December 30, 2011

கடவுள், இருப்புநிலை மற்றும் stephen hawking
மனிதனின் உயரிய இலக்கு தன்னிலை அறிதல் என்று கூறப்படுகிறது. இதனையொட்டியே ஆன்மீகம், நம்பிக்கை, தேடல், புரிதல், ஜபம் தபம் என அனைத்தும் ஏற்பட்டுள்ளது.  எக்காலத்திலும் பிறப்பு இறப்பை தாண்டிய புரியாத விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கை இருப்பது போல், நம்பிக்கை அற்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியை இரண்டு விதமாய் அணுகலாம்.


 கடவுளை (personal or unexplained force) நம்புபவர்களாக இருப்பவர்களை ஆத்திகர்கள் என கொண்டாலும் நாத்திகவாதிகளில் இரண்டு பார்வைகள் உண்டு என நான் நினைக்கிறேன்.

கடவுள் என தனிப்பட்ட கூட்டம்/உருவகம் இல்லை என்று நினைப்பவர்கள். அனைத்தும் இயற்கை என்ற cosmological action எனக்கருதி அதன் விளங்க்கங்களாகவே அனைத்தையும் கண்டு எனவே கடவுள் என ஒரு விஷயம் தேவை இல்லை என்று வாதம் செய்பவர்கள். ஆனால் இக்கருத்தினை உடைய சிலர், இருப்பு நிலை என்ற  consciousness மேல்நம்பிக்கை உண்டு. அதனால் இவர்களும் ஏறக்குறைய அத்வைத சித்தாந்தத்தில் அல்லது பௌத மத கோட்பாடுகள் பாதி நம்பிக்கை கொண்டவர்களாக சித்தரிக்கலாம். மதம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிடிக்காமல் போனவர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஏறக்குறைய பாதி ஆத்திகவாதிகள் என நான் நினைக்கிறேன்.

இன்னொரு வகை உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாம், "உண்மையான நாத்திகவாதிகள்" அதாவது "இருப்பே/soul/conciousness" இல்லை என நம்புபவர்கள். இவர் தரப்பு வாதங்களில் சில

1. Miracles are hallucinations. 
அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே

2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity

உடல் சாராமல் உலகை உணர்வது சாத்திய‌மற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாதது


3. (Straight from the horse's  mouth, i.e stephen hawkins) "I regard the brain as a computer which will stop working when its components fail. There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark"
மனித உடல் (மூளை) என்பது ஒரு உயிர் வேதி தகவமைப்பு [Adaptive bio chemical machine] உபகரணம். இதன் மூலப் பொருள்கள் பழுது பட்டால்,முடிந்ததும் வாழ்வு முடிகிறது.மறுமை வாழ்வு கிடையாது


4. Brain is responsible conciousness.
மூளையி(னா)ல்தான் உணர்தல் ஏற்படுகிறது

5. When anything out of the ordinary happens, they club it as "mass hypnotism"
இயற்கை விதிகளுக்கு முரணான் ஒன்றை நம்புவதற்கு மன [மயக்க]மே காரணம்

6. பஞ்சபூதங்களின் கூட்டால் விளைந்ததே "இருப்பு நிலை" அந்த கூட்டமைப்பு கலையும் பொழுது இருப்பு நிலை என்ற consciousness  இல்லாமல் கரைந்து விடும்.  when elements dissolve, consciousness dissolves into airy nothing.  ஆன்மா,  soul, போன்றவற்றை மறுக்கின்றனர்.எல்லாவற்றிற்கும் அவர்கள் தரப்பு மறுப்பை வைத்திருக்கிறார்கள்.


ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்ல ஆசை.... தொடருங்களேன்...உங்கள் ஒவ்வொருவரின்

1. கருத்து
2. பார்வை
3. தெரிந்த, அனுபவித்த விஷயங்கள்,
4. ஆச்சாரியர்கள் , குருக்கள், ஸ்வாமிகள் பற்றிய நல் விஷயங்கள்
5. நாத்திகத்தின் கேள்விகள், சுட்டிகள்
6.  நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி
7. carl sagan, முதல் ஐன்ஸ்டீன், stephen hawking போன்றவர்கள் கூற்று / அதன் சுட்டி....
9. உங்களுக்கு தெரிந்த அறிவியல், அணுவியல்,  அனுபவம் சார்ந்த விஷயங்கள்..
10. நம்பிக்கைகள்..
11. குட்டிக் குட்டி தகவல்கள்....
12. சும்மா கலந்து கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர்

13. பெரிய பெரிய விளக்கங்கள்.....
14. பழைய சித்தாந்த விளங்க்கங்கள்எல்லாரும் வாருங்கள்....
எல்லாமே கொண்டு வாருங்கள்..... 

தொடர்ந்து பதில் விவாதம் வைய்யுங்கள்.....ஆங்கில சுட்டி, விவாதம், ஆங்கிலம் கலந்த விவாதமும் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொருவரின் கருத்தும் வேறு யாருக்கேனும் வழிகாட்டியாய் பார்வையாய், ஞானமாய், உண்மையின் உணர்ந்தலாய் இருக்கக்கூடும்.... நீண்ட ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாகத் தொடர்ந்தால் மகிழ்வேன்.... பிறரின் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து உங்கள் கருத்தை தொடரலாம்.

இறுதியாக,...."வெளியே தேடாமல், வீண்விவாதம் செய்யாமல், உள்ளே தேடுவதே வழி" என்ற தெரிந்தாலும், இந்த விவாதம் எதுவரை செல்லும், அல்லது புதிய தகவல்கள் கொடுக்கும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன்...

December 26, 2011

அரசனாக மட்டும் வாழ்ந்த ராமன்
ராமனின் நிலை அரச குலத்தில் பிறந்த நீதி வழுவாத மன்னனின் நிலையாய் இருக்கிறது. விபீஷணன் சரணாகதி அடைகிறான். விபீஷணன் உத்தமமான தம்பியாக செயல்படவில்லை "இவனை நம்பலாமா" என்று கேள்வியை எழுப்புகின்றனர். அதற்கு ராமன், "எல்லா சகோதரர்களும் பரதனைப் போல் இருப்பதில்லை, எல்லா பிள்ளைகளும் என்னைப் போலும் இருப்பதில்லை" என்கிறார்.  விபீஷனனுக்கு ராஜ்ஜியத்தின் மேல் ஆசை வந்ததாக கருதும் ராமன், 'ஒருவனுக்கு உயர்வு வந்தால் மாற்றானுக்கு அதுவும் உறவினனுக்குப் பொறுக்காது'  என்று கூறுகிறார்.


சொல்லக்கூடிய அளவு உயரிய பண்பு அல்லாதவனான விபீஷணனை ராமன் ஏன் காப்பாற்ற வெண்டும் என்ற வினா எழும். அதற்கும் அவரேவிளக்கம் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. "சரணாகதி என்று வந்தவன் தவறியவனே ஆனாலும், காப்பாற்றுவது என் தர்மம்" என்கிறார். இதை அரசன் சொன்னதாகவும் கொள்ளலாம், மேன்மையான இறைவனுக்குறிய குணங்கள் கொண்ட மனிதன் கூறியதாகவும் ஏற்றுக்கொள்ளலாம். இறைவன் கூறியதாக ஏற்றுக்கொள்ளல் கடினம் ஏனென்றால் ராமனுக்கு தான் இறையின் அம்சம் என்றெல்லாம் எண்ணம் இருந்ததாக கூறப்படவில்லை. அனைவரும் நினைவூட்டினாலும் அவர் மனிதனாகவே தன்னை எண்ணி வாழ்ந்ததாகவே குறிப்பு இருக்கிறது.

ராமன் மனிதனுக்குறிய குணங்கள் பெற்றிருந்தான் என்பதற்கு சீதையின் அக்னிப்ரவேசம் முதலியவை சான்று.  பொதுமக்களை மனதில் கொண்டு, சீதையை தன் பல்லக்கில் ஏற்ற மறுத்த ராமன்,  சீதையை களங்கமுள்ள சரித்திரம் கொண்டவளாகவும், இனி அவள் வேறு யாருடனும் தன் வாழ்வை தொடரலாம் என்றெல்லாம் கடுமையாக பேசுவதாக குறிப்பு உள்ளது. அதன் பின் சீதா அக்னி பிரவேசம் செய்ய, அக்னி தேவன் அவள் கற்புக்கு சான்று சொன்ன பிறகு, தனக்கு அவள் கற்பின் தன்மை தெரியும், உலகறியச் செய்யவே இந்தச் சம்பவம் என்று ராமன் சொல்கிறார். எனினும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சீதையை சாடியிருக்கிறார் என்றே குறிப்பு கூறுகிறது.

இது தொடர்கதையானதும், எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பத்ரன் என்ற அரசாங்க அலுவலன், நகர்வலம் வந்த பின் கொணர்ந்த செய்தியில், மக்கள் ராமன் சீதையை ஏற்றுக்கொண்டதை பற்றி அவதூராக பேசியதாக தயங்கியவாறே சொல்கிறான். உடனே லக்ஷ்மணனைக் கொண்டு சீதையை கங்கைக்கரையில் விட்டு வரச் சொல்லி அனுப்புகிறார். ரிஷிகள் ஆசிரமத்துக்கு செல்ல அவளுக்கு பிரியம் இருப்பதை நினைவுறுத்தி அழைத்து செல்ல ஆணையிடுகிறார். சீதாவுக்கு தான் எதற்காக சென்று கொண்டிருக்கிறோம் என்ற நிலைமையே புரியாதது மிகக் கொடுமை. கங்கைக்கரையில் அவளுக்கு உண்மை தெரியவந்ததும் கதறுகிறாள். தன் சேலை விலக்கி வயிற்றை காட்டி "நான் முன்னமே கர்பமுற்றவள் இங்கு வந்து கர்பமுற்றதாக உன் தமயன் நினைக்க வேண்டாம்" என்று அலறுகிறாள். லக்ஷ்மணன் துடித்துப் போகிறான்.

லவனும் குசனும் ராமன் சபையேறி பாடல் பாடிய பின்னர் ராமன் இறுதியாக சீதையை கண்ட போதும் கூட, வால்மீகி முனிவர் "சீதா களங்கமுள்ளவளென்றால் நான் செய்த தபஸ் எல்லாம் வீணாக கலைந்து போகும்" என்று ராமனிடம் கூறுகிறார். அப்பொழுதும் ராமன் ஊரறிய சபதம் செய்ய வேண்டுமாய் கேட்க, சீதை பூமி மாதாவை தன்னை ரக்ஷிக்குமாறு  வேண்டுகிறாள். பூமியைப் பிளந்து சிம்மான்சனம் எழுந்து வர, உள்ளே அமிழ்ந்துவிடுகிறாள் சீதா. அதை கண்ணுற்ற ராமன் கதறுகிறார்.

இதையெல்லாம் ராஜநீதிக்கு உட்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ராஜாவின் மனைவி சிறந்த உதாரணமாக, களங்கத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டிய கடமையில் தள்ளப்படுகிறாள். ஊரறிய நிரூபிப்பதும் பிரஜையின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து தன் விருப்பு வெறுப்பை தள்ளிப் போடுவதுமான ராஜ தர்மம்.   சுய வாழ்கையில் இழுக்கு வராமல்   கவனித்துக் கொண்டாலன்றி  பிரஜைகளுக்கு ராஜாவின் மேல் மரியாதையும் ஒப்புதலும் பிறக்காது. ஊரின் நன்மைகாக தனிமனித ஆசாபாசங்கள் விட்டுவிட வேண்டிய கட்டாயம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சமாதானம் செய்துகொள்ளலாம்.


(சோவின் எங்கே பிராமணன் குறிப்பிலிருந்து தொகுக்கப்பட்டது)


இதை  தொகுத்த பின்பு எனக்கு ஒன்றே ஒன்று தோன்றுகிறது. இறைவி என்பதால் அல்ல, பெண் எனபதால் அல்ல, பெண்ணுக்கு மட்டுமே கற்பு சொந்தமா என்ற  வாதத்தில் நான் இறங்கி நேரம் விரையமாக்க விரும்பவில்லை.    ஆனால் ஒரு மனுஷ ஜன்மாவாக...பாவம் சீதா :(December 20, 2011

நாளை வெறும் கனவு

நாளை முதல்....
உறுதியாகத் தான் இருக்கிறேன்
கோபம் கூடாது
காபி இனி கிடையாது
சோம்பல் ஆகாது
விட்டு விட வேண்டும்
உடற்பயிற்சி தியானம் மட்டும்
உடன் வர வேண்டும்.
இறுதியாகவே எண்ணிவிட்டேன்
நேற்றைய பிரச்சனை
இன்று தொடர்வதில்லை
நாளைய நடப்பு
நிச்சயமாய் தெரிவதில்லை.
அறுதியான முடிவு தான்
மதுவருந்தல் முறையல்ல
கக்கும் புகையால்
கழியாது கவலை
நாளை முதல்...
உறுதியாகத் தான் இருக்கிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும்....
முடங்கும் சபதங்களுக்குப் புரிவதில்லை
நாளை பிறக்கும்போதே
இன்றாகிப் போகிறதே!

December 18, 2011

வலைச்சரத்தில் நான்

அனைவருக்கும் வணக்கம்.


இவ்வார வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.
வலைச்சரத்தில் என் பதிவுகளைப் படித்து உங்கள் மேலான கருத்தினையும் ஊக்கத்தினையும் அளித்தால் மகிழ்வேன்.
http://blogintamil.blogspot.com/


நன்றி.
அன்புடன்,
ஷக்திப்ரபா

December 13, 2011

வாடா மலரே...தமிழ்த்தேனே!திரும்பப் படிக்கும் போதெல்லாம்
வேவ்வேறு வண்ணத்தில்
புதுசு புதுசாய் உணர்வுகளைத் தூண்டுகிறது
தூசி படிந்த நம் காதல் கவிதைகள்..
இன்று பிறந்தது போல்
விரியும் காதல் பரிமாணங்கள்.
தவறு உன்னுடையது.
சரி ஒப்புக்கொள்கிறேன்..
உனை இன்னமும் நினைத்து உருகும்
என்னுடையது.
இல்லையில்லை
ஒரு வேளை தமிழ்மொழியின்
தனிச்சிறப்பாக இருக்கலாம்.

December 03, 2011

கைகேயி (ஒரு அலசல்)


('எங்கே பிராமணன்' தொகுப்பைச் சார்ந்து எழுதிய பதிவு)
தசரதர், இராமன் பிரிந்து சென்றதும் மயங்கிச் சரிகிறார். பலரும் துயர் தாளாமல் புலம்புகின்றனர்.. சுமந்திரர் கோபம் மேலிட 'குலம் நாசம் செய்யப் பிறந்தவள்,கணவனை கொன்ற பாவம் உன்னைச் சேரும்' என்றெல்லாம் சுடுசொல்லால் தாக்கி, அவளது தாயைக் கொண்டு பிறந்திருப்பதாக சாடுகிறார்.கைகேயியின் பூர்வீகம் ஆராய்ந்தால், அவளது தாயின் குணத்தோடு கைகேயியை ஒப்பிட முடிகிறது.ஏழு சகோதரர்களின் மத்தியில் ஒரே மகளாய் வளர்ந்தவள் கைகேயி. அன்னையின் அன்பைக் கண்டறியாதவள்.மந்தரா என்ற பணிப்பெண் தான் அவளது வளர்ப்புத் தாய். பிடிவாதக்காரி. கைகேயியின் தாயாரை நாடு கடத்தியிருந்தார் அவளது தந்தை. தனது தந்தையின் செய்கையினால் ஆண் வர்கத்தின் மேல் பெரிதும் நம்பிக்கையற்றவளாக இருந்திருக்கிறாள் என்றும் கோணமும் ஆராயப்பட்டிருக்கிறது. தனது மகன்/சந்ததிமற்றும் தனது பாதுகாப்பைக் கருதி அவள் நடவேடிக்கை இருந்திருக்கலாம். மேலும் கேட்பார் போதனையினால்தன் சுயசிந்தனையை எளிதில் துறந்துவிடக் கூடியவளாக வர்ணிக்கப்படுகிறாள்.கோசலநாட்டுடன் தோழமை பூண்டிருந்த மன்னன் அஸ்வபதி. அவன் மகள் கைகேயி. அஸ்வபதி பறவைகளின் மொழியை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த விசேஷ சக்தி மூலம்அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்களை வேறொருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது. இன்னொருவரிடம் இதனை சிலாகித்துக் கொள்ள நேர்ந்தால், அவன் உயிருக்கே பங்கம் விளைந்து விடும். ஒரு முறை தம் மனைவியுடன் சோலையில் உலா வரும் நேரம், உறவில் சுகித்திருந்த இரு அன்னப்பறவைகளின் பேச்சை கேட்க நேர்ந்தது. அவை பேசிக்கொண்டதைக் கேட்டு பெரிதும் ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்தான். இதை கண்ணுற்ற அவன் மனைவி அவை என்ன பேசின என்பதை தன்னிடம் கூறுமாறு வற்புறுத்துகிறாள். தனது உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று அஸ்வபதி எடுத்துக் கூறியதை பெரிதும் பொருட்படுத்தாமல், பறவைகள் பேசிய விஷயங்களைதன்னுடன் பகிர்ந்து கொள்ள துளைக்கிறாள். கணவனின் உயிரையும் பொருட்படுத்தாத மனைவி என்றுணர்ந்த அஸ்வபதி அவளின் பெற்றோர்கள் வீட்டுக்கே அனுப்பி நாடு கடத்தி விடுகிறான்.ராஜ்ஜியத்தை தன் மகள் வயிற்றுப் பிள்ளைக்கே கொடுக்கவேண்டுமென தசரதரிடம் சத்தியம் வாங்கிய பின்னரே திருமணத்திற்குச் சம்மதிக்கிறான் அஸ்வபதி. தசரதரும் தனக்கு இது காறும் கௌசல்யாவின் மூலமாக குழந்தை பிறக்காததை எண்ணி அவ்வாறு சத்தியம் செய்து தருகிறார். (இது ஒன்றை மட்டும் கவனம் கொண்டால் அவள் கேட்டசத்தியத்தில் பெரிய தவறிருப்பதாகத் தோன்றாது, தனக்கு வேண்டிய போது சத்தியம் செய்து கொடுத்து பின்னர்அவளை இகழ்ந்திருக்கிறார் தசரதர் என்றால், இரு பக்கமும் யோசித்து we can rest the case) அதன் பின்னரும் புத்திர பாக்கியம் இல்லாததால், மகத நாட்டு இளாவரசி சுமித்ராவை மணக்கிறார்.அழகில் சிறந்தவளான கைகேயியின் வீரத்திற்கும் பஞ்சமில்லை. தேவாஸுர சங்க்ரமத்தில் அவருக்கு தேரோட்டும் சாரதியாக விளங்கினாள். தக்க சமயத்தில் சிறப்பாக தேரைச் செலுத்தி தசரதர் உயிரைக் காப்பாற்றியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளிக்கிறார் தசரதர். முதலில் மறுத்த கைகேயி தனக்கு தேவை ஏற்பட்டால் பின்னர் கேட்பதாக கூறுகிறாள். இவ்வாறு இரண்டு வழியிலும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பரதனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் தசரதர்.கணவனின் நலனைக் கருதாத தன் காரியத்தில் கண்ணாய் இருக்கும் குணம் கைகேயிக்கு தன் தாயினிடமிருந்தே வந்த்து என சாடுகிறார் சுமந்திரர். பொறுமையின் சிகரமாய் விளங்கும் வசிஷ்டரும் கூட சினங்கொண்டு நிந்திக்கிறார்.புத்திர பாசத்தால் கட்டுண்ட தசரதர், ராமனின் பின் ஓடுகிறார். இதையறிந்த ராமர் தேரை இன்னும் வேகமாகசெலுத்த ஆணையிட்டு தசரதரின் பார்வையிலிருந்து மறைகிறார். ஆற்றாமையின் பிடியில் சிக்கிய தசரதர் 'விதவைக் கோலத்தில் நீ நன்கு ஆட்சியை அனுபவிப்பாய். அப்படியே உன் மகன் இந்த ராஜ்ஜியத்தை ஏற்றானாகில்அவன் செய்யும் ஈமக்கடனும் தன்னைச் சேராது' என்று புலம்புகிறார். கணவன் புலம்பும் போதும்கைகேயி தன் செய்கையை நினைந்து வருந்தியோ மனம் இளகியோ இரங்கி வரவில்லை.


கௌசல்யா தசரதரின் மேல் பழி சுமத்தி தன் மகனைகாட்டுக்கு அனுப்பியதாக கண்ணீர் சிந்த, எல்லோரையும் விட அறிவில் சிறந்தவளான சுமித்ரா, 'ராமன் சாமன்யன் அல்லன், சூரியனுக்குச் சூரியனானவன், அக்னிக்கே நெருப்பின் ஜுவாலையை தரக்கூடியவன், பெருமைக்கு பெருமை, தெய்வத்தின் தெய்வம், அவனுக்கு கெடுதல் விளைவிக்க எவராலும் முடியாது' என்கிறாள்.இத்தனை நடந்த பின்னும் தசரதரின் உடல் உயிர் சுமந்து கொண்டுதானிருக்கிறது. அவருக்கு வாய்த்த சாபத்தின் படி புத்திர சோகத்தை பூர்த்தியாய் அனுபவித்த பின்னர் உயிர் பிரிய நேரிடவேண்டும் என்பது விதி. தன் சாபத்தை நினைவு கூர்ந்து தனக்கு ஏற்பட்ட சாபம் இதென்று அறிந்து மருகிறார். மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடுகிறது.அதன் பின்னர் பரதன் வரும் பொழுதும் பரதனை அரசாளச் சொல்லி கேட்கிறாள் என்றால் கணவனின் இறப்போ பிறரின் நிந்தனையோ அவளை பெரிதும் பாதிக்கவில்லை என்றாகிறது. தன் செயலில் குறியாய் இருக்கும்சுயநலமிக்கவளாகவும் பிடிவாத குணம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் கைகேயி.