தமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அறிந்து போகவே அவர் வந்திருப்பதாகச் சொன்ன மாத்திரத்தில் காண்டிக்யரின் ஸந்தேஹமும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விட்டன.
.
காண்டிக்யர் கேசித்வஜரிடம் சமாதானமாகப் போய் அறிவு தானம் பண்ணுவது அவரோடேயே வனத்தில் வசித்துக் கொண்டிருந்த மந்த்ரிகளுக்குப் பிடிக்கவில்லை. “உங்களிடமிருந்து ராஜ்யத்தை அபஹரித்த இவனுக்கா தர்ம சாஸ்த்ர உபதேசம் பண்ணுவது?” என்று தடுத்தார்கள்.
.
காண்டிக்யரோ, “நீங்கள் சொல்கிறபடி இவனை நான் கொன்றால் எனக்கு பூலோகம் சுவாதீனமாகும் என்பது உண்மை தான். நம்பி வந்தவனுக்கு அறிவைத் தராமல் அடைத்து வைத்துக் கொண்ட எனக்கு அந்தப் பரலோகத்தின் வழி அடைத்துத் தானே போய்விடும்? தாற்காலிகமான இகலோகத்துக்காக சாச்வதமான பரலோகத்தை இழக்கமாட்டேன்” என்று சொல்லி விட்டார்.
.
பாதி யஜ்ஞத்தில் பசு வதையானால் என்ன ப்ராயச்சித்தம் பண்ண வேண்டுமோ அது காண்டிக்யருக்குத் தெரிந்திருந்தது. தெரிந்ததைக்
கொஞ்சம் கூட ஒளிக்காமல் சொன்னார். கேசித்வஜர் ரொம்பவும் சந்தோஷத்தோடு ராஜ்யத்துக்குத் திரும்பினார். ப்ராயச்சித்தத்தைப்
பண்ணி விட்டு..........
.....
ராஜரிகத் தோற்றத்துடன் மறுபடி வருவதைப் காண்டிக்யரைத் தேடிப் போனார். காண்டிக்யரோ, "காரியம் ஆக வேண்டுமென்று காலைப் பிடித்தான். இப்போது காரியம் முடிந்துவிட்டதால் கழுத்தைப் பிடிக்கவே மறுபடி வருகிறான்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டார். உடனே அம்பைத் தொடுத்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றார்.
.
முன் தடவை மாதிரியே அவரைக் கேசித்வஜர் இப்போதும் தடுத்தார். “யஜ்ஞ பூர்த்திக்குப் பெரிய உபகாரம் பண்ணின உனக்கு, நீ என்ன தக்ஷிணை கேட்டாலும் ஸமர்ப்பணம் செய்யவே வந்திருக்கிறேன்… கேள்” என்றார்.
.
என்ன தக்ஷிணை கேட்பதென்று காண்டிக்யர் தம்மோடிருந்த குட்டிப் பரிவாரத்துடன் கலந்து ஆலோசனை செய்தார். இழந்த ராஜ்யத்தைத்
திரும்பிக் கேட்டுப் பெறுவதற்கு இதுவே வாய்ப்பு என்று அவர்கள் நினைத்தார்கள்.
.
காண்டிக்யருக்கு மற்றவர்களின் ஆலோசனை ஸம்மதமாகப் படவில்லை. “ராஜ வம்சத்தில் பிறந்தவன் ராஜ்யத்தைப் பெறுவதும்
க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தின் மூலமோ, வீர பராக்ரமத்துக்கு சம்மானமாகவோ, அல்லது விவாக சம்பந்தத்தின் மூலமோதான்
இருக்கவேண்டுமேயன்றி, ‘தக்ஷிணை’ என்ற கௌரவமான யாசகத்தால் அல்ல. ”
.
“மோக்ஷத்துக்கு நேர் வழியாக முடிவிலே வருகிற ப்ரம்ம வித்யையில்தான் இப்போது எனக்கு நாட்டம்ஏற்பட்டிருக்கிறது. கேசித்வஜன் என்னிடமிருந்து கர்மத்தைப் பற்றிய தர்மத்தைக் கேட்டுக் கொண்டாற்போலவே நான் அவனிடம் ப்ரஹ்ம வித்யையில் உபதேசம் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். என் வித்யா தானத்துக்கு தக்ஷிணையாக அவனிடமிருந்து இன்னொரு வித்யா தானமே கேட்கப் போகிறேன். ”
.
கேசித்வஜரிடம், “அத்யாத்ம வித்யையை உபதேசிக்க வேணும்” என்று ரொம்பவும் தாழ்மையோடு கேட்டுக் கொண்டார்.
...
கேசித்வஜர் இதைப் பார்த்துப் பெருமை கொண்டார். தம்மை விடவும் ஒரு படி அவர் மேலே போய்விட்டதில் பொறாமை படாமல் பெருமைப்பட்டார். “அப்பா! நான் ஆத்ம சாஸ்த்ரம் நிறைய அறிந்திருந்தும் கர்ம அநுஷ்டானம் தொடர வேண்டியவனாகவே இருக்கிறேன். பூர்வ புண்யங்களையும் போக்கிக் கொண்டால்தான், பாப-புண்யம் இரண்டும் அறியாத ஆத்மாவில் சேரலாம். அதனால்தான், உடலுக்கு ராஜ போக சௌக்யம் என்பதையும் கொடுத்துப் புண்யத்தைப் போக்கிக் கொள்கிறேன்.
.
இன்னும் சில காலம் எனக்கு இந்தக் கர்ம யோகமும் ராஜபோகமும் நீடிக்க வேண்டியதாக இ ருக்கிறது. ஆனால் நீயோ இப்போது என்னிடம் ஆத்ம சாஸ்த்ரம் கற்றுக் கொண்டு உடனேயே நேராக ஆத்ம ஸாதனைக்குப் போவதற்கான விவேகத்தைப் பெற்றுவிட்டாய். நீ அத்ருஷ்டசாலி. வா, உனக்கு வேதாந்தம் சொல்கிறேன்” என்றார் கேசித்வஜர்.
.
அப்புறம் அஷ்டாங்க யோகம், ஈச்வர பக்தி ஆகியவற்றை உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கும் ஞான தத்வங்களோடு அழகாக இழைத்து, சுலபமாகப் புரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்தார். காண்டிக்யர் தாம் பெற்ற உபதேசத்துக்கு உரிய சாதனையைத் தீவிரமாகச் செய்து, பிரம்ம நிர்வாணம் அடைந்தார்.
.
கேசித்வஜரும் கர்மத்தால் பாப க்ஷயமும், போகத்தால் புண்ய க்ஷயமும் ஏற்பட்ட பிறகு ஞான அநுஷ்டானங்கள் பண்ணி மோக்ஷ ஸித்தி அடைந்தார்.
...
பல உயர்ந்த லக்ஷ்யங்களை இந்த விஷ்ணு புராண உபாக்யானம் காட்டுகிறது.
.
Chapter: குரு தக்ஷிணை
Chapter: காண்டிக்யர் கேட்ட தக்ஷிணை!
Chapter: பரம சத்ருக்கள் குரு-சிஷ்யரானது
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment