இறைவனைப் போற்றும் பாடலிலிருந்தே துவங்குகிறேன்.
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000528
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முத்தாவன் மூல முதல் ஆனவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்றுதான் என்று சொன்னான் அவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன்
கொடியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்
(இப்பாட்டின் ஒளி வடிவம் கிடைக்கவில்லை)
முதல் அடியான ஒன்றானவனிலிருந்து
ReplyDeleteஈற்றடியான ஒளியாகி நின்றானவன் -வரை, இந்தப் பாடலில் நாரில் கட்டி வார்த்தை அரும்புகளைக் கோர்த்தமாதிரி ஒரு அழகும், தொடர்ச்சியும் இருக்கிறதை கவனித்தீர்களா..
பயணத்தைத் துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் ஜீவி. திரையிசைப் பாடல்களும் தங்களை கவனத்தைக் கவர்ந்தவை என்று அறிய மிக்க சந்தோஷம்.
ReplyDeleteஉண்மை தான். பாடல் தனது அழகு, நேர்த்தி, சந்தம், இசையின் சுவை, அனைத்தையும் மிஞ்சிய இறைவனின் தன்மை விளக்க முற்பட்டிருப்பது என எதிலுமே சோடை போகவில்லை.
அன்பின் ஒளியாகி நின்றானவன்! அருமையான வரி! அன்பே சிவம் என்று சொல்கிறார்கள் இதனால்தான் !ஒளியின்றி வாழக்கூடுமோ அன்பின்றி மானிடம் வாழுதல் இயலுமோ? சக்தி உன் இசைப்பயணம் அன்போடு ஆரம்பமாகி இருக்கிறது அன்புடையார் எல்லாம் உடையார்! ஆகவே பதிவுகள் தொடரும் தொடரவேண்டும்!
ReplyDeleteநன்றி ஷை. என்னுள் இருக்கும் பழைய பாடல்களின் (புதுசும் சிலது) தாகம் தீரும் வரை பதிவிடுவேன்.
ReplyDelete:)