September 30, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (826-850) (with English meanings

Image result for beautiful goddess Lalitha
DurgaDevi as Uddhama Vaibhava - Veera Matha
விபூதிவிஸ்தாரம்

ப்ரசவித்ரீ;
ப்ரசண்டா;
ஆக்ஞா;
ப்ரதிஷ்டா;
ப்ரகடாக்ருதி:;
ப்ராணேஷ்வரீ;
ப்ராணதாத்ரீ
பஞ்சாஷத்பீட ரூபிணீ;
விஷுங்கலா;
விவிக்தஸ்தா;
வீரமாதா;
வியத்ப்ரஸூ;
முகுந்தா;
முக்தி-நிலயா;
மூலவிக்ரஹ ரூபிணீ;
பாவக்ஞா;
பவரோகக்னீ;
பவசக்ர ப்ரவர்தினீ;
சந்த:சாரா;
ஷாஸ்த்ர-சாரா;
மந்த்ர-சாரா;
தலோதரீ;
உதார கீர்த்தி:;
உத்தாம வைபவா;
வர்ண ரூபிணீ;

()
ப்ரசவித்ர் = பிரசவித்தல் - பிறப்பித்தல்

#826 ப்ரசவித்ரீ = பிரபஞ்சத்தை பெற்றெடுத்தவள், பிரசவித்தவள்



#827 ப்ரசண்டா = ரௌத்திரம் கொண்டவள் - (அறச்)சீற்றமுடையவள்



()
ஆக்ஞா = ஆணை - கட்டளை - அதிகாரம் 

#828 ஆக்ஞா =   ஆக்ஞையானவள்; - அவளே 'ஆணை' ஆகிறாள்,  ஆணை பிறப்பிக்கும் அதிகாரியுமாகிறாள்



#829 ப்ரதிஷ்டா = அகிலத்தின் அடிப்படையும் அஸ்திவாரமுமானவள்

()
ப்ரகடா = பார்க்ககூடிய -  விளங்கக்கூடிய
ஆக்ருதி = வடிவம்

#830 ப்ரகடாக்ருதி: = பிரத்தியட்சமான ஸாந்நித்யம் உடையவள் (மஹத் ரூபம் தாங்கி பிரத்தியட்சமாகிறாள்



()
ப்ராண = பிராணன் - உயிர்சக்தி 
ஈஶ்வரீ = இறைவி 

#831 ப்ராணேஷ்வரீ = ஆன்மாவை ஆளும் ஈஸ்வரீ



()
தாத்ர் = வழங்குதல்

#832 ப்ராணதாத்ரீ = உயிர்சக்தி தந்தருள்பவள் (ஊட்டமளிப்பவள்) 



()
பஞ்சாஷ = ஐம்பது
பீட = பீடம் - அரியாசனம்
ரூப = வடிவம்-உருவம் - வடிவம் தாங்குதல்

#833 பஞ்சாஷத்பீட ரூபிணீ = ஐம்பது சக்தி பீடங்களில் நிலைபெற்றிருப்பவள் 



()
ஷ்ருங்கலா = சங்கிலி
வி = இல்லாத - விலக்கி

#834 விஷ்ருங்கலா =(கால-நேர-தேச ) எவற்றினாலும் பிணைக்கபடாதவள் ie எல்லைகளுக்கு அபாற்பட்டவள், சுதந்திரமானவள் 



()
விவிக்த - தனிமையான - பரிசுத்தமான  - ஏகாந்தமான
ஸ்தா = நிலை கொண்டிருப்பவள்

#835 விவிக்தஸ்தா = ஏகாந்தமான இடங்களில் வசிப்பவள் *

*  ஏகாந்தம் விரும்பும் ஞானிகளின் புனிதமான மனதில் வசிப்பவள் 



()
வீர = வீரர்கள் - துணிவு மிகுந்தவர்கள்

#836 வீர மாதா =   நெஞ்சுரம் கொண்டோர்க்குத் தாயாக விளங்குபவள் 

* தனது அகத்தை துறந்த  பண்டிதர்களையும் மெய்ஞானிகளையும், தீயோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர்களையே வீரர்கள் என்று குறிப்பிடுகின்றனர். 



()
வியத் = ஆகாயம் 
ப்ரஸு = பிரசவித்தல்

#837 வியத்ப்ரஸு = அம்பரத்தை உருவாக்கியவள் 


#838 முகுந்தா = முக்தியைத் தருபவள் 


()
முக்தி = விடுதலை
நிலய = இடம் - வசிக்குமிடம்

#839 முக்திநிலயா = முக்தியின் இருப்பிடமானவள் 

()
மூல = மூலம் - அடிப்படை
விக்ரஹ =  தோற்றம்
ரூப = வடிவம் உருவம்

#840 மூல விக்ரஹ ரூபிணீ = தோற்றவடிவங்களின் ஆதாரமானவள்  (சிருஷ்டியின் அடிப்படை- மஹத் முதல் பொருள்சார்ந்த அனைத்துப் படைப்பின் ஆதாரம்) 



()
பாவ = ரசம் - உணர்வு - மனப்பாங்கு
ஞா = அறிவு 

#841 பாவக்ஞா = அனைத்து உணர்வுகளையும்  எண்ண ஓட்டங்களையும் அறிபவள் (பந்தபட்ட ஜீவனின் உணர்வுகள்)



()
பவ = லோகாயதமான இருப்பு, 
ரோக = வியாதி
ரோகக்னா = வியாதி நீக்குதல்

#842 பவரோகக்னீ = உலகாயதமான பிறப்பு-இருப்பு-இறப்பு என்ற வியாதியை களைபவள் (முக்தி நல்குபவள்) 



()
சக்ர = சக்கரம்
பவ சக்ர = பிறப்பு இறப்பு எனும் லோகாயத சக்கரம் 
ப்ரவர்தன் = நிகழ்த்துதல் - இயக்குதல்

#843 பவ சக்ர ப்ரவர்த்தனீ = பிறப்பு இறபு என்ற சுழற்சியை நிகழ்த்துபவள் 



()
சந்தஸ் = உயர்ந்த பாசுரங்கள் - வேத வாக்கியங்கள்
சாரா = சாரம்

#844 சந்தஸ்-சாரா =  உயர்ந்த பாசுரங்கள், வேதம் கூறும் நல்வாக்கியங்களின் சாரம்ஸமாக விளங்குபவள் 




()
ஷாஸ்த்ர - சாஸ்திரங்கள் 

#845 ஷாஸ்த்ரசாரா = சாஸ்திரங்களின் சாரமானவள்  


()
மந்த்ர = மந்திரங்கள் - ஸ்லோகங்கள் - ஸ்தோத்திரபாடல்கள் 

#846 மந்திரசாரா = மந்திரங்களின்  சத்தானவள் ie பொருளானவள் 


()
தலின் = மெலிந்த
உத்தன = இடை
தலினோதரீ = மெலிந்த இடையுடையவள்

#847 தலோதரீ = மெல்லிடையாள் 



()
கீர்த்தி = புகழ் - போற்றுதல்
உதார = தாராளமான 

#848 உதார கீர்த்தி = பெரும் புகழுக்குறியவள் 



()
வைபவ = மேன்மை - சிறப்பு
உத்தாம = எல்லை கடந்த

#849 உத்தாம வைபவா = அளவற்ற மகிமை பொருந்தியவள் 



()
வர்ண =  சப்தம் - அசை/சீர் - எழுத்துகள் (உயிரெழுத்து) 

#850 வர்ண ரூபிணீ = ஒலி (எழுத்து அதன் அசை, சீர்)  வடிவமானவள் 



Lalitha Sahasranama (826-850)


Vibhoothi Visthaaram


PrasavithrI;
PrachandA;
AagnA;
PrathishtA;
Prakata-akrithi:;
PraaneshwarI;
PraanadhatrI;
Panchashath Peeta RoopiNI;
VishunkhalA;
VivikthasthA;
Veera MaathA;
Viyath Prasoo:;
MukundhA;
Mukhthi NilayA;
Moola Vigraha RoopiNI;
BhaavagnA;
Bhava-rOga-agnI;
Bhava Chakra PravarthinI;
Chandha: saarA;
Shastra saarA;
Mantra saarA;
thalodharI;
Udhaara Keerthi:;
Uddhama VaibhavA;
VarNa RoopiNI;



()
Prasavithr = To beget - bring about

#826 PrasavithrI = Who has begets the universe; She has birthed the universe



#827 PrachandA = Who is fiery 



()
Aagna-Aagnya = Command - Order

#828 Aagna (aagnya) = She who is the Authority; who is the command.



#829 PrathishtA = Who is the support, foundation (of the universe).



()
Prakata = (to make it) apparent- visible- open
Akruthi= form, shape 

#830 Prakata-Akruthi = Whose manifestation(presence, universal form) is evident 



()
PraaNa = Life force - spirit 
Ishvari = Master (here mistress)

#831 PranEshvari = Who rules over the soul 



()
Datr = Bestower

#832 PraaNa-dhatri = Who is the giver of praaNa(life forcE)



()
PanchAsha  = Fifty  
peeta = Seat - thronE
Roopa = form - shape - is embodied

#833 PanchAshatpeeta RoopiNI = Who is seated on the throne of fifty Shakthi Peetas



()
Shrunkhala = Chain
Vi = without

#834 Vishrunkhala = Who is unbound, is free. 



()
Viviktha = isolated-pure-solitary
Stha = stays 

#835 VivikthaSthaa = Who resides in secluded places *

* Who is present in the quietened, refined  mind of wise men



()
Veera = brave- Valiant

#836 Veera MaathA = Who is the mother of Courageous *

*Courageous once again refers to those brave and wise men who have surrendered their egos and those who fight against wicked. 



()
Viyath = Ether -sky  
Prasoo = giving birth to - bearing 

#837 Viyath Prasoo = Who created the sky




#838 MukundA = She who liberates - who gives salvation



()
Mukthi = Freedom
Nilaya = Place - dwelling place

#839 Mukthi Nilaya = Who is the abode of Liberation 



()
Moola = Source - Origin
Vigraha = physique, figurine
Roopa = form, appearance

#840 Moola Vigraha RoopiNi = She who is the  root of creation (subsequent 
formation of material universe)



()
Bhaava = attitude - sentiment(s)
Gna = to know

#841 BhaavagnA = Who has complete knowledge of emotions and thoughts (of Jeevas)



()
Bhava = worldly existence
Roga = disease
Rogagghna = Remove disease  

#842 BhavarogaghnI = Who destroys the disease of worldy existence (grants liberation)


()
chakra = Wheel 
Bhava Chakra = Wheel of existence ie of birth and death
Pravarthan = bringing about - conduct - order

#843 Bhava chakra PravarthanI = Who causes cyclical birth and death 



()
Chandhas = sacred hymn - vedic texts
SaarA = crux - essence

#844 Chandhas-saarA = Who is the quintessence of Vedic hymns and texts 



()
Shastra = Scriptures

#845 Shastra SaarA = Who is the essence of Scriptures



()
Mantra = Prayer - song of praise

#846 Manthra SaarA = Who is the essence of Manthras


()
Thalin = Slender
uddhana = waist
Thalinodhari = Slender waisted woman

#847 ThalOdharee =  She who is slender waisted



()
Keerthi = fame - credit
Udhaara = generous - liberal

#848 Udhara Keerthi = Whose Glory is magnanimous 



()
Vaibhava = greatness 
Uddhaama =  unlimited

#849 Uddhaama VaibhavA = Whose grandeur is immense 

()
VarNa = vowel - sound - syllable

#850 VarNa roopiNI = She who is in the form of sound (of syllables) 


(to Continue) 

September 28, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (801-825 ) (with English meanings)


Dakshayani/Sati Devi 



விபூதி விஸ்தாரம்

புஷ்டா;
புராதனா;
பூஜ்யா;
புஷ்கரா;
புஷ்கரேஷணா;
பரம்ஜ்யோதி;
பரம்தாம;
Add caption
பரமாணு;
பராத்பரா;
பாஷஹஸ்தா;
பாஷஹந்த்ரீ;
பரமந்த்ர விபேதினீ;
மூர்த்தா;
அமூர்த்தா;
அனித்ய த்ருப்தாப;
முனிமானஸ ஹம்சிகா;
சத்யவ்ரதா;
சத்ய ரூபா;
சர்வாந்தர்யாமினீ;
சதீ;
ப்ரஹ்மாணீ;
ப்ரஹ்ம;
ஜனனீ;
பஹுரூபா;
புதார்ச்சிதா; 

#801 புஷ்டா = நன்கு போஷிக்கப்பட்டவள்- வளமானவள் -செழுமையானவள் (சிருஷ்டியின் ஊட்டமான சாரத்தையுடையவள் *

*பக்தர்களின் பக்தியால் செழித்திருப்பவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். 

#802 புராதனா = புராதனமானவள்- தொன்மையானவள் 

()
பூஜா = பூஜை

#803 பூஜ்யா = பூஜைக்குறியவள்

#804 புஷ்கரா = அதி உன்னதமான ஞானத்தையுடையவள் - பூர்ணமானவள் - முழுமையானவள் *

* பூரண  அறிவு நிலையின் குறியீடாக தாமரை அறியப்படுகிறது.  சிவனுக்கு புஷ்கர என்று பெயர் இருப்பதால் லலிதாம்பிகை சிவனும் ஆகியவள் என்ற அர்த்தத்திலும் இந்த நாமம் அறியப்படலாம். 

()
புஷ்கர = நீலத்தாமரை
ஈக்ஷ = கண்கள் - பார்வை

#805 புஷ்கரேக்ஷணா = தாமரையொத்த கண்களையுடையவள்

* உலக அன்னையின் உயர்-பார்வையில் உயிர்களனைத்தையும் பார்க்கிறாள் என்றும் அறியலாம். 

()
பரம = சிறந்த - அதி உன்னத
ஜ்யோதி = ஜோதி - ஒளி 

#806 பரம்ஜ்யோதி = பூரண ஒளியானவள் 

()
தாம = இருப்பிடம் - அதிஷ்டானம்

#807 பரம்தாம = உயர்ந்த அதிஷ்டானமானவள் - உயர் இருப்பிடமானவள். 

()
அணு = அணு

#808 பரமாணு =   நுண்ணிய  அணுவாகியவள் (ஆதாரமாக எங்கும் விரவி நிறைந்தவள்) 

#809 பராத்பரா = உயர்ந்தவற்றுள் உயர்ந்தவள் - ஒப்புயர்வற்றவள்  

()
ஹஸ்த = கைகள்
பாஷ = பாசக்கயிறு (இணைக்கும் பந்தக் கயிறு) 

#810 பாஷஹஸ்தா = பாசக்கயிற்றை கையிலேந்தியவள்

()
ஹந்த்ரீ = அழிப்பவர்

#811 பாஷஹந்த்ரீ = பந்தபாசத்தை வேரறுப்பவள் (பாசம் அறுத்து முக்தி நல்குபவள்) 

()
பர (பரா அல்ல) = வெறு - இன்னொன்று (வேறான)
மந்த்ரா = மந்திரம்
விபேதின் = அழித்தல்

#812 பரமந்த்ர விபேதினீ = தீயசக்திகளின் மந்திர பிரயோகங்களை அழிப்பவள்

#813 மூர்த்தா = உருவம் தாங்கியவள்

#814 அமூர்த்தா = அருவமானவள் - உருவற்றவள் (பரம்பிரம்மம்)

()
அநித்யா = நித்தியமற்ற
த்ருப்தா = திருப்தி அடைதல்

#815 அநித்ய த்ருப்தா = அநித்தியமாவற்றின் உபசாரத்திலும் திருப்தி அடைபவள் 

()
முனி - தவமுனிவர்கள் - யோகிகள்
மானஸ - மனதில்
ஹம்ஸ = அன்னபட்சி

#816 முனிமானஸ ஹம்ஸிகா = தவ யோகியரின் மனத்து  அன்னப்பறவை போன்றவள்*

* மனதை ஏரிக்கு ஒப்பிட்டால், எண்ணற்ற எண்ண நீர்குமிழிகள் தோன்ற வல்லது. ஞானிகளின் மனமோ எண்ணங்களற்ற தெளிந்த நீருக்கு ஒப்பாகும். தெளிந்த  நீரில் அன்னபறவை என வலம் வருகிறாள் அன்னை. 

()
சத்ய = உண்மை
வ்ரதா = விரதம்

#817 சத்யவ்ரதா = சத்தியத்திற்கே உறுதி பூண்டவள்

#818 சத்ய ரூபா = சத்தியத்தின் வடிவமானவள்

()
சர்வ = எல்லாமும் -ஒவ்வொன்றும்
அந்தர்யாமின் = ஆத்மா - உள்ளுறையும் ஆத்மா


#819 சர்வாந்தர்யாமினீ = அனைத்துள்ளும் உறையும் அந்தராத்மாவாக ஒளிர்பவள் (சர்வவியாபி)

#820 சதீ = தக்ஷப் பிரஜாபதியின் மகளான தாக்ஷாயணி எனும் சதி தேவி *

* சதி என்றால் "சீலம் நிறைந்த துணைவி" என்பதால், சிவனின் பத்தினி என்பதும் விளக்கம். 


#821 ப்ரஹ்மாணீ = பரப்ரஹ்ம்மத்தின் சக்திஸ்வரூபமாக இருப்பவள் (சிருஷ்டிகர்த்தா, பரப்ப்ரஹ்மா ie சிவன்)

#822 ப்ரஹ்ம = சிருஷ்டி கர்த்ரீ (பரப்ரஹ்மா, சிவனுமானவள்)

#823 ஜனனீ = ஜகன்மாதா (ஜகத்தை சிருஷ்டித்த மாதா)

()
பஹு = பல 

#824 பஹுரூபா = அனேக ரூபம் தரித்தவள்

()
அர்ச்சித = அர்ச்சித்தல்- வழிபடுதல்
புத = பண்டிதன் 

#825 புதார்ச்சிதா = அறிவாளிகளால் வழிபடப்படுபவள் 


(தொடரும்) 

Lalitha Sahasranama (801-825) 


Vibhoothi Visthaaram 



PushtA;
PuraathanA;
PoojyA;
PushkarA;
PuskhareshkanA;
Paramjyothi;
Param Dhama;
ParamaaNu;
ParaathparA;
Paasha HasthA;
Paasha HanthrI;
Para Manthra vibhedinI;
MoorthA;
AmoorthA;
Anithya ThrupthA;
Muni maanasa hamsikA;
Sathya VrithA;
Sathya RoopA;
Sarva-antharyaminI;
Sathee;
BrahmaNI;
Brahma;
JananI;
Bahu RoopA;
BudharchithA; 



#801 Pushta = Who is well-nourished (thereby is the essence for creation) *

*Nourishment  also mean   flourishing (with love poured by devotees)


#802 Puraathana = Who is ancient 


()
Pooja = To worship 

#803 Poojya = Who is venerable to be worshipped 


#804 Pushkara = Who is the most enlightened, Complete,  the Whole*

*Pushkara represents Lotus which is the symbolism of supreme consciousness and enlightenment. Significance of Lotus is numerous and its symbolises highest realms. Shiva is also known as Pushkara and this naama could mean she is Shiva. 


()
Pushkara = Blue Lotus 
Iksha = eyes- view 

#805 Pushkareshana = Who is lotus-eyed *

* Alternatively this nama could mean, she looks at her creation from highest stand point of "Supreme Mother", as Paramathma. 


()
Parama = Supreme - highest 
Jyothi = Light 

#806 Paramjyothi = Who is the absolute Radiance, light. 

()
Dhaama = Abode

#807 Paramdhaama = Who is the highest abode. 

()
aNu = Atom 

#808 ParamaaNu = Who is the subtlest Atom (subtlest particle, the foundation) 


#809 Paraathpara = Who is the supreme to the highest  (higher than the highest)

()
Hastha = hand(s)
Paasha = noose (that binds) (attachment)

#810 Paasahasthaa = Who has noose in her hands

()
Hanthri =  destroyer

#811 Paashahanthri = Who destroys the attachment (of the soul towards the outer world) 

()
Para (not paraa) = other , another (different)
Manthra = invocation, formula for prayer
VibhEdin = Destroy 

#812 Paramanthra vibEdhini= Who destroys the effect of evil spells 

#813 Moortha = She who is embodied , i.e has forms 

#814 Amoortha = She who is without forms .i.e who is formless (Parabrahma)

()
ANithya = impermanent 
Thruptha = Sated - is satisfied

#815 Anithya Thruptha = Who is sated with offerings (by devotees) which are 
impermanent in nature 

()
Muni = Saints, Sages
manasa = in the mind 
hamsa = Swan 

#816 Muni maanasa Hamsika = She who is like the swan in the minds of sages *

*Mind can be  compared to the lake where thoughts are like countless Ripples. Clear, calm lake can be compared to the mind of a realised souls i.e thoughtless. She swims like the swan in the mind of those realised souls,i.e Sages.


()
Sathya = Truth 
Vratha = vow- promise

#817 Sathya Vratha = Who determined to  truth 

#818 Sathya Roopa = Who is the incarnation of truth 

()
Sarva = Every - each and every 
Antharyamin =  soul - that which resides within


#819 Sarva-anthayamini = Who is the super-soul existing within everything (omniscient) 

#820 Sathee = Who is Sati, daughter of Daksha Prajapathi *

Sati also means "virtuous wife", in that context, it would mean wife of Shiva.

#821 BrahamaaNi = Who is the female energy of Brahman(the creator, Parabrahma, ie Shiva)

#822 Brahma = Who is the creator (Parabrahma, Shiva)

#823 Janani = Who is the divine mother (who bore the universe, Universal Mother) 

()
Bahu = plenty

#824 BahuRoopa = Who has multiple forms

()
Architha = Saluted
Budha = Learned

#825 Budharchitha = Who is worshipped by the wise

(to Continue) 

September 25, 2019

Lalitha Sahasranama (776 - 800) (தமிழ் மற்றும் ஆங்கில விளகத்துடன்)


Image result for Mandhara flowers red coral tree
Madhara Flower (Indian coral tree)





Vibhoothi Visthaaram 

Mandhaara Kusuma priyA;
Veera-AraadhyA;
Viraad RoopA;
VirajA;
VishvathO-mukhI;
Prathyag roopA;
ParaakashA;
PraaNadhA;
PraaNa RoopinI;
MaarthaaNda bhairava-aaradhyA;
ManthrinI Nyastha Raajyadhu:;
TripurEshI;
JayathsEnA;
Nisthrai guNyA;
ParaaparA;
Sathya-Gnanaanandha roopA;
Saamarasya paraayaNA;
KapardhinI;
KalamaalA;
Kaamadhukh;
Kaama RoopinI;
Kalaa nidhi;
Kaavya kalA;
RasagnA;
Rasa shEvadhI;

()
Mandhaara  = Mandhara flowers ( botanical name: Erythrina Indica 
                               Common Name: Indian coral tree)*
Kusuma =   flower - blossom
Priya = is fond of 

#776 Mandhaara-Kusuma-PriyA = She who is fond of Mandhara Flowers *

*Mandhara flower in sanskrit refers to Indian coral tree and is not the same Mandhara flower (மந்தாரை) referred in other languages (Tamil or malyalam) Indian coral tree is also regarded as tree of paradise.


()
Veera = Heroic - courageous
Aaradhya = is worshipped 

#777 Veera-aradhyA = Who is worshipped by the brave warriors *

* Courageous referred to those who has won the Ego, realised self and those who never fear. 


()
Viraad/Viraaj/Viraat = Cosmic - Universal(Gigantic) 
Roopa= Form 

#778 Viraad RoopA = Who has cosmic form (Macro) 

()
Raja = Dust - impurities
Vi = without 

#779 VirajA = She who is blemishless 

()
Vishwatah = in all directions  - everywhere
Mukha = Face

#780 ViswathOmukhi = She who has face in all directions (who has faces everywhere, who is represented by every face in the universe, ie omnipresent ) 

()
Prathyancha / Prathyagra = inward - inner - interior
Roopa = Form

#781 Prathyag-RoopA = Whose form is visible within (as inward self)  ie. realised within 

()
Para = another 
Parama = Supreme
Aakash = Ether - space

#782 ParakaashA = Who is the supreme space (ether)  (Subtlest cosmic form)


()
PraaNa = Life force - breath 
Dha = To give

#783 PraaNadhA = Who gives life


#784 PraaNa RoopiNi  = Who is the embodiment of PraaNa 

()
MaarnthaaNda-Bhairava = One of the sixtyfour Bhairavas * 
Aaradhya = to worship 

#785 MaarthaaNda-bhairava-AraadhyA = Who is worshipped by MarthaaNda-Bhairava

*Bhairavas are referred as Ashtanga bhairavas.They are grouped  as eight under each category (64 bhairavas) . There are also other interpretations, sources and explanations  from various scriptures about Bhairava.

()
ManthriNI = Minister - Name of One of her ministers
Nyastha  = fixed - applied
Rajya = Kingdom

#786 ManthriNi Nyashta RaajyadhOo = Who has entrusted the rule of the 'universal kingdom' to Manthrini 

()
Tripura = Three lokas
Ishi = Master (Mistress)

#787 TripurEshI  = Who rules Three lokas (tripura) *

* Tripura was the city governed by Asuras which was destroyed by Lord shiva (ignorance personified as cities). TRipura may also refer  to the three lokas of Brahma Vishnu and Shiva. 


()
Jayat - Jayati = To win or conquer 
Sena = Army 

#788 JayathSEna = She who has army which is ever-victorious 

()
Nis = Mostly prefixed to mean "away from" or "out of "
GuNa = Qualities
TriGuna = Three gunas viz Sathva, Rajasa , Tamasa

#789 Nisthrai GunYa = Who is beyond (devoid of) TriguNa (Sathvika Rajasa and Tamasa) 

()
Paraa = Superior- absolute
Aparaa = Inferior

#790 Para-aPara  = She who is both Para and Apara (inferior here means knowledge which is hidden in case of lower manifestations) *

#790 ParAparA = She who is parapara *

*Brahman with highest knowledge is paraa, as it continues to manifest its attributes become less pure. As Para it has highest attribute, as Apara it is inferior. Third form is para-para, which is neither superior nor inferior (Manifestations referring to midway hierarchy, or.. inferior deities with attributes)

()
Sathya = Truth
Gnaana = Knowledge
Aanandha = Bliss 

#791 Sathya Gnaanaanandha RoopA = Who is the embodiment of truth knowledge and bliss. 

()
Paraayana = devoted to- absorbed in
Saamarasya = Yoga - unification - in union and harmony

#792 Saamarasya ParaayaNA = Who is absorbed in union and harmony(with Shiva)    (equipoised with Shiva. Nama talks on highest union of Purush  and prakruthi )

()
Kapardin =  Having braided or knotted hair ie. Shiva

#793 KapardhinI = Wife of Shiva (Kapardin) 

()
Kalaa = art (Art forms)
Maala = Garland

#794 KalaamalA = Who wears all forms of Art as a Garland (all art forms  decorate her, praise her) 

()
Kaamadhuk = Bestower of desires
Kaamadhuk = Source of prosperity (of desires)

#795 Kaamadukh = Who grants desires 

#796 Kaama RoopiNi = Who takes any desirable form ( any form at will) 

()
Nidhi = Treasure - reservoir 

#797 Kala Nidhi = Who is the treasure-house of Arts (source from which forms of arts has sprung)

()
Kavya = Poetry
Kala = Art 

#798 Kavya-KalA = Who is the source poetic skills 

()
Rasa = Sentiment - Bhava - essence *
Gna = Gyaan -   Knowing

* Saundarya lahari states eight rasas. Natya shastras emphasise on eight rasas
which includes Love, Laughter, Anger, Compassion, Hatred, Wonder, Courage and Fear


#799 RasagnA = She who has knowledge of these bhavas (who is skilled to control  these rasas)


()
Sheavdhi = Treasury - Jewel 

#800 Rasa ShevadhI = She who is the treasury of Rasas (sourcE) 


(to Continue) 

லலிதா சஹஸ்ர நாமம் (776  - 800 ) 

64 Art forms


விபூதி விஸ்தாரம்

மந்தார குசுமப்ரியா;
வீர-ஆராத்யா;
விராட்ரூபா;
விரஜா;
விஷ்வதோமுகீ;
ப்ரத்யக்-ரூபா;
பராகாஷா;
பராகாஷா;
ப்ராணதா;
ப்ராண-ரூபிணீ;
மார்த்தாண்டபைரவ-ஆராத்யா;
மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ:;
த்ரிபுரேஷீ;
ஜயத்சேனா;
நிஸ்த்ரைகுண்யா;
பராபரா;
சத்ய-ஞானானந்த ரூபா;
சாமரஸ்ய பராயணா;
கபர்தினீ;
கலாமாலா;
காமதுக்;
காமரூபிணீ;
கலா நிதி;
காவ்யகலா;
ரசக்ஞா;
ரச-ஷேவதி;

()
மந்தாரா = மந்தார (மலர்கள்)  (botanical name: Erythrina Indica 
                     Common Name: Indian coral tree) *
குசும = பூ  - மலர்
ப்ரியா = ப்ரியமான

#776 மந்தார-குசும-ப்ரியா = மந்தார மலர்களை விரும்புபவள்

* சமஸ்க்ருதத்தில் மந்தார மலர் "Indian Coral tree" வகையை குறிக்கிறது.  நாம் தமிழில் குறிப்பிடும் மந்தாரை வேறு. 


() 
வீர = வீரம் - துணிவு
ஆராத்யா = போற்றப்படும்

#777 வீர-ஆராத்யா =  வீரர்களால் ஆராதிக்கப்படுபவள்  *

* பெருந்துணிவோடு அகங்காரத்தை வென்று ஆத்ம நிறைவை பெற்றவர்களை இங்கு வீரர்கள் என்று குறிப்பிடத்தகும். 

()
விராட்(d) / விராஜ் / விராட்(t) = அண்டம் - உலகளாவிய
ரூப = ரூபம்

#778 விராட் ரூபா = பிரபஞ்சத்தை ரூபமாகக் கொண்டவள் (மஹா ரூபம்)

()
ரஜ = அசுத்தம் - தூசு
வி = தவிர்த்த - இல்லாமல்

#779 விரஜா = அப்பழுக்கற்றவள் 


()
விஷ்வத: = எல்லா திக்குகளிலும் - எங்கும்
முக = முகம்

#780 விஷ்வதோமுகீ = எத்திக்கும் நீக்கமற முகம் தாங்கியிருப்பவள் (எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவள்)

()
ப்ரத்யஞ்சா / ப்ரத்யக்ரா = உள்முகமாக - உட்புறம்
ரூப = ரூபம்

#781 ப்ரத்யக்ரூபா = உள்முகமாக விளங்குபவள் (ஆத்ம விளக்கமானவள்) ie அந்தர்யாமி

()
பரா = இன்னொன்று
பரம = உயர்ந்த
ஆகாஷ் = வெளி - ஆகாசம்

#782 பராகாஷா = பரவெளியாக இருப்பவள் ( அண்டத்தின் சூக்ஷ்ம வடிவாக)


()
ப்ராண = உயிர் சக்தி = மூச்சு
தா = வழங்குதல் - தருதல்

#783 ப்ராணதா = உயிரளிப்பவள் (அனைத்து ஜீவராசிக்கும்  உயிரளிப்பவள்; பிராணசக்தியாக விளங்குபவள்)


#784 ப்ராண ரூபிணீ = பிராண வடிவானவள்

()
மார்த்தாண்ட பைரவா = அறுபத்துநான்கு பைரவர்களுள் ஒருவர் *
ஆராத்யா = ஆராதிக்கப்படும்

#785 மார்த்தாண்ட பைரவ-ஆராத்யா = மார்த்தாண்ட-பைரவரால் துதித்தேற்றப்படுபவள்

*பைரவர்களை அஷ்டாங்க பைரவர்கள் என்று குறிப்பிடுவர்.  ஒரு பிரிவில் எட்டு பைரவர்கள் என எட்டு பிரிவுகளாக அறியப்படுகிறார்கள் (அறுபத்தி நாலு பைரவர்கள்) . வேறு சில விளக்கங்களும் ஆதாரங்களும் பைரவர்களைப் பற்றி வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

()
மந்த்ரிணீ = மந்திரி - அன்னையின் மந்திரிகளில் ஒருவர்
ந்யஸ்த =  வரையறுக்கபடுதல்  
ராஜ்ய = ராஜ்ஜியம்

#786 மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ = பிரபஞ்சமெனும் ராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு மந்திரிணியை நியமித்திருப்பவள் 

()
த்ரிபுரா = மூன்று உலகங்கள்
ஈஷீ =  தலைவி

#787 த்ரிபுரேஷீ = மூவுலகை ஆளுபவள் (த்ரிபுரா) *

* த்ரிபுரா என்ற நகரம் அசுரர்களால் ஆளப்பட்டது. அதை சிவனார் அழித்து தர்மம் நிலைனாட்டினார். (அறியாமை என்பதன் உருவகமே த்ரிபுரா) . த்ரிபுரா பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஆளுதலுக்குட்பட்ட மூவுலகம் என்றும் கொள்ளலாம்

()
ஜயத் - ஜயதி = வெற்றி கொள்ளல் - ஜெயித்தல்
சேனா = சேனை

#788 ஜயத்சேனா = சதாவெற்றி முழக்கமிடும் சேனையுடையவள்

()
நிஸ் = புறந்தள்ளி - ஒதுக்கி
குணா = குணங்கள்
த்ரிகுணா = முக்குணங்கள் , ie சத்வ, ராஜஸ, தாமஸ

#789 நிஸ்த்ரைகுண்யா = முக்குணாங்களுக்கு அப்பாற்பட்டவள்; அவற்றால் ஆட்படாதவள்

()
பரா = உன்னத - அதிஉன்னத
அபரா = கீழ்மை

#790 பராபரா = பர தத்துவமாகவும் அபரமாகவும் இருப்பவள் (அபரம் என்பது ஞானம் மறைக்கப்பட்டிருக்கும்   அறியாமையைக் குறிக்கும்) 

#790 பராபரா = பராபர தத்துவமாக திகழ்பவள் *

* பரப்பிரம்மம் உயர்நிலையில்  ஞானத்தின் இருப்பாக  திகழ்வது பரம். அதுவே சிருஷ்டியின் படிநிலைகளில் இறங்கும் போது மட்டுப்படுகிறது. பரம் உயர் தத்துவம், அபரம் கீழான அஞ்ஞான நிலை ( ஜீவனின் நிலை)  . இரண்டுக்கும் இடையே  தேவதைகளின் நிலைகளில் 'பராபரமாக' இருக்கிறாள். படிநிலைகளில்  நடுவாந்திர நிலை, உயர்வுமற்ற தாழ்வுமற்ற, பெரும் அஞ்ஞானத்திலும்  உழலாத இடைபட்ட நிலை. 


()
சத்ய = உண்மை
ஞான =  ஞானம் - சுத்த அறிவு
ஆனந்த = பேரானந்தம்

#791 சத்ய ஞானானந்த ரூபா = சத்தியம், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவகமானவள்

()
பராயணா = மூழ்கியிருத்தல் - ஈடுபட்டிருத்தல்
சாமரஸ்ய = யோகம்  -   இணக்கத்துடன் சங்கமித்தல்

#792 சாமரஸ்ய பராயணா = யோகமெனும் ஐக்கிய நிலையில் மூழ்கியிருப்பவள் (சிவனுடன் சமநிலையில் இணைந்திருத்தல். புருஷ பிரக்ருதியின் ஐக்கிய நிலை) 


()
கபர்தின் = முடைந்த - சடாமுடி ie சிவன்

#793 கபர்தினீ = சிவனின்(கபர்தின்)  பத்தினி



()
கலா = கலைகள் (கலா வடிவங்கள்)
மாலா = மாலை

#794 கலாமாலா = கலாவடிவங்களையே மாலைகளாக தரிப்பவள் (கலையம்சங்கள் அனைத்தும் அவளையே ஆராதிக்கின்றன)

()
காமதுக் = ஆசைகளை அருள்பவள் (பூர்த்தி செய்பவள்)
காமதுக் = சுபீஷத்தின் (ஆசைகள்) ஆதாரம் 

#795 காமதுக் = அபிலாஷைகளை அனுக்கிரகிபவள்

#796 காம ரூபிணீ = (சித்த சங்கலபத்தினால்) விரும்பிய ரூபம் தரிப்பவள் 

()
நிதி = பொக்கிஷம் = ஊற்று

#797 கலாநிதி = கலைகளின் இருப்பிடமானவள் - ஊற்று  (அனைத்து கலைகளின் ஆதாரம்

()
காவிய = கவிதை - காப்பியம்
கலா = கலைகள்

#798 காவ்ய கலா =  கவி காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்

()
ரச = சுவை - சாரம் - மனோபாவம் * 
க்னா =  ஞானம் - அறிவு


*சௌந்தர்ய லஹரி எட்டுவித மனோபாவங்களை (ரசம்) அறிவிக்கிறது. நாட்ய சாஸ்திரமும், சிருங்காரம், ஹாஸ்யம், கோபம், காருண்யம், வெறுப்பு, ஆச்சர்யம், வீரம், பயம் என்ற  எட்டு வகையான ரசங்களை அபினயிக்கிறது. 

#799 ரசக்ஞா = மனோபாவங்களின் தன்மையை அறிந்தவள் (அதனை தன் வயப்படுத்தியவள்)

()
ஶேவதி =  கருவூலம் 

#800 ரச ஷேவதி = மனோபாவங்களின் கருவூலமானவள்


(தொடரும்)