இன்னும் அஞ்சே நிமிஷம்
________________________
ஒளிகீற்றின் முதல் முத்தம்
சலனத்துடன் அணுகும் முன்பே
பதறியடிக்கும் அவசரமில்லை.
வெளிக்காற்றின் குளிச்சிக்கு
வெதுவெதுப்பாய் பதுங்கி
நிலா முகத்திற்கு முக்காடு பூட்டி
உலா வரும் கோடூரத்திற்கு
இன்று மட்டும் விடுமுறை.
கதிரவனின் அலறல் கட்டில் வரை ஒலித்தாலும்
அலட்சியமாய் உதறித் தள்ளி
துயில் கலைந்த பின்னும் முரண்டு பிடித்து
புரண்டு சுகித்து
காதல் கணவன் கையில்
காபியுடன் சிரிக்கும் வரை
எழாமல் இருப்பதே
சுகமானதொரு காலையின் அகராதி விளக்கம்।
-ஷக்திப்ரபா
//காதல் கணவன் கையில்
ReplyDeleteகாபியுடன் சிரிக்கும் வரை
எழாமல் இருப்பதே
சுகமானதொரு காலையின் அகராதி விளக்கம்।//
எதார்த்தாமான வரிகள். வாழ்த்துக்கள்
mikka nandri saravaNan.
ReplyDeleteஅகராதி புடிச்சவங்க தாங்க.... காலையல புருஷனுக்கு ஒரு காபி கூட வெச்சு குடுக்கமாட்டாங்க...
ReplyDeleteஇருந்தாலும் ஹோட்டல் காபி... காபிதான்... பேஷ் பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...
அட வாராத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையா இருந்தா கூட அகராதி புடிச்சவங்களா .. ? என்னவோ போங்க
ReplyDelete//அட வாராத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையா இருந்தா கூட அகராதி புடிச்சவங்களா .. ? //
ReplyDeletesundayla wakeuppu noon 12kku thaan... appuram ellam கிளம்பி ஹோட்டல்தான் direct lunch :)
ஹிஹிஹி...காலம் மாறிபோச்சு இல்ல? :))))
ReplyDeleteமிக்க நன்றி :)
ம்ம்ம்ம்...நல்லா இருக்கு...
ReplyDeleteanubhavam paesuvathu nanraaga therigirathu.kirukkalgal azhagaaga vanthirukkirathu. vaazhththukkal
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteanubavaththil ezhuthappatta kutti kutti kirukkalgal azhagaagavae vanthullathu. vaazhththukkal
ReplyDeleteanubavam paesukiratho? nanraaka ullathu vaazhththukkal.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றி ஜி.எம்.பி sir. Multiple post பண்ணிட்டீங்க :D
ReplyDelete