December 30, 2011

கடவுள், இருப்புநிலை மற்றும் stephen hawking
மனிதனின் உயரிய இலக்கு தன்னிலை அறிதல் என்று கூறப்படுகிறது. இதனையொட்டியே ஆன்மீகம், நம்பிக்கை, தேடல், புரிதல், ஜபம் தபம் என அனைத்தும் ஏற்பட்டுள்ளது.  எக்காலத்திலும் பிறப்பு இறப்பை தாண்டிய புரியாத விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கை இருப்பது போல், நம்பிக்கை அற்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியை இரண்டு விதமாய் அணுகலாம்.


 கடவுளை (personal or unexplained force) நம்புபவர்களாக இருப்பவர்களை ஆத்திகர்கள் என கொண்டாலும் நாத்திகவாதிகளில் இரண்டு பார்வைகள் உண்டு என நான் நினைக்கிறேன்.

கடவுள் என தனிப்பட்ட கூட்டம்/உருவகம் இல்லை என்று நினைப்பவர்கள். அனைத்தும் இயற்கை என்ற cosmological action எனக்கருதி அதன் விளங்க்கங்களாகவே அனைத்தையும் கண்டு எனவே கடவுள் என ஒரு விஷயம் தேவை இல்லை என்று வாதம் செய்பவர்கள். ஆனால் இக்கருத்தினை உடைய சிலர், இருப்பு நிலை என்ற  consciousness மேல்நம்பிக்கை உண்டு. அதனால் இவர்களும் ஏறக்குறைய அத்வைத சித்தாந்தத்தில் அல்லது பௌத மத கோட்பாடுகள் பாதி நம்பிக்கை கொண்டவர்களாக சித்தரிக்கலாம். மதம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிடிக்காமல் போனவர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஏறக்குறைய பாதி ஆத்திகவாதிகள் என நான் நினைக்கிறேன்.

இன்னொரு வகை உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாம், "உண்மையான நாத்திகவாதிகள்" அதாவது "இருப்பே/soul/conciousness" இல்லை என நம்புபவர்கள். இவர் தரப்பு வாதங்களில் சில

1. Miracles are hallucinations. 
அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே

2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity

உடல் சாராமல் உலகை உணர்வது சாத்திய‌மற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாதது


3. (Straight from the horse's  mouth, i.e stephen hawkins) "I regard the brain as a computer which will stop working when its components fail. There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark"
மனித உடல் (மூளை) என்பது ஒரு உயிர் வேதி தகவமைப்பு [Adaptive bio chemical machine] உபகரணம். இதன் மூலப் பொருள்கள் பழுது பட்டால்,முடிந்ததும் வாழ்வு முடிகிறது.மறுமை வாழ்வு கிடையாது


4. Brain is responsible conciousness.
மூளையி(னா)ல்தான் உணர்தல் ஏற்படுகிறது

5. When anything out of the ordinary happens, they club it as "mass hypnotism"
இயற்கை விதிகளுக்கு முரணான் ஒன்றை நம்புவதற்கு மன [மயக்க]மே காரணம்

6. பஞ்சபூதங்களின் கூட்டால் விளைந்ததே "இருப்பு நிலை" அந்த கூட்டமைப்பு கலையும் பொழுது இருப்பு நிலை என்ற consciousness  இல்லாமல் கரைந்து விடும்.  when elements dissolve, consciousness dissolves into airy nothing.  ஆன்மா,  soul, போன்றவற்றை மறுக்கின்றனர்.எல்லாவற்றிற்கும் அவர்கள் தரப்பு மறுப்பை வைத்திருக்கிறார்கள்.


ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்ல ஆசை.... தொடருங்களேன்...உங்கள் ஒவ்வொருவரின்

1. கருத்து
2. பார்வை
3. தெரிந்த, அனுபவித்த விஷயங்கள்,
4. ஆச்சாரியர்கள் , குருக்கள், ஸ்வாமிகள் பற்றிய நல் விஷயங்கள்
5. நாத்திகத்தின் கேள்விகள், சுட்டிகள்
6.  நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி
7. carl sagan, முதல் ஐன்ஸ்டீன், stephen hawking போன்றவர்கள் கூற்று / அதன் சுட்டி....
9. உங்களுக்கு தெரிந்த அறிவியல், அணுவியல்,  அனுபவம் சார்ந்த விஷயங்கள்..
10. நம்பிக்கைகள்..
11. குட்டிக் குட்டி தகவல்கள்....
12. சும்மா கலந்து கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர்

13. பெரிய பெரிய விளக்கங்கள்.....
14. பழைய சித்தாந்த விளங்க்கங்கள்எல்லாரும் வாருங்கள்....
எல்லாமே கொண்டு வாருங்கள்..... 

தொடர்ந்து பதில் விவாதம் வைய்யுங்கள்.....ஆங்கில சுட்டி, விவாதம், ஆங்கிலம் கலந்த விவாதமும் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொருவரின் கருத்தும் வேறு யாருக்கேனும் வழிகாட்டியாய் பார்வையாய், ஞானமாய், உண்மையின் உணர்ந்தலாய் இருக்கக்கூடும்.... நீண்ட ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாகத் தொடர்ந்தால் மகிழ்வேன்.... பிறரின் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து உங்கள் கருத்தை தொடரலாம்.

இறுதியாக,...."வெளியே தேடாமல், வீண்விவாதம் செய்யாமல், உள்ளே தேடுவதே வழி" என்ற தெரிந்தாலும், இந்த விவாதம் எதுவரை செல்லும், அல்லது புதிய தகவல்கள் கொடுக்கும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன்...

33 comments:

 1. என்னுடைய கருத்து... இருக்கு ஆனா இல்லை. இதைப் புரிய வைப்பதும் புரிந்து கொள்வதும் ரொம்ப கஷ்டம். நீங்கள் சொன்ன 5 வது விசயமும் அதுதான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. வாங்க...விளக்கலாமே விச்சு...

  பலநூறு வருடங்களாக சில 'உண்மையான' குரு, ஞானிகள் முதலியானவர்களின் வாழ்வில் பல சான்று உண்டு. அதிசயங்கள் நிகழ்ந்ததுண்டு. இறந்தவர்கள் எழுந்ததும், நிரந்தரமாக வியாதி குணமடைவதும், எப்படி hypnotism ஆகும்? அதையெல்லாம் gimmick வகையில் சேர்த்தால் கூட,

  சில அபூர்வ ஞானிகள் இறந்த பின் ஜோதி எழுந்தது விண்ணில் சென்றதாகவும் கூறுவதுண்டு. இறந்து போன பின், apparition தோன்றியதுண்டு என்றும் படித்திருக்கிறேன். இறந்த பின் எப்படி mass hypnotism செய்ய முடியும் என்று நினனக்கிறீர்கள்.

  athu hallucination பிரிவில் வந்து விடுமா :)

  ReplyDelete
 4. மிகப்பெரிய விஷயத்தை கையிலெடுத்திருக்கிறீர்கள் சகோதரி.
  நான் அறிந்த வரையில், நாத்திகர்களில் பெரும்பாலானோர் மதங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகளின் பால் உள்ள வெறுப்பு காரணமாகவே ஆத்திகம் விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள்.

  திரு.சு.ப.வீரபாண்டியன் அவர்கள் ஒருமுறை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கையில் அவர் நாத்திகம் பற்றி தெரிவித்த கருத்து இது...
  ////// நான் ஒரு நாத்திகன், எனக்கு உருவகம் வடிவங்களில் நம்பிக்கையில்லை. அறிவற்றோர் போல மூட நம்பிக்கைகளை மனதில் வார்த்துக்கொள்ள நான் தயாராக இல்லை.. ஆனால் அதில் நம்பிக்கை உள்ளவர்களை நான் வற்புறுத்தவில்லை. அவர்கள் அவர்களாக இருக்கட்டும். நான் நானாக இருக்கிறேன்//// என்று சொன்னார்.
  நீங்கள் கூறிய நாத்திக வாதிகளில் இவர் ஒன்றாம் வகையைச் சார்ந்தவர் என நினைக்கிறேன்.

  சர்.ஐசக்.நியூட்டன் அவர்களின் மூன்றாம் விதிப்படி எந்த ஒரு விசைக்கும் எதிர்விசை உண்டு. இந்த எதிர்விசை எதனால் உண்டாகிறது.. அதற்கான உந்துதல் என்ன..??/. அதற்கான காரணிகள் வகுக்கப்பட்டதா இல்லை பகுக்கப்பட்டதா???
  எதிர்விசை என்பது இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஈடாக இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை இயக்கத்தன்மை அடையும் பொழுது உருவாகிறது.
  ஆக இருப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று.

  இன்னும் விவாதிப்போம் சகோதரி..
  மற்ற நண்பர்களின் விவாதங்கள் பார்த்தபின்னர்...

  நன்றிகள் பல.

  ReplyDelete
 5. கடவுள் என ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை ஷக்தி. மனித குலத்துக்கு ஒரு மாரல் ஃபியர் ஊட்டவும், நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கவுமே முன்னோர்கள் இறை என்ற ஒன்றைத் தோற்றுவித்ததாக எண்ணுகிறேன். ஆனால் ஷீர்டி சாய்பாபா போன்ற மகான்கள் செய்த அற்புதங்கள் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் எப்படி இது சாத்தியம் என்று கேள்வியும் என்னுள் முரண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் எதுவும் தெளிவு கிடைக்குமா எனப் பார்க்கிறேன். ஆரோக்கியமான விவாதத்தைப் புத்தாண்டில் துவக்கி வைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

  ReplyDelete
 6. எல்லோர் மனதிலும் உதிக்கும் எண்ணமே எனக்கும் தோன்றுகிறது
  யார் தெளிவு படுத்துகிறார்கள் பார்ப்போம் .

  ReplyDelete
 7. என்னுடைய கருத்து : ஆத்திகமோ, நாத்திகமோ வைத்திய செலவு இல்லாமல் வாழும் வாழ்க்கை இருந்தால் அதுவே பெரிய விசயம்.

  என்னுடைய பார்வை : இறைவனும் சரி, இறைவன் அல்லாதனவும் சரி! எதிலும் எனது நம்பகத்தன்மையும், நம்பகமில்லா தன்மையும் இல்லை. நான் நம்புகிறேன், நம்பவில்லை என வரும்போது உண்மை தொலைந்து போய்விடுகிறது. அது அதுவாகவே இருக்கிறது. அவரவர் பார்வையில் அது அதுவாகவே இருப்பதில்லை.

  தெரிந்த/அனுபவித்த விசயங்கள்: கதை சொல்லும் பழக்கம் அதிகம் இருப்பதாலும், பிறர் சொல்லும் கதை கேட்கும் பழக்கம் இருப்பதாலும் இது குறித்து எழுதினால் பெரிய கதையாகிவிடும் என்பதால் ஒரு சில வாக்கியங்கள். இறைவன் பற்றி பேசும்போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகின்றன. அதைப்போன்றே வறுமையில் கஷ்டத்தில் வாழும் மனிதர்கள் நிலையை கண்டும் கண்கள் கலங்கிவிடுகின்றன. எனினும் நான் இதுவரை இறைவனை உணர்ந்ததே இல்லை என்பதுதான் எனக்கு தெரிந்த அறிவு. இறைவனை பற்றிய உணர்வு எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாமல் இருக்கலாம்.

  ReplyDelete
 8. ஆச்சார்யார்கள், குருக்கள், சுவாமிகள் பற்றிய நல்விசயங்கள்: என்னவென சொல்வது, இவர்கள் சரியாகவே சொல்லித் தர மறந்துவிட்டார்களா, அல்லது இவர்களிடம் கற்ற மாணவர்கள் சரியாக கற்று கொள்ளவில்லையா என தெரியவில்லை. இவர்கள் எல்லாம் போதனைகளோடு நிறுத்தி கொண்டு விட்டார்கள் என்பதே நல்ல விசயங்களாகிப் போனதோ என்னவோ!

  நாத்திகத்தின் கேள்விகள், சுட்டிகள்: இதற்கென சில வலைத்தளங்கள் இயங்கி கொண்டு இருக்கின்றன. அவர்களுடைய கேள்விகள் எல்லாம் மறுப்பதற்கு இல்லை. அதே வேளையில் அவர்கள் கேள்விகள் எல்லாம் ஒரு கேள்வியே இல்லை. ;) சுட்டிகள் பின்னர் சுடப்படும்.

  நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி: ஹா ஹா! சாமியார்கள் எல்லாம் மனிதர்கள் எனும் பக்குவம் சாதாரண மக்களுக்கு என்று வருமோ அன்றுதான் சாமியார் ஏமாற்றிவிட்டார் என்கிற நிலை மறந்து ஒரு மனிதன் பண்ணுகிற தவறு என்கிற நிலை வரும். இது குறித்து பிரேமானந்தா முதல் சமீபத்திய நித்தியானந்தா வரை உண்டு. என்ன ஒரு பிரச்சினை சாதாரண மக்களுக்கு சாமியார்கள் அத்தியாவசியமாகிப் போனார்கள். சுட்டிகள் பின்னர் சுடப்படும்.

  ReplyDelete
 9. கார்ல் சாகன் முதல் ஐன்ஸ்டீன், ஸ்டீபென் ஹாவ்கிங் போன்றவர்கள் கூற்று, அதன் சுட்டி : எதற்கு இவர்களின் கூற்று, சுட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பார்த்தாலே வாழ்வில் பல விசயங்கள் புரிந்துவிடும். எப்பொழுதுமே மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் பேராற்றலை புரிந்து கொள்வதில்லை. பிறர் சொல்வதன் மூலமே விசயங்களை பெற்று கொள்கிறார்கள். சுய சிந்தனை என்பது அற்று போனது இங்குதான். கார்ல் சாகன் சொல்லும் இறைத்தன்மையும், ஹாவ்கிங் சொல்லும் இறையில்லாதன்மையும் கண்டு ஏமாளியாக நிற்பது சாதாரண மக்கள்தான். இவர்கள் எல்லாம் ஒருவகையான சாமியார்கள், அதனால்தான் இவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள் என அழைக்கப்பட்டார்கள். எப்படி சாமியார்கள் ஏமாற்று வித்தை காட்டுகிறார்களோ அதைப் போல இவர்களும் ஏமாற்று வித்தை காட்டுகிறார்கள். இவர்களின் கூற்றுகளை விட 'கையும் காலும் தானே மிச்சம்' என சொன்னவனின் கூற்று எத்தனையோ மேல். இருப்பினும் கூறுகளும், சுட்டிகளும் சுடப்படும்.

  உங்களுக்கே தெரிந்த அணுவியல், அனுபவம் சார்ந்த விசயங்கள்: புத்தகங்களில் படித்து வளர்ந்த அறிவு ஒரு அணு என்பது புரோட்டன், நியூட்ரான், எலெக்ட்ரான் என தொடர்ந்து இன்று எங்கு எங்கோ நிற்கிறது. இன்னும் எங்கு எங்கோ போகக் கூடும். இதில் கூட கடவுளின் துகள் என பெயர் வைத்ததுதான் விபரீதம். என்னுடைய அனுபவத்தில் நான் காண்பது எல்லாம் கனவாகவே இருக்கின்றன. எலக்ட்ரான் பார்த்து இருக்கிறாயா? என்றார் ஒருவர். இல்லை என்றேன். பார்க்காமல் எப்படி எலெக்ட்ரான் என சொல்கிறாய் என்றார். சொல்லி வைத்து இருக்கிறார்கள் என்றேன். சரி இறைவனை பார்த்து இருக்கிறாயா? என்றார் மேலும். இல்லை என்றேன். பார்க்காமல் எப்படி இறைவன் என சொல்கிறாய் என்றார். சொல்லி வைத்து இருக்கிறார்கள் என்றேன். இதுதான் எனக்கு தெரிந்த அனுபவம் சார்ந்த விசயங்கள். நான் எதையுமே கண்டதில்லை, ஆனால் கண்டது போல நடந்து கொள்கிறேன். உலகத்துடன் ஓட்ட ஒழுகுதல் என்பது ஐயன் வள்ளுவன் கூற்று. அதாவது ஒரு புத்தகத்தில் படித்தேன், ஒரு சிந்தனை பலதரப்பட்ட மக்களை சென்று அடைய அந்த சிந்தனை மக்களால் நம்ப வைக்கப்பட்டு அதாவது செயல்முறை பயிற்சியோ, வாய்மொழி கூற்றோ, தொடருமானால் அந்த சிந்தனை வலுபெறும் என்பதே. எனவே இனி வரும் காலங்களில் அறிவியலோடு இறைவனும் அட்டகாசமாக பயணிப்பார்.

  நம்பிக்கைகள் : நான் எழுதிய எனது சுட்டி ஒன்று உண்டு, அதெல்லாம் தரமாட்டேன். நம்பிக்கை வேறு, உண்மை வேறு என்பதுதான் அது. நம்பிக்கைகள் மனிதர்களை வாழ வைக்கின்றன, சீரழிக்கின்றன என்பதோடு நிறுத்தி கொள்ளாமல் நம்பிக்கைகளில், அவ நம்பிக்கை, தன்னம்பிக்கை, மூட நம்பிக்கை என பல நம்பிக்கைகள் உண்டு.

  ReplyDelete
 10. குட்டி குட்டி தகவல்கள்: ஆதி பகவன் முதற்றே உலகு. அறஞ் செய்ய விரும்பு. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். செய்யும் தொழிலே தெய்வம். குழந்தையும் தெய்வமும் ஒன்று. தாயை சிறந்ததோர் கோவிலும் இல்லை. மாதா, பிதா, குரு, கடைசியில் தெய்வம் என்பது தவறு. தெய்வம், மாதா, பிதா, கடைசியில் குரு என்பதுதான் சரி. சூரிய பகவான், வாயு பகவான், அக்னி பகவான் என எல்லா இயற்கையும் இறைவன் அவதாரம் கொண்டு இருக்கின்றன. மனிதர்களே மிகப்ப பெரியவர்கள் அதனால்தான் இறைவன் கூட மனித உருவில் அவதாரம் எடுத்தான். மனிதர்களில் மட்டுமே தேவர்கள், அசுரர்கள் உண்டு, எந்த ஒரு விலங்கு கூட்டத்திலும் இந்த பாகுபாடு இல்லை. மதங்கள் இறைவனை அழிக்க உருவாக்கப்பட்டவை.

  சும்மா கலந்து கொண்டு தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர்: ஹா ஹா! சும்மா என்ற ஒரு வார்த்தை பெரிய பிரளயத்தை ஏற்படுத்திவிடும். சும்மா இருந்த வாயுக்களும் துகள்களும் உரசிகொண்டதால் இந்த உலகம் உருவானதாக கதை உண்டு. எனவே சும்மா இருக்க நினைப்பவர்கள் தயவு செய்து கலந்து கொள்ளாதீர்கள். தெரிந்து கொள்ள மட்டும் ஆர்வம் காட்டினால் போதும். சும்மா இருப்பதே சுகம் என்பது உலக வாக்கு.

  பெரிய பெரிய விளக்கங்கள்: குறள் விளக்கும் சிறப்பை போல, ராமாயணம் அத்தனை சிறப்பாக விசயங்களை விளக்க முடிவதில்லை. பெரிய பெரிய விளக்கங்கள் எல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலை. எனவே அது குறித்து பின்னர் விளக்கப்படும்.

  பழைய சித்தாந்த விளக்கங்கள்: எனக்கு பிடித்த சிவ வாக்கியர் பாடல்களை எழுதினாலே போதும், எல்லா சித்தாந்த விளக்கங்கள் சரியாகிவிடும். எதற்கும் திருமூலர் எழுதியது குறித்து எவரேனும் எழுதினால் நல்லது.

  பல விசய பரிமாற்றம் நடைபெறட்டும்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
 11. எனக்குத் தெரிந்து, என்னுடைய சொந்த அனுபவத்தில் கடவுளை நான், முக்காலமும் உணர்ந்த மஹாஞானியான ஒரு மஹாபெரியவர் மூலம் பலமுறை (ஒவ்வொரு ஆண்டும்) கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன்.

  அந்த என் சிறப்பு அனுபவங்களை எழுத்தில் என்னால் விவரிக்கவும் முடியாது; விவரிக்கவும் நான் விரும்பவில்லை.

  என்னைப்போலவே அந்த ஒரு குறிப்பிட்ட மஹானைப்பற்றி உணர்ந்தவர் இந்த உலகில் ஏராளமானவர்கள் இன்றும் உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

  எதையும் நம்புவதோ நம்பாமல் போவதோ அவரவர் விருப்பம். இந்த விவாதங்களிலிருந்து நான் விலகி இருந்து மற்றவர்கள் கருத்துக்களை அறியவே விரும்புகிறேன்.

  நல்லதொரு விவாதத்தைத்தான் நீங்களும் இப்போது துவக்கி வைத்திருக்கிறீர்கள். சபாஷ், பாராட்டுக்கள்.

  புத்தாண்டு வாழ்த்துகள். பிரியமுள்ள vgk

  ReplyDelete
 12. வாங்க & நன்றி மகேந்திரன், ராதாக்ருஷ்ணன், சசிகலா, கணேஷ்.

  ஒவ்வொருத்தரின் கருத்தும் வித்தியாசமா இருந்தது.

  மகேந்திரன்: //எதிர்விசை என்பது இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஈடாக இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை இயக்கத்தன்மை அடையும் பொழுது உருவாகிறது.
  ஆக இருப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று. //

  இதை இன்னும் விவரிக்க முடியுமா?

  கணேஷ்,

  ராதாக்ருஷ்ணன் குறிப்பிட்ட சிவவாக்கியர் திருமூலர் முதலியவர்களின் நூல், சரித்திரம் முதலியவை நம் பார்வையை விரிவு படுத்தலாம் என நினைக்கிறேன்.

  நன்றி வை.கோ சார்.

  உண்மை தான். உணர்தலை எப்படி விளக்க முடியும்.
  சுவையை உண்டவனால், விவரிக்க இயலாது. தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவிக்கும் வரை, புரியாது.

  ReplyDelete
 13. //என்னுடைய பார்வை : இறைவனும் சரி, இறைவன் அல்லாதனவும் சரி! எதிலும் எனது நம்பகத்தன்மையும், நம்பகமில்லா தன்மையும் இல்லை. நான் நம்புகிறேன், நம்பவில்லை என வரும்போது உண்மை தொலைந்து போய்விடுகிறது. அது அதுவாகவே இருக்கிறது. அவரவர் பார்வையில் அது அதுவாகவே இருப்பதில்லை.

  //

  சின்மயாநந்தா அவர்களின் உரையில் இப்படி கேட்டிருக்கிறேன். நம்புவதாலும், நம்பாமல் இருப்பதாலும் "அது" மாற்றமடைவதில்லை. அனைத்திற்கும் அப்பாற்பட்டு விளங்குவதாய் உள்ளது என...

  நன்று.

  //இறைவன் பற்றி பேசும்போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகின்றன. //

  :)

  //ஆச்சார்யார்கள், குருக்கள், சுவாமிகள் பற்றிய நல்விசயங்கள்: என்னவென சொல்வது, இவர்கள் சரியாகவே சொல்லித் தர மறந்துவிட்டார்களா, அல்லது இவர்களிடம் கற்ற மாணவர்கள் சரியாக கற்று கொள்ளவில்லையா என தெரியவில்லை. இவர்கள் எல்லாம் போதனைகளோடு நிறுத்தி கொண்டு விட்டார்கள் என்பதே நல்ல விசயங்களாகிப் போனதோ என்னவோ!
  //

  உதாரணமாக வாழ்ந்தவர்கள் பலர். நமக்குத் தெரிந்த சென்ற நூற்றாண்டு மனிதர்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பின்னோக்கிச் சென்றால் சிலர் உபதேசத்திற்கு உண்மையாக வாழ்ந்தும் உள்ளனர்.
  தற்கால போலிகள் எல்லாம் கலப்பட காலத்தின் கோலம்.

  //நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி: ஹா ஹா! சாமியார்கள் எல்லாம் மனிதர்கள் எனும் பக்குவம் சாதாரண மக்களுக்கு என்று வருமோ அன்றுதான் சாமியார் ஏமாற்றிவிட்டார் என்கிற நிலை மறந்து ஒரு மனிதன் பண்ணுகிற தவறு என்கிற நிலை வரும்.//

  மிகச் சரி....

  //மதங்கள் இறைவனை அழிக்க உருவாக்கப்பட்டவை. //

  மதங்கள் என்பவை பயணிக்கும் பாதைகள் மட்டுமே. இதன் அடிப்படையே இன்று ஆட்டம்கண்டு விட்டது வருத்தம்.

  //பழைய சித்தாந்த விளக்கங்கள்: எனக்கு பிடித்த சிவ வாக்கியர் பாடல்களை எழுதினாலே போதும், எல்லா சித்தாந்த விளக்கங்கள் சரியாகிவிடும். எதற்கும் திருமூலர் எழுதியது குறித்து எவரேனும் எழுதினால் நல்லது. //

  எழுதுங்கள்....படிக்க ஆவலாய் உள்ளது.

  நன்றி :)

  ReplyDelete
 14. விவாதமே வீண்தாங்கும்போது, வீண்விவாதம்னு தனியா என்ன இருக்கு? :-)

  தேடறது, விவாதிக்கறது மாதிரி, வாழறதும் ஆன்மீகம்தான்.

  நமக்கான வசதி வாய்ப்பு, வாழ்க்கைநிலை, நம்ப சூழ்நிலை எல்லாத்தையும் பொருத்து நம்ப தேவைகள் மாறும். அதுக்குத்தகுந்த மாதிரி தேடல்களும் மாறும். ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒன்னுஒன்னு சரின்னு தோணும். சில வயசுல அற்புதங்கள், சில சமயத்துல ஸ்ருஷ்டி, சில சமயத்துல சகோதரத்துவம், சில சமயத்துல நமக்கு மேல இருக்கற ஒரு சக்தி (உங்கள சொல்லல)... இப்படி.

  எதுக்குத்தேடறோம்னு தெளிவா இருந்தாக்கூடப்போதும், எல்லாம் புரிஞ்சுடும்னு நெனைக்கறேன்.

  ReplyDelete
 15. இந்த விஷயம் பற்றி என்னுடைய பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். கடைசியாக எழுதிய எண்ணச் சிதறல்களிலும் கொஞ்சம் கூற முயன்றிருக்கிறேன். விடை காண முடியாத ஒரு சங்கதி இது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள் அருமையான வரையறுப்பு. கொஞ்சம் தமிழ் படுத்தினால் இன்னும் நன்று.
  ******************
  1...Miracles are hallucinations.

  அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே

  2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity

  OBE=out of Body experience
  உடல் சாராமல் உலகை உணர்வது சாத்திய‌மற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாதது.

  3. (Straight from the horse's mouth, i.e stephen hawkins) "I regard the brain as a computer which will stop working when its components fail. There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark"

  மனித உடல் (மூளை) என்பது ஒரு உயிர் வேதி தகவமைப்பு [Adaptive bio chemical machine] உபகரணம். இதன் மூலப் பொருள்கள் பழுது பட்டால்,முடிந்ததும் வாழ்வு முடிகிறது.மறுமை வாழ்வு கிடையாது

  4. Brain is responsible consciousness.

  மூளையி(னா)ல்தான் உணர்தல் ஏற்படுகிறது.

  5. When anything out of the ordinary happens, they club it as "mass hypnotism"

  இயற்கை விதிகளுக்கு முரணான் ஒன்றை நம்புவதற்கு மன [மயக்க]மே காரணம்

  6. பஞ்சபூதங்களின் கூட்டால் விளைந்ததே "இருப்பு நிலை" அந்த கூட்டமைப்பு கலையும் பொழுது இருப்பு நிலை என்ற consciousness இல்லாமல் கரைந்து விடும். when elements dissolve, consciousness dissolves into airy nothing. ஆன்மா, soul, போன்றவற்றை மறுக்கின்றனர்.
  இன்னும் கொஞ்சம் தமிழ் படுத்தலாம் என நினக்கிறேன்..இதுதான் நம் கொள்கை
  Thank you

  ReplyDelete
 17. ஏன் இந்த கொள்கை?

  கொள்கையின் வரையறுப்பிலேயே தெளிவாக இருப்பதால்.இவை நம் வாழ்வியல் அனுபவத்தின் மீதான முடிவுகளே.

  நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளை இயற்கையின் விதிகளை வைத்து வரையரறுப்பதில்,விள்க்குவதில் முரண் காணவில்லை.

  இயற்கையின் விதிகளுக்கு முரணான ஒன்றை இதுவரை நடைமுறை வாழ்வில் கண்டதில்லை, கேள்விப்பட்டவை பல ஆய்வுக்கு உட்படுத்தப்ப்டாதவை.

  இம்மாதிரி செயல்களை ஆய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
  நன்றி

  ReplyDelete
 18. நல்ல பதிவு எனது கருத்துக்களைக் கூறும் முன் இந்த கருத்துப் பரிமாற்றத்தைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.. என்னுடைய பின்னூட்டங்கள் இதற்கான பதிலாக இருக்காது இது அந்த நபரின் கருத்தும் விளக்கமும்... இருந்தும் நான் மீண்டும் வருவேன்.. மேலேப் படியுங்கள்.

  VERY INTERESTING CONVERSATION

  An Atheist Professor of Philosophy was speaking to his Class on the Problem Science has with GOD, the ALMIGHTY. He asked one of his New Christian Students to stand and . . .

  Professor : You are a Christian, aren't you, son ?
  Student : Yes, sir.
  Professor : So, you Believe in GOD ?
  Student : Absolutely, sir
  Professor : Is GOD Good ?
  Student : Sure.
  Professor : Is GOD ALL - POWERFUL ?
  Student : Yes.
  Professor : My Brother died of Cancer even though he Prayed to GOD to Heal him. Most of us would attempt to help others who are ill. But GOD didn't. How is this GODgood then? Hmm?

  (Student was silent )

  Professor : You can't answer, can you ? Let's start again, Young Fella. Is GOD Good?
  Student : Yes.
  Professor : Is Satan good ?
  Student : No.
  Professor : Where does Satan come from ?
  Student : From . . . GOD . . .
  Professor : That's right. Tell me son, is there evil in this World?
  Student : Yes.
  Professor : Evil is everywhere, isn't it ? And GOD did make everything. Correct?
  Student : Yes.
  Professor : So who created evil ?

  (Student did not answer)

  Professor : Is there Sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the World, don't they?
  Student : Yes, sir.
  Professor : So, who Created them ?

  (Student had no answer)

  Professor : Science says you have 5 Senses you use to Identify and Observe the World around you. Tell me, son . . . Have you ever Seen GOD?
  Student : No, sir.
  Professor : Tell us if you have ever Heard your GOD?
  Student : No , sir.
  Professor : Have you ever Felt your GOD, Tasted your GOD, Smelt your GOD? Have you ever had any Sensory Perception of GOD for that matter?
  Student : No, sir. I'm afraid I haven't.
  Professor : Yet you still Believe in HIM?
  Student : Yes.
  Professor : According to Empirical, Testable, Demonstrable Protocol, Science says your GOD doesn't exist. What do you say to that, son?
  Student : Nothing. I only have my Faith.
  Professor : Yes,Faith. And that is the Problem Science has.

  Student : Professor, is there such a thing as Heat?
  Professor : Yes.
  Student : And is there such a thing as Cold?
  Professor : Yes.
  Student : No, sir. There isn't.

  (The Lecture Theatre became very quiet with this turn of events )
  தொடரும்...

  ReplyDelete
 19. Student : Sir, you can have Lots of Heat, even More Heat, Superheat, Mega Heat, White Heat, Little Heat or No Heat. But we don't have anything called Cold. We can hit 458 Degrees below Zero which is No Heat, but we can't go any further after that. There is no such thing as Cold. Cold is only a Word we use to describe the Absence of Heat. We cannot Measure Cold. Heat is Energy. Cold is Not the Opposite of Heat, sir, just the Absence of it.

  (There was Pin-Drop Silence in the Lecture Theatre )

  Student : What about Darkness, Professor? Is there such a thing as Darkness?
  Professor : Yes. What is Night if there isn't Darkness?
  Student : You're wrong again, sir. Darkness is the Absence of Something. You can have Low Light, Normal Light, Bright Light, Flashing Light . . . But if you have No Light constantly, you have nothing and its called Darkness, isn't it? In reality, Darkness isn't. If it is, were you would be able to make Darkness Darker, wouldn't you?
  Professor : So what is the point you are making, Young Man ?
  Student : Sir, my point is your Philosophical Premise is flawed.
  Professor : Flawed ? Can you explain how?
  Student : Sir, you are working on the Premise of Duality. You argue there is Life and then there is Death, a Good GOD and a Bad GOD. You are viewing the Concept of GODas something finite, something we can measure. Sir, Science can't even explain a Thought. It uses Electricity and Magnetism, but has never seen, much less fully understood either one. To view Death as the Opposite of Life is to be ignorant of the fact that Death cannot exist as a Substantive Thing. Death is Not the Opposite of Life: just the Absence of it. Now tell me, Professor, do you teach your Students that they evolved from a Monkey?
  Professor : If you are referring to the Natural Evolutionary Process, yes, of course, I do.
  Student : Have you ever observed Evolution with your own eyes, sir?

  (The Professor shook his head with a Smile, beginning to realize where the Argument was going )

  Student : Since no one has ever observed the Process of Evolution at work and Cannot even prove that this Process is an On-Going Endeavor, Are you not teaching your Opinion, sir? Are you not a Scientist but a Preacher?

  (The Class was in Uproar )

  Student : Is there anyone in the Class who has ever seen the Professor's Brain?

  (The Class broke out into Laughter )

  Student : Is there anyone here who has ever heard the Professor's Brain, Felt it, touched or Smelt it? . . . No one appears to have done so. So, according to the Established Rules of Empirical, Stable, Demonstrable Protocol, Science says that You have No Brain, sir. With all due respect, sir, how do we then Trust your Lectures, sir?

  (The Room was Silent. The Professor stared at the Student, his face unfathomable)

  Professor : I guess you'll have to take them on Faith, son.
  Student : That is it sir . . . Exactly ! The Link between Man & GOD is FAITH. That is all that Keeps Things Alive and Moving.
  *************************************
  That student was Albert Einstein.
  *************************************

  ReplyDelete
 20. கடவுள் என்பவர் யார்?
  கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

  உங்களின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், புரிந்துணர்வு களையும் கூறுங்களேன்.

  கடவுள் தத்துவம்

  கடவுள் என்பவர் யார்?

  'ஜன்மாத்யஸ்ய யத:- யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ' 1
  அவரே கடவுள்.
  அவர் என்றும் உள்ளவர்,
  எப்போதும் தூயவர்,
  என்றும் சுதந்திரர்,
  எல்லாம் வல்லவர்,
  எல்லாம் அறிந்தவர்,
  கருணை வடிவானவர்,

  குருவிற்கெல்லாம் குருவானவர்
  எல்லாவற்றிற்கும் மேலாக
  'ஸ ஈச்வர:, அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப:
  அந்த இறைவன் சொல்லுக்குள் அடங்காத அன்பு வடிவினன்.' 2

  இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை.

  (அனைவரும் வணங்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உருவத்தை செய்துக் கொண்டு வணங்கும், அந்த உருவக் கடவுள்)

  அப்படி என்றால் இரண்டுக் கடவுள்கள் இருக்கிறார்களா?

  தத்துவ ஞானியின் 'இதுவல்ல, இதுவல்ல' என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா?

  இல்லை, இல்லை, இல்லை.

  சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும்.

  நிர்குணமும் , சகுணமும் ஒருவரே.

  அப்படியானால் பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்திலிருந்து வேறானவரா?

  அதுவும் இல்லை.

  இந்த பிரபஞ்சம் (நாம் பூதக் கண்களால் காணும் இந்த உலகம், வெளி, கோள்கள், நட்சத்திரங்கள் என்று யாவும்) பிரமத்தில் இருந்து தோன்றியது, தோன்றியது என்றால் மறையவும் செய்யும்.

  எங்கே மறையும். என்றக் கேள்வி வரும்.

  எங்கிருந்து தோன்றியதோ அதனுள்ளேச் சென்று மறையும். பிறகு அது மீண்டும் தோன்றும். இது படைப்பின் சுழற்சி. இதை இங்கே தற்காலிகமாக நிறுத்தி விசயத்திற்கு செல்வோம்.

  சகுணக் கடவுள் என்பவர் மாயையின் வழியாக காணப்படும் பரம்பொருளே அதாவது பரம்பொருள் எனபது தான்; நிர்குணக் கடவுள் / சச்சினானந்தம் / பிரபஞ்சத்தின் ஆதி மூலம்.

  இங்கே மாயை என்பது என்ன என்று விளக்க / புரிய / ஞாபகப் படுத்த வேண்டும்.

  பிரபஞ்சப் பொருள்கள் யாவும் ஜடப் பொருள்கள் என்றுக் கொள்வோம், அப்படி இருக்கும் போது அதனுள் ஒரு இயக்கம் வேண்டும் அல்லவா?

  அந்த இயக்கம் பெறுவதற்கு, இந்த சக்தி / இயற்கை /அதாவது மாயை தான் காரணம். இதை பிராணன் என்றும் கூறுவோம்.

  ReplyDelete
 21. ஆக, அந்த பரம்பொருள், அந்த ஒரேக் கடவுள்,

  இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.

  இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.
  நிர்குணமும், சகுணமும் ஒருவரே.

  பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.

  எல்லாமே இரண்டற்ற ஒன்றே தான். ஒன்றேயானப் பிரம்மம் தான்.

  மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ, வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது.

  எனவே பக்தன் பிரமத்தை, குணங்களோடு கூடிய நிலையில், அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய நிலையில்; அதாவது இயற்கையை ஆளும் ஈசுவரனாக, இறைவனைக் கொண்டு வழிபடுகிறான்.

  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.

  ஒருப் பொருள் கொண்டு பல பொம்மைகள் செய்கிறோம் என்றுக் கொள்வோம்.
  அது களிமண்ணாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, கண்ணாடியாகவோ இருக்கலாம்.

  அப்படி செய்யும் போது, அந்த செய்யப்பட்டப் பொருள் உருவத்தில் மாறுபாடு கொண்டு, அதற்கு எலி என்றும் புலி என்றும் பெயர் வைக்கிறோம் என்றுக் கொள்வோம்.

  இப்போது எலியைப் புலியாகவோ, புலியை எலியாகவோ மாற்ற முடியாது. ஆனால் அந்த இரண்டும் உருவான மூலப் பொருள் ஒன்றே.

  அந்த மூலப் பொருள் இந்த பொம்மைகளை செய்வதற்கு முன்பே இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அது உருவமும், நாமகரணமும் (பெயரும்) கொண்டு இருக்கிறது.

  இவை இரண்டும் வேறு வேறானவை என்றுக் கொள்கிறோம்.

  எதிலிருந்து எதுவரை என்றால், அந்த மூலப் பொருளில் இருந்து இவைகள் உருவம் பெற்றதிலிருந்தும் அந்த உருவம் அழியும் வரை.

  உருவம் பெறாத மூலப் பொருளாக இருந்தவரையில் அவை இரண்டும் ஒன்றே.

  அதுபோன்றே, அறுதி உண்மையான பிரமத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடே இறைவன்.

  இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், பிரமத்தைப் பற்றி மனித மனத்தால் உணரமுடிந்த மிக உயர்ந்தக் கருத்து இறைவன்.

  படைப்பு அநாதி காலந்தொட்டு (நிர்ணயிக்க முடியாதக் காலம் தொட்டு) இருந்து வருகிறது. ஆக இறைவனும் அப்படியே.

  ReplyDelete
 22. ஆத்திகம், நாத்திகம் எதுவானாலும் சரி இதில் எதைக் கொண்டாலும் சரி... அது மற்ற இயற்கைகளைப் போல், தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் முழு மனிதனே இறைவனால் ஆசிர்வதிக்கப் படுகிறான் (தேவலோகத்தில் தனி ராஜ்ஜியம் கொண்டு பாவிகளை மன்னித்து, புனிதர்களோடு சொர்கத்தில் அமர்த்துவது என்ற ஒரு மதத்தின் கோட்பாடு) / அவனது அருள் கடலில் மூழ்குகிறான் (ஏகன் அவனே முதலும் முடிவுமானவன் அவன் ஒருவனே தலைவன்... இன்சுளால் அவனருளால் தான் உலகம் இயங்குகிறது என்பார்கள் இவர்கள்) / அவனருகே அமர்கிறான் (கடவுளைப்
  புறத்தேக் காண்பது, துவைதம் என்ற இந்து மதப் பிரிவு) / அவனில் கலப்பது (இது அகத்தேக் காண்பது அதாவது அவன் தான் நான்; நான் தான் அவன், என்னுள் இருக்கும் நான் அவனே அவனிடம் இருந்து வந்த ஒருத்துளி மீண்டும் அவனிடமே சென்று சேர்க்கிறது அது தான் லட்சியம் அதை நோக்கியப் பயணமே பிறவிகள் (அத்வைதம்) ஆக, அதை எங்கும் காணிலும் உனக்குள்ளும் காணலாம் அந்தத் துளி பொங்கிப் பெருகி பெருங் கடலான கடவுளிடம் கலக்கும் பொது, பிறவி முற்று பெறுகிறது அதுக்கு தடையாக இருப்பது கர்ம வினை, அது தீரும் பட்சத்தில் அதற்கான கதவு திறக்கிறது. உள்ளொளி பெருகுகிறது. தீவினைகளை அனுபவித்தே ஆக வேண்டும், நல்வினையை பெருக்க வேண்டும், இதை ஆத்திக வாதிகள் சுலபமாக செய்ய வழி இருக்கிறது... நல்வினை வளர நமது மனம் பலப் பட வேண்டும்... அதாவது அது ஆன்ம பலம் என்பது. அதைப் பலப் படுத்துவது அன்பு. ஆக, அன்பை செலுத்தினால் ஆன்ம பலம் கூடுகிறது. ஆன்ம பலம் கூடினால் நல வினைகள் கூடுகிறது. இதற்கு பக்தி தெய்வ வழிபாடு, அன்ன தானம், ஏழைக் கல்வி, அநாதை ஆசிரமங்கள், விதவை திருமணங்கள், நோய்தீர்க்கும் வழிமுறைகள், வீட்டில் செயல் பட முடியாமல் அல்லது உழைத்து ஓடாய்ப் போனவர்களை அன்போடு கவனிப்பது இவைகள் மனிதனோடு மட்டும் அல்லாமல், உலக பொருள்கள் அனைத்திலும் , மரம், செடி, கோடி, விலங்குகள் என்று பலவற்றிலும் அன்பு கொண்டு தீங்கு வராமல் பார்ப்பது என்று பல நடவடிக்கைகள் இருக்கிறது. இதிலே மனிதன் தான் முதல் நிலையில் கவனிக்கப் பட வேண்டும். மனிதன் உணவின்றி தவிக்கும் பொருட்டு, கோ தானம் வீண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  இதை ஆன்மிகம் வழியே தான் செய்ய வேண்டுமா.... இவைகளை கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் செய்தால் அதுவும் இந்தப் பலனையேப் பெறும். அதில் எந்த தவறு இல்லை. ஆன்மீக வாதியைவிட நாத்திக வாதி (இயற்கையிலே ஆன்ம பலம் அதிகம் பெற்று இருந்தால்) எளிதில் அந்நிலைக்குத் கொண்டுச் செல்லப் படுவான்... காரணம் ஆன்மீக வாதி கூட பிரவியருப்பு என்னும் நோக்கை கொண்டு இதுவும் ஒருவித சுயநலம் என்றே கொள்ளவேண்டும்... அன்பு செலுத்துகிறான்...

  ஆன்ம பலம் எதற்கு என்றால், நமது இந்த உயரிய பயணத்தில் அதாவது பிறர் நன்றாக இருக்க வேண்டும், நாமும் இயற்கையின் தத்துவம் போல், பிறர் நலனுக்காகவே பிறந்துள்ளோம் என்று எண்ணிக் கொண்டு போகும் பொது எதிர் கொள்ளும் தடைகளை, தீமைகளை, தீயசிந்தனையாளர்களை (ஆத்திக / நாத்திகப் போர்வை கொண்டவர்களை) சுயநல வாதிகளை, மனிதன் என்ற ஒரே ஒரு இனத்தை பழக கூறு போட்டு அதனால் பல பிரச்சனைகளை உண்டு செய்து அதனால் லாபம் பார்க்கும் வியாபாரிகளின் செயல்களை, கண்டு அவர்களை சமாளிக்க தேவையான புத்தியை, உத்தியை பெற மேற்கூறிய ஆன்ம பலம் வேண்டும். அது இல்லாமல் போனால், வெறி தலைக் கேறி அதன் பொருட்டு இன்று நாம் காணும் வெறியாட்டங்களும், கலவரங்களும் தான் எங்கும் காண்போம்.

  மதம் வேறு... கடவுள் என்பது வேறு.... மதம் என்பது இடம், காலம், மனித இனம் இவைகளின் அடிப்படையில் மனிதனாக ஏற்படுத்திக் கொண்டது. அதில் குற்றம் இருந்தால் (இருக்கிறது) அதற்கு பொறுப்பு மனிதனே... மதம் ஒரு அபின் என்றார் மார்க்ஸ் அது உண்மையாக பல நேரங்களிலே இருக்கிறது... ஆனால் அது தோன்றிய உண்மையானக் காரியம் காரணம் வேறு... அதன் தார்ப்பரியம் மறந்து போய்விட்டது...

  அந்தக் கால, எஸ்.எஸ்.எல்.சி என்றுக் கேள்விப் படுவோம்... அவர்களின் அறிவு நிலை.. இந்தக் கால முதுகலைப் பட்டம் பெற்றவனுக்கு கூட இருப்பதில்லை... அதற்கு காரணம் எதுவாக இருக்கும் பெரும்பாலும் போதனை முறையும், கற்பவனின் புரிந்துணர்வும் தான்....
  ஆக, நாத்திக வாதிகள் அவர்களும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர்களும் அந்த கடவுளின் அங்கம் தான் (பிறப்பு / படைப்பு). ஆத்திக வாதிகள் இதை நம்பவேண்டும்... இருவருக்குள்ளும் இருக்கும் அந்த ஆன்மா.. தான் கடவுள் என்றால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். அது தான் உணமியான வழிபாடு...

  ReplyDelete
 23. அப்படி ஆத்திக வாதிகள் நம்பினால் அது போதும் அப்படி நம்பி நாத்திகவாதிகளை மதித்தால் அவனுக்குள்ளும் இருக்கும் அந்தக் கடவுளான ஆன்மாவை வணங்கினால்... அவனுக்கும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நீ வணங்கி யதர் காகவாவது அவனும் வணங்கி அன்பு செலுத்துவான். உனது கொள்கையை நம்பிக்கையை அவனிடம் திணிக்க வேண்டாம் அது வீண். அப்படித் தான் பாரதியும், சிங்காரவேலரும்; பெரியாரும் ராஜாஜியும் நண்பர்களாக இருந்தார்கள்... இவர்களின் நோக்கங்கள் ஒன்றே இருந்தும் இவர்களின் போக்கு ஆன்ம பலத்தை, பொறுத்து அமைந்தது... அதுவும் காலத்தின் கட்டாயம் அதுவும் கடவுளுக்குத் தெரியாமல் நடந்திருக்காது அல்லவா! அதைப் பற்றி அதிகம் பேசினால் அது அரசியலாகிவிடும்.. அது அல்ல இங்கே பேசுவது.

  ஆக, மனிதனாகப் பிறந்ததே கர்மவினை பாக்கி இருப்பதால் தான் ஆக, இதில் அளவில் வேறுபட்டாலும் எல்லோரும் கர்மவினையால் அதிலும் பூர்வ தீய கர்மவினையின் பாக்கியில் தான் கட்டுண்டு இருக்கிறோம். நம்பாமல் இருப்பதால் அது பொய்யாகாது. அதை நிரூபிக்க வேண்டி காலம் கடத்துவதும் வீணான ஒன்றே. அன்பு செய்வீர்... ஆத்திகவாதி என்பதால் மாத்திரம் கடவுளின் கருணை கிடைத்து விடாது. நாத்திகன் ஒருவன் நல்லவனாக இருந்தால், அவனே ஆத்திகனைவிட வேகமாக ஆண்டவனை சென்றடைவான், காரணம் அவனிடம் சுயநலம் குறைவு.

  நாத்திகம், ஆத்திகம் எதுவானாலும் நல்லவர்களாக இருந்து, உலக உயிர்களை அன்பால் போற்றினால் போதும் அதுவே வாழ்வின் தத்துவம். இதைத் தான் அனைத்து வேதங்களும் கூறுகிறது... மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், எத்தனை ஆத்திககர்கள் எத்தனை நாத்திககர்கள் (நான் கூறுவது உண்மையான கொள்கையாளர்களை) செயற்கரிய செய்து இருக்கிறார்கள் அதன் விகிதம் என்ன... பிரபஞ்ச விளக்கம் தந்த நமது வேதகால முனிவர்கள் (இன்றைய அறிவியல் நமது மூதாதையர்கள் கூறியவற்றைத் தான் புதிதாகக் கூறுகின்றன அதை நன்கு பயின்றவர்களுக்குத் தெரியும்), மூதாதையர்கள், வள்ளுவன், கம்பன், இளங்கோ போன்ற பெருங் கவிகள் ஆத்திகர்களா நாத்திகர்களா! காந்தி, நேரு, வல்லபபாய் படேல், வ.உ.சி, கோகலே, ராஜாராம் மோகன்ராய், பாரதி, சிங்காரவேலர், காமராசர், அண்ணா (ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்), பெரியார், எம்.ஜி.ஆர் என்று சமூகத்திற்காக பாடுபட்டவர்களில் இன்னும் லட்சக்கனக்கானவர்களில் எத்தனை பேர் நாத்திககர்கள்.

  நான் ஆள், சேர்ப்பதற்காகக் கூறவில்லை. அது எனது வேலையும் நோக்கமும் இல்லை... அதற்கு அவசியமும் இல்லை... உடம்பை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது ஒரு வழி... வந்துவிட்டால் சிரமமே என்று தடுப்பூசிப் போட்டுக் கொள்வது ஒரு வழி... வந்தப் பின்பு வைத்தியம் செய்துக் கொள்வது அது ஒரு வழி... ஆக, எப்படியோ அவரவர் சிந்தித்து செயல் பட வேண்டியது தான்..

  தனியாக வந்தோம் தனியாக போவோம்... இதில் கூட்டம் எதற்கு, வாழும்வரை பிறருக்கு உதவியாக, பிறரின் மனம் சந்தோசப் படும் படி வாழ்வது... அப்படி இல்லாது ஒழியின்.. பிறருக்கு தீங்கு செய்யாது வாழ்ந்தாலே நல்ல வாழ்க்கையாக இருக்கும் அதுவே கர்மவினையை தீர்க்க நல வழியாகவும் இருக்கும்...

  ReplyDelete
 24. ஆண்டவனை அடைய நான்கு வழிகள்....அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.. அதற்கு ஆத்திகம் நாத்திகம் என்ற இரு பிரிவும் அடக்கமே.. அவையாவன்.. கர்ம யோகம் ( இதிலே நாத்திகர்களும் / (விஞ்ஞானிகளும்) அடக்கம்), பக்தியோகம் (இதில் ஆன்ம பலம் பெற்று அதன் மூலம் எதிர்ப்புகளை சமாளித்து கர்மயோகம் செய்வது), ராஜயோகம் (விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி... புறப்பொருளை ஆராய்வது விஞ்ஞானம், அகப் பொருளை ஆராய்வது இந்த ராஜயோகம்.. அப்படி ஒன்றும் இல்லை, இருக்காது என்று விஞ்ஞானி நினைத்து ஆராயாமல் பொய் இருந்தால் உலகில் எதுவும் கிடைத்திருக்காது... அதைப் போலவே மெஞ்ஞாநிகலான நமது மூதாதையரும் தனது ஞானத்தால் தான் பிரபஞ்ச விளக்கம் தந்தார்கள்... (வானவியல் சாஸ்திரம் தாம் நமக்குப் புரிந்த அற்புதம் மறுப்பதற்கு இல்லையே?.. மறுத்தால் அது விதண்ட வாதம்), கடைசியாக ஞானயோகம் இது பக்தியோகமும், ராஜயோகமும் சேர்ந்தது....

  (நமது நாட்டு நாத்திகம் பேசும் அரசியல் வாதிகள் கூட ராஜயோகம் செய்கிறார்கள் என்று கேள்வியுறுகிறோம்.. அது ஆரோக்கியமான விசயமே... அதனால் அவர்களின், ஆன்ம பலமும், திரேக ஆரோக்கியமும், ஞாபக சக்தியும் கூடுவதை அவர்கள் உணர்ந்தமையால் தான் அதை செய்கிறார்கள் புரிந்தவர்களுக்குப் புரியும்... அப்படி உள்ளுக்குள்ளே ஒன்றும் இல்லைஎன்றால் என் அந்த நாத்திகவாத அரசியல் வாதிகளும் அதை செய்ய வேண்டும்????)

  ஆத்திகமோ, நாத்திகமோ வேறொருவர் கூறக் கேட்டாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், விதண்டாவாதம் பேசாமல், இருக்கும் மூளையைக் கொண்டு யோசித்து ஒரு முடிவுக்கு வந்து நல்லதொரு வழி பயணித்தால் யாவருக்கும் நன்று அது இந்த உலகிற்கும் நன்றே..

  நன்றி வணக்கம்.

  ReplyDelete
 25. வாருங்கள் க்ருபா, gmb sir, சார்வாகன், தமிழ்விரும்பி ..

  உங்கள் ஒவ்வொருவர் பார்வையும் சுவாரஸ்யமாய் உள்ளது. ஐன்ஸ்டீன் பற்றிய உரையாடல் மின்மடலில் படித்திருக்கிறேன்.

  நிறைய விஷயங்கள் படிக்க புரிய அருமையாய் இருக்கு.

  life comes from life என்று லூயிஸ் பாஸ்சர் கண்டுபிடிப்பிற்கு பரிசு வாங்கியும் உள்ளார். பொதுவாக எதோ ஒரு "சக்தி" (அருவமாக) இயங்குகிறது என்பது ஆன்மீகம் ஊறிப்போன இந்திய நாட்டில் பலரும் நம்பும் ஒன்று தான்.

  சுவாரஸ்ய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்......... நன்றி...

  சார்வாகன், தமிழ்படுத்தியமைக்கு நன்றி. மாற்றிவிடுகிறேன் :)

  ReplyDelete
 26. Aaha.. my favourite topic SP :D.

  I read your post, but not all the comments. I am not comfortable with Tamil typing, so here goes in English.

  There are a few issues with the rationalistic approach of Hawking/Dawkins and others, the chief of them being
  1. Free-will and therefore Morality.
  2. Consciousness.

  All religions assume the existence of free-will, i.e, an entity within the body-mind who makes decisions/choices as to what is to be done, and hence is subject to the law of Morality, the so called Law of Karma / Golden rule - "Good begets good, bad begets bad". Based on this rule alone all messages for social-order in all religions are based.

  Now the question is how pure Science can be used to reconcile the question of Morality. In the first place there is no space for any Free-Will. The human being is nothing but a figment in the mind, and the mind is nothing but a chance existence because of the body. Therefore much debate and confusion has arisen to answer the question - " Why should one be moral?". (http://en.wikipedia.org/wiki/Science_of_morality for more).

  It is my belief that it is impossible for Pure Rationalism/Science to answer this question, because frankly, there is no reason in science as to why I, as a single human being, should not cheat, thieve or kill other people for my personal benefits. There is no reason for me to care about anyone else. Note that here reasons such as kindness, compassion, global-well-being, etc are all useless, because if we still ask the question "Why Kindness, Why Compassion, Why Global-well being?" there is still no answer to these questions.

  ReplyDelete
 27. Continuing...

  In religion, this problem of morality is simply justified by assuming Free-Will and Morality. There is no way to prove that Free-Will exists. Note that even in science there is no real "proof" that the brain is all there is. There is merely a LOT of circumstantial evidence, meaning a huge set of experiments exist which seem to confirm that the "brain" is the source of consciousness. Evidence is not proof, though. Suppose the scientists manage to create a conscious life form from pure matter, then we can truly say that this is proof of the fact that physical-matter/energy alone is everything.

  ReplyDelete
 28. Now to (2)Consciousness.

  In Science, "Consciousness" is synonymous with "Self-Awareness", which is present during Dream and Waking States and is absent during Deep-Sleep (when there are no dreams).

  Most reasoning people would indeed feel that this is the definition for Consciousness. This is the same as the Free-Will-ing entity of Philosophy/Religion, so again the chicken-egg problem remains. As said before, I would not agree that this problem is settled by philosophy or science. If there is a claim that it is settled, I would call it only arrogance/ignorance (I have pointed the argument against science above - "Evidence" is not "proof". Philosophers, on the other hand, state that this is an assumption alone and cannot be proved objectively.)

  Now, since you have raised the question of Advaita and Buddhism, we can go a little further.

  Advaita:
  The Indian philosophical systems of Vedantha (Advaita in particular) define Consciousness not as this "Self-Awareness", but as the Absolute Awareness through which all things are "enlivened" or "become known". Unlike the scientific definition of Consciousness, this Absolute Awareness is NEVER absent in Advaita, not even in Deep-Sleep. In fact, the "self-awareness" of Science which is present only in Waking/Dream states, is but a vestige of this Advaitic Absolute Awareness.

  One may be inclined to reason as to why this should be true. Again, there is no "objective proof" to this fact. However, there is a curious logic to it.

  The secret lies in the Deep-Sleep state, where Science assumes that there is no "self-awareness", which is indeed obvious. However, in Deep-Sleep there are two things that are indeed "known" to the Sleeper
  (1) The Absence of self-awareness and therefore the apparent absence of the world.
  (2) The pleasure/bliss of Deep Sleep.
  Both of these are recalled after waking up from sleep. Inferring by the Knowledge of these two facts, one realises that there is indeed something which is "Aware" of these 2 things. This Absolute Awareness, which does not vanish in any state, is called Sat-chit-Ananda, Atman, Brahman etc., in Advaita. This is Consciousness, and it is this which "appears" through the so-called "Maaya" as the world. In the Waking/Dream states, the same Absolute Awareness appears as the smaller "self-awareness"

  Buddhism:
  Buddhism agrees with Advaita in the details that the mind is separate from the body, all things including the body, appear and vanish in the mind alone. However, Buddhism does not agree with this Absolute Awareness idea of Vedantha. Instead it says that there is indeed no fundamental absolute awareness (and hence only a "Void" exist), but all there is is the mind. This is somewhat closer to science, but still the duality between body (brain) and mind is accepted.

  I am of the opinion that Science has only just begun to tap the mysteries of Consciousness. The Advaitic definition of Consciousness has not filtered into scientific minds at all, in my humble opinion. Because the theology in Western religions is rather thick and based on much "belief" and very little philosophy, it is only natural that both religion and science clash there with huge noise. In India, if one truly wants to commit to the Vedantha, there is no great issue with Science and Scientific mindsets, because Vedantha can agree with Science on all aspects in the physical world. But Science really has no purvey over the realm of Consciousness which is so elaborately discussed in Vedantha, because this Consciousness is not really available to Science for it is not available to the 5 senses at all (nor their mdifications.)

  Regards,
  Prasad.

  ReplyDelete
 29. தமிழ்விரும்பி,

  //இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.

  இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.
  //

  அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி :)

  ப்ரசாத்,

  இதைப் பற்றி நாம் முன்பே விவாதித்திருக்கிறோமா? முதல் கர்மாவின் தோற்றம் குறித்து பகிர்ந்தோமென நினைக்கிறேன்.

  விவரிப்புக்கு நன்றி. அருமையான விளக்கம் சுட்டி. பெரிதும் உடன் படுகிறேன்.

  //Buddhism does not agree with this Absolute Awareness idea of Vedantha. Instead it says that there is indeed no fundamental absolute awareness (and hence only a "Void" exist), but all there is is the mind. This is somewhat closer to science, but still the duality between body (brain) and mind is accepted.
  ///

  வித்தியாசத்தின் சாராம்சத்தை சரியாக விளக்கியுள்ளீர்கள். அத்வைதிகள் "void" எனப்படும் ஒன்றுமில்லாததை நாம் அளவிட முடியாததால், அதிலிருந்தே அனைத்தும் தோன்றுவதால் அது அனைத்தும் உள்ளதெனவும் கூறலாம். potential of everything exist in void.. void in our very term is misunderstood unexplored என்பது போன்ற கருத்தை வைக்கின்றனர்.

  நான் இதை நாணயத்தின் இருவேறு பக்கமாக பார்க்கிறேன். ஒன்றுமில்லாததே அனைத்துமானது. இரண்டுமே ஒன்று.

  ஒன்றுமில்லாததே எல்லாமும் உடையது ஆகவே "இருப்பு".


  கருத்துக்களுக்கு நன்றி !

  ReplyDelete
 30. ஆண்டவனே இல்லையே

  ஆண்டவனே நீ இல்லாத இடம் இல்லையே

  அவரவர் பக்குவத்திற்கு ஏற்ற படி நிலையில் எடுத்துக்கொள்ளலாம்...

  ReplyDelete
 31. GOD IS EVERYWHERE..

  GOD IS NO WHERE..

  எப்படியும் அவரவர் அனுபவித்தே அறியவேண்டியது வாழ்க்கை அல்லவா?!!

  ReplyDelete
 32. நன்றி ராஜேஸ்வரி...

  god is no where...
  god is now here (famous interpretation)

  பெரிய ஞானிகளும் மஹான்களும், விஞ்ஞானிகளும் சொல்லாததையா நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம். எனினும் சிறு முயற்சி. அனுபவிப்பதைத் தவிர இதற்கு வழியே இல்லை. :) நன்றி

  ReplyDelete
 33. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete