December 11, 2009

சோ-வின் எங்கே பிராமணன் - part1 (மருந்தும்- மந்திரமும்)

'மந்திரம் ஓதி விபூதி பூசி'னாலே உடம்பு சரியாகிவிடும் என்பது பண்டைய காலத்தில் சிலர் வழங்கி வந்த நம்பிக்கைகள். 'இது என்ன குருட்டு நம்பிக்கை?' என்று வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சோ.

எப்படி ஒருவன் மருத்துவனிடமும் அவன் மேல் உள்ள திறனிலும் நம்பிக்கையோடு மருந்தை உட்கொண்டு குணமடைகிறானோ அதே போல் மந்திரங்களுக்கும் ஷக்தி உண்டு. அதை முறையே நெறி வழுவாமல் நிர்மல வாழ்க்கை வாழும் உசந்த மனிதன், ஜபித்தால், அதன் பலன் அபரீமிதமாய் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மருந்துகள் உட்கொண்ட பின்பும் கூட பல வருடங்கள் கழித்து அம்மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் கண்டுகூறுகிறது. அப்படியிருக்க, எந்த நம்பிக்கையில் தைரியத்தில் மருந்தை உட்கொண்டு
சுகமடைகிறோம்? 'அதே நம்பிக்கை ஏன் மந்திர ஷக்திக்கு இருக்கக்கூடாது?' என்று அலசினார்.

இன்றைய டவுட்டு: எப்படி சோ அவர்கள் மந்திர-ஷக்தியையும் அதனைச் சார்ந்த நம்பிக்கையையும், மருந்துகளுடன் ஒப்பிடுகிறார்?

மருந்து குணப்படுத்துவது புற-உடலை. மந்திரமோ energy வடிவில், ஆன்ம பலத்தையும் auroவையும் குணப்படுத்துகிறது. அதன் பலத்தை அதிகரிக்கிறது. இதை அதனுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? கூற வந்தது நல்ல கருத்து, wasn't delivered in a convincing way எனத் தோன்றியது.

2 comments:

  1. இன்றைய டவுட்டுன்னு... நீங்களே பின்னூட்டம் போட்டிங்களே.. நல்ல டவுட்டு

    ReplyDelete
  2. தொடர் வருகைக்கு மிக்க நன்றி அஷோக் :)

    ReplyDelete