April 07, 2023

கன்னடியன் கால்வாய் (இறுதிப் பகுதி) - மிளகுப் பிள்ளையாரின் மகிமை

 



Milagu Pillaiyaar and his Miracle - Story of kannadiyan canal (Final part)

(தொடர்ச்சி)

அகஸ்த்யர் உத்தரவுப்படியே ஸ்வர்ணத்தைக் கொண்டு பிரம்மசாரி சேரமாதேவியில் அணை கட்டி மாடு போன மார்க்கமாய், அணையிலிருந்து கால்வாய் வெட்டி, மடைகள், வடிகால்கள், ஏரிகள் எல்லாம் அங்கங்கே அமைத்து, பரந்தாரீயின் பெரிய மடுவில் கால்வாயைக் கொண்டு போய் முடித்தான். ஸீனியபுரத்தில் கலாசி தன் வீட்டை இடித்துக் கால்வாயைக் கட்டிக்கொண்டு போக அநுமதித்ததற்குப் பிரதியாக அங்கே அமைத்த மடைக்குக் கலாசி மடையென்றும், அந்த இட்த்திலிருந்து கால்வாய்க்கே கலாசிக் கால்வாய் என்றும் பெயர் வைத்தான்.

அவள் பெயரைச் சிரஞ்சீவியாக்கியவன் – கால்வாய்க்கே காரணபூதம், கருவி எல்லாமாயிருந்தவன் – தன் பெயரே உலகுக்குத் தெரியாமலிருந்து அப்படியே போய்விட்டான்! இன்றைக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடிக்கும், ஆயிரக்கணக்கான மனுஷ்யர்கள், மிருகங்கள் குடிக்கவும், குளிக்கவும் நீரைத் தந்து கொண்டு அக்கால்வாய் மாத்திரம் இருக்கிறது. பேர் தெரியாதவனுடைய ஊரை வைத்து அதைக் ‘கன்னடியன் கால்வாய்’ (கன்னடக்காரன்) என்றே சொல்கிறார்கள். ’கர்நாடக குல்யா’ என்று சேரமாதேவி சாஸனத்தை திருவனந்தபுரம் ஸமஸ்தானத்தார் நல்லபடியாகக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
.
அகஸ்த்யர் பிரத்யக்‌ஷமானார். சோதனையில் தேறிய அவனை சிலாகித்தார். அங்கே ஒரு மஹா கணபதியைப் பிரதிஷ்டை பண்ணினார். “மிளகுப் பொடியில் ஜலம் விட்டு கெட்டியாகக் கலந்து இந்தக் கணபதியின் உடம்பு பூராவும் அப்பிவிடு. அப்புறம், இந்த எப்பாடு பட்டாவது ( அப்போது நீருக்கு கஷ்டகாலம்) குடம் குடமாகத் தீர்த்தம் கொண்டு வந்து விக்ரஹத்தின் ரூபமே கண்ணுக்குத் தெரியாதபடி தடதடவென்று அதற்கு அபிஷேகம் பண்ணு. மழை கொட்டித் தீர்த்துவிடும். தாம்ரபர்ணியில் பூர்ணப் பிரவாஹம் ஏற்பட்டு, அணை, வாய்க்கால் எல்லாம் நிரம்பிவிடும்” என்றார்.
.
அப்படியே பண்ணினான். அதன் பிறகும் ஸ்வர்ணம் மிஞ்சியது. அதைக் கொண்டு அந்த ஆலயத்தின் அங்கமாகவே அன்ன சத்திரமும் வைத்தான். அப்படியே மழையும் கொட்டி அன்றிலிருந்து ஐந்நூறு நூற்றாண்டுகளாக இன்னமும் அந்த கால்வாய் பயன் தந்து கொண்டிருக்கிறது. அகஸ்த்யர் அநுக்ரஹித்தபடி அவன் கீர்த்தி இப்படியே நிலவுமென்பதில் சந்தேகமில்லை.
.
தெற்குக் கோடித் தமிழ் ஜனங்களுக்காக ஒரு கன்னடக்காரர் மலையாள ராஜாவின் பொருளைக் கொண்டு மஹத்தான உபகாரம் செய்திருக்கிறான்..
.
Chapter: பெயருக்கு ஆசைப்படாதவன்
Chapter: மிளகுப் பிள்ளையார்
Chapter: படிப்பினை : ஒருமைப்பாடு
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

#பிள்ளையார் #மிளகு #கன்னடியன் #கால்வாய் #kannadiyan #Canal #Deivathin #kural #Deivathinkural

No comments:

Post a Comment