August 30, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (4)

காத்திருத்தல் சுகமா?

காத்திருத்தல் சுகம்
நீயும் சுகித்திரு
ஒரே ஒரு முறை...
எனக்காக காத்திரு
ஆவலுடன் வேர்த்திரு
விழி பூத்து நான் வரும் வழி பார்த்திரு
நான் வராமல் நேர்ந்து விட்டால்
எனக்காக விழி நீர் கோர்த்திரு
காத்திருத்தல் சுகம்.

August 20, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (5)


அகல் கூறும் கதைகள்
_____________________


சின்ன அகல் விளக்குகளின்
வண்ண வரிசைகள்
சிலது வரிசையற்று
வேறுபட்டு

கதிரொளியின் வீச்சு
தெருவெங்கும் தெறித்திருக்க

மங்களக் கோலங்களால்
வீடெங்கும் சுடர்க்கலைகள்

ஒளியேற்றிய புதிய கோணத்தில்
பரிச்சய முகங்களின் ரகசிய கிசுகிசுப்பு.
தூரிகையாய் செதுக்கிய அகலோவியங்கள்.
இன்னும் அடர்ந்து
இருள் அப்பிக்கொண்ட மாலையிலும்
இரவிலும்..
அகலேந்தியபடி அமானுஷ்யக் கற்பனையில்
யாரோ ஒரு பெண்..
வயிற்றைப் பிசைந்துருக்கும் அவள் பின்னணியிசை
கல்கியின் கை தீட்டிய வந்தியத்தேவன் குதிரை
யாருமே சொல்லாது விடுபட்டுப் போன
ஏதோ ஒரு சந்திரமுகியின் கதை

அகல் உலகில் எத்தனை கதைகள்
கவிதைகள்
கற்பனைகள்!

August 17, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (3)

இன்னும் அஞ்சே நிமிஷம்
________________________


ஒளிகீற்றின் முதல் முத்தம்
சலனத்துடன் அணுகும் முன்பே
பதறியடிக்கும் அவசரமில்லை.
வெளிக்காற்றின் குளிச்சிக்கு
வெதுவெதுப்பாய் பதுங்கி
நிலா முகத்திற்கு முக்காடு பூட்டி
உலா வரும் கோடூரத்திற்கு
இன்று மட்டும் விடுமுறை.
கதிரவனின் அலறல் கட்டில் வரை ஒலித்தாலும்
அலட்சியமாய் உதறித் தள்ளி
துயில் கலைந்த பின்னும் முரண்டு பிடித்து
புரண்டு சுகித்து
காதல் கணவன் கையில்
காபியுடன் சிரிக்கும் வரை
எழாமல் இருப்பதே
சுகமானதொரு காலையின் அகராதி விளக்கம்।

-ஷக்திப்ரபா

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (2)

இன்றைய புத்தன்

போதுமென்று பொங்கி வழிந்தும்
புது ஊற்றாய் பெருகும் ஆசை - சலனம்
ஏதுமின்றி திகழும் புத்தனுக்கும்
போதிமரமொன்றும் கிடைப்பதில்லை
கலிகாலப் பேரிருளில்
கால் தடுக்கும் இடமெங்கும் மின்னொளி சுரந்தும் (மன)
வலி-யிருள் நீங்க ஒளிகூட்ட
போதிக்கும் குரு-சாமிக்கும்
ஜோதியொன்றும் ஒளிர்வதில்லை।

- ஷக்திப்ரபா

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (1)

கண்ணன் என் காதலன்

சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
வித்து விளைத்திடும் சிந்தனையும்
பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!

- ஷக்திப்ரபா

August 12, 2010

திரையிசை பயணங்கள் - 2

படம்: நாடோடி ராஜா
பாடல்: வைரமுத்து
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள் : எஸ்.பி.பி / எஸ். ஜானகி
வருடம்: 1982

___
Courtesy
http://www.dhool.com/sotd2/645.html

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே..ஆஅ....
.
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரம்
இவள் ஒரு தாவணி மேஹம்
இதயம்..
அமுதில்..
தொடுகையில்
.
பார்வை வேறானது இங்கு
வியர்வை ஆறானது
பார்வை வேர்-ஆனது இங்கு
வேர்வை ஆறானது
.
சேலை தொடு மாலை இடு
இளமையை தூது விடு- பாடு (சந்தன)
.
என்னோடு வந்தாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி தாகம்
கரும்பும்...
இவளை ..
விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை - இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே
போர்வையிடு
மன்மத சேதி கொடு - பாடு (சந்தன)
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஆஹாஹாஹா






___
பார்வை வேறானாது / பார்வை வேர் - ஆனது (பிரித்தும் பொருள் கொள்ளலாம்) போன்ற பாடல் வரிகள் வைரமுத்துவின் முத்திரைக்குச் சான்று. ஷங்கர்-கணேஷின் வீணை இடையிசையில் நாட்டை ராகத்தின் குதூகலிப்பு (மஹா கணபதிம் பாடலின் தொனி) 'விடிந்ததும் காய்ந்து விடும்' என்ற கடைவரியில் ஸ்வர வேறுபாட்டுடன் முடித்திருப்பது மகுடம். எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி குழைவும் லயிப்பும் பாடலை அலங்கரித்திருக்கிறது.

August 11, 2010

திரையிசைப் பயணங்கள் - 1

எனக்குப் மிகவும் பிடித்த / ஓரளவு பிடித்த / பிடிக்காதா திரைப் பாடல்களை பகிர்ந்து கொள்ளும் சிறு முயற்சி. பல பகுதிகளாகத் தொடரும்.

இறைவனைப் போற்றும் பாடலிலிருந்தே துவங்குகிறேன்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000528
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முத்தாவன் மூல முதல் ஆனவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்றுதான் என்று சொன்னான் அவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்
கொடியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்



(இப்பாட்டின் ஒளி வடிவம் கிடைக்கவில்லை)