அவதாரம் என்றாலே பத்து மட்டுமே குறிப்பிடுகிறோம், புத்தரைக் கூட அவதாரமாக கருதுவதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. உண்மையில் புராணங்களின் கூற்றுப்படி தன்வந்திரி, பிருகு, தத்தாத்ரேயர் உட்பட இருபத்தி இரண்Dஉ அவதாரங்கள் இருக்கின்றன. அதில் புத்தர் இருபத்தி ஒன்றாம் அவதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கருட புராணம் மற்றும் வேறு சில புராணங்களிலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம். பத்து அவதாரங்கள் மட்டுமே பேசப்படுபவையாய், முக்கியமானதாய் இருக்கின்றன, அதைத் தவிர இன்னும் சில அவதாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டாம் அவதாரமாக கல்கி அவதரிக்கப்போவதாக எழுதியிருக்கிறது.
வேறு சிலர் தம் உயர் நிலையை விட்டுத் தாழ்ந்து, பிறழ்ந்து, பூமியில் பிறந்து பின் உயர் நிலை எய்துகின்றனர். இன்னும் சிலர் ஏதேனுமொரு குறிப்பிட்டதொரு உயர் நோக்கத்திற்காகப் படைக்கப்படுகின்றனர் (பூமியில் பிறப்பெடுக்கின்றனர்) இப்படிப்பட்டவர்கள், பிறக்கும் (அல்லது உருவெடுக்கும் போது) போதே 'தான் ஒரு அவதாரம்' என்ற தெளிந்த ஞானத்துடன் உருவெடுக்கின்றனர்.
இராமனுக்கு சீதை அபரிக்கப்படுவாள் என்று தெரிந்திருந்ததா? அவர் பதினாறு குணங்கள் நிரம்பப்பெற்ற அவதார புருஷனல்லவா! தெரிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. துளசிதாஸ் இராமாயணத்தில் இராமன் அவதாரமாக இறைவனாக போற்றப்படுகிறான். ராவணன் அபகரித்தது நிஜ சீதையை அல்ல அது 'மாயா சீதா' எனும் வேதவதி என்ற கதை உண்டு. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராமன், மனிதனாக அவதரித்து, ஒரு உயர்ந்த மனிதாக மட்டுமே வாழ்தார். மனிதாக மட்டுமே தன்னை உணர்ந்தார் என்றே கூறப்படுகிறது. அக்னிப் ப்ரவேசம் முடித்ததும், தேவதிதேவர்களும், சிவனும், பிரம்மனும் வந்து "நீ யார் என்று விளங்கவில்லையா?" என்று கேட்டும் கூட "நான் தசரத புத்திரன் இராமன்" என்றே கூறுகிறாராம்.
(நம் மனதின் மேதாவி எண்ணங்கள்): இதை இரண்டு விதமாய் யோசிக்கலாம். தன்னை மனிதனாக பாவித்தப் பின், நிகழ்காலத்தின் மட்டுமே வாழ்ந்த ஞானியின் நிலையில், அவன் தன் இயல்பை மறந்து மனிதனாக மட்டுமே செயல் பட்டான். அப்படி செயல்பட்டதால், அவனே இறையம்சத்தின் பிரதிபலிப்பு என்பதும் கூட நினைவிலிருந்து அகன்று விட்டது.
அல்லது
தான் இறை என்பது நினைவில் இருந்தும், அவன் தன்னை மனிதனாக மட்டுமே வெளிப்படுத்தினான்.
கண்ணன் அவதாரம் வெகு வித்தியாசமானது. பரிபூர்ண அவதாரமான க்ருஷ்ணன், தான் மனிதனாக வாழ்ந்த போதும், இறைவனின் அத்தனை அம்சங்களையும் வியக்கத்தக்க வகையில் பல சில சமயங்களில் வெளிப்படுத்தினார்.

No comments:
Post a Comment