December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மனத்திற்கும் அப்பால்)

நம் மனமே நமக்கு முதல் பகை அல்லது நண்பன். நாம் மகிழ்ச்சியாய் இருக்க எண்ணினாலும், இருப்பதில்லை. ஏனெனில் நம் மனத்தையே நமக்கு பகைவனாக மாற்றிவிடுகிறோம்। மற்றோருக்கு கெடுதல்-ஊறு விளைவிக்கிறோம், புண்படுத்துகிறோம், அவை யாவும் நாம் நமக்கே ஊறு விளைவித்துக் கொள்வதாகும். ஒருவன் தன்னுள் இருக்கும் ஆன்மாவை நேசித்தால், தன்னை நேசித்தால், அவனால், வன்முறை-போதை மருந்துக்கள் போன்ற வஸ்துக்களில் ஈடுபட முடியாது। அவனே தன்னை அவமதித்து தனக்கு வியாதியை உண்டுபண்ணிக்கொள்கிறான். அவனுள் இருக்கும் காழ்புணர்ச்சி - தாழ்ச்சி எண்ணங்கள்-முதலியனவற்றால் ஊறு விளைவித்துக்கொள்கிறான். அவனை அவனை நேசிக்க வேண்டும். இதைத் தான் க்ருஷ்ணன் "love thyself" என்கிறார்.

ஆனந்தம் என்பது மனதின் மகிழ்ச்சி நிலை அல்ல. ஆனந்தம் என்பது ஷாந்தம் என்ற நிலை. க்ருத யுகத்தில், பிருகு, தம் தந்தை வருணனிடம், உண்மையான ஆனந்தம் என்பதை எப்படி அறிவது எனக் கேட்க, வருணன், பிருகுவை தபஸ் செய்யச் சொல்கிறார். இந்த இந்திர்யங்களும், சரீரமும்தான் எல்லாவற்றையும் உணருகிறது, இதுவே ஆனந்தம், நிரந்தரமானது எனக் கண்டுகொண்டு வருணனிடம் தாம் கண்டதை உரைக்கிறார். இன்னும் கொஞ்சம் தவம் செய்" என்று மறுபடியும் அனுப்பி வைக்கிறார். இவ்விடத்தில் நாம் அறியவேண்டியது ஒன்றுள்ளது. உலகம் என்பது மாயை எனச் சொல்வது relative அபிப்ராயம், ஆனால் உலகமும் அதன் மகிழ்ச்சியும் முற்றிலும் தவறு என்பது அல்ல. இந்த விதமான உலகமயமான ஆனந்தம் தவறு என்பதல்ல. அதனாலேயெ பிருகு "சரீரமும் இந்திரியமும் இன்பம்" என்று சொல்லும் போது "அது தவறு, இன்னும் தவம் செய்" என்று சொல்லவில்லை வருணன். "இன்னும் தவம் செய்" என்று மட்டுமே சொல்கிறார். மேலும் தவம் செய்த பிருகு, உண்மை ஆனந்தம், ப்ராணனில் இருப்பதாக உணார்கிறார், பின் படிப்படியாக, அவர் நிறைவான ஆனந்த (ஷாந்த) அனுபவத்தை உணர்வதாக தைத்ரிய உபநிஷத் எடுத்துரைக்கிறது.

No comments:

Post a Comment