பிரபஞ்சமெனும் மாயப்பந்தாகி
சூல் கொண்ட பேருலகம்;
விலக்கலில் விலகி,
சுருங்கலில் அருகி,
சுழன்றாடும் அகிலத்தின்,
அணுவிற்கு அணுவுமிங்கு
அண்டத்தின் அங்கமென்றறி!
சூழ்ந்த பெருங்கடலில்,
நீரின்றி நீயில்லை;
நீயின்றி நீரில்லை!
நிலமாகிக் காற்றாகி,
நெருப்பெனவேதான் படர்ந்து,
வேறாகா ஆகாய வீதியின் விதையினுள்,
பிறந்து-பிறந்து வீழ்கிறாய்!
உன்னில் உருவாகி
உனையே உருவாக்கி
புறமெங்கும் விரிந்து
அகத்துள்ளே நிறைந்து
எங்கும் அதுவாகிப் போனதால்
அதுவே நீயுமாகிறாய்
இதுவே உண்மையென உணர்ந்தபின்
இரண்டெனக் காணவே ஏதுமுண்டோ சொல்!
..
Inspired from - மூலம்: Zen story
சாரத்தின் தமிழ் மொழியாக்கம் - ShakthiPrabha
No comments:
Post a Comment