May 21, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (601 - 610) (with English meanings)

Image result for beautiful lalithambika eyes smile

விபூதி விஸ்தாரம்

தராந்தோலித தீர்காக்ஷீ
தாரஹாசோஜ்வலன் முகீ
குரு மூர்த்தி
குண நிதி
கோமாதா
குஹ ஜன்ம பூ:
தேவேஷீ
தண்ட நீதிஸ்தா
தஹராகாஷ ரூபிணீ
பிரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா 

()
தர = கொண்டிருத்தல்
ஆந்தோலித = அசைதல் = ஆடுதல்
தீர்க = நெடிய - நீள்
அக்ஷி= கண்கள்

#601  தராந்தோலித தீர்காக்ஷீ = அலைபாயும் (அசையும்) நீள் விழிகளைக் கோண்டவள்

()
தர = கொண்டிருத்தல்
ஹாஸ = சிரிப்பு - புன்னகை
உஜ்வலன் = காந்தி - பிரகாசம்
முக = முகம்

#602 தரஹாஸோஜ்வலன் முகீ =   ஒளிர் மந்தஹாசம் தவழும் வதனம் கொண்டவள்

()
மூர்த்தி = அவதாரம் - வடிவம் தாங்குதல் - உருவகம் 

#603 குரு மூர்த்தி =  ஆச்சாரிய  வடிவானவள் ie. பக்தர்களுக்கு குருவாகி போதிப்பவள்

()
நிதி = பொக்கிஷம் - களஞ்சியம்
குண = மேன்மையான குணங்கள் 

#604 குண நிதி = நற்குணங்களின் களஞ்சியம் 

()
கோ = பசு
கோமாத்ரு = பசுக்களின் தாய்

#605 கோமாதா = பசுக்களுக்கெல்லாம் மாதாவாக விளங்குபவள் *


* பசுக்கள் மனிதர்கெல்லாம் போஷாக்கு அளிப்பதால்,  ஹிந்து மதத்தில் பசு புனிதமாக மதிக்கப்படுகிறது. காமதேனு எனும் பசு, தெய்வ லோகங்களில் வசிக்கும் தெய்வீகப் பசுவாக கருதப்படுகிறது. லலிதாம்பிகை, அன்னையின் வாத்ஸல்யத்தோடு பிரபஞ்சத்தை போஷிக்கிறாள் என்பது இந்த நாமாவின் புரிதல். 

()
குஹ = ஸ்கந்தன் - முருகன்
ஜன்ம = ஆதாரமான - பிறப்பிற்கு காரணமான
பூ: = பூவுலகம்

#606 குஹ ஜன்மபூ: = ஸ்கந்தனின் பிறப்பிற்கு காரணமானவள் (அன்னை) *


* குஹ என்றால் குகை என்றும் பொருள் கொள்ளலாம். ஆதாரமான பிரக்ருதியானவள். ஜீவனின் மூலத்தை தன்னிடத்தே ஒடுக்கி (ஒளித்து) பின் பிரபஞ்சத்தை உருவாக்கும் அன்னையாகிறாள் என்பதும் சிலரது கருத்து. 

()
தேவ = கடவுளர்
ஈஷி(ன்) = தலைமை - முதன்மை

#607 தேவேஷி = தேவர்களுக்குத் தலைவி; இறைவி

()
நீதி =  நன்னடத்தை - ஒழுக்கம்
தண்ட = தண்டனை

#608 தண்டநீதிஸ்தா = முறையான நடத்தையில்லாதவர்களை தண்டிப்பவள் - நீதியை நிலைநாட்டுபவள்.

()
தஹரம் = நுண்ணிய = இருதயத்தில் இருக்கும் ஆகாசம்

#609 தஹராகாஷ ரூபிணீ = இதயவெளியில் நுண்ணிய வடிவில் (ஜீவனாக) இருப்பவள் 

()
ப்ரதிபத் = ஒவ்வொரு - வளர்பிறையின் முதல் நாள்
முக்ய =  முதலில் - ஆரம்பத்தில்
ராக = முழு நிலவு
திதி =  பிறை நாட்களைக் குறிக்கும்  = பதினைந்து என்ற எண்ணிக்கை
மண்டல் = குழு - குவியல் 

#610 ப்ரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா = வளர்பிறையின் முதல் நாள் துவங்கி பௌர்ணமி வரையிலான திதி நாட்களில் பூஜிக்கப்படுபவள் 



(தொடரும்) 

Lalitha Sahasranama (600 - 610) 

Vibhoothi Visthaaram

Dharandholitha Deergakshi
Dharahasojwalan mukhi
Guru Moorthi
Guna Nidhi
GoMatha
Guha janma bhoo
Deveshi
Dhanda Neethistha
Dhaharakaasa roopiNi
Prathipan mukhya rakantha thithi mandala poojitha


()

Dhara = possessing - having
andholitha = swinging ie moving
deerga = long 
akshi  = eyes

#601 Dharandholitha Deergakshi = Who has  long (swaying)   eyes 
(gracefully swinging upon her beautiful face) 

()
Dhara = having 
Hasa = smile 
ujwalan = shining - splendour
mukhi = face

#602 Dharahasojwalan mukhi = Whose wears a radiant smile upon her face

()
Moorthi = Manifestation
Guru = Teacher - Acharya

#603 Guru Moorthi = Who is in the form of revered guru (for her devotees) 

()
Nidhi = treasure 
guNa = Good qualities

#604 GuNa nidhi = Who is the treasure house of virtues

()
Go = Cow  
Gomathru = Mother of cows

#605 Gomatha =  She who is the mother of Cows   *



* Cows are considered divine according to hinduism as they provide nourishment. Kamadhenu is a sacred cow representing the divnity of cows. She is also personified as the mother of cows. In this context, the meaning conceived is that the divine mother, Lalithambika with her motherly care nourishes the entire universe . 

()
Guhaa = Lord Skanda
janma = progenitor - origin 
Bhu = earth - place

#606 Guha JanmaBhu = She who is the cause of Skanda (Mother) *

* Some interpretations differ to mean Guha as "cave" or a "cavern" which conceals the source of life energy in universe. Hence she is the mother who  is the origin of the life energy.


()
Deva = The Gods
Ishi(n) = Supremacy 

#607 DevEshi = Who is the Queen of Gods ie God of Gods

()
Needhi = Ethics - right behaviour 
Dhanda = Punishment

#608 Dhandaneethistha = Who punishes those do not adhere to Ethics - Who does justice

()
dhaharam = subtle - Sky within the heart 

#609 Dhaharakasa RoopiNi = She who in the subtle space of heart (of all beings)

()
Prathipad =  at every - First day of lunar fortnight
mukhya = at the head or beginning 
Raka  = Full moon
Antha = at the end
thithi  = lunar day = fifteen in number
mandal = collection - group 

#610 Prathipanmukya Rakantha thithi mandala poojitha =  Who is worshipped on all fifteen days from pratipad(first day of lunar) to Full-moon day. 

(to Continue) 

No comments:

Post a Comment