments:
Post a Comment