December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (திருக்குறள் கூறும் நெறி)

திருக்குறள் என்னும் அறநூல் ஹிந்து மதத்திற்கு (அல்லது பொதுவாக எந்தவொரு மதநம்பிக்கைக்கும்) புறம்பானதல்ல. அங்கு சொல்லப்பட்டுள்ளவையும் மதங்களுடன் ஒன்றி நிற்கும் கருத்துக்களே என எடுத்திரைக்குமாறு பல குறள்களும் அதற்கான விளங்கங்களும் காணலாம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவன் உண்மையான அந்தணன் என்கிறது குறள். இவ்விடத்திலேயே நமக்கு எவன் உண்மையான அந்தணன் என்று தெரிந்துவிடுகிறது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


இறைவனின் அடி சேர்ந்தால் பிறவிகள் தொலைக்கப்பட்டுவிடும். அடுத்அடியாகிய 'இறைவன் பற்றிய சிந்தனை அற்று இருப்போர் மீண்டும் பிறந்து உழல நேரிடும்' எனபது நமக்கு தானாகவே புரிந்துவிடுகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


மழை பொய்த்துப்போனால் இவ்வுலகில் வானோர்க்கு நடை பெறும் வழிபாடுகள் நடைபெறாமல் போகும் எனும் குறளில் திருவள்ளுவர் 'வானோர்' என்று சிலரை குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் பல மதங்களில் ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று.


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி

ஐம்புலன்களை அடக்கமாட்டாதவனுக்கு இந்திரனின் கதியே சாபமே சிறந்த சான்று. இங்கு 'இந்திரன்'னும் அவனுக்கு நேர்ந்த கதியும் இக்குறள் சொல்லாமல் சொல்கிறது.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.


தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.

( நன்றி ( http://www.ikmahal.org/tirekural/27thavam.htm ) )

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்


என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்

ஊழ் எனும் விதியை விட வலிமை உள்ளது வேறென்ன இருக்கிறது? எல்லாவற்றையும் தாண்டி அது முன் வந்து நிற்கும் வலிமை உடையது' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 'விதி' என்னும் சொல் குறளில் அரங்கேறி இருக்கிறது. எனவே குறள் மதக் கோட்பாடுகளை அப்புறப்படுத்தும் விஷயமே அல்ல என்பதை தம் வாதமாக வைக்கிறார் கதாசிரியர்.

No comments:

Post a Comment