April 04, 2023

கன்னடியன் கால்வாய் - பகுதி 2 Story of kannadiyan canal (part 2) (Meeting Sage Agasthya)





Brahmachari Repents for having taken Dhanam

ஊர் உலகமெல்லாம் கொண்டாடிய போதிலும் பிரம்மச்சாரிக்கு வருத்தமுண்டானது.
.
‘இப்படிப் புத்தியில்லாமல் செய்து விட்டேனே! பிராமண லக்ஷணம் தாரித்ரயம்தான் i.e.வறுமை தானே.. நான் ஏன் இப்படி ஸ்வர்ண தானத்தை வாங்கிக் கொண்டேன்? அந்த அளவுக்கு தோஷத்தையும் அல்லவா சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்? தப்புத்தான். இப்போது லோகத்துக்கு உபகாரமாக இத்தனை ஸ்வர்ணத்தையும் செலவழித்து ப்ரதிக்ரஹ தோஷத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். என்ன காரியம் உலகுக்கு ப்ரயோஜனப்படும்படி பண்ணலாம்?” என்று யோஜித்தான். ராஜாவுக்குச் சரீர வியாதி போக்கின இவனுக்கே மனோ வியாதி வந்துவிடும் போலாயிற்று.
.
யோஜித்து, யோஜித்து முடிவில், சிரஞ்சீவியாக லோகத்தில் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கிற அகஸ்திய மகரிஷியை எப்படியாவது தர்சனம் பண்ணி அவர் சொல்கிற மாதிரி பிராயச்சித்தம் செய்வதென்று தீர்மானம் பண்ணினான். பிரம்மச்சாரியின் பெயர் பெயர் என்னவோ தெரியவில்லை. இத்தனைக்கும் நான் சொல்கிறது கதையில்லை. இதற்குப் பலமான ஹிஸ்டரி ஆதாரம் இருக்கிறது.
.
Registered Proof of kanndiyan canal incident (true incident)
.
இங்கே வெள்ளைக்கார ராஜ்யம் நடந்தபோது நம்முடைய மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸியில் அரசாங்கத்தாரின் ஆர்க்கியலாஜிகல் டிபார்ட்மெண்டார் 1903-04ல் பிரசரித்துள்ள வருஷாந்தர ரிப்போர்ட்டின் 84வது பக்கத்திலும் இந்தக் கதை சம்பந்தப் பட்ட சாஸனத்தைக் கொடுத்திருக்கிறது.
Brahmachari approaches Sage Agasthya
.
திருவனந்தபுரத்திலிருந்து அகஸ்த்ய தரிசனம் ஒன்றே குறியாகப் பொதிகைக்குப் புறப்பட்ட பிரம்மச்சாரி தானம் பெற்ற அவ்வளவு ஸ்வர்ணத்தோடு காட்டு வழியில் போவது ஆபத்து என்று அம்பாஸமுத்திரத்தில் அவனுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமாயிருந்த ஒரு கோயில் குருக்களிடம் துவரம்பருப்பு மாதிரிச் செய்திருந்த ஸ்வர்ண மணிகள் அடங்கிய மூட்டையை குருக்களிடம் ஒப்படைத்தான்.
.
சில்லறைக்குப் பதில் இம்மாதிரிப் பொன்மணிகளை அந்நாளில் ராஜாங்கத்தார் உபயோகப்படுத்தினார்கள். பவுன் அத்தனை மலிவாயிருந்த காலம்!
.
Pariharam / Solution blessed by Sage Agasthya
பசி தூக்கம் கால் வலி எதுவும் பார்க்காமல் நடந்தான் பிரம்மச்சாரி. இப்படிக் காடும் மலையும் கடந்து வந்ததில் ஒரு நாள் அப்படியே களைத்துப்போய் விழுந்து விட்டான். கண்ணை இருட்டிக்கொண்டு மயக்கமாய் வந்தது. அங்கே திடீரென்று அகஸ்த்யர் ஸ்வய ரூபத்தில் அவனுக்கு தர்சனம் தந்து அசீர்வதித்தார். “அப்பா குழந்தை! இப்போது இங்கே ஒரு பசு வரும்.
பக்கத்தில் தெரிகிற இந்தத் தாம்ரபரணி கரையில் , அது நிற்கிற இடத்தில் ஆற்றுக்கு அணை கட்டி, அதிலிருந்து ஒரு கால்வாய் வெட்டு. நிற்கிற பசுவின் வாலை நீ பிடித்துக்கொள். அது ஓட ஆரம்பிக்கும். ஓடுகிற வழியை அடையாளம் பண்ணிக் கொள். அந்த வழியாகவே கால்வாயை வெட்டிக்கொண்டு போக வேண்டும். பசு நடுவில் எங்கெங்கே சாணம் போடுகிறதோ அங்கங்கே ஒரு மடை – sluice என்பது – அமைக்க வேண்டும்.
.
அது சிறுநீர் பெய்கிற இடங்களில் சிறிய வடிகால்கள் வெட்ட வேண்டும். பசு படுத்துக் கொள்ளுமிடங்களில் ஏரி தோண்ட வேண்டும்.
குறிப்பிட்ட பசு உன் பார்வையிலிருந்து மறைந்துட்டதும். அங்கே கால்வாயை முடித்துவிடு. "என்றார்.
.
(தொடரும்)

Chapter: தானம் பெற்றதற்குப் பச்சாதாபம்
Chapter: உண்மைக் கதை
Chapter: அகஸ்தியர் அளித்த தீர்வு

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment