August 20, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (5)


அகல் கூறும் கதைகள்
_____________________


சின்ன அகல் விளக்குகளின்
வண்ண வரிசைகள்
சிலது வரிசையற்று
வேறுபட்டு

கதிரொளியின் வீச்சு
தெருவெங்கும் தெறித்திருக்க

மங்களக் கோலங்களால்
வீடெங்கும் சுடர்க்கலைகள்

ஒளியேற்றிய புதிய கோணத்தில்
பரிச்சய முகங்களின் ரகசிய கிசுகிசுப்பு.
தூரிகையாய் செதுக்கிய அகலோவியங்கள்.
இன்னும் அடர்ந்து
இருள் அப்பிக்கொண்ட மாலையிலும்
இரவிலும்..
அகலேந்தியபடி அமானுஷ்யக் கற்பனையில்
யாரோ ஒரு பெண்..
வயிற்றைப் பிசைந்துருக்கும் அவள் பின்னணியிசை
கல்கியின் கை தீட்டிய வந்தியத்தேவன் குதிரை
யாருமே சொல்லாது விடுபட்டுப் போன
ஏதோ ஒரு சந்திரமுகியின் கதை

அகல் உலகில் எத்தனை கதைகள்
கவிதைகள்
கற்பனைகள்!

2 comments:

  1. ரசித்தேன் அகலோவியங்களை... குட்டிக் குட்டி கிறுக்கல்கள்(4) இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். தேடிப்பார்த்தேன். ஆனா கிடைக்கலை :-( :-)

    ReplyDelete