நாளை முதல்....
உறுதியாகத் தான் இருக்கிறேன்
கோபம் கூடாது
காபி இனி கிடையாது
சோம்பல் ஆகாது
விட்டு விட வேண்டும்
உடற்பயிற்சி தியானம் மட்டும்
உடன் வர வேண்டும்.
இறுதியாகவே எண்ணிவிட்டேன்
நேற்றைய பிரச்சனை
இன்று தொடர்வதில்லை
நாளைய நடப்பு
நிச்சயமாய் தெரிவதில்லை.
அறுதியான முடிவு தான்
மதுவருந்தல் முறையல்ல
கக்கும் புகையால்
கழியாது கவலை
நாளை முதல்...
உறுதியாகத் தான் இருக்கிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும்....
முடங்கும் சபதங்களுக்குப் புரிவதில்லை
நாளை பிறக்கும்போதே
இன்றாகிப் போகிறதே!
உறுதியாகத் தான் இருக்கிறேன்
கோபம் கூடாது
காபி இனி கிடையாது
சோம்பல் ஆகாது
விட்டு விட வேண்டும்
உடற்பயிற்சி தியானம் மட்டும்
உடன் வர வேண்டும்.
இறுதியாகவே எண்ணிவிட்டேன்
நேற்றைய பிரச்சனை
இன்று தொடர்வதில்லை
நாளைய நடப்பு
நிச்சயமாய் தெரிவதில்லை.
அறுதியான முடிவு தான்
மதுவருந்தல் முறையல்ல
கக்கும் புகையால்
கழியாது கவலை
நாளை முதல்...
உறுதியாகத் தான் இருக்கிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும்....
முடங்கும் சபதங்களுக்குப் புரிவதில்லை
நாளை பிறக்கும்போதே
இன்றாகிப் போகிறதே!
//நாளை பிறக்கும்போதே
ReplyDeleteஇன்றாகிப் போகிறதே! //
உண்மை.
அருமையான கவிதை.
உண்மைதான் ஷக்தி! நல்ல கவிதை.
ReplyDeleteநிதர்சன உண்மை...
ReplyDeleteநன்றி ராம்வி, ராமலக்ஷ்மி, சூர்யஜீவா :)
ReplyDeleteஅவசரமா எழுதியது....கவிதையா?!
ஹ்ம்ம்...சுமாரான கவிதை :) நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கு!
//நாளை பிறக்கும்போதே
ReplyDeleteஇன்றாகிப் போகிறதே!//
ஓ, அதனால் தான்
“நாளை முதல் குடிக்கமாட்டேன், சத்தியமடித் தங்கம் .. இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேண்டும் ஊத்திக்கறேன் கொஞ்சம்”
என்ற சினிமா பாட்டே எழுதப்பட்டிருக்குமோ? ;))))
படத்தில் மனைவியிடம் மண்டியிடும் அந்த நம்மாளு .... சூப்பர் செலெக்ஷன் தான். vgk
This comment has been removed by the author.
ReplyDeleteமிக நன்று...
ReplyDeleteவாருங்கள் தமிழ்விரும்பி.
ReplyDeleteமுதல் வருகைக்கும், தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி :)
நன்றி vgk sir.
ReplyDeleteஅந்த பாட்டையே தலைப்பா போடலாமன்னு யோசிச்சேன். அப்புறம் மனசு கேக்கல :)
அருமையாக எழுதியுள்ளீர்கள் ஷக்திப்ரபா. மனம் நிறைந்த பாராட்டுக்கள். சபதங்கள் எடுப்பது என்று தீர்மானமாகிவிட்ட பிறகு நாளையென்ன நாளை... ஒன்றும் நன்றேசெய்; அந்நன்றும் இன்றே செய் என்று சொல்லாமல் சொல்லும் பாடல். மீண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி gmb sir :)
ReplyDeleteநன்றும் இன்றே செய் தான் சரி. மிச்சமெல்லாம் வெறும் சாக்குப் போக்கு :)
ஹா ஹா! வீட்டில் ஏதாவது வேலை செய் என சொன்னால் நாளை செய்கிறேன் என சொல்வது வழக்கம். எனது குணம் தெரிந்ததால் இன்றே இப்போதே செய்து விடு என அடம் பிடிக்கிறார்கள். வேலை இடத்தில் எனது நண்பன் என்னை 'டுமாரோ' (நாளை) என்றுதான் கூப்பிடுவான். நெருங்கிய நண்பர் ஒருவர் நாளைய மனிதர் என சொன்னது நினைவில் வந்தது.
ReplyDeleteநாங்க எல்லாம் மாறமாட்டோம்ல ;)
அருமை சகோதரி.
ரென் முதல் வருகை இது.யதார்த்தமான கவிதை..வாழ்த்துகள்..
ReplyDeleteவரவை எதிர்பார்க்கிறேன்..
செத்தபின்புதான் தெரிந்தது..
ம்ம்ம்.. இன்று போய் நாளை வானு ராமன் சொன்னதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? (காலங்காலைலே இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறீங்களே, நியாயமா?)
ReplyDelete// நெருங்கிய நண்பர் ஒருவர் நாளைய மனிதர் என சொன்னது நினைவில் வந்தது.
ReplyDeleteநாங்க எல்லாம் மாறமாட்டோம்ல ;)
//
:))))
உங்கள் மறுமொழியை ரசித்தேன். பலரும் அப்படித்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ரென் முதல் வருகை இது.யதார்த்தமான கவிதை..வாழ்த்துகள்..
ReplyDeleteவரவை எதிர்பார்க்கிறேன்..
//
முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் வலைதளாம் வந்தேன்.. :) அருமை!!
நல்ல கவிதைகள் :)
//ம்ம்ம்.. இன்று போய் நாளை வானு ராமன் சொன்னதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? (காலங்காலைலே இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறீங்களே, நியாயமா?)
ReplyDelete//
இன்று போய் நாளை வா கூட டைட்டிலா யோசிச்சேன் :)) வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி :)
அன்பு சகோதரி,
ReplyDeleteதங்கள் தளத்திற்கு என் முதல் வருகை.
அழகாக எழுதுகிறீர்கள்.
அல்லதை அன்றே ஒழி
இல்லையேல் கைகூட்டி நட,,,,
வீண்சபதங்கள் போட்டு மாற்றமுடியாத ஒன்றை
மாற்றியே காட்டுவேன் என்று சொல்வதெல்லாம்
வீண் ஜம்பம்.
உண்மையான உண்மை.
"நாளை முதல் குடிக்க மாட்டேன் ...
ReplyDeleteசத்தியமடி தங்கம்..
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கறேன் கொஞ்சம்.."
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்து விட்டன..
நாளை என்று ஒத்தி வைக்கும் பணிகள், அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன..
இன்றே திருந்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் இப்பதிவு நல்ல பதிவு.
நடைமுறை யதார்த்ததை மெல்லிய நையாண்டியுடன் பதிவு செய்த விதம் அருமை.
ReplyDeleteசக்தி ஸ்வரூபம் வலையில் தெரியத் தருவதற்கு நன்றி தாயி!!
ReplyDeleteஆமா இதெல்லாம் எழுதாம இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?:) (விவசாய வலை தானே?:))
வாங்க மகேந்திரன். வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி :)
ReplyDelete//வீண்சபதங்கள் போட்டு மாற்றமுடியாத ஒன்றை
மாற்றியே காட்டுவேன் என்று சொல்வதெல்லாம்
வீண் ஜம்பம்.
//
சரியா சொன்னீங்க :)
வாங்க கீதா. வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி :)
ReplyDeleteஷை,
ReplyDeleteஹி ஹி....விவாசாயத ஒரு வழியா விட்டுட்டேன் :( அதான் இங்க ஜாகை அவ்வபோது... வருகைக்கும் பாராட்டுக்கும் தும்பா தாங்க்ஸ்
வாங்க ஜயராஜன்,
ReplyDeleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றி :)
hi...this is first time i have seen you blog, really great one.....awesome.
ReplyDeleteநாளை பிறக்கும்போதே
ReplyDeleteஇன்றாகிப் போகிறதே!
இந்த ஒற்றை வரி கவிதையை தூக்கிப் பிடித்து அத்தனை பேருக்கும் காட்டி விட்டது.. மொத்த அழகையும்.
நன்றி தியாகு. :)
ReplyDeleteநன்றி ரிஷபன் சார், கருத்துக்கும், தொடர்வதற்கும் :)
மிகவும் அருமை! த.ம.3
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
உங்கள் தளத்திற்கு முதல் வருகை. இனி தொடரும் என் வருகை. யதார்த்தம் கூறும் அழகிய கவிதை. ரசித்தேன். எனக்குக் கவி எழுத வராது. ஆனால் ரசித்துப் படிக்கத் தெரியும். ராகங்களும் அப்படித்தான். நான் மிக ரசித்த எஸ்பிபியின் அவள் ஒரு மேனகை சிவரஞ்சனி ராகம் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். யாவற்றுக்கும் நன்றி.
ReplyDeleteவருகைக்கு ந்ன்றி தனபாலன். என் மந்திரச் சொல் "மௌனம்/புன்னகை" உங்கள் திரியிலும் சொல்லியிருக்கிறேன்.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி கணேஷ். வாங்க :)
ReplyDelete///நான் மிக ரசித்த எஸ்பிபியின் அவள் ஒரு மேனகை சிவரஞ்சனி ராகம் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ///
சிவரஞ்ச்னையில் பல அருமையான பாட்டுகள் உண்டு. ஹிந்தில நிறைய உபயோகிக்கறாங்க. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டுங்க அது.
"தாமரைப் பூவின் சூரிய தாகம்"
எவ்ளோ அழகா கவிஞர் சொல்லியிருக்கார். எப்படிப்பட்ட சிந்தனை! :) ஒரு பெண்ணை எப்படி வர்ணக்க வெண்டும் என்பதற்கு இந்த பாட்டு "மகுடம்" :)
நாளை முதல்...
ReplyDeleteஉறுதியாகத் தான் இருக்கிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும்....
முடங்கும் சபதங்களுக்குப் புரிவதில்லை
நாளை பிறக்கும்போதே
இன்றாகிப் போகிறதே!
நாளை வெறும் கனவு"தானே!~
"நேற்றைய பிரச்சனை
ReplyDeleteஇன்று தொடர்வதில்லை"
அப்படியா? எனக்குத் தெரியவில்லை.
கவிதையின் கடைசி வரிகள் மிக நன்றாக அமைந்துள்ளது.
சித்தப்பா சிறிது அப்படித்தான்! எதைச் சொன்னாலும் அப்புறம் என்ற பதில் தான் வரும்! திருநாளைப்போவார் புராணம் தான்!
நன்றி இராஜேஸ்வரி.
ReplyDeleteநன்றி ரமாகோபால்.
//அப்படியா? எனக்குத் தெரியவில்லை.
//
பிரச்சனை தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் நாம் அதை
எண்ணி முடங்குவதௌ வேண்டாம் என்ற எண்ணம் "தொடர்வதில்லை" :)
சித்தப்பா மட்டுமல்ல, ஏறக்குறைய நிறைய பேர் அப்படித் தான் :)
//நாளை பிறக்கும்போதே
ReplyDeleteஇன்றாகிப் போகிறதே!//
கவிதையின் சாரமாக இந்த அற்புத வரிகள்! பிரமாதம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html
நன்றி கே.பி.ஜனா :)
ReplyDelete