Story of kannadiyan canal (part 3)
அதே மாதிரி மாயமாக அங்கே ஒரு பசு திடீரென்று தோன்றி, தாம்ரபர்ணிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டது. அந்த இடம் தான் சேர்மாதேவி. தற்போது திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள அந்த ஊர் முன்பு கேரள தேசத்தில் இருந்தது.
.
ஊரின் பேரிலிருந்தே இது தெரிகிறது. ‘சேரமாதேவி’ சேரமாசேவியில் நின்ற பசுவின் வாலை பிரம்மச்சாரி பிடித்துக் கொண்டான். அது ஒட ஆரம்பித்தது. .அந்த வழியை அவன் நன்றாக
அடையாளம் பண்ணிக்கொண்டான். அது சாணம், சிறுநீர் கழித்த இடங்களையும் குறித்துக் கொண்டான். மாடு எங்கெங்கே படுத்துக் கொண்ட்து என்பதற்கும் அடையாளம் செய்து கொண்டான்.
.
அது சீனியபுரம் என்கிற ஊரில் ஒரு தாஸியின் வீட்டுக்குள்ளாகப் போயிற்று. இந்த வீட்டையும் செய்து கொண்டான். இதை கவனித்தாள் அந்த தாஸி. கலாசி என்று அவளுக்குப் பெயர்.
“ஏன் என் வீட்டுக்குள் மாடு வரவிட்டாய்? அப்புறம் அடையாளம் வேறு பண்ணிக் கொள்கிறாய்?” என்று கேட்டாள்.
.
பிரம்மச்சாரி எல்லா விருத்தாந்தமும் சொன்னான். “உனக்குரிய ஸ்வர்ணத்தைக் கொடுத்துவிட்டு, இந்த வீட்டை இடித்து, இதையும் கால்வாய் மார்க்கத்தில் கொண்டுவர இருந்தேன்” என்று தெரிவித்துக் கொண்டான். வழியிலே வரும் பிறத்தியார் சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடும்படியும் அகஸ்த்யர் சொல்லியிருந்தார்.
.
உடனே கலாசி, “அதெல்லாம் நீ ஒன்றும் நஷ்ட ஈடு தரவேண்டாம். இங்கே பயிர்கள் பாசனமில்லாமல் நாசமாகின்றன. நீ வெட்டுகிற கால்வாயில்
இந்த ஊர் வாழும். அப்படி வாழப் பண்ணும் புண்யத்தில் எனக்கும் இந்த வீட்டைக் கொடுப்பதால் பங்கு கிடைப்பதே போதும். அதோடு ஊர் வயலுக்கெல்லாம் ஜலம் வரும் போது என் நிலத்துக்கும்தானே கிடைக்கப் போகிறது?” என்று பெரிய மனஸோடு சொல்லிவிட்டாள்.
.
அப்புறம் பசு அவனைக் கொஞ்ச தூரம் இழுத்துக்கொண்டு போய் ‘பரந்தாரீ’ என்னும் கிராமம் வந்தவுடன் அங்கேயுள்ள வறண்டுபோன ஒரு ஏரிக்கரையிலிருந்து அப்படியே பறந்துபோய் மறைந்துவிட்டது.
.
பரந்தாரீ ஏரியோடு கால்வாய் முடிந்துவிட வேண்டும் என்று புரிந்துகொண்ட பிரம்மசாரி உடனே ஸ்வர்ணத்தை எடுத்துக்கொண்டு
வருவதற்காக அம்பா சமுத்திரத்திற்கு ஓடினான். அம்பாஸமுத்ரக் குருக்கள் திருப்பிக் கொடுத்த மூட்டையை அவன் பிரித்துப் பார்த்தால்
அதில் ஸ்வர்ணத்தினாலான துவரை மணிக்குப் பதில் அசல் துவரம் பருப்புக்கள் தானிருந்தன!
வெறும் துவரம்பருப்பு மூட்டையைக் கொடுத்துவிட்டு அந்தக் குருக்கள் “இதுதான் நீ தந்தது” என்று ஒரேயடியாக சாதித்துவிட்டார்.
.
(நாளையும் வரும்)...
.
Chapter: அகஸ்தியர் அளித்த தீர்வு
Chapter: குருக்கள் மோசடியும் ஈசன் தந்த தண்டனையும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
No comments:
Post a Comment