April 01, 2018

காத்திருப்பு - வல்லமைபடப்போட்டி



காத்திருப்பு

அவருக்கெனக் காத்திருந்த
கன்னிப்பொழுதெல்லாம்
கடந்த காலம்!
சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
எதிர்பார்த்துப் பூத்திருந்தது
முடிந்த கணங்கள்!
பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
காண விழித்திருக்கிறது
முதுமையின் மிச்சம்!
மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
மாறாத ஒன்றாக
எனது காத்திருப்பு!
காத்திருப்பின் பதட்டத்தை;
துருவேறிய கம்பிகளின்
தடம்சுமந்த என் கைகள்
அழியாச் சாட்சி சொல்லும்!

ஜன்னல் கைதிகள்

கருப்பு வெள்ளைக்குள் சுருங்கிவிட்ட எம் உலகில், வீட்டின் பரப்பளவுக்குள் குறுகிக்கிடக்கும் சிந்தனைத் தேக்கங்கள். சாளரத்தின் வழியே படமாகும் காட்சி சேகரிப்புக்களால் மட்டுமே வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. ஜன்னல் கம்பிகள் எண்ணப்படுவதெல்லாம் சிறைச்சாலைகளில் மட்டுமல்ல.
(வல்லமை படப்போட்டிக்காக எழுதியது)
( "காத்திருப்பு" என்ற முதல் கவிதை "அந்த வார சிறந்த கவிஞர்" என்ற சிறப்பிக்கப் பட்டது. வல்லமை இதழுக்கும் நடுவர் குழுவுக்கும் ஆசிரியர்க்கும் ஏனையோருக்கும் பெரு நன்றி.)

2 comments:

  1. சரியான தேர்வுதான் கடைசியில் இனி காத்திருப்பது எல்லாம் சென்றடையத்தான் என்று நான் முடித்திருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். இக்கவிதை படித்த வேறு சிலர் கூட உங்கள் ஆலோசனைப் படி சென்றடைய என்று முடித்திருப்பேன் என்று கூறினர்.

      Delete