March 25, 2019

லலிதா சஹஸ்ரநாமம் ( 528-534 ) (With English meanings)



யோகினி ந்யாஸம்

சஹஸ்ரதள பத்மஸ்தா;
சர்வ வர்ணோப ஷோபிதா;
சர்வாயுத தரா;
ஷுக்ல சம்ஸ்திதா;
சர்வதௌ முகீ;
சர்வௌதன ப்ரீத சித்தா;
யாகின்யம்பா ஸ்வரூபிணீ;


()
சஹஸ்ர = ஆயிரம் 
தள = இதழ்
சஹஸ்ரதள = ஆயிரம் இதழுடைய
பத்ம = தாமரை
ஸ்தா = நிலைத்தல் = நிலைபாடு

#528 சஹஸ்ரதள பத்மஸ்தா = சஹஸ்ரார சக்கரத்தில் நிலைபெற்றிருப்பவள் *
*சஹஸ்ரார சக்கரம் என்ற ஏழாம் படிநிலை சக்கரம், ஆயிரம் இதழுடைய தாமரை கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது.


()
சர்வ வர்ண = அனைத்து வர்ணமும்
ஷோபிதா = சோபித்தல் - அழகுற ஜொலித்தல்

#529 சர்வ வர்ணோப ஷோபிதா = அனைத்து வர்ணமாக சோபிப்பவள்

()
ஆயுத = ஆயுதங்கள்
தரா = கொண்டிருத்தல்

#530 சர்வாயுத தரா = அனைத்து வித அஸ்திர ஆயுதங்களையும் தாங்கியிருப்பவள்

()
ஷுக்ல = சுக்கிலம் - விந்து 
ஸம்ஸ்தித் = இருத்தல்

#531 ஷுக்ல சம்ஸ்திதா = சுக்கிலத்தை வழிநடத்தி ஆளுபவள்*
* உடற் சிருஷ்டி உற்பத்தியை பிரதிபலிக்கிறாள். அதனை வழிநடத்துபவளாகிறாள்

()
சர்வதோ = எங்கும் - கணகற்ற
முகீ = முகம்

#532 சர்வதோ முகீ = எவ்விடத்திலும் எத்திசையிலும் வியாபித்திருக்கும் முகமுடையவள் *
*எல்லையில்லாத, முடிவற்ற முகமுடையவள்

()
ஓதன = சமைக்கப்பட்ட அரிசி - உணவு
ப்ரீத = பிரியமான
சித்தா = சித்தம் - மனம்

#533 சர்வௌதன ப்ரீத சித்தா = அனைத்து உணவையும் பிரியமாக ஏற்பவள்

#534 யாகின்யம்பா ஸ்வரூபிணீ = யாகினி எனும் யோகினியானவள் - யாகினி என்ற வடிவம் தாங்கியவள் * 

(மேற்கண்ட நாமங்கள் யாகினி என்ற யோகினியின் தோற்றம் மற்றும் பெருமைகளை விவரிக்கின்றன)

(இந்த நாம வரிசையுடன், 'யோகினி நியாஸம்' என்னும் கீழ் நாம-தியானம் முடிகிறது)

தொடரும்



Lalitha Sahasranama (528 - 534 )


Yogini Nyasam



SahasradhaLa padmastha;
Sarva varNobha Shobitha;
Sarvayudha dhara;
Shukla Samsthitha;
Sarvatho mukhi;
Sarvoudhana preetha chitha;
Yakinyamba swaroopiNi;


()
Saharasra = Thousand
dhaLa = Petal
padma = a Lotus
Stha = to station - position

#528 SahasradhaLa padmastha = She who resides in Sahasrara chakra (crown chakra)*               * Crown chakra is the 7th primary chakra, associated with lotus which has thousand petals.

()
Sarva varNa = all colored
Shobitha = adorned

#529 Sarva varNobha Shobhitha = Who is embellished in all colors.

()
aayudha = arms - weaponry 
dhara = bearing - having

#530 sarvaayudha dhara = Who holds all types of weaponry

()
Shukla = mucus(semen) 
Samsthith = placed - formed - is present

#531 Shukla Samsthitha = Who is presides and rules in semen *
* Who represents and presides creation of the body.

()
sarvatho mukha = facing all directions - Unlimited

#532 Sarvatho mukhi = Who has faces in all directions - Who is turned everywhere*
*Infinite faces

()
Odhana = cooked rice - food 
preetha = is fond of 
chiththa = mind - thoughts

#533 Sarvaudhana preetha chitha = Who is pleased with all types of food

#534 Yakinyamba swaroopiNi = She who is yogini Yakini

(Above naamas glorify and meditates upon Yakini, yogini representing Sahasra chakra)

(We complete Yogini Nyasam)

(To Continue)

(A humble effort to analyse word by word meanings - ShakthiPrabha )

No comments:

Post a Comment