Story of kannadiyan canal (part 4)
(தொடர்ச்சி)
பிரம்மசாரி ராஜாவிடம் ஓடினான். அம்பாஸமுத்திரமும் அப்போது கேரள ராஜ்யத்தில்தான் இருந்ததால் தானம் கொடுத்த பழைய ராஜாவிடமேதான் போய் முறையிட்டான். ராஜாவுக்கு பிரம்மசாரியின் பெருமை ஏற்கனவே தெரிந்தது என்றாலும் ஸ்வர்ணத்துக்குப் பதில் துவரம் பருப்பைக் கொடுத்தவர் சிவாசாரியாராதலால் அவரிடமும் மரியாதை தப்பக் கூடாதென்று நினைத்து அவரைக் கூப்பிட்டனுப்பி நல்ல வார்த்தையாகச் சொன்னான்.
.
அந்த மனுஷ்யரோ பழைய பல்லவியையே பாடினார்.
.
ராஜாவும் “அப்படியானால் சரி; நீர் பூஜை செய்கிற கச்யபேச்வர மஹாலிங்கத்தைத் தொட்டுக்கொண்டே ப்ரமாணம் பண்ணும்; நம்புகிறோம்” என்றான். குருக்கள் ஒப்புக் கொண்டார். ஏனென்றால் மந்திர சாஸ்திரத்தால் ரொம்பவும் கெட்டிக்காரரான அவர், தம் மனஸுக்குள் தந்திரமாக ஒரு திட்டம் போட்டுக்கொண்டு விட்டார்.
.
‘நாமும் ப்ரமாணம் பண்ணுவதற்கு முந்தி ரஹஸ்யமாக கச்யபேச்வர ஸ்வாமியின் கலைகளைக் (சக்தியை) புளிய மரத்தில் ஆகர்ஷித்து வைத்துவிட்டு, வெறும் கல்லாகிவிட்ட லிங்கத்தைத் தொட்டுக் கொண்டு ஸ்தயம் பண்ணிவிடலாம்’ என்று அந்தக் குருக்கள் திட்டம் போட்டுக்கொண்டார்.
.
குருக்கள் ப்ரமாணம் பண்ணவிருந்ததற்கு முதல் நாள் ராத்ரி, ஸ்வாமி பிரம்மசாரியின் ஸ்வப்னத்தில் தோன்றி “நாளைக்கு என்னைக் குருக்கள் புளிய மரத்தில் கலாகர்ஷணம் பண்ணி வைத்திருப்பார் (((கலைகளை சிலா ருபத்தின் சக்தியை வேறு இடத்தில் ஆகர்ஷித்தல்))) . அதனால் புளிய மரத்தைத் தொட்டுக்கொண்டு அவர் ப்ரமாணம் பண்ணினாலே போதும் என்று சொல்லிவிடு: என்று சொன்னார்.
.
மறுநாள் பிரம்மசாரி, ‘இத்தனை காலமாக ஸ்வாமியைத் தொட்டுப் பூஜை பண்ணிக் கொண்டிருக்கற ஒருசிவாச்சாரியாரிடம் போய் அந்த ஸ்வாமி மேல் கை வைத்துக் கொண்டு ஸத்யம் பண்ணு என்று கேட்பது அபசாரமாகப் படுகிறது. ஆனதால் அவர் இந்தப் புளிய மரத்தைத் தொட்டுக்கொண்டு ப்ரமாணம் பண்ணினாலே போதும். பச்சை மரத்தைத் தொட்டுக்கொண்டு பச்சைப் பொய் சொல்ல எவரும் துணிய மாட்டார்களல்லவா?” என்றான்.
.
அந்த நிலவரத்தில், எதற்கும் துணிந்த குருக்கள் அதே போலத் தாம் ஸ்வாமியை ஆவாஹனம் பண்ணி வைத்திருந்த அந்த வ்ருஷ்ஷத்தைத் தொட்டபடியே ப்ரமாணம் பண்ணினார். “இந்தப் பிரம்மசாரி என்னிடம் கொடுத்து வைத்திருந்த அதே மூட்டையை, நான் அப்படியேதான் அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். இது ஸத்யம்” என்று அவர் சொன்னார்.
.
சொன்னாரோ இல்லையோ, உடனே அங்கே ஒரு ஜ்வாலை அவரைச் சுற்றி எழுந்த்து; அதிலே அவர் பஸ்மமாகிவிட்டார்!
..
இதைப் பார்த்து மலைத்துப் போனார் ராஜாவுக்கும் மற்றவர்களுக்கும். ராஜா குருக்கள் வீட்டை நன்றாகச் சோதனை போடப் பண்ணினான். ஸ்வர்ண் மூட்டை அகப்பட்டது.
.
(கால்வாய் வெட்டினார்களா?...பார்ப்போம்)
.
Chapter: குருக்கள் மோசடியும் ஈசன் தந்த தண்டனையும்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment